Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா  கல்யாண வைபோகமே… 10 1

சீதா  கல்யாண வைபோகமே…



Advertisement

   அத்தியாயம் – 10

Advertisement

Advertisement

  சீதாவுக்கு  ரவிதேஸ்சா போனில் அழைத்து “சீதா, சீதா வா”..

என்று கேட்டதும்…

Advertisement

“ஆமாம் சார், சீதா தான் பேசுறேன்” என்றாள்..

“ஹே சீதா வாட் ஏ சர் ப்ரைஸ், காலிங் மீ, எப்படி இருக்க”?..

“பைன் சார்” என்றவள்..

“உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா சார்?”..

“ஹே  சீதா நோ,, நானே உன்கிட்ட பேசனுமுன்னு நெனச்சேன் பட் உன்னை கான்டாக்  பண்ண முடியல,,  எப்படி கன்னட படம் சூட்டிங் போகுது, எவ்ரிதிங் ஓகே நௌ”..

“எல்லாம் நல்ல படியா போகுது சார்,, உங்க கிட்ட அது எப்படி சொல்லுறதுன்னு தெரியல, சாரி சார்,, என் பிரண்ட் பண்ணதுக்கு  நான் சாரி கேட்டுக்குறேன்”.. என்றாள்..

“ஹே  சீதா நீ எதுக்கு சாரி சொல்லுற,, அவன் பண்ணதுக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்,,  அத விடு.. நீ  குழலிசை கெரக்டருல  நீ எப்படி நடிச்சுருக்க தெரியுமா, ஒன்டர் புல் ஆக்டிங் யுவார்ஸ் ,,  சோ நைஸ்,ஐ திங் நான்  உன் நடிப்ப பாத்து உன் ப்பேன் ஆகிட்டேன் சீதா..

 அதுவும் நீ  வீரசிம்மாவை  எதிரிகளிடமிருந்து  காட்டுல அம்பு விட்டு காப்பாத்துவீயே அந்த சீன் சூப்பர்மா, அப்பறம்  நீ எந்த மேக்கப் இல்லாம, அந்த காலத்து நடிகை மாதிரி நடிச்சுருக்க சீதா, அப்பறம் நீ  வீராசேனாவிடம்  குழலிசை கேரக்டருல காதல்  மௌன மொழி பேசுறது அவ்வளவு அழகாய் இருந்தது  வாவ்…

அப்புறம்   அந்த கார்குழலியா கேரக்டர்  கிளைமாக்ஸ் சீன்ல நீ பின்னிட்ட, செம்ம மாஸ் சீன் சீதா”  என்றதும்..

“தாங்யூ சார்”  என்றாள் சீதா….

“உன்னை  சூட்டிங் ஸ்பாட்டில் குழலிசையா  பார்க்கனுமுன்னு எவ்வளவு  ஆசைப்பட்டேன் தெரியுமா சீதா பட் முடியல”?… என்றான் வருத்தமாக..

“சாரி சார்” என்றாள்..

ஏன் சிரஞ்சீவி இவனிடம் அன்றைக்கு அப்படி சண்டை போட்டான் என்றிருந்தது சீதாவுக்கு,,,..

ரவிதேஸ்சாவிற்கு  சீதாவிடம்  பேச ஆயிரம் விசயங்கள் இருந்தது,, அந்த படத்தை பற்றி சீதாவிடம் ரவி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்க,, சீதா ஒவ்வொன்றிற்க்கும் பதில் சொன்னாள்..

அவளுக்கே ஆச்சர்யம், நான் இந்திரா சேனா படத்தில் இவ்வளவு நடித்திருக்கேனா என்று , அவ்வளவு  நுனுக்கமாக கேட்டு கொண்டிருந்தான் ரவி… சீதாவிடம்..

சீதாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, தன் நடிப்பை பற்றி ரவி புகழ்ந்து கூறியது..

இருவரும் படத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்க..

நீண்ட நேரம் கழித்து,, சீதா ரவிதேஸ்சாவிடம் கேட்டிருந்தாள்..

“சார் ஒரு ஹெல்ப்” என்று..

