வீடு வந்த பிறகு, “மாடியில தூங்காதடா” என வசந்தா கண்டித்து, அவனை படுக்கை அறைக்குள் அனுப்பிவைத்திட, அங்கே ஏற்கனவே உறங்கி போன குழந்தைகளோடு இவனும் படுத்து கொண்டான். வசந்தாவும், ராஜியும் ஹாலில் படுத்து கொண்டனர்.
காலையில் ஒரு நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிரியின் அருகில் படுத்திருந்த குழந்தைகளை எழுப்பி தயார் செய்து, அதன் பின் வசந்தவும் , ராஜியும் தயாராகி, ஆட்டோவில் கிளம்பிவிட்டனர்.
இரவு போட்ட மாத்திரையின் விளைவு நல்ல தூக்கித்தில் இருந்தான் கிரி.
காலையில் ஆறரை போல தான் எழுந்தான். எழுந்ததுமே அங்கே வீட்டில் யாருமில்லை என உணர்ந்து குளித்து, ஆலீவ் கிரீன் ரஙுண்ட் நைக் டீசர்ட்டும், பிளாக் ஜீனுமாய் கிளம்பி கிச்சனுக்கு வந்தான்.
Advertisement
ஒரு பாத்திரத்தில் மாவு மட்டுமே இருந்தது. பால்பாக்கெட்டோ, பால் பாத்திரமோ அங்கே இல்லை. இடுப்பில் கை வைத்து கொண்டு உப் என காற்றை ஊதி தள்ளியவன் கதவை பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கர்ணாவிற்கு போன் செய்தான். அவனோ “கடையில் தான் இருக்கேன் கிரி.. வாங்க” என்றிட, “கர்ணா.. கமலி எழுந்துட்டாளா!” என சம்மந்தமில்லாமல் கேட்டான் கிரி.
காதிலிருந்து போனை எடுத்து பார்த்துவிட்டு, “அவ ஏற்கனவே எழுந்திருப்பா கிரி.. ஏன்?” இவன் குழப்பமாய் கேட்க
Advertisement
“கடைக்கு அவளும் வந்தா நல்லா இருக்கும்” என கிரி இழுக்க
Advertisement
“இதுக்கா இத்தனை தயக்கம் கிரி, நேரா வீட்டுக்கு போய் அவளை அழைச்சிட்டு அப்புறமா கடைக்கு வாங்க கிரி. லேட் பண்ண மாட்டா சீக்கிரமா கிளம்பிடுவா” என கர்ணா கூறிட, வண்டியை கமலி வீட்டிற்கு விட்டான்.
போர்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு, இவன் வீட்டினுள் நுழைந்தான். பார்வை வீடெங்கும் பரவ, சாம்பிராணி வாசம் இவன் மூக்கை துளைத்தது.
“வாங்க மாப்பிள்ளை” என மல்லிகா, கையில் சாம்பிரானி தட்டோடு வரவேற்க
Advertisement
“கமலி” என இவன் இழுத்து நிறுத்த..
“அவ ரூமில் தான் இருக்கா.. போங்க..” என்றிட, இவனும் வேகமாய் அவளறைக்கு சென்றான். கதவு ஒருகளித்து திறந்தே இருக்க, தள்ளி கொண்டு உள்ளே சென்றான்.
சென்றவனின் விழிகள் ஆச்சர்த்தியத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தது.
ஏனெனில் கட்டிலின் அருகில் வியர்க்க விறுவிறுக்க புஸ்அப் எடுத்து கொண்டிருந்தாள் கமலி. அதுவும் கீழே குட்டியாய் சார்ட்ஸ், மேலே ஸ்லீவ்லஸ் ஷார்ட் டாப் அணிந்திருந்தாள்.
‘தரையில் கை ஊனாமல் எழுந்திருக்க தெரியாது இவளுக்கு, இவ புஸ் அப் எடுக்குறா!’ இமை சிமிட்டாது பார்த்திருந்தான் கிரி.
