Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா  கல்யாண வைபோகமே… 10 2

சீதா ரவியின் அழைப்பை பார்த்தவள் கையிலிருந்ததை அப்படியே போட்டு விட்டு,, போன்னை ஆன் பண்ணியவள்.

“ரவி சார்”.. என்றிருந்தாள்..



Advertisement

“சொல்லு சீதா,” என்றான் ரவி..

Advertisement

“ரவி சார் நான் பேசுறத கேட்டு, போனை கட் பண்ண கூடாது”,, என்றாள்..

Advertisement

“அது நீ பேசுற விசயத்தை பொறுத்து சீதா”?.. என்றான்..

Advertisement

“சார் பிலிஸ் நான் பேசுறதை கேட்டு முடிச்சிட்டு  நீங்க பேசுங்க, கால்லை மட்டும் கட் பண்ணிடாதீங்க”…. என்றாள்..

சீரஞ்சீவி இப்போது இருக்கும் மனநிலையை சொன்னவள்,, மாலா ஹாஸ்பெட்டலில், இருப்பதை சொல்லிவிட்டு…

“கொஞ்சம்  மனது வைங்க ரவி சார்,, என்ன  மாதிரி என் பிரண்ட்டும் அம்மா இல்லாமா அனாதையா ஆகிட கூடாது,, மாலாம்மா அழுகுறதை என்னால  பார்க்க முடியல, ரவி சார் பிலிஸ் புரிஞ்சுக்கோங்க..”..

“பேசி முடிச்சிட்டீயா?” என்று ரவி குரலை உயர்த்தி பேச,, அவளோ “உம்ம்”  என்று தலையாட்ட..

“உன் பிரண்ட் என்னை உன்ன பாக்க விடமா அவமானம்  படுத்தி பல முறை ஏமாற்றி   விட்டு  இருக்கான், அது எனக்கு தெரியாது,,.. நானோ நீ  சூட்டிங் வருவேன்னு  பல முறை காலையில இருந்து சாயங்காலம் வரை  பைத்தியகாரன் மாதிரி உன்னை எதிர் பார்த்து காத்திருந்தேன் தெரியுமா உனக்கு ..

அது மட்டும் இல்லா உன்ன ஒரு அஞ்சு நிமிசம்  கூட பார்க்க விடாம தடுத்த,, அவனை சும்மா விட சொல்லுறீயா,, அது மட்டும் இல்லா என் ஆபிஸ்க்கே வந்து என்னை பத்தி  தப்பா  பேச அவன் யாரு சீதா.. என்னை அவமானம் படுத்தினவனை நான் அவமானம்  படத்தி வேதனை பட வைக்கனும்..

அவன்னை துன்பம் படுத்துற ஒரே வழி இந்த படத்தை ரிலீஸ்  பண்ணாம இருக்குறதது  தான்.. எனக்கு வலிச்ச மாதிரி அவனுக்கும் வலிக்கனும் சீதா,  புது டைரக்டருக்கே இவ்வளவு திமிருன்னா.. உங்களையெல்லாம் வச்சு, படம் எடுக்குற எனக்கு  எவ்வளவு  திமிர் இருக்கனும், எனி வே, என்னை அவமானம் படுத்துனதுக்கு, அவனை பட ரிலீஸ்சாகம    நான்  பலி வாங்க போறேன்,, இத விட அவனுக்கு பெரிய தண்டனை இருக்கா என்ன”?, என்று ரவி சொன்னதும்…

சீதா ஒரு முடிவு  எடுத்தவளாக..

“எனக்கு தெரியாது பொங்கலுக்கு இந்திரா சேனா படம் ரிலீஸ் ஆகனும் சார்,, அதுக்கு  நான் என் பண்ணணும் சொல்லுங்க,, நான் செய்யுறேன்,, என்றவள்..

