Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 24 4

“சரி, உங்க இஷ்டம். ஆனா சண்டை போடறதோ, ராத்திரிக்கு மேல, ராஜியையும், குழந்தைகளையும் தனியா அனுப்புற வேலையோ இனி வேண்டாம். இனி இங்க தான் இருக்க போறேன். பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றான் கிரி.

‘பேசுவது கிரி தானா!’ என இவன் பார்த்து வைக்க,

“நான் கத்தாரில் இருந்தப்போ, காலில் ஏதோ அடிபட்டதுன்னு கேள்விபட்டேன், சரியா போச்சா” என கேட்க,

அதன் அர்த்தம் புரியாத வசந்தாவும், ராஜியும் “அடிபட்டுச்சா” “என்னாச்சு” “எங்கயும் விழுந்து வாரிட்டீங்களா” வசந்தாவும் ராஜியும் கேள்விகனைகளை தொடுக்க,



Advertisement

அதன் அர்த்தம் புரிந்த செந்திலோ, எச்சில் கூட்டி விழுங்கியபடி இவனை பார்க்க, கிரியோ அர்த்தமாய் பார்த்து வைத்தான்.

ராஜியை வீட்டை விட்டு அனுப்பிய புதிதில், பைக்கில் செல்கையில், அதிவேகமாய் வந்த டாடா ஏசி இவனை தட்டி விட்டு சென்றதும், அதில் கைகால்களில் சிராய்த்து கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு எடுத்ததும் கண் முன் வந்து போனது.

“மாமாக்கு நியாபகம் வந்திடுச்சு போல” “வரனுமே.. வந்தே ஆகனுமே” என வெளிப்படையாகவே பேசி வைக்க. இப்போது தான் ராஜிக்கு உரைக்க, செந்திலையும் கிரியையும் பதட்டத்தோடு பார்க்க, “அக்காவையும் குழந்தைகளையும் பத்திரமா பார்த்துகோங்க” என அழுத்தந்திருத்தமாய் சொல்லிவிட்டு “ம்மா கொஞ்சம் வெளியில வேலை இருக்கு” என சொல்லிவிட்டு போய்விட்டான்.

Advertisement

கிரியின் இந்த முகம் மூவருக்குமே புதிது தான். மூவருமே ஏதாவது சொல்கையில் ‘சரி’ என்பதற்கு மேலாக எதுவுமே பேச மாட்டான். ஆனால் இன்று மூவருமே வாய் பிளந்து தான் பார்த்திருந்தனர்.

Advertisement

“எப்போ மாப்பிள்ளை விழுந்தீங்க.. சொல்லவே இல்லை. ரொம்ப அடியா, குடிச்சிட்டு வண்டி ஓட்டி விழுந்திட்டீங்களா” நேரங்காலம் தெரியாமல் வசந்தா கேட்டு வைக்க, நற நறவென பற்களை கடித்தான் செந்தில்.

“ம்மா.. அவருக்கு டீ ஏதாவது போடேன் ம்மா” என வசந்தாவை அனுப்பி வைத்துவிட்டு “ரொம்ப அடியாங்க” என ராஜி கேட்டாள்.

“பொய் சொல்லாமல் சொல்லு.. நீ பிளான் பண்ணி உன் தம்பி எக்ஸீக்யூட் பண்ணிட்டான், அப்படி தானா?” உதட்டை கடித்து கொண்டு செந்தில் பேச

Advertisement

“சத்தியமா இல்லைங்க” ராஜி அழாத குறையாய் கூற,

“ஆமான்டி, நீ எதுவும் கிரிட்ட சொல்லியிருக்க மாட்ட, ஆள் வச்சு அடிச்சிருக்க வாய்ப்பில்லை” என மனைவியின் முகத்தில் பெருமையை பறக்க விட்டு, “அப்படியே அடிக்கனும்னாலும் நேரிலையே வர சொல்லி அடி வெளுத்து விட்ருவ. அதுக்கு எதுக்கு ஆள் வச்சுலாம் செய்ய போற, வீண் செலவுல..” என போகிற போக்கில், உண்மையை உடைத்து விட,

“செந்தில்” என இவள் சிணுங்க.. “இரண்டு நாள் கழிச்சு நம்ப வீட்டில் வந்து சிணுங்குடி..” என அழுத்தமாய் ஒரு பார்வையை வீசிவிட்டு, இடுப்பில் கை போட்டு இழுத்தான்.

“ஐய்யோ, அம்மா இருக்காங்க” என ராஜி விலக

“கண் முன்னாடி பிள்ளைக இருக்கு அது தெரியல.. அடுப்படில்ல இருக்குற அம்மா தான் தைரியுதா?” செந்தில் நமட்டு சிரிப்பை உதிர்த்திட

அணைப்பில் இருந்தபடியே இருவரும் திரும்பி குழந்தைகளை பார்க்க, அவர்களோ விளையாட்டு மும்மரத்தில் இருந்தனர்.

********

வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராக சென்ற இடம் அவர்களது கடை தான். வழக்கம் போல் ஆட்டோவில் தான் சென்றான்.

ராம், கிரிக்கு போன் செய்து “டேய் கடைக்கு வான்னு கூப்பிட்டா தான் வருவியா.. வாடா” என கடிந்து வைத்ததில் தான், வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான்.

கனைக்கு வந்த பிறகு, இவனுக்கென வேலைகளை ஒதுக்கி கொடுத்து விட்டார் மோகன்.

டீலர்களுக்கு போன் செய்வதும் அவர்களை நேரில் சந்திப்பதற்கான நேரங்களையும் குறித்து வைத்து கொண்டிருக்கையிலேயே, கமலியிடமிருந்து போன் வந்தது கிரிக்கு.