நெற்றியில் இருந்து வழிந்து கொண்டிருந்த வியர்வையும், அந்த ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப் உதவியால் குட்டி குட்டியாய் உருண்டு திரண்டு தெரிந்த புஜங்களும், துருத்தி நின்ற கழுத்தெழும்பும், அதன் கீழ் கின்னென இருந்த உடல் வாகும், எக்ஸ்ட்ரா சதை போடாத நீண்ட கால்களும் அவனை அடியோடு சாய்த்து கொண்டிருந்தது. ‘கிரி உன்னை நிஜமாவே சாவடிக்க தான் போறா இவ’ ஐவிரல் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள, அவனது பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்குமிடையில் திறந்து கொண்டது இவனது ஒற்றை கண். வகைதொகை பாராமல் ஒரு இடம் விடாது முழுமையாய், விரலிடுக்கிலேயே அவளை கபளீகரம் செய்தான் கிரி.
இதுவரை குவாட் செட்டில் மட்டுமே அவளை பார்த்தவள், இன்று கண்களுக்கு விருந்தளித்து கொண்டிருந்தாள்.
‘நேத்தைக்கு எந்த நேரத்தில் சொல்லி தொலஞ்சியோ கிரி.. இன்னைக்கே அரையும் குறையுமா இருக்கா. நீ காலிடா’ நினைத்தவனின் சுவாசம் முழுதாய் தடைபட்டது.
இவளுக்கு இவன் வந்ததும் தெரியவில்லை, நின்று பார்த்ததும் தெரயவில்லை.
திடுக்கிட்டு பட்டென எழுந்து விட்டாள் கமலி. “கிரி.. நீங்க எங்கே இங்கே?” என இவள் அவனை நெருங்கி வேகமாய் வர, அவளுக்கு முன் அவளது வியர்வை வாசம் அவனை நிறைக்க, அதிகமான மூச்சிறைக்கும் சத்தம் அவன் காதுகளை தீண்டிட, அவளது மூச்சு காற்று இவன் முகத்தை சீண்டியது.
பத்தடி தூரத்திலே அவளை கபளீகரம் செய்த விழிகள், இப்போது ஓரடி தூரம் இடைவெளி விட்டு நெருங்கி நின்றவளை ரசித்து பின் ருசித்தது கிரியின் விழிகள்.
நெற்றியில் இருந்து வியர்வையை சுண்டி எறிந்தவள், அப்போது தான் அவன் பார்வையை உணர்ந்து, குனிந்து தன்னை பார்த்து, ‘ச்சே’ முகத்தில் லேசாய் அறைந்து கொண்டு “இருங்க கிரி, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என அவனது முகம் பாராமலேயே உளறிவிட்டு, திரும்பியவளின் இடையில் கைபோட்டு தன்னோடு இழுத்தான் கிரி.
திடுக்கிட்டு திமிறி “கிரி” என இவள் அதிர்ந்து நிற்கையிலேயே, தன் வியிற்றோடு ஒட்டி நிறுத்தி, “இப்ப எங்க உனக்கு சதை அதிகமா இருக்குன்னு இப்படி வேர்க்க, வேர்க்க, புஸ்அப் பண்ணிட்டு இருக்க!” பற்களை கடித்து கொண்டு பேசியவனுக்கு, இதழ்கள் மட்டுமே அசைந்து வார்த்தைகளை கொட்டியது.
குட்டி டாப்பிற்குள் நுழைந்த அவனது விரல்களின் அழுத்தமும், பேசிய அழுத்தமான வார்த்தைகளும் அவளை பொம்மையென நிற்க செய்திட, “கிரி ப்ளீஸ்” என கெஞ்சி கொண்டிருந்தாள் அவனிடம்,
அவனோ அந்த கெஞ்சலை கண்டு கொள்ளாமல் “கேட்டதுக்கு பதில் சொல்லுடி” என பற்களை கடித்து கொண்டு நிற்க
“இரண்டு நாள் தான் எக்ஸர்சைஸ் பண்ணலை, இரண்டு நாளா அம்மா வேற ஹெவியா சாப்பாடு போட்டுட்டாங்க, இடுப்பு பக்கம் கொஞ்சம் சதை போட்ருச்சு அதான் குறைச்சிட்டு இருக்கேன்” இவள் சீரியசாக கூற
லேசாய் தலையை சரித்து அவள் இடையை பார்த்தான். இவன் இறுக்கி பிடித்திருந்தது போக, ஷார்ட்டாப்பின் வழியாய் லேசாய் பிதுங்கி தெரிந்த இடையை விரல்களால் கிள்ளி எடுக்க “கிரி” சிறு அலறல் அவளிடம்.
