“காலையில் ஆறு டூ ஏழு பால் காய்ச்சுடா.. வந்துடுடா. நான் ராஜி குழந்தைகள் எல்லாரும் காலையில் ஐஞ்சு மணிக்கு அங்கே கிளம்பி போயிடுவோம். செந்தில் ஆட்டோ அனுப்புறேனு சொல்லி இருக்காப்புல. அப்புறம் வீட்டில் பொருளை எல்லாம் செட் பண்ணனும். ராஜி என்னை இரண்டு நாள் அங்கேயே இருக்க சொல்றா.. போகட்டுமா” என வசந்தா கேட்க, “ம்.. போயிட்டு வாம்மா. அவளாலும் குழந்தைகளை வச்சிட்டு தனியா சமாளிக்க முடியாது” என்ற நேரம்
“கிரி, டீ” என ராஜி கொண்டு வந்து கொடுக்க, களைப்பில் வாங்கி குடித்தவன், சில நிமிடங்களிலேயே வாயை பொத்தி கொண்டு பாத்ரூமிற்குள் ஓடினான். கதவையும் இவன் அடைத்துவிட, ராஜியும், வசந்தாவும் “டேய் என்னடா.. என்னடா” என கதவை தட்ட தட்ட திறக்கவில்லை இவன். உள்ளே வாந்தியெடுக்கும் சத்தம் மட்டுமே கேட்டது இவர்களுக்கு.
ராஜி கொஞ்சம் வென்னி வை என அவளை ஏவி விட்டு, இவனுக்காக காத்திருந்தார் வசந்தா.
அதிகமாய் சோர்ந்து வெளியே வந்தவனை சோபாவில் அமர செய்து, குடிக்க வென்னீர் கொடுத்தார் வசந்தா.
Advertisement
ஆனால் தொண்டையில் ஏதோ குண்டு வைத்து அழுத்துவது போல் வலியெடுக்க, அவனால் வென்னீரை கூட விழுங்க முடியாமல் போனது.
முகத்தை சுருக்கிகொண்டு சோபாவிலேயே தலை சாய்த்தான் கிரி.
“எப்போவும் இந்த மாதிரி பிரச்சனை வந்ததே இல்லையேடா.. என்ன தான் ஆச்சு! என்னத்த தின்னு தொலஞ்ச.. காய்ச்சலு, வாந்தினு ஏன்டா ரோதனைய கூட்ற!” என ஆரம்பித்த வசந்தாவை, நோக்கி இவன் ஒரு முறைப்பை விட்டு, “கொஞ்ச நேரம் தூங்குறேன். எழுப்பாதீங்க” என அறைக்குள்ளே உறங்க போய்விட்டான் கிரி. புதிதாய் மாற்றிய கட்டிலும், மெத்தையும் அவனை உள்வாங்கி கொண்டது.
Advertisement
காய்ச்சல், வேலை, வாந்தி என அவனை ஒரு பாடு படுத்தியிருக்க, அமைதியாய் படுத்துவிட்டான் கிரி.
Advertisement
அமைதியாய் போய் படுத்து கொண்டவனை பார்த்து “என்னதான் ஆச்சு இவனுக்கு” என தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அமர்ந்துவிட்டனர் தாயும் மகளும். “இவனை இப்படியே விட்டுட்டு எப்படி உன் வீட்டில் வந்து தங்குறது அதுவும் இரண்டு நாளைக்கு!”
“ஆமா இருந்தா மட்டும் என்ன வேணும் மகனேனு கேட்டு அறுத்து தள்ளிடுவ! போம்மா” என போகிற போக்கில் நறுக்கென கொட்டு வைத்து சென்றாள் ராஜி.
ஒரு அரை மணிநேரம் சென்றிருக்கும். விடாது அடித்து கொண்டிருந்த கிரியின் போனை எடுத்து வந்து வசந்தாவிடம் கொடுத்தாள் ராஜி. “இதை எதுக்குடி என்கிட்ட குடுக்குற!” என கேட்ட வசந்தாவிடம் “உன் மருமகளோட அண்ணன் கர்ணன் தான். அப்பத புடுச்சு அடிச்சிட்டே இருக்கான். என்னனு கேளு! ஏதாவது அவசரமா இருக்க போகுது” என்றிட, இவரும் வாங்கி பேசினார்.
