“சாக்கு சொல்லாத சீதா, டைமுக்கு சாப்பிடனும்” என்று சொன்னவன், அவள் முன்னாடி ஒரு ஆந்திரா மிஸ் உணவை வைக்க.
அந்த காரசாரமன உணவு சீதாவுக்கு ரொம்ப பிடித்திருக்க, நன்றாக சாப்பிட்டவள், நீங்க என்று ரவியை பார்த்து கேட்க..
நீ சாப்பிடு முதல்ல என்றான்..
சீதா சாப்பிட்டு கொண்டிருக்கும் போது..
ரவி தேஸ்சாவின் பீ, ஏ வந்தவன்..
“சார் பிளைட்டுக்கு நேரமாச்சு” என்று கூற..
சீதா நிமிர்ந்து பார்த்தாள் ரவியை…
ரவி அவன் பீ ஏ வை முறைத்து பார்த்தவன்,, “ஈவ்னிங் டிக்கெட் போடு இப்போ கேன்சல் பண்ணு” என்றதும்..
“சார் இது வீக் ஏன்ட் டிக்கெட்ஸ் கிடைக்காது” என்று கூற.
“சொன்னத செய்” என்றான் ரவி…
அவன் பீ ஏ முளித்து கொண்டிருக்க..
“ரவி சார் நான் இப்போ கிளம்பி விடுவேன், நீங்க உங்க வேலையை பாருங்க” என்றவள்…
ரவி பீ ஏ வை பார்த்து ‘”சார் இந்த பிளைட்லே போவார்” என்றவள்..
வேகமாக உண்டு விட்டு..
எழுந்தவள்.. “சாரி சார் சொல்லாமல் வந்து உங்க வேலையை கெடுக்குறேன்.. “.
“சீதா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, என் பிரண்ட் மெரேஜுக்காக பெங்களூரு போறேன், இப்போ இல்லன்னா, ஈவ்னிங் போக போறேன் இல்ல நைட் கூட போவேன், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல,, உன்கிட்ட பேசுறத மிஸ் பண்ண முடியாது சீதா” என்றான்…
“நம்ம எப்ப வேணாலும் பேசலாம் சார் வாங்க ஏர்போர்ட் போயிட்டே பேசலாம்” என்று சீதா சாப்பிட்டதும் புதிய தெம்பு வந்தது போல் கிளம்பி நிற்க…
“உன்கிட்ட நிறைய பேசனும் சீதா” என்றான் ரவி..
பேசுங்க என்றவள் தன் கைபை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராக.. ஏற்கனவே ரவியின் பொருள்கள் பேக் பண்ணியிருக்க,, ரவியின் டிரைவர் வந்து அந்த பேக்கை எடுத்துக்கொண்டு சென்றான்..
வேற வழி இல்லாமல் சீதாவோடு ஏர்போர்ட்க்கு சென்றான் ரவி..
காரில் வரும் போதே சீதாவிடம் பேசிக்கொண்டே தான் வந்தான் ரவி,, இருவருக்கும் முதல் சந்திப்பு போலவே தெரியவில்லை , நன்றாக பேசினார்கள் இருவரும்.
ஏர்போர்ட் வரவே மனமே இல்லாமல். தன் டிரைவரிடம் சீதாவை அவள் சொல்லும் இடத்தில் விட்டு மாறு ரவி சொல்ல..
நானும் உள்ளே வருகிறேன் என்றவள். ரவியோடு பேசிய படியே ஏர்போர்டுக்குள் நுழைய.சில பத்திரிக்கைகாரர் இருவரையும் போட்டோ எடுக்க வர.
அதில் சிலர் சீதாவை இடிப்பது போல வந்தனர்..
இடிக்க வந்தவனை பார்த்து முறைத்த. ரவி.
சீதாவின் கையை பிடித்துக்கொண்டு தன்முன்னாடி கொண்டு நிற்க வைத்தவன் ஏர்போர்ட் உள் நுழைய.
பத்திரிக்கை காரர்கள் சீதாவிடம், ரவிதேஸ்சாவிடமும் இந்திர சேனா படத்தை பற்றி கேட்க வர.. பேசமுடியாது என்று செய்கை செய்தவன், சீதாவின் கைபிடித்தபடியே உள்ளே அழைத்து செல்வதை கேமராக்கள் படம் பிடிக்க..
