“ஹாங்… அம்மா முடியலையே!” என்று முணங்கிக்கொண்டிருந்தார் காளியம்மா…
Advertisement
“கொஞ்ச நேரம் சும்மாதான் இருமா, கை காலை வச்சிட்டு சும்மா இல்லாம சின்ன பொண்ணு மாறி விழுந்து வச்சிருக்க… கால் நல்லா ஆனைகால் வந்தமாறி வீங்கி கிடக்கு” என்று அன்னையை திட்டிக்கொண்டே, அவர் காலுக்கு எண்ணெய் வைத்து உருவிக்கொண்டிருந்தாள் சரசு..
Advertisement
“அடியே பாத்து உருவுடி, வலி தாங்க முடியல உயிர் போகுது” என்று வலியை தாங்க முடியாமல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டார்..
Advertisement
“ம்மா, இராத்திரி நேரத்துல கத்தாத.. அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க” என்றாள் நிமிர்ந்து பார்த்து..
Advertisement
“ஆமாடி, உன்னை இப்பதான் கட்டிகொடுத்திருக்கேன்.. என் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துல இருக்கவங்க கதை கேக்க, நானே வலியில உயிர் போகுதுன்னு கத்துறேன், வந்துட்டா வியக்கானம் பேசிக்கிட்டு” என்றார் பல்லைக் கடித்து..
“நா ஒன்னும் வியக்கானம் பேசல, காலை அசைக்காதம்மா.. டாக்டரு, நர்ஸ் எல்லாம் இருக்காங்களே! அவங்களை கூப்பிட்டு காட்டினா என்னவாம்” எனக் கேட்டுக்கொண்டே, காலில் இன்னும் அழுத்தம் கூட்டி தேய்த்தாள்..
“ஹாங்…” வலியில் முணங்கியவர், மகளை முறைத்தார்..
“எங்க அந்த வெலங்கதவ மறுபடியும் வூட்டுக்கு வந்துடுவாளோன்னு பயத்துல ஓடிப்போறப்பதான் கீழே விழுந்துட்டேன்டி” என்றவர் முகம் வலியில் சுருங்கியதை விட இப்போது பேசும்போது கோபத்தில் இன்னும் விகாரமாக இருந்தது..
அன்னை சொன்னதை கேட்டு, அதிர்ச்சியில் கையிலிருந்த கிண்ணத்தை தவறவிட்டாள்..
“என்னம்மா சொல்லுற நீ?” என்று சத்தமாக சொல்ல கூட வார்த்தை வராமல், வெறும் காற்று மட்டுமே வந்தது..
“ஆமாடி” என்றார் அவரும் வெறுப்புடன்..
“நீ ஏன் ம்மா இப்படி இருக்க, அவளை பழிவாங்குறதா நெனைச்சு உன் புள்ளையை தான் பழிவாங்குற” என்றாள் சரசும்..
“அவனை எங்கடி நா பழிவாங்குறேன்.. இப்ப அவன் சரின்னு சொல்லட்டும், எட்டூர் பொண்ணுங்களை வரிசைகட்டி நிறுத்துறேன்..” என்றவருக்கு ஆத்திரம் தான் வந்தது..
அப்படியென்ன உலகத்துல இல்லாத ரதி அவ, அவளை விடாம சுத்துறவன் மீதும் கோபம் இன்னும் கூடியதே தவிர குறையவில்லை..
“எம்மா உனக்கு மூளை மழுங்கி போச்சா, இவ்ளோ நடந்தும் திருந்தாம இருந்த உன் எண்ணத்துக்கு தான் இந்த வலி” என்றாள் சரசு..
“என்னடி எனக்கு மூளை இல்லையா? அவளுங்களால தாண்டி என் குடும்பம் சீரழிஞ்சு போச்சு” என்றார் மூச்சு வாங்க..
“யாரால குடும்பம் சீரழிஞ்சு போச்சு.. நன்றியை மறந்த உன்னால, நீ பார்த்து கூட்டி வந்தியே அந்த ஆளாலதான் இவ்வளவும் நடந்திச்சு.. அதை தெரிஞ்சாலும் நீ மாறமாட்ட” என்றாள் வெறுப்புடன் முகம் திரும்பி..