“அப்புறம்  சிரஞ்சீவி உங்களை  என்னிடம் அஞ்சு நிமிசம் பேச விடலன்னு தானே கோபம் உங்களுக்கு,, நான் நாளைக்கு இந்தியாவுக்கு கிளம்பி வர்ரேன்,, நம்ம இரண்டு பேரும் அஞ்சு நிமிசம் என்ன, ஐந்து மணி நேரம் கூட பேசலாம், போதுமா இப்போ படம் ரிலிஸ் பண்ணுங்க” என்று சீதா சொன்னதும்..

“நீ என் கிட்ட பேசிட்டா, நான் பட்ட அவமானம் இல்லண்ணு ஆகிட போகுத,, உன் பிரண்ட் என் கிட்ட மோதுனதுக்கு இன்னும் அனுபவிக்கனும் சீதா. நான் குடுத்தது அவனுக்கு கம்மியான தண்டனை தான்,, அவனை இருந்த இடம் இல்லாம அழிச்சிருப்பேன்” என்றதும்..

“சார் வேண்டாம் சார், இந்த பலி உணர்வு நம்மலை   அழிச்சிரும் வேண்டாமே,, நீங்க நினைக்குற மாதிரி என் பிரண்ட் சிரஞ்சீவி கெட்டவன் இல்லை சார்,, சூழ்நிலை அந்த மாதிரி நடந்துருச்சு,”..

என்றாள் சீதா.

“சீதா  மேலும் மேலும் நீ உன் பிரண்ட்டு  பண்ணது சரியின்னு பேசுற..  அப்போ நான் அவமானம் பட்டதுக்கு என்ன பதில் சொல்லுற. என்னை அவமான படுத்துனவனை சும்மா விட சொல்லுறீயா?”.

“அதான் நான் சொல்லுறேன் சார். நான் வந்து  உங்க கூட பேசுறேன் சார், மன்னிப்பு கேட்குறேன் சார்..

 என் பிரண்ட்  பண்ணதுக்கு, அவனையும்  உங்ககிட்ட  மன்னிப்பு கேட்க வைக்குறேன்,. வேறேன்னா வேணும் சார், நான் வேனா  படம் நடிச்சு சம்பாரிச்சு ஒரு வில்லா வாங்கி வச்சுயிருக்கேன் அத வேணா உங்களுக்கு திருப்பி கொடுத்துடுறேன்,”.. என்றதும்

“சீதா பணத்துக்காக தான் நான் இத பண்ணுறேன்னு நீ நினைக்குறீயா, எனக்கு ரெஸ்பெக்ட் முக்கியம்”.. என்றான்..

“ரவி சார் பிலீஸ் இந்திரா சேனா படம் ரிலீஸ் ஆகனும், இல்லன்னா என் பிரண்ட் எனக்கு கிடைக்க மாட்டான்.. அவன் குடும்பமா நல்லா இருக்கனும் சார்..

நான் ஆறு மாதம் முன்னாடி எப்படி இருந்தேன் தெரியுமா சார், சொன்னா உங்களுக்கு தெரியாது சார்,, ஆனா இப்போ நான் ப்பாரிஸ்ல பைஸ்டார் ஹோட்டல் தங்கி  இருக்கேன், அதுக்கு காரணம் என் நண்பன், அவனுக்கு  நான் எதாவது பண்ணியாகனும், சார்..

அதுக்காக நான் உங்களை இறங்கி வர சொல்லல்ல,, நான் உங்க கால் விழுந்து மன்னிப்பு வேணா கேட்டுகிறேன் பிலீஸ் சார், படம் ரிலீஸ் ஆகனும்” என்று கலங்கிய சீதாவின் குரலை கேட்டவன்..

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,,  “பொங்கலுக்கு  இந்திரா சேனா படம் ரிலீஸ் ஆகும்  சீதா” என்றவன் போனை அனைத்து வைத்தவன்.. அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை பார்க்க சென்றான்..