Advertisement
“தம்பி, அவன் தூங்குறானே!” என எந்த வித முன் விசாரனையும் இன்றி நேரடியாக பேச
“அத்தை நான் கமலி.. அவர்கிட்ட பேசனும்” என்ற கமலியின் குரலில் திடுக்கிட்ட வசந்தா.. “அவன் சாப்பிட்ட எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்டு இப்போ தான் தூங்குறான். கட்டாயம் எழுப்பி குடுக்கனுமா?” சிறிது கடுமை கலந்து வந்தது அவர் குரல்.
“நான் அப்புறம் பேசுறேன்” என வைத்துவிட்டாள் கமலி.
“திமிரை பார்த்தியா, புருஷன் வாந்தி எடுத்து கிடக்கான்னு சொல்றேன். என்ன ஏதுன்னு கேட்காமல் அப்புறம் பேசுறேன்னு வச்சிட்டா. திமிர் புடிச்சவ” வசைபாடலை தொடர்ந்தார் வசந்தா.
“ம்மா.. அவன் தூங்குறான்.. கத்தி கத்தியே எழுப்பி விட்றாத” என ராஜி அவள் பங்கிற்கு கத்திவிட்டு சென்றாள்.
*******
வாந்தி எடுத்ததாலோ என்னவோ, நெஞ்செரிச்சலில் சரிவர தூங்கமுடியவில்லை கிரியால். தூக்கம் அரைகுறையாக தான் இருந்தது. ஆழ்ந்த தூக்கமும் இல்லை என்பதாலேயே கண் விழிக்கும் போதே இரவு ஏழு மணி தான் ஆகி இருந்தது.
மெதுவாய் கட்டிலை விட்டு எழுந்தவன், முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தான்.
எழுந்து வந்தவனுக்கு, இட்லி எடுத்து வந்தாள் ராஜி, ஏதோ ஒவ்வாதது போல் இவனுக்கு தோன்றிட “வேணாம்க்கா” என மறுத்துவிட்டவனை, பார்த்தபடி “முடியலைன்னா ஹாஸ்பிடல் போயிட்டு வாயேன் கிரி. இப்படி வீட்டிலேயே இருந்தா சரியாகிடுமா?” என ராஜி கேட்டாள்.
“நான் வேணா கூட வரேன்டா.. வா ஆஸ்பத்திரி போவோம்” என வசந்தாவும் கேட்டிட
“ம்.. நான் போயிக்கிறேன்மா” என அவருக்கொரு பதிலை சொல்லி வைத்தான் கிரி. அந்நேரம் மறுபடியும் இவனுக்கு போன் வர, எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள் ராஜி. அப்போவே உனக்கு போன் வந்தது கிரி என சொல்லிவிட்டு குழந்தைகளோடு அமர்ந்துவிட்டாள்.
போனில் கர்ணாவின் எண் மிளிர்வதை கண்டு எடுத்தும் விட்டான்.
“சொல்லுங்க கர்ணா” நலிந்து வந்தது இவன் குரல்.
“கர்ணா இல்லை கமலி” என்றதிலேயே, ஒரு நிமிட அமைதி அவனிடம், அதிசயமாய் போனை பார்த்து, பின் “கமலி, சொல்லு?” என
“உடம்பு முடியலையா? என்ன செய்து” என இவள் கேட்க, மனமே இலகுவானது அவளது அந்த ஒற்றை விசாரிப்பில். சோபாவில் தலை சாய்த்தவனுக்கு இதுவரை இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.
ஒரு வேளை குரலை வைத்து உடல் நிலை சரியில்லை என நினைக்கிறாளோ? அதனால் உடல் நிலையை பற்றி கேட்கிறாளோ? என நினைத்து “தூங்கி எழுந்தேன் இப்போ பரவாயில்ல கமலி” என வந்தது இவன் வார்த்தைகள். எப்போதும் சுண்டி இழுக்கும் குரல் இன்று கரகரவென வந்தது.
“சாப்பிட்டிங்களா?” என இவள் கேட்க
“இல்லை.. இனி தான் சாப்பிடனும்” என்றவனிடம் “வாமிட் பண்ணிடீங்கன்னு அத்த சொன்னாங்க. என்னாச்சு.. மறுபடியும் ஹாஸ்பிடல் போவோமா?” என இவள் கேட்க, பார்வையோ வசந்தவை தொட்டு மீண்டது.