சீதாவை பத்திரமாக ஏர்போர்ட் உள்ளே அழைத்து வந்தவன்..
“சீதா இனிமேல் தனியா இப்படி வராத”, என்றவன், “பின் கேட் வழியா போ” என்று சீதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே.. ரவி செல்லும் பிளைட் ஒரு மணி நேரம் தாமதம் என்று வர..
குஷியாகி போனான் ரவி,, இன்னும் ஒரு மணிநேரம் சீதாவுடன் பேசலாம் என்று அவன் நினைக்க
..
“நீங்க லஞ்ச் சாப்டீங்கல சார்” என்றாள் சீதா “இல்லை” என்று அவன் தலையாட்ட..
“வாங்க” என்று ஏர்போர்ட்டில் உள்ள ஹோட்டலுக்கு அவனை அழைத்து சென்றவள்,, அவனுக்கு பிடித்த உணவை வாங்கி வந்து அவளே ரவிக்கு கொடுத்து உண்ண சொல்ல,,
சீதா வாங்கி கொடுத்தது தேவமிர்தமாக இருந்தது ரவிக்கு அவளிடம் பேசியபடியே உண்டவன்.
“அடுத்து என்ன ப்ராசக்ட்” என்றான்…
சீதா அவன் கேட்டது புரியாமல் பார்க்க.
“அடுத்து என்ன படம் நடிக்க போற”..
“நான் எந்த படமும் ஒத்துக்கல சார், எனக்கு நடிக்க விருப்பமும் இல்ல.. டீச்சிங் கெரியர் தான் எனக்கு பிடிக்கும் சோ, அந்த பீல்ட் தான், நோ ஆக்டிக்” என்று சீதா சொல்ல.
“அப்படியெல்லாம் சொல்லாத சீதா, இந்திரா சேனா படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும், அப்புறம் பாரு உன் லேவலே வேற மாதிரி மாற போகுது” என்று ரவி கூற.
அவனை பார்த்து சிரித்தபடியே அமர்ந்திருந்தவளின் போன் ஒலித்தது.
சீதா போனில் வந்த நம்பரை பார்த்து காலை கட் பண்ண..
“பேசு சீதா” என்றான் ரவி..
“நான் அப்புறம் பேசுறேன் சார்” என்று சீதா மீண்டும், மீண்டும் வந்த அழைப்பை கட் பண்ண..
அதை பார்த்த ரவி போனில் யார் என்று புரிந்து கொண்டன், “நீ பேசு சீதா” என்றான்..
“ஓகே சார்” என்றவள். ரவியிடம் இருந்து சற்று தள்ளி வந்து போனை அட்டன் பண்ணினாள்.
சீதா போனை எடுத்தவுடனே..
சீதாவை கண்டபடி திட்ட ஆரம்பித்தான் சிரஞ்சீவி..
“எங்க இருக்க சீதா நீ. அந்த ரவி கூட உனக்கு என்ன வேலை, யாரை கேட்டு அவனை பார்க்க போன”? என்று சீதாவை திட்ட.
“நீ ஏன்டா நாலு நாளா போனை எடுக்கல, போனை எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்தா” என்று இவளும் அவனை திட்ட..
“ஏய் சீதா நம்ம படம் ரிலீஸ் ஆகமா இருந்தது அவன் தான் காரணம்,, அவன்கிட்ட உனக்கு என்ன பேச்சு.. சோசியல் மீடியாவில் கண்ட படி நீயூஸ் வருது,, நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா” என்றான்..
“இதெல்லாம் வேண்டாம் என்று தானேடா அன்னைக்கே நான் சொன்னேன் ,, நீ கேட்டீயா, இப்போ சோசியல் மீடியாவில் ஏதோ, எவனோ, யாதோ ரீல் போட்டா நான் ரியாக்ட் பண்ணனுமா” என்றாள்.
” அதெல்லாம் விடு நீ இப்போ ஏர்போர்டில் இருந்து கிளம்பு உடனே” என்றான்..
“உனக்கும் பைத்தியமாடி அவனோடு உனக்கு என்ன பேச்சு, அவன் ஒரு பொம்பள பொறுக்கி பய, தினமும் ஒரு பொண்ணு கூட போறவன், அவன் நிழல் கூட உன் மேல பட கூடாது”..
