Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே37 இறுதி

பூவே 37



Advertisement

      ” டேய் என்னடா இங்க நிக்குறீங்க போய் மாப்பிள்ளையை கூட்டி வாங்கடா , பொண்ணே வந்திச்சா கோவிலுக்கு” என்று போற போக்கில் மணிக்கு சொல்லி சென்றான்..

“என்னடா உங்கண்ணன் ரொம்ப சூடா இருக்க மாதிரி இருக்கு” என்றான் மாறன்..

Advertisement

Advertisement

“வேற என்ன வழக்கம் போல என் கலியாண பேச்சு தாண்டா, வா அவனை போய் கூட்டிட்டு வரலாம்” என்று அருகிலிருந்த அறையில் நுழைந்தனர்..

“மாப்பிள்ளை”

Advertisement

“பங்காளி”

இருவரின் குரல் கேட்டு திரும்பியவன் முகம் புன்னகையில் இருந்தது..

“எப்பா டேய் இம்புட்டு அழகை எங்கடா ஒலிச்சு வச்ச தங்கச்சிக்கு மட்டும் காட்டலாம்னு இருந்தியாடா” என்று இருவரும் அவனை கலாய்த்து தள்ள,

“டேய் உங்ககிட்ட என் சொல்லி அனுப்பினேன்.. முகூர்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசுங்கடா, அவனை கூட்டிட்டு வாங்கடா” என்று மீண்டும்

 ஞாபகம் படுத்தி சென்றான் மாணிக்கம்..

அட ஆமாங்க நம்ம வெற்றிவேந்தன் வேல்விழிக்கு தான் இன்னும் சில நிமிடங்களில் திருமணம்..

காளியம்மா தன் கணவருடன்  முழுமனதோடு சென்று , தேவகியிடம் பெண் கேட்டதும்..

 

தேவகிக்கு வானத்தில் பறக்காத குறை தான்.. அவர்களும் சம்மதம் சொல்ல,

மடமடவென கல்யாண வேலை தான்.. ஒரு வாரத்தில் முகூர்த்த தேதியை குனிந்திருந்தனர்..

மணமக்கள் இருவரும் சொல்லக் வைத்ததுபோல் குலதெய்வம் கோவிலில் தான் திருமணம் நடக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தை சொல்ல, மற்றவர்களுக்கும் சந்தோஷம் தான்..

மயிலம்மாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை,

இதோ தன் வாழ்நாளில் பல வருடம் எட்டி பார்க்காத இடத்தில் தான்… புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தார்..

 

அவர் கண்ணீர் மொத்தமும் ஆனந்த கண்ணீராய் மாற்றி தந்த முனிஸ்வரனுக்கு வாய் ஓயாமல் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்..

“அட மசமசன்னு நிக்காம ஆளுக்கு ஒரு வேலையை பாருங்கையா, கலியாணம் முடிஞ்சதும் பந்தி போட வேணாமா, ஊர் தலைவர் கலியாணம் பற்றி அடுத்த சந்ததிக்கும் தெரியனும்னு”சொல்லிக்கொண்டு அனைவரையும் வேலை கொடுத்திருந்தான் மணியரசு…

“என்னங்க சத்தம் ஜில்லாவ தூக்குதே என்ன சமாச்சாரம்” என்று கணவனை பார்த்தாள்..

“தவமிருந்து சேர்ந்திருக்காண்டி, என் மச்சான் யாரு கண்ணும் படக்கூடாது இல்லை, அதான் ஏவிட்டு இருக்கேன்… நீ போய் புள்ளையை பாரு எப்படி வேர்த்து நிக்குறான்னு” சொல்லி மனைவியை அனுப்பி வைத்தான்..

“ஏண்டி கொஞ்ச நேரம் ஒக்காந்தா தான் என்னடி, இப்படி வயித்தை தள்ளி நிக்கும்போது தள்ளிவிட போறாங்க டி” என்று மூத்த மகளை கடித்துக் கொண்டாள்..

“போம்மா நானே மாமன் கலியாணம் பாக்க ஆசையா காத்திட்டு இருந்தா திட்டுற நீ” என்று முகத்தை சுருக்கினாள் காவ்யா..

“சரிடி கோவிக்காத , எங்க அந்த வாயாடி” என்றாள்..

“ம்மா, அவ வேலு கூட இருக்கா, நா இப்படியே ஓரமா நிக்குறேன் அவளை கிட்டாத இப்பதான் போனா” என்றாள்..

“அம்மா வந்தா இப்படி சொல்லுன்னு சொல்லிட்டு போனாளாக்கும்” என்றாள் மூத்த மகளிடம்.. அவள்

திருதிருன்னு முழிக்க, “என் இராசாத்தி என் கண்ணே பட்டுடும் போல” என்று மகளுக்கு திருஷ்டி சுத்தினாள்..

“முகூர்த்த நேரம் வந்தாச்சு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டி வாங்கோ ப்பா” ஊர் பெரியவர் சொன்னதும்.

மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்து வந்தனர்…

மணமகன் வெற்றி பட்டு வேட்டி சட்டையில் கல்யாண கலையில் வந்து நிற்க, அவனுக்கு போட்டியாக தேவதையக தயாராகி வந்தாள் வேல்விழி..

அங்கங்கே வேலையில் இருந்து மொத்த மக்களும் கோவில் அருகே கூடினர்..

 

இதோ இன்னும் சில நொடிகளில் , குலதெய்வத்திடம்  இருந்து மாங்கல்ய கயிறை வெற்றிகையில் கொடுத்தானர்..

ஊரும் அவர்கள் குலதெய்வம் கோவிலில் தான் சூழ்ந்திருந்து..