“நீ என்ன வேணா கேளு சீதா உனக்கு செஞ்சு கொடுக்குறேன், ஆனா இந்திரா சேனா படம் ரிலீஸ்  பற்றி மட்டும்  என்கிட்ட, கேட்காதே,,  கண்டிப்பா என்னால முடியாது”?..என்றிருந்தான் கோபமாக.

“சார் ரவி சார் என் பிரண்ட் என்மேல உள்ள அக்கறையால அப்படி பண்ணிட்டான்,, சாரி சார் ..

எங்களோட வாழ்க்கையே அந்த இந்திர  சேனா படத்துல தான் இருக்கு,, நீங்க  கொஞ்சம், மனசு இறங்கி படத்தை”.. என்று அவள் சொல்வதற்குள்,,

“சாரி சீதா,, என் கிட்ட இத தவிற வேற என்ன வேணுமுன்னாலும் கேளு பண்ணி தர்ரேன், உனக்கு ஹிந்தி படம் நடிக்கனுமா? இல்ல பெரிய சூப்பர் ஸ்டார் யார்கூடவாவது நடிக்க ஆசை படுறீயா சொல்லு,, உனக்கு வாய்ப்பு வாங்கி தர்ரேன், இந்த படம் ரிலீஸ் பத்தி மட்டும்  கேட்காத,, எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு சீதா,  அதை கெடுத்தவனை, நான் சும்மா விட மாட்டேன்,,”?.

“ரவி சார்  நீங்க அப்படியெல்லாம், சிரஞ்சீவி மேல கோபப்படாதீங்க,,.. அவன் ரொம்ப நல்லா மாதிரி,, ஏதோ உங்களை தப்பா புரிஞ்சிகிட்டு பேசிட்டான், அத மனசுல வச்சுக்காதீங்க”..

“யாரு அவன் ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டானா,, சீதா நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி, உன் பிரண்ட நியாய படத்தாத,,  எனக்கு நினைவு தெரிந்த நாளுல இருந்து என்னை இது வரைக்கும் யாரும்  கை நீட்டி பேசுனது இல்ல,, ஆனா உன் பிரண்ட் என் சட்டையை பிடிச்சு அடிக்க வந்துட்டான்,, அவனா சும்மா விட சொல்றீயா, அத மட்டும் இல்ல,, என் கேரக்டரை பத்தி விமர்சனம் பண்ண இவன் யாரு, என் பேரன்சே என் கிட்ட எதுவும் கேட்டது இல்ல.

இவன் யாரு என் கேரக்டரை பத்தி பேச,, உன்னை நான் சூட்டிங்கில்  தான் பார்க்க வந்தேன்,, வேறா வழியில பார்க்க வந்தேனா சொல்லு,..

உன்னை  குழலிசையாகத்தான் பார்க்க வந்தேன்,,  சீதாவா பார்க்க வரல… உன் பிரண்ட் கதை சொன்னப்பா என் மனசுல பதிஞ்சது குழலிசை கதாபாத்திரம்,, அதுக்கு உருவம் குடுத்தது நீ,, நான் உன்னை  சீதாவா பார்க்கல குழலிசை கேரக்டரா  தான் பார்த்தேன்,, அப்கோஸ் எனக்கு கேள்ர்  பிரண்ட் அதிகம் தான், அதை பத்தி விமர்சனம் பண்ண, இவன் யாரு,, யாரை மன்னிச்சாலும் மன்னிப்பேன் உன் பிரண்ட் சிரஞ்சீவியை மட்டும் நான்  மன்னிக்கவே மாட்டேன்,, புது டைரக்டர் மாதிரியா பேசுறான்,, ஏதோ பத்து படம் எடுத்து, சாதிச்ச மாதிரி திமிரா பேசுறான், முதல் படமுன்னு பயம் வேண்டாம்,, எதிரில் இருக்குற யாருன்னு தெரியாம கைவச்சுட்டான்,, விளைவ அனுபவிச்சத்தான் ஆகனும் “.. என்றதும்..

சீதா அமைதியாக இருக்க..

“சீதா லைன்னில் இருக்கீயா”?.. என்றான் ரவி.

