Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 33.2

பூவே 33.2

உள்ளே இருந்து அப்போது தான் திண்ணைக்கு வந்த மணியரசு,



Advertisement

“என்ன வெற்றி, தூங்காம டாக்டர் சாரை எங்க கூட்டிட்டு போற?” என்றார்.

Advertisement

“அது ஒன்னுமில்லை மாமா, ஜனகன் வீட்டுல ஏதோ அவசரம்னு வரச் சொல்லி போன் பண்ணாங்க. அதான் கிளம்புறாங்க,” என்றான் தகவலாக.

Advertisement

“சரி டாக்டர், பாத்துப் போயிட்டு வாங்க,” என்றார் மணியரசும்.

Advertisement

இருவரும் தலையாட்டி நகர்ந்தனர்.

மாறன் வீட்டுக்கு வந்தார்கள்.

அங்கே இருந்தவர்களுக்கும் புது இடம் என்பதால் உறக்கம் வரவில்லை. அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் பெண்கள்.

திண்ணையில் இருந்த மாறனை உசுப்பிவிட்டான்.

அவனோ உறக்கம் கலையாமல் மீண்டும் திரும்பிப் படுத்தான்.

“இவனுக்கு இதே வேலையாப் போச்சு!” என்று முணங்கியவன், அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுக்க,

“அம்மா!” என்று அலறி எழுந்தான்.

இருட்டில் நின்ற மூவரின் முகம் தெரியாமல், உருவம் மட்டுமே அவனுக்கு தெரிந்தது.

“ம்மோவ்… என்னைக் காப்பாத்துங்க! மோகினி பிசாசு என்னைச் சுத்தி இருக்கு!” என்று கண்களை மூடிக்கொண்டு கத்தினான்.

“ஏய் எருமை!” என்று திட்டிக்கொண்டே சுவற்றில் இருந்த சுவிட்சை அழுத்தினான் வெற்றி.

இருட்டில் இருந்த இடம் திடீரென வெளிச்சமாக, கண்களை சில நொடிகள் மூடி திறந்தான் மாறன்.

அவன் பார்வையில் வெற்றியுடன் சேர்ந்து மற்ற இருவரும் சன்னமாக சிரித்துக்கொண்டிருந்தனர்.

“இப்படியாடா மானத்தை வாங்குவ நீ!” என்று தலையிலே அடித்துக்கொண்டான் வெற்றி.

“நா என்ன மச்சான் பண்ணுறது? இன்னேரத்துல நீங்க வருவீங்கன்னு நா என்ன கனவா கண்டேன்?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

“ஆமா, தூங்காம இங்க எதுக்கு வந்தீங்க?” என்றான் மாறன்.

அவனிடம் சுருக்கமாக அவர்கள் கிளம்பும் தகவலைச் சொன்னான்.

“மாறா, நர்ஸ் எல்லாரும் தூங்கிட்டாங்களா?” என்றான் குமரன்.

“இல்லைங்க… அவங்க பேச்சுச் சத்தம் நா தூங்கும் வரை கேட்டுச்சு,” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்துக்கொண்டு அனைவரும் வெளியே வந்தனர்.

“என்னாச்சு டாக்டர்?” என்று மூத்த செவிலியர் கேட்டார்.

“தாத்தாவுக்கு உடம்பு முடியலன்னு போன் வந்திச்சு சிஸ்டர்.. நாங்க கிளம்புறோம். உங்களுக்கு யாராவது வர விருப்பம் இருந்தா வாங்க, உங்களை விட்டுட்டு போறோம்” என்றான் ஜனகன்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்க்க, வேல்விழியும் அம்சவள்ளியையும் தவிர்த்து மற்ற இருவரும் கிளம்ப முடிவானது.

“நர்ஸ், உங்களுக்கு எதுவும் அவசரம் இல்லையே?” என்றான் குமரன்.

“இல்லை டாக்டர்,” என்றனர் இருவரும்.

ஜனகன், குமரனை கண்டு மௌனமாகச் சிரித்தான்.

அவன் சிரிப்பின் காரணம் தெரிந்தவனோ, கண்களாலே மிரட்டினான். இருவரையும் கண்டு வெற்றி நெற்றி சுருக்கினான்.

“வெற்றி, இவங்களைப் பத்திரமா கொண்டு வந்து சேர்க்கணும். உங்ககிட்ட வேண்டுகோள் வைக்கிறேன்,” என்றான் குமரன்.

“நீங்க கவலைப்படாம போங்க குமரன். அவங்களை நானே கூட்டிட்டு வரேன்,” என்று கை கொடுத்தான் வெற்றி.

மனமே இல்லாமல் தான் குமரன் அங்கிருந்து நகர்ந்தான்.

போகும் வண்டியை பார்த்துக்கொண்டிருந்தவன் பார்வை இப்போது வேல்விழி பக்கம் திரும்பியது.

அவளோ அங்கே ஒரு ஜீவன் நிற்பதைக் கூட கண்டுகொள்ளாமல், தோழியின் கைகளைப் பற்றிக்கொண்டு உள்ளே போனாள்.

