“அடுத்தது, ஐந்து அவார்ட் ஒருவருக்கே அது யாருக்கு மிஸ்டர் சிரஞ்சீவி, கம் பார்வர்ட்” என்று கத்தி அழைத்த தொகுப்பாளினி.
, “சிறந்த கதை, வசனம், டைரக்ஷன், பாடல்கள், பெஸ்ட் பிலிம் மேக்ஹர் என்ற ஐந்து அவார்டை வாங்க போகிறார் சிரஞ்சீவி” என்று கூற..
Advertisement
அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது,.. டி. வியில் பார்த்துக்கோண்டிருந்த மாலாவுக்கும், லதாவுக்கு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது..
Advertisement
சீதா நண்பனை பெருமையாக பார்த்து கை தட்ட.. சிவா நண்பன் அவார்ட் வாங்கியது தூக்கி சுற்றி இருந்தான், அனைவரும் முகத்தில் சந்தோஷம்,..
Advertisement
நண்பர்கள் மூன்று பேரும் அணைத்து அவர்களின் வாழ்த்தினை பகிர்ந்து கொள்ள..
தொகுப்பாளின் ” த்தா லாஸ்ட் அவார்ட் த்தா பெஸ்ட் பிலிம் இன் திஸ் ஹியர் இந்திர சேனா, இந்த அவார்ட்டை வாங்க மிஸ்டர் ரவிதேஸ்சா கம் பார்வர்ட் என்று கூறி ரவிதேஸ்சாவுக்கு அவார்ட் கொடுத்து விட்டு..
Advertisement
மைக்கை ரவியிடம் கொடுத்தாள் நிகழ்ச்சி தொகுப்பாளின்., ” டெல் அப்போட் இந்திர சேனா மூவி” என்க.
மைக்கை வாங்கிய ரவி..
“குட் டே ஆப் எவ்ரி ஒன்,, தேங்க்யூ ஃபார் தமிழ் ஸ்டேட் அவார்ட்ஸ், என் படத்துக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என் பட டீமில் நிறைய பேர் அவார்ட் வாங்கி இருக்காங்க, எல்லார் சார்பாகவும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் இவ்வளவு பெரிய சக்சஸ் ஆகுமுன்னு நான் நினைக்கல, போட்ட காசு வந்தா போதும் அப்படியின்னு தான் நான் நினைச்சேன்,, ஆனா டைரக்டர் சிரஞ்சீவி இவ்வளவு பெஸ்ட்டா படம் எடுத்து எனக்கு கோடி கோடியா லாபம் வாங்கித் தருவாருன்னு எனக்கு தெரியாது, தாங்யூ சிரஞ்சீவி” என்று அனைவரின் முன்பு ரவி சொல்ல.
சிரஞ்சீவி கைகூப்பி அவன் நன்றியை ரவிக்கு தெரிவித்தான்..
“அப்புறம் ஒரு விஷயம் இந்திர சேனா வெற்றி பெற்ற பணத்தை நான் என்னுடைய டீமோட ஷேர் பண்ணனுமுன்னு நினைக்கிறேன், படத்தில் லாபம் வந்த 30% அமௌன்டை நான் என் டீம்முக்கு கொடுக்கிறேன் என்றவன். தன் பீ ஏ வை அழைத்து செக்கை வாங்கியவன்..
மைகில் “டைரக்டர் இல்லாமல் இந்த படம் கிடையாது இந்தப் படத்தில் வெற்றியே டைரக்டரால தான்.. படம் யார் வேணாலும் எடுக்கலாம் ஆனால் நல்ல படத்தை எடுக்க ஒரு நல்ல டைரக்டரால தான் முடியும், இந்த படத்தில் வெற்றி அடைந்த பணத்திலிருந்து 100 கோடியை நான் டைரக்டர் சிரஞ்சீவிக்கு அன்பளிப்பாக கொடுக்கிறேன்”.. என்றதும் வேண்டாம் என்று மறுப்பு சொல்ல வந்த சிரஞ்சீவியின் கையை பிடித்த தடுத்த சீதா.
“இது உன் திறமைக்கு கிடைக்குற அங்கிகாரம், வாங்கிங்கோ” என்று சீதா சொன்னதும்.
ரவி கொடுத்த செக்கை அவனிடமிருந்து வாங்கிய சிரஞ்சீவி நன்றியெல்லாம் சொல்லவில்லை ஒரு தலையசைப்பு மட்டும் ரவியை பார்த்து கொடுத்தவன். செக்கை வாங்கி கொண்டு வர..
“அடுத்தது இந்த படத்தின் கேமரா மேன், ஜானுக்கு 50 கோடி கொடுக்கிறேன்” என்றவன் ஜானை அழைக்க, ஜானுக்கு இது தெரியாது 50 கோடியா என்று அவருக்குமே ஆச்சர்யம், சந்தோஷம்,
“இந்த படத்தில் கேமரா மேன் ரொம்ப முக்கியம், இந்த படம் இவ்வளவு நல்ல வந்ததுக்கு கேமரா மேனும் ஒரு காரணம்” என்ற ரவி ஜானை கட்டி அணைத்து செக்கை நீட்ட.
