இலக்கியா வரிசையில் நின்று தன் குடும்பம் சகிதமாக மீனாட்சி சொக்கரையும் தரிசித்து விட்டு வெளியே வருகையில் புகைப்பட கலைஞர் நிற்க குடும்பமாக புகைப்படம் எடுத்து அதை ஃப்ரேம் செய்து வாங்கிக் கொண்டனர்.
முருகனின் மனைவி புளியோதரை வாங்கும்படி கூற, அனைவருமே வாங்கிக் கொண்டு அங்கே தெப்பக்குளம் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க, ஒரு குடும்பம் மட்டும் இவர்களைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
Advertisement
முதலில் அதனை கவனிக்காத இலக்கியா., வெகுநேரமாக தங்களைப் பார்த்து பேசிய குடும்பத்தை புருவம் முடிச்சிட பார்த்தாள்.
Advertisement
Advertisement
அதனை அப்பத்தா கவனித்து விட “ஏட்டி அவ கண்டுகிட்டா. நீ ஆளை கெளப்பு”என்று மருமகளிடம் கூறியவர் தானும் எழுந்து கொண்டார்.
Advertisement
“ஏ முருகா… நீயும் அவளும் போயி செல்லுஃபோனை எல்லாம் வாங்கியாங்க. நாங்க மெல்ல வெளியே வாரோம்”என்று சொல்வதை புரிந்து கொண்டவனாய் முருகன் அவளை கிளப்பிக் கொண்டு வேகமாய் நடந்தான்.
அவர்கள் தலை மறைந்ததுமே அப்பத்தா அந்த குடும்பத்திடம் சென்று “என்னத்தா எம்பேத்தி எப்புடி இருக்கா?”என்று வினவ
“அதெல்லாம் அம்சந்தேன் அம்மத்தா. எங்களுக்கு சம்மதம். நீக பொண்ணு உறுதி பண்ண எப்ப வரலாம் னு சொல்லுங்க”என்றாள் ஒரு இளம்பெண்.
“யாத்தே நெஞ்சுல பாலை வாத்த போ. பரிசபொடவையோட வாத்தா பொண்ணு ஒங்க அண்ணனுக்குதேன்”என்று உறுதியாக கூற, அந்த பெண்ணும் மகிழ்வுடன் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டாள்.
இங்கே இலக்கியாவின் அம்மா மனதில் சஞ்சலத்தோடு தான் நின்றார்.
இலக்கியாவின் அனுமதியின்றி இதென்ன இப்படி ஒரு ஏற்பாடு அவளிடம் தெரியப்படுத்தாமலேயே ஏன் தான் இப்படி செய்கிறார்களோ என்ற ஆதங்கம். என் மகளின் மனதை புரிந்து கொள்ளாமல் சுழற்றி அடிக்கும் குடும்பத்தைக் கண்டு அத்தனை எரிச்சல். ஆனாலும் அவள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றாமலும் இல்லை அவருக்கு.
ஒரு வாரமாக சங்கரி எதையோ சொல்ல வருவதும் பின் இலக்கியாவைப் பார்த்து மறுகுவதுமாய் இருக்க இலக்கியா ஓரிரு முறை என்னவென்று கேட்கவும் செய்தாள். கண்களில் கண்ணீர் பளபளக்க ஒன்றுமில்லை என்று தலையாட்டினாரே தவிர வேறெதுவும் பேசிடவில்லை.
எதுவோ சரியில்லை என்று யூகித்துக் கொண்டவள் வீட்டினரின் செயல்களையும் கவனிக்கத் தவறவில்லை.
நடப்பது நடக்கட்டும் என்று அவள் கொண்ட அலட்சிய பாவனை அவளின் அப்பத்தாவை தான் இன்னும் உசுப்பேற்றி கொண்டிருந்தது.
“இவ கொட்டத்த அடக்கற மாதிரியான மாப்ள தான்டா இவளுக்கு சரி. “என்று தான் தேர்வு செய்த மணமகனைப் பற்றி தானே மிடுக்காக பேசிக் கொண்டார்.
*************
“என்ன ண்ணே ஊருபயணம் எல்லா முடிஞ்சுதா”காத்தமுத்து கலைச்செல்வனின் முகம் இலகுவாக இருக்கக் கண்டு கேட்க
“பெரியப்பனும் நம்ம முனியாண்டியும் போயிருக்காவ. நீயி வந்தாச்சுனு பெரியாத்தா சொல்லவும் ஓடியாந்தேன்.ஆமா கையில என்னண்ணே புதுசா மோதிரம் எல்லாம் போட்டு இருக்க”என்று சிரிக்க
“எல்லாம் அவகதேன். பாத்தில்ல சிங்கமொகம் போட்ட மோதிரம். இந்த காப்புக்கும் மோதிரத்துக்கும் தான் செரியா இருக்கும் னு எங்காத்தா எடுத்தது”என்று நெகிழ்ச்சியாக மோதிரத்தை வருடியபடி கூற காத்தமுத்து சிரித்துக் கொண்டான்.