தன் அருகில் அசையாமல் நின்றவனை கண்டு,

“என்னடா” என்றான் மாறன்.

“ஒன்னுமில்லை…” என்றவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

ஆனால் உள்ளுக்குள் ஏதோ நெருடலாக இருந்தது.

குமரன் கிளம்பும்போது வேல்விழியை பார்த்த பார்வை ஏனோ மனதைச் சற்றே உரசியது.

அது கோபமா, வருத்தமா, பிடிக்காத உணர்வா என்று அவனுக்கே புரியவில்லை.

அன்று வார்த்தைக்கு விலகி நிற்பேன் என்றவனால், இப்போது அந்த வார்த்தையைச் சொல்ல வாய் வரவில்லை.

அடுத்து நாள் வெற்றி, தோழிகளுக்கு ஆட்டோ வரவைத்திருந்தான்…

பேத்தியின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.. ‘எங்கே கை விட்டாள் பேத்தி தன்னை விட்டு போயிடுவாளோ’ என்ற எண்ணம் அவருக்கு..

“நா போயிட்டு வரேன் பாட்டி” என்றாள்.

அதை கேட்டு அந்த பெரிய மனிஷிக்கு மனது தாங்கவில்லை, “என் கூடவே இருத்தா” என்றார் தவிப்பாக,

அவளாலையும் அவரை இந்த நிலையில் விட்டு போக முடியவில்லை, ஆட்டோ காத்திருக்க கூடவே தோழியும் நின்றிருந்தாள்…

சற்று தள்ளி இவளை பார்த்தபடி வெற்றியும் நின்றிருந்தான்..

அவன் பக்கம் இவள் பார்வை போகவே இல்லை..

“வேலை இருக்கு பாட்டி, இங்க தங்க எனக்கு எந்த உரிமையும் இல்லை” என்று தவித்து போனாள்..

“உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்குத்தா இருக்கு” என்றார் கண்கள் கலங்க,

“பிளீஸ் பாட்டி நா போறேன்” என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள்..

“போயிட்டு வாத்தா இந்த கெழவி இருக்குறதை மறந்துடாத” என்று பேத்தியை உச்சு முகர்ந்தார்..

அவளும் அவரை அணைத்துக்கொண்டு, தன் தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு வண்டியில் ஏறினாள்..

ஆட்டோ முன்னே போக, அவர்களை தொடர்ந்து வெற்றியும் மாறனும் பின்னே தன் பைக்கில் வந்தனர்..

ஆட்டோவில் இருந்து தோழிகளும் பேசிக்கொள்ளவில்லை,

திடீரென ஆட்டோ சடன் பிரேக் போட்டு நிற்க..

இருவரும் ஒரு அடி முன்னே போயிட்டு வந்தனர்..

வேல்விழி ” ஆ” எனக் லேசாக சத்தம் எழுப்பினாள்.. கம்பியில் தலை இடித்ததால்..

“ஏய் பாத்துடி.. அவள் தலையை தேய்த்து.. அண்ணா பாத்து பிரேக் போட மாட்டிங்களா , பாருங்க அவ தலையிலே இடிச்சிக்கிட்டா” என்று அவரிடமும் கத்தினாள் அம்சவள்ளி..

“மன்னிச்சிக்கம்மா, ஏதோ சண்டை போல ரோட்டுல வண்டி அப்படியே நிக்குறதை கவனிக்காம பிரேக் பிடிச்சிட்டேன்”.. என்றார் அவரும் ..

“அண்ணா நீங்க எதுவும் மன்னிப்பு கேக்காதிங்க நா தான் கவனமில்லாம இருந்துட்டேன்” என வேல்விழி சொல்லிமுடிக்க,

வெற்றி அவர்கள் அரூகே வந்தான்..

“என்னாச்சும்மா” என்றவன் பார்வை வேல்விழியிடம் தான் இருந்தது..

“அது கம்பில் லேசா இடிச்சிக்கிட்டான்னா..” என்றாள் அம்சவள்ளி.

தலையைசைத்துக் கேட்டுக்கொண்டவன் “அண்ணா நீங்க இப்படியே கெளம்புங்க.. அங்க போலிஸ் ஸ்டேஷன்ல ஏதோ! சண்டையா இருக்கு..

நாங்க இவங்களை கூட்டிட்டு போறோம்” என்றான் வெற்றி..

அவரும் சரின்னு சொல்லி , பணத்தை வாங்கிக்கொண்டு வண்டியை திருப்பினார்..

“வெற்றி வண்டியை பிள்ளையார் கோவில் பின்னே நிறுத்தி லாக் பண்ணிட்டேன்.. அங்க பக்கத்துலையும் சொல்லிட்டு வந்தேன்” என்றான் மாறன்..

“சரிடா” என்றவன்.. “நீங்க வாங்க” என்று அவன் முன்னே நடக்க அவனை தொடர்ந்து மற்ற மூவரும் நடந்தனர்..

