Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அகம் -11

    சஞ்சய் எழுந்து கொண்டவன் “மாம்”என்று சோபையாக புன்னகைக்க இலக்கியா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

    “சஞ்சு கண்ணா”என்றவளுக்கு குரல் ஞமஞமத்துக் கிடக்க



Advertisement

    ‘பிள்ளை முன்னாடி ஏன் அழற மாதிரி பேசுறா இவ’என்று சற்று ஆதங்கமாய் பார்த்தான் கலை.

    “செல்வா அங்க்ள்”பிள்ளை அவனையும் கண்டு கொண்டவனாய் புன்னகைக்க “சாமி”என்று சஞ்சய் அருகில் சென்றிருந்தான் கலை‌

Advertisement

Advertisement

    “ஏன் ஒன் வீக்கா என்னைப் பார்க்க வரலை மாம்”சஞ்சு பரிதாபமாக கேட்கவும் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்து விட்டது இலக்கியாவிற்கு.

Advertisement

    “ப்ப்ச் இலா”என்று அதட்டியவன்”உங்க மம்மிக்கு ஃபீவர் டா தம்பி. ஊசி போடுவாங்க னு பயந்துகிட்டு இந்த பக்கம் வரல”என்று கலை கூறவும் “மாம் டோன்ட் ஸ்கேர் டூ இஞ்செக்ஷன். நான் போட்டுக்கிறேனே. லைட்டா எறும்பு பைட் பண்ண மாதிரி தான் இருக்கும்”என்று மகன்காரன் தைரியம் சொல்ல அவளின் முகத்தில் சோகத்துடன் ஒரு புன்னகை அரும்பியது.

    “சஞ்சு ஏதாவது சாப்பிடறியா… பசிக்கும் தானே”பேச்சை மாற்றியதும்”நோ மாம் எனக்கு வாக் போகணும் போல இருக்கு. கூட்டிட்டு போறீங்களா”என்று கேட்க

    “ஸ்யூர். இதோ டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்றேன்”என்று அவசரமாக எழுந்து அவள் ஓடிட கலை சஞ்சயை மெதுவாக தூக்கி தலையணை அணைப்பு கொடுத்து நிமிர்ந்து அமர வைத்தான்.

    “செல்வா அங்க்ள். யூ லுக் ஸோ ப்ரிட்டி”என்று சொன்னதும் கலையின் முகத்தில் மென்புன்னகை.

    “ஆஹான். அழகா இருக்கேனா என்ன”

    “எஸ் எஸ் டூ குட். போன டைம் விட டூ பியூட்டிஃபுல். ஐ லைக் யுவர் முஸ்டாக் (மீசை)”என்று வேறு நிறுத்தி நிறுத்தி அவன் கூற

    “நீயும் பெரிய பையனா வளர்ந்த பிறகு உனக்கும் வருமே. நீயும் அழகா இருப்ப”லேசாக கன்னம் தொட்டான்.

    “ஐ விஷ்”என்றான் சஞ்சு.

    சிவந்த மேனியன் முகம் எல்லாம் சோர்ந்து போய் வாய் ஓரம் புண்கள் இருக்க காரம் இல்லாத சூப் தான் தரப்படுகிறது ஆனாலும் கீமோதெரபியின் வீரியம் தாளாமல் புண்கள் இருந்தது. அதோடு தான் கலையிடம் பேசிக் கொண்டிருந்தான். இடையில் உமிழ் நீர் வேறு வர அதை மென்மையாக செல்வா துடைத்தும் விட்டான்.