“என்னடி ரொம்ப மொகத்தை திருப்புற, நா உனக்கு அம்மா அதை மறந்துடாதா” என்றார் அவரும் பதிலுக்கு..
“அது தான் ம்மா.. எனக்கு பயமா இருக்கு.. நீ எங்களுக்கு பாவத்துக்கு மேல பாவத்தை சேக்குறம்மா” என்று உடைந்து அழுதாள்..
“என்ன வார்த்தைடி சொல்லிப்புட்ட?” என்று நெஞ்சில் கை வைத்தார் அதிர்வுடன்..
“ஆமாம்மா, நீயே நல்லா யோசிச்சு பாரு.. யாரு நல்லா இருக்கக் கூடாது, நாசமா போகணும்னு சாபம் விட்டியோ! அவ புருஷன், புள்ளைங்கன்னு சந்தோஷமா தான் இருக்கா?
யாருக்காக அவளை ஒதுக்கி வச்சி, வார்த்தையாலே தேள் மாறி கொட்டினியோ, அந்த மக இப்ப எப்படி இருக்கான்னு தெரிஞ்சும், நீ இன்னும் பாவத்தை தாம்மா சுமத்துற எங்க தலையில” என்றவளுக்கு மூச்சு முட்டும் நிலைதான்..
“இப்ப என்னத்துக்குடி கண்டதையும் பேசுற நீ?” என்று கடுப்பில் கேட்டார்..
“நீ திருந்தல இல்லம்மா, எட்டூருல இருந்து பொண்ணு எடுப்பேன்னு சொன்னியே… நீ கூட என் மூத்த பேத்தியை எடுப்பேன்னு சொல்லம்மா” என்றாள் காட்டமாக..
மகள் வார்த்தை கேட்டு பெரும் அதிர்ச்சி தான் அவருக்கு..
“இப்ப எதுக்கு தேவையில்லாம பேசுற நீ” என்று வெடுக்கென்று முகத்தை திருப்பினார்..
அவர் முகத்தை தன்னை பார்க்கும்படி திருப்பி,
“உம்பொண்ணு தானேம்மா… உன்னை மாறி தான் நானும் சுயநலமா இருப்பேன்… அவளுக்கு நா பண்ண பாவம்தான் என் மகளுக்கு இத்தனை வருஷம் புள்ளை பாக்கியத்தை கொடுக்கல, ஆனா இனியும் அப்படியே இருந்தா இன்னொரு பொண்ணுக்கு நா அநியாயம் செய்தவளா நிற்பேன்” என்றாள் சரசு..
“இப்ப என்ன தாண்டி சொல்ல வர நீ?” என்றார் தன் இயலாமையில், ஒரு பக்கம் கால்வலி உயிரை எடுத்துக்கொண்டிருந்தது..
“நீ பேச்சை மாத்தாம, நா கேட்டதுக்கு பதில் சொல்லும்மா.. ஏன் தெய்வானைக்கா பொண்ணை உன் பையனுக்கு கேக்கல?” என்றாள் அன்னையை நேராக பார்த்து..
“அவளை எப்படிடி என் பையனுக்கு எடுக்க முடியும்.. கெட்டு சீரழிஞ்சி வந்து நிக்குறா, அவ எனக்கு மருமகளா வர நா ஒருக்காலும் விடமாட்டேன்” என்றார் ஆவேசமாக..
“ரொம்ப நல்லா இருக்கும்மா உன் நியாயம்.. அன்னைக்கு அதே நிலையில் தான் தேவகி நின்னா… அப்ப உனக்கு மருமகன் பக்கம் நிக்க தோணிச்சு. அதே தேவகி இடத்தில் பாதிக்கப்பட்டு நிக்கும் உம்பேத்தி பக்கம் உனக்கு நிக்க தோணலை அப்படிதானே!