நடந்து போகவே வழியில்லாத நிலை தான்.. வண்டிகள் அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஏலே! நாங்க வேலை வெட்டிக்கு போகவேணாவ, இப்படி போக வழியில்லாம வண்டியை நிறுத்திருக்கிங்க” என்று பைக்காரன் ஒரு பக்கம் கத்தினான்..

“ம்மா.. ம்மா” எனக் நெல்மூட்டை ஏறி இருந்த காளை ஒருபக்கம் கத்தியது..

இப்படியாக ஒவ்வொருவரும் கத்திக்கொண்டிருந்த , சின்னச்சின்ன இடைவெளியில் மெல்ல மெல்ல அழைத்து வந்தான் வெற்றி..

இவர்கள் அடுத்த பக்கம் நகர இருந்த நேரத்தில் , ஒரு இளம்பெண், ஆடவன் கைபிடித்து காவல் நிலையத்திலிருந்து வெளியே ஓடி வந்தாள்..

இருவரையும் பார்த்ததும் இதுவரை கத்திக்கொண்டிருந்தவர்கள். இவர்களை பார்த்ததும் அடுத்து என்ன என்று அவர்கள் பக்கமே பார்வையிருந்தது..

கண்ணீரோடு அவள் இருக்க, அவள் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்..

காவல் நிலையத்திலிருந்து மற்றவர்களும் ஓடி வந்தனர்..

“வாத்தா, அவன் உனக்கு வேணாம்.. அப்பனாத்தா இல்லாதவன்டி உன்னை என்னவும் பண்ணிடுவான்டி வந்திடுடி,” என்று மகளின் கைகளை பற்றினார் அவள் அன்னை..

வெள்ளை வேஷ்டி, சட்டையுமாக இன்னும் நாலைந்து பேர் வெளியே வந்தனர்..

காவலர்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்..

பெரிய இடம் அவர்களுக்கானதை குறைவில்லாம செய்ததால்,

“என் தாயி இல்லை வாம்மா, உனக்கு அடுத்து ரெண்டு பொட்டை புள்ளைங்க இருக்கும்மா.. நீ தான் அவங்களுக்கு முன்னோடியா இருக்கணும் இப்படி எங்க மானத்தை வாங்கதத்தா” என்று தந்தை ஒரு பக்கம் கண்ணீர் வடித்தார்..

அவளும் பெற்றவர்களின் நிலையை கண்டு அழுகை வந்ததே தவிர பதில் சொல்ல வாய் வரவில்லை,

“வாடி, உன்னை பெத்ததுக்கு எங்களை இப்படி தெருவுல நிக்க வச்சிட்டியே?” என்று ஆத்திரமாக கத்தினார்..

“இங்க பாருங்கம்மா, உன் அப்பம்மா கூட போறதுதான் உனக்கு நல்லது..” என்று வெள்ளை வேட்டிக்கரர்களின் மிரட்டலுடன் நின்றனர்..

“முடியாது.. அவ இப்ப மெஜர் அவளுக்கு என்ன தேவைன்னு முடிவு எடுக்குற உரிமை அவளுக்கு இருக்கு” என்று அவனும் பல்லைக்கடித்தான்..

” ம்மா எங்களை விட்டுடும்மா நாங்க கலியாணமும் பண்ணிக்கிட்டோம்னு” கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை எடுத்துக்காட்டினாள்..

“ஐய்யோ ஐய்யோ” என்று அவள் முதுகிலே ரெண்டு அடியை போட்டார் ஆத்திரம் தீரும்வரை,

அவளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் அவனும்..

“பாருய்யா பாரு நல்லா பாரு எம்மக படிக்க கலேசுக்கு போறான்னு பெருமை பட்டியே! பாரு எப்படி நம்ம முகத்துல கரியை பூசிட்டு நிக்குறான்னு” என்று ஆவேசமாக கத்திக்கொண்டு திரும்பியவர் பார்வையில் மஞ்சள் கயிறு பட்டது..

எந்த வேகம் கொண்டு இழுத்தாரோ ஒரே இழுவில் அந்த மஞ்சள் கயிறு கையோடு வந்தது..

“அம்மா” என்று அவள் அலறி துடித்தாள்..

“இந்த மஞ்ச கயித்தை கட்டிட்டா அவன் உனக்கு புருஷனாகிடுவானா, மரியாதையா என்கூட வர்றவழியை பாரு” என்றார் ஆத்திரமாக,

“மாட்டேன் என் புருஷன் கூட தான் இருப்பேன்” என்று அத்தனை பேர் இருப்பதை மறந்து அவனுடன் ஒன்றி நின்றாள்..

தன் கையிலிருந்த கயிறை தூக்கி எரிய, அதுவோ போய் விழுந்தது வெற்றி வேல்விழிக்கு நடுவில்.. சில நிமிடம்

ஏழு வருடம் கண்முன்னே வந்து நின்றது..

கீழே கிடந்த கயிறு மேல் தான் இருவரின் பார்வையும் இருந்தது..

கண்கள் மெல்ல மெல்ல மறைய காட்சி மொத்தமும் அவர்கள் கடந்தகாலத்தில் போய் நின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!