ஆத்யாவுக்கென செயின் எடுக்க வேண்டும் என்று கேட்க அழகினியன் மறுத்திருந்தான் வேண்டாமென. பிடிவாதமாக எடுத்து தீருவேன் என்று நிற்கவும் திருச்சியில் ஒரு நகைக்கடையில் செய்ய சொல்லி ஆர்டர் கொடுக்க அங்கிருந்த சிங்கமுகம் போட்ட வெள்ளி மோதிரத்தைக் கண்ட ஆத்யா அதைக் காட்டி கலைச்செல்வனை போட்டு கொள்ளும்படி கூறி அழகினியனை வாங்கிக் கொடுக்கவும் வைத்து விட்டாள்.
அவள் ஆசைக்கு மறுப்பேது அங்கே “சூப்பர் கலைப்பா.”என்றதில் பூரித்துப் போனான் அவன்.
“அவக வீட்டுல எல்லாம் நல்லா இருக்காவளாண்ணே. மறுக்கா போவும் போது சொல்லுண்ணே நானும் கூட வர்றேன்”என்றவனிடம் தலையாட்டி விட்டு தன் நினைவுகளில் மூழ்கிக் கிடக்க
“சொல்ல மறந்துட்டேன் பாரு என்னை அந்த மறக்கம்பட்டி பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம் என்ன நாலு நாள்ல கல்யாணம்னு சொன்னாங்க”
“பத்திரிகை வந்துச்சா யாரு சொன்னாங்க அந்த பிள்ளையை சொல்லுச்சா”என்று கலைச்செல்வன் கேட்க
“அவங்க அண்ணன் தான் வந்து பத்திரிக்கை வச்சுட்டு போனா”என்றான் காத்தமுத்து.
“எப்படிடா அந்த புள்ள ஒத்துகிச்சு” என்று சந்தேகமாக கேட்க
“சரிடா போய்ட்டு வந்துருவோம். அந்த பொண்ணு சொல்லாட்டினாலும் பத்திரிக்கை வந்து இருக்கு இல்ல, அந்த மரியாதைக்காக வேண்டி போயிட்டு வந்துரலாம்”என்றவன் படுக்கச் சென்று விட்டான். ஆனாலும் மனதில் ஏன் இலக்கியா தன்னிடம் திருமணம் என்று கூறவில்லை என்று யோசித்தான். அத்தனை தூரம் பேசியும் பழகியும் தன் திருமணம் பற்றி கூறவில்லையே அவள் என்ற எண்ணம் மேலோங்க போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவன் அப்படியே உறங்கியும் போனான் அடுத்தடுத்த நாட்களில் அதனை வேலை மிகுந்ததில் மறந்தும் போயிருந்தான்.
“ஏத்தா மறந்தேபுட்டேன் நீயுந்தேன் ரவைக்கே நெனவுபடுத்தி இருக்கக் கூடாது”என்று தலையில் லேசாக தட்டிக் கொண்டவன் “ஆனாலும் பாருத்தா இத்தனை தொலைவு பேசி பழகின புள்ள ஒத்த வார்த்த எங்கிட்ட கலியாணம்னு சொல்லல”என்றான் குற்றம் போல
“ஏய்யா கலியாண வேலையில மறந்து போயிருக்கும் இது ஒரு விஷயமா கெளம்புய்யா. ஆயிரந்தேன் இருந்தாலும் சந்தியா கூட படிச்ச புள்ள”என்று தனம் சமாதானம் சொல்ல
“அதுக்கில்லத்தா…நாலு நா முன்னாடி கூட பாத்தேன். ஒத்த வார்த்த சொல்லல”என்றவன் “செரி விடு நா கெளம்புதேன்”என்று சொல்லி விட்டு கிளம்ப சென்றான்.
சற்று நேரத்தில் இலக்கியா திருமணத்திற்கு குடும்ப சகிதமாக கிளம்பி இருந்தனர்.
*************
“ஸோ இதுதான் உங்க ப்ளான் இல்ல”என்று இலக்கியா கோபத்தை அடக்கியபடி கேட்க
“அம்மாடி உன் நல்லதுக்கு தான் மா”என்று பெருமாள் கூறவும்
“இதை என் கிட்ட முன்னாடியே சொல்லி இருந்திருக்கலாம் பெரியப்பா நீங்க?”என்றாள் அழுத்தமாக
“சொல்லி மட்டும் மகாராணி அப்படியே போய் மணவடையில உட்கார்ந்து இருப்ப”என்று முடித்த அப்பத்தா “மருவாதையா போயி மணவறையில் உட்கார்றியா இல்லையா?!”என்று அதட்ட, இலக்கியா விழிகளை மூடித் திறந்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மணமகனின் குடும்பம் உள்ளே நுழைய ,இன்னும் எரிச்சலாக பார்த்தாள் இலக்கியா
‘இவங்க ஏன் இப்ப வர்றாங்க?’ என்று நினைக்க
அவர்களோ,” என்னத்தா இன்னும் கிளம்பலையா? ஏன் இப்படி நிக்கிறீங்க?” என்று கேட்க
“இந்த கல்யாணம் நடக்காது” என்றாள் ஆணித்தரமாக
அவர்களோ முகத்தை கோபத்துடன் சுளித்தபடி,” ஏன் நடக்காது?” என்று கோபத்தோடு பொங்கிக் கொண்டு வர,” என் பர்மிஷன் இல்லாமல் இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்காங்க” என்றதும்,” அதுக்கு என்னத்தா அதான் இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல, போயி ரெடியாவு”என்று எள்ளலாக உரைக்க
“அதுக்கு வேற ஆளைப் பாருங்க”என்றாள் பட்டென்று.