ரெண்டு இடத்திலும் தப்பு பண்ணது ஒரு ஆம்பளதான் மா. அவனை தண்டிக்கணும்னு தோணல, ஆனா பாதிக்கப்பட்டு நிக்கும் உம்பேத்தியை உன்னால் ஏத்துக்க முடியல… ச்சீ என்ன ஜென்மம்மா நீ” என்றாள் ஆவேசமாக..
“என்னடி வாய் ரொம்ப நீளுது.. உன் வீட்டுக்கு உடம்பு முடியலன்னு வந்ததுக்கு.. நல்லா பேசுறடி பேச்சு” என்றார். இப்ப கூட அவர் என்ன தவறு செய்தார் என்று உணரவேயில்லை..
“பேச்சை மாத்தாதம்மா, எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன் கழுத்தை புடிக்க போறேன்..” என்று அவரை விட்டு தள்ளி நின்றாள் சரசு..
மகள் சொன்னதில் பயம் பிடிக்க, அவள் பக்கம் பார்வையை திருப்பினார்..
தன்னை பார்த்த அன்னையை திரும்பி பார்த்தவள்..
“இவ்ளோ பேசுறீயே… வெற்றி உன் கையாலே சாப்பிட்டு எத்தனை வருஷமாச்சு?” என்றாள்..
மகளின் வார்த்தையில் நெஞ்சில் ‘சுருக்’ என வலித்தது..
பார்வையை கீழே இறக்கினார். பதில் சொல்ல முடியவில்லை. கண்களில் நீர் வழிந்து அவர் கைகளில் புள்ளி வைத்தது..
“சொல்லும்மா, ஏன் பதில் இல்லை… நா சொல்லட்டா? ஏழு வருஷம் ஆச்சு” என்றதும்..
சட்டென நிமிர்ந்து பார்த்தார்..
“எப்படி சரியா தெரியும்னு பாக்குறீயாம்மா… என்கிட்டையும் அவன் சாப்பிட்டது இல்லைம்மா. ஆசையா அவனுக்கு புடிக்கும்னு மீன் குழம்பு கொண்டு வந்தேன்.. அவன் பார்த்தானே ஒரு பார்வை… அம்மாம்மா, இப்பக்கூட என் நடுமுதுகு ஜில்லுன்னு இருக்கும்மா” என்று கதறினாள்..
வெளியே திண்ணையில் இருந்த மணியரசு, அம்மா மகள் என்னவோ பேசட்டும்னு அமைதியாக இருந்தவன், மனைவியின் அழுகை சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்தான்..
“என்னடி அழுகுற?” எனக் கேட்டுக்கொண்டே மனைவி முகம் பார்த்தான்..
மகள் சொன்ன அதிர்வில் இருந்தவர், மருமகன் வந்தது கூட தெரியாமல் நீட்டிய காலை தான் பார்த்திருந்தார்..
கணவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் அழுகை தான் வந்தது அவளுக்கு..
“ஏண்டி கேக்குறேன்ல்ல சொல்லு.. எதுக்கு இப்படி அர்த்த இராத்திரியில் அழுது வடியுற?” என்று சத்தம் போட்டதும் தான்..
தாய், மகள் இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்..
மருமகனை கண்டு அவசரமாக எழ பார்க்க, அவருக்கு முடியாமல் போனது..
இதுவரை கால்கள் இரண்டும் ஒரே நிலையில் இருந்ததில் மரத்துப் போக, பாவமாக மகளை கண்டார்..
“ஒன்னுமில்லைங்க… நீங்க போங்க” என்று அவனை வெளியே அனுப்பி வைத்தாள்..
புரியாத நிலையில் அவனும் வெளியே சென்றான்..
அன்னை பக்கம் பார்த்தாள்..
அவர் பார்வையும் மகள் மீது தான் இருந்தது..
இருவருக்கு
மே அடுத்து பேச நா எழவில்லை. ஏதோ பாரங்கல்லை முழுங்கி, அது ஜீரணமாக சீரகத்தண்ணீ குடித்தது போல் இருந்தனர்..