“சிரஞ்சீவி யாரை பத்தியும் ஜட்ஜ் பண்ண நம்ம பிறக்கல,.. அவங்க எப்படி வாழ்றாங்களோ அது அவங்க இஷ்டம், அவங்க நம்ம கிட்ட எப்படி நடந்துக்குறாங்கன்னு தான் முக்கியம். ரவி சார் என்கிட்ட நல்லபடியா தான் நடந்துக்குறார்,, நீ ரவி சாரை தப்பா பேசாத” என்றாள்.
“என்ன அந்த ரவிக்கு ஓவரா சப்போர்ட் பண்ணுற, சீதா அவன் பணத்தை பார்த்தும் மயங்கிட்டீயா”, என்றதும் சீதாவிற்க்கு நண்பன் கேட்ட கேள்வியில் கண்ணீல் இருந்து கண்ணீர் வர..
இவ்வளவு நேரம் சீதா பேசியதை கேட்டு கொண்டிருந்த ரவி,, அவள் அழுகவும்..
அவளிடம் இருந்து போனை பிடுங்கியவன் போனை தன் காதில் வைத்து, அவன் என்ன பேசுகிறான் என்று கேட்க..
“என்ன சீதா நான் சொன்னதும் அமைதியாகிட்ட, அப்போ நான் சொன்னது உண்மையா,, அந்த ரவி பணத்தை பார்த்ததும் மயங்கிட்டீயா,” என்று கேட்டதும் ரவிக்கே சிரஞ்சீவி மேல் ஆத்திரம் மாக வர..
டேய் என்று சொல்லவதற்குள் மீண்டும் சீதாவை திட்டியவன்.
“நீ அஞ்சு நிமிசம் கூட அந்த ரவி பைய கூட இருக்கு கூடாது கிளம்பு” என்றான்.
“கிளம்புலன்னா என்ன பண்ணுவடா”? என்று ரவியின் குரல் சீதாவின் போனில் கேட்டதும்..
“டேய் ரவி உனக்கு சீதா கூட என்ன வேல,, நீ நினைக்குற மாதிரி பொண்ணு அவ இல்ல அவளை விடு, இல்லன்னா” என்று சிரஞ்சீவி சத்தம் போட..
“நான் சீதாவை எப்படி நினைக்குறேன், உனக்கு எப்படிடா தெரியும்..
உனக்காக இவ என்கிட்ட எவ்வளவு ரிக்வஸ்ட் பண்ணி இந்திர சேனா படத்தை ரிலீஸ் பண்ண கேட்ட தெரியுமா,, அவ வருத்தபட்டு கேட்டதால தான் நான் படத்தை விட சம்மதிச்சேன், இல்லன்னு வை.. உன் எதிர் காலமே இன்னைக்கு காலியாகி இருக்கும்,, சீதாவை பார்த்து பேசு, “?..
” நீ என்னாட என் பிரண்ட்க்கு சப்போர்ட் அவளை பத்தி எனக்கு தெரியும், அவளை உடனே வர சொல்லு, உன்னோடு இருக்க கூடாது, அவகிட்ட போனை கூடு”.. என்றான் சிரஞ்சீவி.
“அனுப்பா முடியாது என்ன பண்ணுவ டா”?..
“டேய் உன்னை கம்புளைண்ட் பண்ணிடுவேன் ” என்றான்.
“நீ என்ன வேணா பண்ணு ஆனா என்னை ஒன்னும் பண்ண முடியாது,, நீ என்ன சொன்னா சீதா என்கூட அஞ்சு நிமிசம் பேச கூடாது சொன்ன தானே நீ .. இப்போ சொல்லுறேன்டா, உன் சீதாவை நான் அஞ்சு நாள் என்னோடு கூட்டிட்டு போறேன், நீ புடுங்குவீயோ புடுங்கு போ,” என்றவன் போனை கட் பண்ண…
சீதா அதிர்ச்சியாக ரவிதேஸ்சாவை பார்க்க..
“என் மேல நம்பிக்கை இருக்கு தானே சீதா” என்றான்..
சீதா “ஆமாம்” என்று தலையாட்ட..
அவனின் தனி விமானத்தை வர சொன்னவன்.. சீதாவோடு விமானத்தில் பறந்திருந்தான்..