சீதா மீண்டும் போனில் அழைத்தும் அவன் பேசவில்லை.. அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லா டி. வி சேனல்களிலும்,

இந்திரா சேனா படத்தில்  மேல் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி  படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று செய்தி காட்டு தீ போல பரவி வர…

அது சீதா காதிலும் விழுந்தது…

ரவிதேஸ்சாவை  போனிற்க்கு  அவள் தொடர்ந்து அழைத்துக்கொண்டே  இருக்க அந்த அழைப்பை ஏற்க வில்லை அவன்.

மீண்டும். மீண்டும் ரவி போனில் அழைத்து ஓய்ந்து போனவள்.. அவனுக்கு மிக்க நன்றி என்று வாய்ஸ் மெஜேஸ் போனில் அனுப்பி வைத்தவள்.

அன்றைய இறுதி  சூட்டிங் சென்றவள், நல்ல படியாக அந்த சூட்டிங்கை முடித்து விட்டு, இந்தியாவுக்கு பிளைட் ஏறினாள்

சீதா  பிளைட்டிலிருந்து வரும் போதே சஞ்சை மெஜேஸ் பண்ணியிருந்தான்,, அம்மா ஹாஸ்பிடலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம் சீதா கா, சிரஞ்சீவி அண்ணா நார்மலா இருக்கான்,, அம்மா கூட சந்தோஷமா பேசுறான் என்று சிரஞ்சீவியும், மாலாவும் கட்டிலில் அமர்ந்து பேசிகிட்டு அமர்ந்திருக்கும் போட்டோவை அனுப்பி வைக்க.

தன் நண்பன் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்தவளுக்கு. அவ்வளவு நிம்மதி,

இதற்கு உதவிய ரவிதேஸ்சாவிடம் நேரில் சென்று  நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்…

 இந்தியா வந்திறங்கியதும் ரவியிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்.

ரவி பேச்சு வாக்கில் நான் எப்போது கிண்டி ஐ டெக் ஆபிசில் தான் இருப்பேன் என்று சொல்லியது ஞாபகம் வர..

அங்கே சொல்ல முடிவு எடுத்தாள்  சீதா, தன் லக்கேசை எல்லாம் தன் வில்லாவிற்கு அனுப்பி வைத்தவள்.. மீனம்பாக்கம் ஏர்போர்டிலிருந்து  ரவிதேஸ்சாவை பார்த்து நன்றி சொல்ல ஒரு அழகிய பூங்கொத்தை வாங்கியவள்.  தன் கைபையோடு  கிண்டி ஐ டெக் ஆபிஸ்க்கு சென்றாள்..

பரபரப்பாக இயங்கிய கொண்டிருந்தது அந்த ஐ டி நிறுவனம்.

சீதா அந்த ஆபீஸ் உள்நுழையும் போதே அவளை சிலர் ஆர்வமாக பார்க்க..

அவளோ எதையும் கண்டு கொள்ளவில்லை..

அங்கே அமர்ந்திருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் “ரவி தேஸ்சா சாரை பார்க்கனும் ஆப்பைமென்ட் கிடைக்குமா” என்று கேட்க..

அவளோ சீதாவை வாய்பிளந்து பார்த்தவள்.. “நீங்க இந்திரா சேனா படம் ஹீரோயின் கீதா  தானே மேடம்” என்று கேட்க,..

“ஆமாம்” என்றிருந்தாள் சீதா..

ஆமாம் சீதா என்ற பெயரில்  ஒரு நடிகை இருக்க, சீதாவுக்கு கீதா என்று பெயர் மாற்றி இருந்தனர்.

அந்த ரிசப்ஷன் பெண் சீதாவிடம் “சார் ஒரு மீட்டிங்கில்  இருக்குறாங்க  மேம், மீட்டிங் முடிய கொஞ்சம் நேரம் ஆகும், நீக்க வையிட்டிங் ரூமுல வைய்ட் பண்ணுங்க” என்றவள்..

சீதாவை அழைத்துக்கொண்டு ரவி ரூம் அருகே இருந்த வெய்டிங் ஹாலில் அவளை அமர வைத்தவள். “குடிக்க காபி வேண்டுமா  மேம்” என்று கேட்க..