“உம்ம் இருக்கேன் சார்”,, என்றவள்..

சிறிது நேரம் கழித்து,, “படம் ரிலீஸ்சாக வேற வழியேயில்லையா” என்றாள் சீதா.

“உனக்கு இந்த படத்தை ரிலீஸ் பண்ணுறத தவிற என்கிட்ட பேச வேற ஒன்னுமில்லையா சீதா” என்றான்

அவளோ ஏதாற்த்தமாக “உங்க கிட்ட இந்திரா  சேனா படம் ரிலீஸ் பண்ணுறத தவிற பேச ஒன்னுமில்லையா சார்” என்றதும்..

போனை கட் பண்ணி இருந்தான்..ரவிதேஸ்சா..

நான் இவ்வளவு சொல்லியும்,, நண்பனுக்கு சப்போர்ட் பண்ணுறாளே,, இவகிட்ட பேசி என்ன  பயன் என்றவன்….

கோபத்தில் போனை சைலேண்டில் போட்டு விட்டு தூங்கி விட்டான்..

சீதா ரவிக்கு போனில் அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்..

“சாரி சார்” என்று மட்டும் வாய்ஸ் மெஜேஸ் அனுப்பியவள் தன் வேலையை பார்க்க,, சூட்டிங்  சென்றுவிட்டாள்..

கன்னட பட டைரக்டரிடம் வேகமாக தன்னுடைய சீனை முடித்து தருமாறு கூற…

“ஏன்? சீதா என்னாச்சு?” என்றார்.. அந்த கன்னட பட டைரக்டர்..

சீதா  விசயத்தை சுறுக்கமாக சொன்னவள்..

இந்தியா கிளம்புவதாக சொல்ல..

“சரிமா நாளைக்கு மதியான முடியிற மாதிரி பார்க்கலாம்,, நீ ஈவ்னிங், இல்லை  நைட் பிளைட்ல கிளம்பு நான் டிக்கெட் போடுறேன்” என்றார்..

கன்னட டைரக்டர் சீதாவின் நிலைமை புரிந்து கொண்டு அவளுடைய சீன்னை மட்டும் வேகமாக எடுத்தவர்,, அவளுக்கு பிளைட் டிக்கெட்டை நாளைக்கு இந்தியாவுக்கு கிளம்பும் மாறு புக் பண்ணி விட..

இரவு சூட்டிங் முடிந்து வந்த சீதா போனை பார்த்தாள்.. ரவிதேஸ்சா அவளின் வாய்ஸ் மெஜேஸ்சை பார்த்ததற்குகான ப்ளு டிக் இருக்க..

அப்பாட என்றவள்,, “கால் மீ சார்” என்று மீண்டும்  ரவிதேஸ்சாவிற்கு வாய்ஸ் மெஜேஸ் அனுப்பி இருந்தாள்…

சில தவறிய எண்கள் தன் போனில் இருக்க..

அந்த இந்திய எண்ணுக்கு  அழைத்திருந்தாள்  சீதா….

“சீதா” என்று லதா அழைக்க….

“லதா இது உன் நம்பரா”?.

“ஆமாம் சீதா என் நம்பர்  தான்..

உனக்கு  என் பழய நம்பருல இருந்து போன் போகலா,, அது தான் புது நம்பர் வாங்கி போன் போட்டேன்” என்றாள் லதா..

“சொல்லு  லதா” என்றதும்..

“உன் பிரண்ட் ஓவார பேசுறான், அடுத்த மாதம் நடக்குற நிச்சயத்தை நிறுத்த சொல்லி, உன் பிரண்ட் சிரஞ்சீவி சொல்லுறான்,, அவன்னை என்னன்னு கேளு  சீதா நீ,,..

அவன் என்னை ரொம்ப வேதனை படுத்துறான்,, என்னால தாங்க முடியல சீதா” என்று லதா  அழுக..

“என்னாச்சு  லதா அந்த பைத்தியகாரன் என்ன  தான்  சொல்லுறான்”?.

