Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 24 2

இவ்வளவு நேரம் அவனுடன் வாக்கு வாதம் செய்து மல்லுகட்டிக் கொண்டிருந்தவளுக்கு, இந்த பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. பிடித்தமின்மையை வார்த்தைகளில் காட்டியவளாய் “அந்த கஷ்டம்  உங்களுக்கு எதுக்கு? நானே பார்த்துக்கிறேன்” சொல்லியதோடு அடக்க முடியா கோபத்துடன்  அவனருகில் இருந்து கமலி விருட்டென எழுந்து கொள்ள

இவனோ கைபிடித்து இழுத்து நிறுத்தி, “உனக்கும் மட்டும் நீ ஜோடி தேடினால் பத்தாது. என் டேஸ்ட் தான் உனக்கு தெரியுமே, எனக்கும் சேர்த்து, பாரு” என பிடித்த பிடியை  இறுக்கிட, அமர்ந்த வாக்கில் அவனும் நின்ற வாக்கில் இவனும் என அனல் பறக்க நின்றிருந்தனர்.

வார்த்தைகளால் அவர்களை அவர்களே காயப்படுத்திக்கொண்டு நின்றிருந்தனர். கிரி அசராமல் இவளை பார்த்து வைக்க, கமலிக்கோ கிரியின் அருகில் இன்னொருத்தியை வைத்து நினைத்து கூட பார்க்க முடியாமல் கண்கள் இறுகி சிவக்க தொடங்கிவிட்டது.

கிரியின் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல், பார்வையை வேறு பக்கமாய் திருப்பி, “கிரி விடுங்க” என இவன் பிடியில் இருந்து விலக போராடிக் கொண்டிருந்தாள்.



Advertisement

இவனோ அவள் மணிக்கட்டை விட்ட நொடி,  ஓட இருந்தவளை இடையூடு கை போட்டு இழுக்க, அவன் மடியில் வந்து விழுந்தாள் கமலி.

அதிர்ந்து போய் “கிரி, விடுங்க..” என இவள் துள்ளி விலக எத்தனிக்க, மீண்டும் எழ முடியாத அளவிற்கு கிடுக்கு பிடி போட்டவன், “அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும், என்னைக்கும், இனி உன்னை விடற ஐடியா எனக்கில்லை” அவன் பிடியை போல் வார்த்தைகளும் அத்தனை இறுக்கமாய் வந்தது.

அதற்கு இவளோ.. “அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் பத்தாது, எனக்கும் இருக்கனும்” என்றாள் சீறியபடி

Advertisement

“இன்னும் நான் என்ன தான் பண்ணனும்? கமலி.. என்ன பண்ணினா என் மேல நம்பிக்கை வரும்?” இறுக்கம் கோபமாய் மாற துவங்கியது.

Advertisement

“இதுவரை என்ன பண்ணிடீங்க? நம்பிக்கை வர அளவுக்கு” மனதில் அரித்து கொண்டிருந்த்தை கேட்டே விட்டாள் கமலி.

இவளது கேள்வியில் இதழ்கள் ஒரு பக்கமாய் வளைந்தது இவனுக்கு. யோசித்து பார்த்தவனுக்கு அவள் கேட்பதும் உண்மை தான் என புரிந்தது. என்ன செய்து விட்டேன் நான் இவளுக்காக..? அக்கா செய்த தவறுக்கு தண்டனையை இவளுக்கு கொடுத்துவிட்டு, கத்தார் சென்றயாயிற்று.

சிறுது மாதங்கள் வரை பேசிக்கொள்ளவில்லை, அதன் பின் அவளை சிறு பெரும் போன் கால்களின் மூலம் அவளை ஏற்று கொள்ள துவங்கிவிட்டதை காட்டினானே..

Advertisement

வார்த்தைகளால் கொடுத்தானே நம்பிக்கையை “உன்னை விடுவதாய் இல்லை.. இந்த ஜென்மத்திற்கு நீ ஒருத்தி தான்” என…

ஆனால் அவள் அதையும் நம்பாமல், தன் மேல் நம்பிக்கை வைக்காமல் விட்டதால் தான், கிட்டதட்ட பத்து மாதங்களாய் இவளுடன் போனில் கூட பேசாமல் விட்டுவிட்டான்.

ஆனால் தன் வார்த்தைகளின் மீதே நம்பிக்கை வைக்காதவளுக்கு, எதை செய்து நம்பிக்கை வர வைப்பது, தடுமாறி நின்றான் கிரி. மரணத்திலும் பெரும் கொடுமையாய் இருந்தது கிரிக்கு.

அவளை மடியில் இருத்தி கொண்டே இத்தனையையும் யோசித்தவன்,  அவள் புறமாய் திரும்பி “நம்பிக்கை வர்ற அளவுக்கு, உங்கிட்ட ப்ரூப் பண்ண இரண்டு விசயம் என்கிட்ட இருக்கு” என கூறி  “ஆனா” என நிறுத்தினான்.

“என்ன ஆனா?” கண்களை சுருக்கி கொண்டு இவள் கேட்க

“ஒரு முறை உனக்கு ப்ரூப் பண்ணிட்டேன்னா.. ஒவ்வொரு முறையும் ப்ரூப் நீ எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுவ! வாழ் நாள் முழுக்க நிரூபிச்சிட்டே இருக்க என்னால முடியாது” நிதர்சனத்தை இவன் கூற

“நான் அடுத்த முறை ப்ரூப் கேட்க முடியாத அளவுக்கு, இப்போ ஸ்ட்ராங் எவிடன்சை காட்டுங்க” என்றாள் இவள்.