சீதா வேண்டாம் என்று மறுத்தவள். அங்கே உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் ரவிவருவான் என்று பார்த்தவள்,, பயண கழைப்பில் சோபாவில் அப்படியே  சாய்ந்து தூங்கி விட்டாள் சீதா..

ரவிதேஸ்சா மீட்டிங் முடிந்து, தன் பீ ஏ விடம் நீண்ட நேரம் பேசிவிட்டு. தன் அறை நோக்கி சொல்லும் போது, வெய்டிங் ரூம்பை பார்த்தான், யாரோ தனக்காக காத்து  இருப்பது போல தெரிய, அந்த வெய்டிங் ஹாலிற்க்குள் நுழைந்தான்  ரவி..

யார் இது என்றே அவன் பார்க்க..

சத்தியமாக   சீதாவை அவன் எதிர் பார்க்கவில்லை..

சீதாவை பாத்தவனுக்கு அவ்வளவு சந்தோஷம்,, தனக்காகவா சீதா காத்திருக்கிறாள், என்னை பார்க்க இப்போவாவது வந்திருக்காளே, என்றவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, ரிசப்ஷன் பெண்ணிடம் சீதா எப்போ வந்தாள் என்று விசாரிக்க.

“மேம் மீட்டிங் சாட் ஆனதும் வந்துட்டாங்க சார், ஒரு டூ ஹவர் இருக்கும்” என்று ரிசப்ஷன் பெண் சொன்னவுடன்…

இன்னும் குஷியாகி போனான்  ரவி…

அவன் சற்று முன் தான்  கோடி கணக்கான பிஸ்னஸ் டிலிங்கை முடிந்து வந்தது கூட அவனுக்கு இவ்வளவு சந்தோஷமில்லை தரவில்லை , சீதா தனக்காக தன் ஆபிஸ் வெய்டிங் ஹாலில்  காத்திருப்பதை பார்த்தவனுக்கு சந்தோஷ உச்சத்தில் இருந்தவன்  துள்ளி குதிக்காத குறைதான்,,  சீதாவை பார்த்த படியே அவள் எதிர் சோபாவில் அமர்ந்து விட்டவனுக்கு  சோபாவில் உட்கார முடியவில்லை..

என்னை தேடி வந்து விட்டாள் என் குழலிசை, இசை என்றே அவளை பார்த்திருந்தான்..

அவனுக்கு நன்கு தெரிந்தது அவள் ஏர்போர்ட்டில் இருந்து நேராக வந்திருக்கிறாள் என்று,,.

கழைந்த முடி, சோர்வான முகம், அவள் பக்கத்தில் அவளின் பெரிய கைபை கைபையின்  மேல் அவளது  போன்.

சாதரணமான  ப்ராவுன் கலர் சுடிதார் அணிந்து.. அவனுக்காக வாங்கி வந்த பூங்கொத்தை தன் மார்போடு அணைத்த படியே சோபாவில் அழகோவியமாக சாய்ந்து தூங்கியவளை ரசிக்காமல் இருக்கமுடிய வில்லை  ரவியால் அவளை அங்குல,  அங்குலமாக  பார்த்து ரசித்தான் ரவி..

எந்த ஒரு மேக்கப் இல்லாமல் பளிங்கு போல இருந்த சீதா முகத்தை பார்த்த படியே இருந்தான், அதிலும் அவளின் சிவப்பு கல்  மூக்குத்தி அவனை சும்மா விடவில்லை, மார்டன்  பெண் போல உள்ள சீதாவின் முகத்தில் சிறிய மூன்று கல் மூக்கொத்தி அவனை பக்கத்தில் அழைப்பது போல் இருந்தது, நீண்ட நேரம் தன் ஆசை தீரும் வரை  சீதாவை பார்த்து ரசித்தான்,,..

சீதா தூக்கம் கலைந்து மெல்ல கண்திறந்தவள். ரவியை  பார்த்து  சிரித்து மீண்டும் கண்முடினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!