அந்த அலறலை சுவாதீனமாய் கேட்டு ரசித்து, அவள் இடை விட்டு முகத்திற்கு வந்தான். “பிடிக்கிறதுக்கு சதை வேணும்டி.. ஒட்டுக்க குறைச்சுட்டா பிடிமானத்துக்கு நான் எங்க போறது” கண்ணோடு கண் நோக்கி இவன் கூற
அவன் பிடி கொடுக்கும் வலியில், விழிகள் சொல்லும் மொழியில் நெளிந்தபடி “என்ன பிடிமானம், எதுக்கு பிடிமானம்!” அவன் அணைப்பில் இருந்து விலகிட இவள் தவிக்க.
கிரியின் விழிகளும், முகம் காட்டும் வர்ணஜாலங்களும் அவளுக்கு அர்த்தத்தை கற்பிக்க, தானாகவே அவளது விழிகள் தாழ்ந்தது.
“கொஞ்சம் வெயிட் ஏறின மாதிரி தோணுது கிரி.. அதான் ஒர்க் அவுட் பண்றேன். விடுங்களேன்” இவனிடமிருந்தெ விடுபடமுடியாமல் இவள் திணறி கொண்டிருக்க
இவனோ “அதுக்கு நீ தான் பண்ணனும்னு அவசியம் இல்லை. ஒர்க்அவுட் நான் பண்ணாலும் குறையும்” இவளது சம்மதம் கேட்டு நின்றான் கிரி.
“ஹான்.. அதெப்படி.. நீங்க ஒர்க் அவுட் பண்ணுனா நான் வெயிட் குறையமுடியும்” வக்கனையாய் கேட்டு, அவன் முகம் பார்க்க, கிரியோ நமட்டு சிரிப்போடு அவளை பார்த்து வைக்க
அந்த சிரிப்போ அத்தனை விளக்கத்தையும் இவளுக்கு கொடுத்து விட “கிரி..” என அவன் நெஞ்சில் கை வைத்து முழு பலத்தோடு அவனை தள்ளிவிட, ஸ்லிப் ஆகி இவன் கட்டிலில் விழ, “என்னலாம் பேசுறான். எப்படி எல்லாம் பேசுறான்” விட்டால் போதுமென பாத்ரூமிற்க்குள் ஓடி மறைந்தாள்.
கட்டிலில் விழுந்தவனோ அப்படியே கண் மூடி கிடந்தான். மூடிய கண்களில் என்ன கனவை கண்டானோ, தலை உலுக்கி கொண்டு எழுந்தமர்ந்தான். எழுந்தமர்ந்தவனின் கண்களில் பட்டது, அவர்களது பிரேமில் மாட்டபட்டிருந்த வெட்டிங் போட்டோ. எழுந்து அருகில் போய் நின்று பார்த்தான். இப்போதைய கமலிக்கும், அப்போதைய கமலிக்கும் ஆறு அல்ல நூறு வித்யாசங்களை சொல்லலாம் போல. அப்படி ஒரு பீக் டிரீன்ஸ்பார்மேஷனுக்கு மாறி இருந்தாள் கமலி.
கமலி பாத்ரூமிலிருந்து சிறு பயத்துடனே வெளியே வந்தவளுக்கு, கைகட்டி கொண்டு கல்யாண போட்டோ பிரேமை பார்த்து கொண்டிருந்த கிரி தட்டுபட்டான்.