“அவன் டைரக்ட்  பண்ண இந்திர சேனா படம்  ரிலீஸ் ஆகாதாம்,, அதனால இந்த கல்யாணம் வேண்டாமம்,, என்னை வேற  யாரையாவது ஆளை  பார்த்து கல்யாணம் பண்ண சொல்லுறான்.. இவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும், இவனுக்காக , நான் எத்தனை  வருஷமா காத்திருக்கிறேன் , இவன் என்னை எடுத்தெறிந்து பேசிட்டான்  சீதா, நீ என்னன்னு கேளு,” என்றதும்..

“இப்போ நீ எங்க இருக்க”?..

“நான் மாலா ஆண்ட்டியை அட்மீட் பண்ண ஹாஸ்பிட்டலில் இருக்கேன்”

என்றதும்..

.

“ஐயோ என்னாச்சு மாலா ஆண்ட்டிக்கு,? “.

“அவங்களுக்கு இப்போ  எந்த பிரச்சனை,, இல்ல கொஞ்சம் பிரசர் ஏறிடுச்சு,, இப்போ ஓகே தான் ஆண்ட்டி,, ஆனா உன் பிரண்ட் தான் படம் ரிலீஸ் ஆகாதுன்னு, புலம்பி எல்லாருக்கும் பிரசர் ஏத்துறான்”,,…

“நீ அவன் கிட்ட குடு”,,என்றாள்   சீதா,,..

 “அவன் யாருகிட்ட பேசமாட்டேங்குறேன்,, திட்டத்தான் வாயை திறக்குறான்,,, இப்போ ஹாஸ்பெட்டல் வெளியே உட்கார்ந்து இருக்கான்,,”..

“நீ மாலா ஆண்டி கிட்ட  போனை குடு லதா”… என்று சீதா சொன்னதும்…

மாலா இருக்கும் அறைக்கு வந்த லதா, “ஆண்ட்டி சீதா பேசுறா” என்று  போனை தர.

படுத்திருந்தவர் மெல்ல எழுந்து அமர்ந்து போனை வாங்கியவர்.

“சீதா…, அம்மாடி சீதா! உன் பிரண்ட்டை பார்த்தீயா? மா பைத்தியம் காரன் மாதிரி புலம்புறான் , என்னால முடியல சீதா, என் நெஞ்சே வெடிக்குற மாதிரி இருக்கு,..

போன வாரம் எவ்வளவு சந்தோஷமா என்கிட்ட வந்து அம்மா பொங்கலுக்கு என் படம் இந்திர சேனா ரிலீஸ் ஆகுதுன்னு சொல்லிட்டு  சந்தோஷமா போனான்.. இன்னைக்கு என் பிள்ளையை என்னால பார்க்க முடியல சீதா, பைத்தியகாரன்  மாதிரி புலம்புறான்,, என் படம்  ரிலீஸ் ஆகாது,ஆகாதுன்னு என் பிள்ளை புலம்புறத பார்த்த! அவன்  எனக்கு இல்லாம போயிடுவான் போல இருக்கு  சீதா” என்று மாலா..கதறி அழ…

சீதா அவர் அழுததும் அவளால்  அழாமல் இருக்க முடியவில்லை,,.. “மாலாம்மா நீங்க  அழாதீங்க எல்லாம் சரியாகும்,, நீங்க அழுது உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா சிரஞ்சீவி, நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் மா, அழாதீங்க” என்று சமாதானம்  பண்ணியவளுக்கு தன் பெற்றோர் ஞாபகம் வந்தது,, தன்னை  போலவே தன் நண்பனுக்கு பெற்றோரை இழந்து வாழக்கூடாது.. என்று நினைத்தவள்…

உடனே ரவிதேஸ்சாவிற்கு போனில் அழைத்தாள்….

 ரவிதேஸ்சா போனை எடுக்க வில்லை.. மீண்டும் இரு முறை அழைத்தாள், ரவி போனை எடுக்காமல் இருக்கவும்..

நாளை அவள் இந்தியா கிளம்புவதற்க்கான பொருள்களை எல்லாம் பேக் செய்து கொண்டிருக்க..

ரவி சீதாவிற்கு  போனில் அழைத்திருந்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!