“இது செரியா வராது ஏ நித்யா ஒம்மயினியை ரெடி பண்ணி கூட்டிட்டு வா”என்று மகளை அழைத்த அந்த பெண்மணி திமிராக அங்கேயே நின்று கொண்டார்.
‘உன்னால் ஆனதை பார்த்துக்கொள்’என்பதைப் போல இலக்கியாவும் அகம்பாவமாக நின்றாள்.
“இதென்னத்தா இவ்வளவு பிடிவாதம்”என்று வேகமாய் அந்த பெண்மணி ஆவேசமாய் வரவும் இன்னும் நிமிர்வாக பார்த்தவள் “என் கிட்ட சம்மதம் கேட்டீங்களா இந்த கல்யாணத்துக்கு…நீங்களா இவங்க பேச்சைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்து இப்போ என்னை ரெடி ஆக சொன்னா என்ன அர்த்தம்”என்று கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல் திணறியவரோ அப்பத்தாவைப் பார்த்து “இதென்ன ஆத்தா இப்படி பேசுதா…ஒங்க பேச்சைக் கேட்டு கலியாண ஏற்பாடு செஞ்சா.. இந்த மாதிரிதேன் மானத்தை வாங்குவியளா”என்று கொந்தளிக்க இலக்கியா எங்கோ வெறித்தபடி நின்றாள்.
“நா நான் சொல்லி புரிய வைக்குதேன் நீ போய் மத்ததை கவனித்தா”என்று அப்பத்தா சமாதானம் செய்து அனுப்ப பார்க்க இலக்கியாவோ அங்கிருந்து கிளம்ப முயல அவளின் அம்மா பதற்றமாய் கையைப் பிடித்துக் கொண்டார்.
“ப்ப்ச் மாம்”என்று ஆயாசமாக உதறப் போக சற்று நேரம் அமைதியாக இரேன் என்பது போல கண்களை மூடி திறக்க வேறு வழி இல்லாமல் பல்லைக் கடித்தபடி நிற்க அந்த பெண்மணி வேகமாக “சீக்கிரம் வரச் சொல்லுங்க”என இலக்கியாவை அலட்சியமாக பார்த்து விட்டு சென்றார்.
சங்கரியோ மகளின் கையைப் பிடித்து நின்றவர் “இலா மா. உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாமாடா ஏன் மா இப்படி பிடிவாதம் பிடிக்கிற எங்களுக்காக இந்த கல்யாணம் பண்ணிக்க கூடாதா நீ”என்று தவிப்பாய் கேட்க
“நீங்க தயவு செஞ்சு பேசாதீங்க எல்லாம் உங்களால”என்று கத்த அதற்குள் தனம் உள்ளே வந்து விட்டார்.
“என்னத்தா இது இன்னும் கெளம்பலையா அங்கன மாப்ளகாரன் பட்டு வேட்டி சட்டை எல்லாம் போட்டு கெத்தா நிக்குறியான் நீ என்ன டான்னா”என்று தனம் வர
“நீயே நல்லா சொல்லுத்தா தனம். கல்யாணம் பண்ணிக்க எம்புட்டு பேச்சு பேசுதா தெரியுமா”என்று அப்பத்தா நடந்நதை சொல்லி முடிக்க தனம் ஆதூரமாக அவளைப் பார்த்து விட்டு “ஒம்மனசு புரியுதுதுத்தா. ஒனக்கு என்ன ஒம்புள்ளைய கடைசி வரைக்கும் விட்ர கூடாது அம்புட்டு தான.”என்று கேட்க
ஆமென்று தலையாட்டியவள் பின்னர் அடுத்து பேச”ஒஞ்சம்பாத்தியம் ஒம்மவனோட சொத்து எதையும் அவக கேட்க கூடாது அவ்வளவு தான. இது ஒரு விஷயமா. எம்புள்ள அங்கனதேன் மாப்புளய பாக்க போயிருக்கியான் அவன் கிட்ட சொல்லி பேச சொல்றேன்”என்று தனம் சமாதானம் செய்து அவளை கிளப்ப முயற்சி செய்ய கலைச்செல்வன் அவசரமாக பெருமாளை அழைத்தபடியே அங்கே வந்து விட்டான்.
சற்று நேரத்தில் அங்கே காட்சியே மாறிவிட்டது. மணமகனாய் கலைச்செல்வன் அமர்ந்திருக்க மணமகளாய் இலக்கியா மணமேடையில் வந்தமர சில நிமிடங்களில் அவனின் சரிபாதியானாள் இலக்கியா.