இறுக்கத்தில் இருந்த முகம் சிறிதாய் இளக, நேற்றைய நினைவுகள் சுகமாய் தாலாட்ட, போனை எடுத்து “கமலி, சொல்லு” என்றான்.

“எங்க இருக்கீங்க!” என கேட்டாள்.

“வேறெங்க கடையில் தான்”

“நானும் வரவா” என கேட்டபின் அவனிடம் பெரும் அமைதி, “எங்க வரனும்னு சொல்லுங்க வரேன்” என்றட

“கிளம்பி இருடி.. கூப்ட வரேன்” குரலிலேயே அத்தனை ஆர்வம்.

“உங்களுக்கு அலைச்சல் வேணாம்.. லேண்ட் மார்க் சொல்லுங்க வந்துடறேன்” இவள் உறுதியாய் கூறிவிட, இவனும் லேண்ட் மார்க்கை கூறி வர சொன்னான்.

“ம்மா.. கிரியை பார்த்துட்டு வரேன்” என வழக்கம் போல்  வெஸ்பவை எடுத்து கொண்டு சென்றுவிட்டாள். கிரி சொன்ன இடத்திற்கும் வந்துவிட்டாள். இவன் சொன்ன இடம், மெயின் ரோடு, மெயின் ரோட்டின் அந்த புறமும் இந்த புறமும் குடியிருப்பு பகுதிகள், ரோட்டை ஒட்டினாற் போல நிறைய கடைகள் வேறு இருந்தது.

இவள் கிரிக்கு போன் அடிக்கும் முன், அவள் முன் வந்து நின்றான் கிரி. “இதென்ன மாய மந்திரம் போட்ட மாதிரி இப்படி வந்து நிக்கிறீங்க” இவள் அதிர்ச்சியாக

“எல்லாம் நீ போட்ட மந்திரத்தில் தான்” என்றான் கிரி.

“ம்.. என்ன?”

தலையை உலுக்கி கொண்டு “ஒன்னுமில்லை.. நீ கிளம்புன டையத்தை கணக்கு பண்ணி வந்துட்டேன்” என சமாளித்து அவளிடமிருந்த பைக்கை தன் கைக்கு மாற்றி, அதில் அவளை ஏற்றி கொண்டு, ரோட்டை கடந்து எதிரில் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.

பெரிய கேட்.. அதை தாண்டி முதலில் பார்க்கிங் தான், பார்க்கிங்கிற்கு தனி இடம் இருக்க, அங்கே பைக்கை நிறுத்திவிட்டு, கடைக்குள் அழைத்து சென்றான் கிரி.

அதன் பின் ஒரு நீளமான கட்டிடம், ஒரு ப்ளோர் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதீத நீளம். படியுடன், ஏறுதளமும் போடபட்டு, சில்வர் கிரில் கம்பிகளுடன் இருந்த காரிடாரை கடந்து வந்தனர்.

அதன் பின் நுழைவு வாயில், வருவோர் போவோருக்காக இரண்டாக பிரிக்க பட்டு இருந்தது. அதை தாண்டி, நான்கு பில் போடும் கவுண்டர்கள் இருந்தது. கம்யூட்டர், ஏனைய ஸ்கேனிங் மிஷின்கள் மட்டுமே அங்கே மிஸ்ஸிங். மற்றையபடி முழுதாய் நிறைவு செய்யப்பட்டு இருந்தது அந்த கவுண்டர்கள்.

அதனை அடுத்து ஆறு பிரிவுகளாய் பிரித்து ஆங்காங்கே பிளக்கார்ட்ஸ் தொங்கி கொண்டிருக்க, அதில் வீட்டு உபயோகப்பொருட்கள், பலசரக்கு பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பேக்ட் புட் ஐட்டம், பீவேரேஜஸ், ஸ்டேஷனரி என கண்ணை கவரும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

சரக்கு பொருட்கள் தான் இல்லை மற்ற படி 90 சதவீத வேலை முடிந்திருந்தது. எதற்குதே விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்தும் பக்கா பிளானாக செயல்படுத்தபட்டு இருந்தது.

“இந்த பில்டிங்கிற்கு பின்னாடி குடோன் மாதிரி ஒரு பில்டிங் கூட இருக்கு, அங்கே தான் பேக்கிங் வேலை நடக்க போகுது. தவிர, ஸ்டோரேஜூம் அங்கே தான், அங்க இன்னும் கொஞ்சம் வேலை பெண்டிங் இருக்கு” மிகம் விகசிக்க கூறினான் கிரி.

“ம்.. சரக்கும் அதை வாங்க கஸ்டமர்ஸூம் நான் மிஸ்ஸிங்” என கமலி பூரிக்க

“அது நிறைய இடத்தில் சேம்பிள் வாங்கனும், குவாலிட்டி எல்லாம் செக் பண்ணனும். சித்த்தப்பாவை இதுக்கு மேல அலைய வைக்க முடியாது. இனி இதுக்காக தான் நானும், ராமும் ஓடனும். இனி தான் நிறைய வேலை இருக்கு. சரக்கு வந்துட்டா.. பில் கவுண்டரை ஓபன் பண்ணிடலாம்” அத்தனை கனவுகளோடு சொல்லி கொண்டிருந்த கிரி இவளுக்கு புதிதாய் தெரிந்தான். வழக்கம் போல சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்ய துவங்கிவிட்டாள் கமலி..

One thought on “முள் மீது தூங்கினேனே 24 4

  • Vaigaiveni Mahesh

    Super super super

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!