    ஒரு நிமிடம் பேசினால் ஐந்து நிமிடம் அமைதியாக பார்த்தான் சஞ்சு. திக்கலான பேச்சு தான் ஆனாலும் சொல்வதை மிகச் சரியாக சொன்னான். படுத்தே இருப்பது குழந்தைக்கு அயர்வை தான் தந்தது. ஐந்து வயது வரை ஓடியாடிக் கொண்டிருந்த பிள்ளை திடுமென வாந்தி மயக்கம் நடக்க முடியாமல் தள்ளாடி அடிக்கடி விழுந்ததில் இலக்கியா பரிதவித்து போனாள். அவளது வேண்டுதல் எல்லாம் நீயும் என்னை விட்டு போய் விடாதே என்பதாக தானிருந்தது. சிறு பிள்ளை தான் ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு அத்தனை ஒத்துழைப்பு கொடுத்தான்.

    “சஞ்சு கண்ணா. நாம வாக் போகலாமா டாக்டர் பர்மிஷன் தந்துட்டாங்க”என்றதும் சோர்வான கண்களுடன் “ஐ வான்ட் டூ ஸ்லீப் மாம்”என்று சொல்லும் போதே கண்கள் சொருகி விட்டது பிள்ளைக்கு.

    அதில் ஏமாற்றம் தான் அவளுக்கு என்றாலும் லேசான சிரிப்புடன் “ஓகே ஓகே தூங்கலாம்”என்று மீண்டும் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

    “நீங்க கிளம்பறதுனா கிளம்புங்க செல்வா. நான் இருந்துட்டு வர்றேன்”என்றாள் நிமிராமல்.

    “சேந்து தான வந்தோம். சேர்ந்தே போவோம். அவன் கூட தனியா இருக்கணுமா. நான் வெளியே நிக்குறேன்”என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

    பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டே அவளும் உறங்கிப் போக வெளியே தான் அவ்வளவு நேரமும் அமர்ந்திருந்தான் கலை.

    **********

    முருகன் பேயறைந்தது போல சுத்திக் கொண்டிருந்தான். கையிருப்பில் பணம் என்று எதுவும் இல்லை. விவசாய வேலைகளும் அப்படியே நின்றிருந்தன. குடிக்காமல் வேறு கைகால் எல்லாம் உதறல் எடுத்துக் கொண்டிருக்க செல்வத்தை போட்டு பாடாய் படுத்தி எடுத்திருந்தான் பணம் வேண்டும் என்று.

    “அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா சொத்து தர்றேன் னு சொன்னீங்க தான, அதான் கல்யாணம் ஆகிடுச்சே… எம்பேர்ல நெலத்தை எழுத சொல்லுங்க”என்று சங்கரியிடம் வேறு சண்டை போட்டிருக்க பணத்தேவைக்காக பெற்றவர்கள் இருவரும் மகளை நாடி செக் வாங்கி வந்து விட்டனர் தான். ஆனால் மகனிடம் தந்தால் குடித்து தான் அழிப்பான் என்று இனி தாமே நிர்வாகம் செய்ய வேண்டும் என செல்வம் பணத்தை எடுத்து வந்து வீட்டு செலவிற்கு மனைவியிடம் பணம் தந்தவர் மீதத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பேரப் பிள்ளைகளுக்கு பள்ளியில் பணம் கட்ட வேண்டும் என்று எடுத்து வைத்திருக்க முருகன் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

    அதிலும் கலையோடு இலக்கியாவின் திருமணம் முடிந்த நிலையில் இனி பணமும் சொத்தும் வருமோ வராதோ என்ற கவலை அவனுக்கு.

    இலக்கியாவிற்கு சொத்தை எழுதிக் கொடுப்பதில் எல்லாம் பிரச்சினை இல்லை. ஆனால் இவன் குடி சூது அரசியலில் செலவு செய்கிறேன் என்று விற்று விட்டால் அவன் பிள்ளைகளுக்கு என்ன தருவான் என்ற எண்ணத்தில் தர மறுத்தாள். ஏற்கனவே அவன் பெயரில் எழுதியதை கவுன்சிலர் தேர்தலில் நிற்பவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறேன் என்று இழந்திருந்தான். இனிமேலும் விட்டால் எல்லாம் இழந்து விடுவான் என்று உணர்ந்து தான் இலக்கியா சொத்துக்களை தர முடியாது என்று விடாப்பிடியாக நின்று கொண்டாள்.