சோபாவில் அமர்ந்திருந்தவன், சட்டென எழுந்து வெளியே வந்துவிட்டான். பெரிய வேப்பமரத்தின் அடியில் போய் நின்றவனாய்,
“அதெல்லாம் ஒன்னுமில்லை.. இப்போ சரியா போச்சு” என இப்போதும் அதையே கூறிவிட்டான்.
பின் “என்ன இந்நேரம் போன் பண்ணிருக்க! சாயந்தரம் வேற கால் பண்ணியிருந்தியாமே அம்மா சொன்னாங்க?” குரலில் தேடல் தெரிந்தது இவனிடம்.
“காலையில் உங்கண்ணன் பேசின பேச்சுக்கே, செம்ம கடுப்புல இருக்கேன். வந்தேன்னா.. நீங்க தான் வாங்கி கட்டிப்பீங்க”
“வா.. கட்டிக்கிறேன்” அவளது பேச்சிற்கு இப்படி தான் வந்தது அவனது எதிர்வினை.
தலையில் கை வைத்து நின்றுவிட்டாள் கமலி. ‘எப்பா.. இவனை எப்படி தான் சமாளிக்க போறோம்னு தெரியலையே’ என நினைத்து “நாளைக்கழிச்சு அண்ணியோட வளைகாப்புக்கு பத்திரிக்கை வச்சு உங்களை அழைக்க, அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் வராங்க” வரட்டுமா என அனுமதி கேளாமல், வருகிறார்கள் என செய்தியாக இவள் கூற, ‘ம்.. பேச்சை மாத்திட்டா’ என இவனும் உணர்ந்துகொண்டு
மற்றவைகளை விடுத்து “கூட நீ வரலையா?” என இவன் கேட்க
“ ‘நீயும் வா’ ன்னு என்னை யாரும் கூப்பிடலையே..” என இவள் சாதாரணமாய் பேசி வைக்க
“சரி் நான் கூப்பிடறேன்.. வா” என இவன் அழைத்திட
ஓரிரு நொடிகள் பதிலில்லை அவளிடம் பின் “அது அப்பா அம்மாவா கூப்பிடாமா நானா எப்படி வர்றது?” இவள் தயங்க
‘இவளுக்கு நான் அவ புருஷன்றது நியாபகம் இருக்கா இல்லையா?’ இப்போதான் லவ் பிரபோஷல் முடிஞ்சா மாதிரியும், டேட்டிங்க்கு கூப்பிடற மாதிரியும் பயந்து சாகுறா! உள்ளுக்குள்ளே தீயாய் கோபம் எழ, “நீ வரவே வேணாம், அங்கேயே இரு. முடிஞ்சா பிரிட்ஜூக்குள்ள வச்ச உன்னை பூட்ட சொல்லிடு, வெளியே வந்தன்னா, கெட்டு போயிடுவல்ல” என்றிட
“கிரி.. இதெல்லாம் ஓவர்.. ரொம்ப பேசுறீங்க” என அவன் கோபத்திற்கு இவளும் கோபத்தை காட்டிட
“அப்படி தான் பேசுவேன், என்னடி பண்ணுவ சாம்பாரு” என திட்டி “வைடி போனை” என வைத்தும் விட்டான்.
போனையே பார்த்திருந்தாள் கமலி, ‘சாம்பாருன்றான், பிரிட்ஜூக்குள்ள வச்சு பூட்ட சொல்றான்’ என்ன தான் நடக்குது இங்க?
ஆக்ட்சுவலா, காலையில் நடந்ததுக்கு நான் தானே கோபமா இருக்கனும். இவன் ஏன் இப்ப கோப படுறான். யோசித்து கொண்டிருந்தவளின் தலையில்விழுந்தது ஒரு அடி..
“ஸ்.. ஆ..” என கத்தியவள், அதை செய்தது கர்ணன் என உணர்ந்து “எரும மாடு” என திட்டிட, “கிரிகிட்ட பேச சொன்னா.. நீயென்ன தனியா நின்னு பேசிட்டு இருக்க.. கிரிகிட்ட பேசினியா இல்லையா” என அவள் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டான்.
“அதுக்கு அடிப்பியா நீ..” என இவனுக்கு முதுகில் ஒன்று கொடுத்து “அதெல்லாம் பேசிட்டேன்” என இவளும் கூற, அடுத்து கர்ணனின் குடும்பம் கிரி வீட்டை நோக்கி பயணப்பட்டது.