இருவரிடையே விவாதங்கள் சூடாகிகொண்டிருக்க, கிரி அவளை மடியில் இருந்து விலக்கி, ஒரு முடிவோடு எழுந்து “இருடி வரேன்” என மாடிப்படியை கடந்து கீழே இறங்கி சென்றவன், மீண்டும் வரும் போது ஒரு பேக்கை எடுத்து கொண்டு வந்தான்.

என்னவென இவள் நிமிர்ந்து பார்க்க, பேக்கை அவள் கைகளில் திணித்துவிட்டு, “நீ கேட்ட ப்ரூப்..” என சொல்லிவிட்டு சுவற்று பக்கமாய் போய் நின்று கொண்டான்.

கையில் இருந்த பேக்கையும், தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையும் ஒருமுறை பார்த்துவிட்டு, பேக்கில் இருந்தவைகளை வெளியே எடுத்தாள். பார்க்கும் போதே தெரிந்து விட்டது அது என்னவென்று.

போனமுறை வாங்கி வந்து மரபீரோவில் வைத்து விட்டு சென்றானே அதே போல பெட்டி பெட்டியாய் பேக் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வித்தியாசம்.. சேலைக்கு பதில் இங்கே அம்பர்லா கட் சுடிதார் அதுவும் டிரிப்பிள் எக்ஸலில், பெரிய செஸில் தங்க வளையல்கள், கொஞ்சம் பெரிய சைஸ் ஜிமிக்கிகள் என வாங்கி வந்திருந்தான். அத்தனையும் அளவுகளில் பெரியது. அப்போதைய கமலிக்கு வேண்டுமானால் இவைகள் சேரும். ஆனால் இப்போதைய கமலிக்கு எதுவுமே பொருந்தாமல் தான் இருந்தது.

பொருந்தாத இந்த பரிசுகள் தான் கமலியின் மனதை முழுதாய் நிறைத்தது. மனமெல்லாம் பாரம் குறைந்து லேசாய் உணர்ந்தாள். “உன்னை விடுற ஐடியா இல்லை” என வாய் வார்த்தையாய் எத்தனையோ முறை சொன்னவகளை நம்ப மறுத்தவள், இன்றைய பொருந்தாத பரிசு பொருட்களில் நம்பிக்கை இமாலய மலையாய் எழுந்தது.

தேவையில்லாத குழப்பங்கள் மெதுவாய் விலக துவங்க, “இது எப்போ வாங்கினீங்க” என அவன் வாங்கி தந்திருந்த சுடிதாரை தடவியபடி கேட்க

“நிச்சயமா இன்னைக்கு வாங்கினதில்லை. கத்தாரில் இருக்கும் போதே வாங்கி வச்சது. பில் கூட பேக்கிலேயே இருக்கும், டைம், டேட் கூட பில்லில் இருக்கும்” பற்களை கடித்து கொண்டு இவன் பேசியதில், பொருட்களை அப்படியே கீழே வைத்துவிட்டு வேகமாய் இவனருகில் வந்து நின்றாள்.

கிரியின் நடவடிக்கைகளை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தினறி நின்றிருந்தாள் கமலி.

அவளிலேயே பதிந்த இவன் முகம் பார்த்து, “இரண்டு எவிடன்சில் ஒன்னு இது.. இன்னொன்னு” என இவள் கேட்க

“வேலையை ரிசைன் பண்ணிட்டேன். உன்கூட வாழனும்னு” இவள் கண்களை பார்த்து சொன்ன நொடி, வயற்றினுள் பட்டாம்பூச்சி படபடவென பறந்தது. இமைக்க மறந்து இவனை பார்த்தாள் கமலி.

“நி.. நிஜமாவா? எனக்காக வேலையை விட்டுட்டீங்களா” என அதிர்ந்து நின்றவளை இழுத்து நெஞ்சோடு இறுக்கி, அவள் முகம் நோக்கி குனிந்து கண்ட இடமெல்லாம் காதல் செய்தான். முகத்தில் இவன் இதழ்கள் படியாத இடமில்லை எனும் அளவிற்கு அடுக்கடுக்காய் வாரியிறைத்தான் முத்தங்களை.

இதழை நெருங்குகையில், ஒரு நொடி நிதானித்தான், பின் அவளை விருட்டென விலக்கி நிறுத்த, தடுமாறி நின்றாள் கமலி. ஒரு கையால் அவளை பிடித்து நிலைநிறுத்தி, பிடறியை அழுந்த கோதிக்கொண்டான்.

கோபம் கொண்ட கண்கள் இன்னும் இறுகி சிவக்க, ‘வெளியே போ’ என தன்னை விரட்டிய நிகழ்வுகள் நியாபகம் வர, “நீ் தான் என்னை தொடக்கூடாதுன்னு சொல்லியிருக்கியே” முழுதாய் அவளை விடுத்து மாடி சுவற்றின் கிரில் கம்பியை இறுகபிடித்து கொண்டான்.

“கிரி” என இவள் அவன் தோள் தொட, தோளை அசைத்து அவள் கையை தட்டிவிட்டு “கிளம்பிடு கமலி” என்றான் கோபமாய்.

அவனருகே நெருங்கி நின்று, இடையோடு கட்டிக்கொள்ள வந்தவள், டீசர்ட்டை இறுக பிடித்து அவன் முதுகில் முகம் வைத்து சாய்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!