    இது செல்வத்திற்கும் அவரது அம்மாவுக்கும் புரியாமல் இருப்பது தான் எரிச்சலை உண்டாக்கியது அவளுக்கு. அதை விட தன்னைக் கட்டுப்படுத்த திருமணம் என்ற ஆயுதத்தை எடுத்தது தான் இன்னும் கோபம் அவளுக்கு. அதிலும் வயதான ஒரு நபரை தனக்காக தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்ததில் தன் குடும்பத்தை வெறுத்தே போனாள்.

    இனி எது வேண்டுமானாலும் பேசட்டும் என்று அவர்களின் பேச்சுக்களை அலட்சியம் செய்தவள் தன் பிள்ளையின் உடல்நிலையில் கவனம் வைத்தாள்.

    முருகனோ யார் பேசினாலும் கடித்து குதறி விடுவது போல தான் பேசினான்.

    “எய்யா எங்க கிட்ட பாஞ்சா நாங்க என்ன செய்ய. அந்த கோட்டிச்சிறுக்கி‌தர மாட்டேன் னு நிக்குதாளே”என்று இலக்கியாவின் அப்பத்தா சலித்துக் கொண்டார். அவருக்கு மாப்பிள்ளை வீட்டார் முன் அவமானப்பட்ட ரணம். அன்று பெருமாள்,” இலக்கியாவின் திருமணம் கலைச்செல்வனோடு தான். நீங்க பார்த்த மாப்ளையை போவ சொல்லுங்க மா” என்றதில் ஆத்திரமடைந்தவர் தான் பார்த்த வரனோடு தான் திருமணம் என்று நிற்க பெருமாள் ஆட்டமாய் ஆடி விட்டார்.

    “மனசாட்சி னு ஒண்ணு இருக்குதாத்தா ஒனக்கு. நானும் பொறுமையா போனா அந்த புள்ளைய எம்புட்டு தான் அவிச்சு கொட்டுவீக. மாப்ள பாத்துருக்காக மாப்ள. அவனுக்கு என்னை விட ஏழு வயசு தான் கம்மி.”என்றவர் பேசிய பேச்சில் மாப்பிள்ளை வீட்டார் ஓட்டமெடுக்க அப்பத்தா வாயை திறக்காமல் அமர்ந்து கொள்ள திருமணம் நன்றாக முடிந்தது.

    இப்போதும் பேரனுக்கு ஆதரவாக நிற்கும் அவரைக் கண்டால் எரிச்சல் தான் பெருமாளுக்கு.

    “ஒழைச்சு சம்பாத்தியம் பண்றதுனு எப்படின்னாவது ஒம்பேரனுக்கு தெரியுமாத்தா. எம்மவன் அங்கே சவுதில வெய்யில் கெடந்து ஒழைக்குதான். இவனுக்கு என்ன கேடு. வெவசாயத்த ஒழுங்கா பாத்தா அது போடும் பத்து தலைமொறைக்கு சோறு”என்று கத்தி விட்டு தான் சென்றார்.

    செல்வம் எதுவும் பேசவில்லை. பெருமாள் பேசிய பேச்சில் இனி இலக்கியா பக்கம் கூட போகக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு வந்து விட்டிருந்தார். அப்பனாடா நீயெல்லாம் என்று காறி உமிழாத குறை தான்.

    முருகனுக்கு ஆதரவாக அவன் மனைவியும் நிற்கவில்லை. இலக்கியா ஏற்கனவே சொல்லி இருந்தாள்.

    “உன் பசங்க வருங்காலத்தில் வசதியோடு இருக்கணும் னா உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணி வராதே”என்றிருக்க அவளும் “சரிங்க மதினி”என்று முடித்துக் கொண்டாள்.