முதல்முறை தெய்வானையும் தன் பிள்ளைகளுடன் சொந்த ஊருக்கு வந்தாள்..

சிங்கரவேலன் வேலன் இப்போது படுத்த படுக்கையில் தான் அவருக்கு அணைத்தும்..

தேவகிக்கும், பார்த்திபனும்கும் அப்படியொரு சந்தோஷம் மகளை மணக்கோலத்தில் கண்டு,

உறவுகள் அணைத்தும் சூழ்ந்திருக்க, அனைவரையும் சாட்சி வைத்து தன்னவனின் கழுத்தில் மாங்கல்யத்தை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அணிவித்தான்.

அட்சதை தூவி தங்கள் மகிழ்ச்சியை உறவுகள் வெளிப்படுத்தினர்..

அங்கே அனைவருக்கும் உணவு பரிமாறும் வேலையும் சிறப்பாக நடந்தது..

பாண்டியின் பார்வை மொத்தமும் முனிஸ்வரியை சுற்றி வந்தது.

“என்ன மச்சான் நீ  தலைகீழா நின்னாலும் என் தங்கச்சி பதில் சொல்லாது.. அடுத்த தேவதாஸ் நீ தானா” என்று கேலி செய்த மாறனை புடிச்சு தள்ளிவிட்டான்..

அவனோ கல்யாணத்திற்கு வந்த அம்சவள்ளி மீது தான் சரிந்திருந்தான்..

அவள் இருவரையும் பார்த்து முறைக்க,

“மன்னிச்சிடுங்க கவனிக்காம நடந்திடிச்சு” என்றான் மாறன்..

எதுவும் சொல்லாமல் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்..

நண்பனை கொலைவெறியுடன் முறைத்தான்…

 

“விடுடா மச்சான் வாழ்க்கையில, இதெல்லாம் சகஜமப்பா” என்றான் பாண்டி

இரவு தன் அறையில் தன்னவளின் வாசம் அவனை என்னவோ செய்தது..

கனவில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியவன் இன்று நிஜத்தில் அவனால் நம்பவே முடியவில்லை,

வந்ததிலிருந்து வேல்விழி அவனைத்தான் முறைத்திருந்தாள்..

“ஏண்டி பஸ்ட் நைட் வெக்கம் தான் வரல மொறைக்காம இருந்தா என்னடி” என்றான் அவளை பார்த்து..

“என்ன இது” என்றாள் கோவமாக,

“என்னடி கேக்குற நீ!” என்றதும்

ஒரு சட்டையை தூக்கி அவன் மீது போட்டாள்..

“அவனோ திருட்டு முழி முழித்தான்..”

“அப்பா அன்னைக்கு என்னை நீங்க முழுசா பாத்துட்டிங்க” என்று கண்ணை கசக்கினாள்..

கட்டிலில் இவன் ஒரு மூளையில் இருக்க அவள் ஒரு மூளையில் இருந்தாள..

உருண்டு வந்து அவள் வாயை தன் கை கொண்டு அடைத்தான்..

“ஏண்டி என் மானத்தை வாங்குற ,” என்றான் பயத்தில்

“உங்க மானத்தை எங்க வாங்குனேன்.. நீங்கதான் என் மானத்தை வாங்கிட்டிங்க” என்று அவன் கையை எடுத்து விட்டாள்..

“சூ” என்றான் உறுமலாக,

கப்பென வாயை மூடிக்கொண்டு அவனை பார்த்தாள்..

“அன்னைக்கு நா உன்னை பாக்கலடி ” என்றான்..

“பொய்” என்றாள்

“உனக்கு வாயால சொன்னா புரியாது.. செயல்முறை விளக்கம் தான் சரின்னு” சொல்லி சட்டையில் ஒவ்வொரு பட்டனாக கழட்டினான்..

“என்ன பண்ணுறீங்க” என்று கண்களை மூடிக்கொண்டாள்..

“திரும்பி பாருடி” என்றான்

” நா மாட்டேன்” என்றாள்.

அவளை தன் பக்கம் திருப்பியவன் ” என்னை பாருடி” என்றான்..

அவ்ளோ பயந்து கண்களை திறந்தாள்..

“நா எப்படி தெரியுறேன் சொல்லு ” என்றான்

“பனியோனோட இருக்கிங்க” என்றாள் தலையை குனிந்து..

“அன்னைக்கு உன் சட்டையை மொத்தமா கழட்டி இருந்தா நீ எப்படி இருந்திருப்ப” என்றான் அவளை பார்த்து..

“ஹிஹிஹி” என்று பல்லைக்காட்டி ” அது” என்று தலையை சொறிந்தாள்..

” என்னடி ‘அது’ நானாவது பனியன் போட்டா , நெஞ்ச , கை கழுத்து தெரியுது.. நீ எப்படி இருந்த,ஒரு சட்டைக்குள்ள இன்னொரு சட்டை போட்டிருந்த” என்றான் அவளை நெருங்கி..

“அதுக்கு எதுக்கு கிட்ட வரீங்க தள்ளி போங்க” என்று இவள் தான் பின்னே நகர வேண்டி இருந்தது..

“என்னை குத்தம் சொன்ன வாய்க்கு தண்டனை தரவேணாவா” என்று அவள் மீது மெல்ல சரிந்தான் கட்டிலில்..

“எனக்கு நிறைய கேள்வி இருக்கு” என்று திமிறியவளை , தன் கைக்குள் கொண்டு வந்து..

” உன் கேள்விக்கு பதில் சொல்ல காலம் நீண்டு கிடக்கு” என்று அவள் இதழ் மூடினான் தன் இதழ் கொண்டு…

சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!