    கணவனா பிள்ளைகளா என்று வரும் போது அவள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை சொல்லி இருந்தாள். ஆனால் நடந்த நிகழ்வுகளில் உடைந்து போய் இலக்கியாவே சொத்துக்களை எழுதி தருகிறேன் என்னை நிம்மதியாக விடுங்கள் என்ற ரீதியில் பேசி அனுப்பி இருந்தாள் அவளின் பெற்றோரை.

    இறந்த கணவனை மறக்க முடியாத துயரம். எதிர்பாராமல் இணைந்த புதிய பந்தத்தின் பாரம் என்று அவளை வெகுவாய் நிலைகுலைய செய்திருந்தது.

    **********

    நர்ஸ் வெரோனிகாவிடம் சொல்லி விட்டு கலை இலக்கியா இருவரும் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர்.

    இருவரும் ஒன்றாக தான் சென்று வருவர் ஆனால் இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் அதிகம் இருந்ததே இல்லை எனலாம். நாட்கள் தான் ஓடியதே தவிர இருவரும் தொலைவில் தான் நின்றனர். இடையில் அழகன் வீட்டிற்கும் சென்று வந்தனர். அங்கே மட்டும் தான் சற்று அதிகமாக பேசி இருப்பர். அதுவும் இளன் அடித்த லூட்டியில் தான் தன் கவலை மறந்து சிரித்திருந்தனர்.

   இதோ மறுபடியும் அதே இறுக்கம் அதே தொலைவு சாதாரணமாக கூட இருவரும் பேசிக் கொள்வதில்லை. அதிலும் இப்போதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும் அரவம் கூட அவளுக்கு தெரியவில்லை.

    இந்த நிலையில் தான் சந்தியாவின் அம்மா இறந்திருக்க கலைச்செல்வன் உடைந்தே போனான்.

    அவரின் இறுதி காரியங்களை எல்லாம் கலை தான் செய்தான்.

    “ஏன் யா அவங்க வகையறால அண்ணன் தம்பி மொறையுள்ள ஆரையாச்சும் கொல்லி வைக்க சொல்லலாம்ல”செல்வம் கேட்டு விட

    “அவகளை பெத்த புள்ளையாட்டம் இருந்து பாத்தது எங்கண்ணன் தான். அவர் செய்யாம வேற ஆரு செய்வாக”என்று காத்தமுத்து அவரை அடக்கி வைக்க

    “என்ன இருந்தாலும் புதுசா கல்யாணம் ஆனவர்”என்று செல்வம் தாள மாட்டாமல் கூறிவிட அவரை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தானே ஒழிய வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

    “கொல்லி எங்கத்தைக்கு ஆர் வைக்கணும் மாமோய்”என சந்தியாவின் தந்தையிடம் வினவ

    “ஒன்னிய விட்டா எங்களுக்கு ஆரு சாமி இருக்கா. நீதேன் எம்புள்ள. எம்பொஞ்சாதிக்கு மட்டுமில்ல எனக்கும் நீயிதேன் எல்லாம் செய்யணும். இந்த அநாதை கோட்டிப்பயலுக்கு நீயிதேன் தொணை”என்று கையெடுத்துக் கும்பிட்டு கதறி இருந்தார் அந்த மனிதர்.

    மகள் வழி பேத்தி என்று ஆத்யாவை அழைத்து வரும்படி கூற அழகன் என்ன ஆனாலும் சரி என்று ஆத்யாவையும் சுமதியையும் அழைத்து வந்திருந்தான்.

    இறுதி காரியங்களை முடித்து விட்ட கலை வீட்டிற்கு வருவதை அறவே நிறுத்தி இருந்தான். சந்தியாவின் அப்பாவிற்கு இனி தான் தான் துணை என்று சொல்லிக் கொண்டு இருந்து கொள்ள தனம் ஆவேசம் ஆகிவிட்டார்.

    …… தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!