சந்தோசமா வாங்கிக் கொண்டார் ஜான்.
“அடுத்தது இந்த படத்தின் ஹீரோ” என்று ரவி சிவாவை அழைத்து அவனுக்கு 25 கோடி ரூபாய் செக்கை நீட்ட, அதை ஒரு நன்றி சொல்லி விட்டு வாங்கி சென்றான் சிவா.
அடுத்தது என்ன சொல்வான் என்று அனைவரும் காத்திருக்க..,.
“அடுத்தது இந்த படத்தின் ஹீரோயின் குழலிசை, குழலிசையாக வாழ்ந்த, நடிகை கீதாவுக்கு 25 கோடி கொடுக்க நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்” என்று “மிஸ்சஸ் கீதா வரலாம்”.
என்று சீதாவை அழைக்க.
அவளுக்கு ரவியிடம் சென்று செக்கை வாங்க விருப்பமில்லை, நான் வாங்கவில்லை என்றால் சிரஞ்சீவியும், சிவாவும் வாங்கிய செக்கை திருப்பி கொடுத்திருவார்கள் என்று நினைத்தவள்.
முகத்தை நார்மலாக வைத்து கொண்டு..
ரவி அருகில் சென்று நின்றவள் அவனின் முகத்தை பார்க்கவில்லை தன் கையை மட்டும் நீட்டி செக்கை வாங்க போக.
அவளின் கையை பிடித்து குலுக்கியிருந்தான் ரவி, அவளோ அவனிடமிருந்த கையை உருவ பார்க்க.
“என்னை நிமிர்ந்து பார் சீதா”, என்றான்,.
அவளோ பார்க்கமாட்டேன் என்பது போல் கேமராவை பார்த்து சிரிப்பது போல் சிரித்தவள், அவனின் இடது கையில் வைத்திருந்த செக்கை பிடுங்கிக் கொண்டு நண்பர்கள் அருகில் சென்று நின்று கொண்டாள்.
அவளுக்கு பணம் பெரிய விசயமே இல்லை, ஆனால், சில நாட்களாக பிரபுவுக்கு ஒரு ஹாஸ்பெட்டல் கட்டிகொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்திருந்தது, அதை இந்த பணத்தில் இருந்து கட்டிக்கொடுக்கலாம் என்று கணக்கு போட்டாள்.
ரவி பின்பு அவனின் படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் 1 கோடி பணம் தர..
நிகழ்ச்சி நிறைவடைந்தது,,.
மேடையிலிருந்து சீதா கீழே இறங்கும் போது, ரவி சீதா அருகில் வந்து, “இன்னைக்கு நைட் நான் உன்வீட்டுக்கு வருவேன் பேசனும்” என்று மெதுவாக சொல்லி விட்டு சொல்ல..
என்னிடமா பேசினான் ரவி, என்றிருந்தது சீதாவிற்க்கு, இவன் எதுக்கு என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்தவள்.
நண்பர்களோடு காரில் சென்ற சீதா, பெரிய பைஸ்டார் ஓட்டலில் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து இரவு உணவை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியிருந்தனர்,, சிரஞ்சீவி நேராக அவன் இல்லம் செல்ல.
சிவா சீதாவை பத்திரமாக அவள் வீட்டில் விட்டு, அவன் இல்லம் சென்றிருந்தான்..
சீதாவுக்கு ரவி சொன்னது போல் வீட்டுக்கு வருவானா? வரமாட்டானா? அவனிடம் என்ன பேசுவது, அவன் என்ன கேட்பான் என்று ஆயிரம் சிந்தனைகள் ஓட அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவள்.. அறை மணி நேரம் ஆகியும் ரவியை காணாததால் உடல் கழுவி இரவு உடைக்கும் மாறியவள் படுக்க செல்லும் முன் காலிங் பெல் சத்தம் கேட்டது.
அவள் நினைத்தது போல ரவி தான் வந்திருந்தான், ஒய்ட் கோர்ட் சூட்டை கலட்டி விட்டு எளிமையான உடையில் வந்திருந்தான்..
சீதா அவனை ஆச்சரியமாக பார்த்து கதவை திறக்க “உள்ளே வரலாமா சீதா” என்றவன்.
அவள் கதவை விட்டு நகர்ந்ததும், அவன், அவன் வீடு போல் சோபாவில் சென்று ஜம்பமாக அமர்ந்திருந்தான்.
சீதா மனதில் ஒரு முடிவெடுத்தவளாக அவன் கேட்டதுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் தேவையில்லாமல் அவனோடு பேச்சு வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தவள் அவளும் அவன் எதிர் சோபாவில் வந்து அமர.
அந்த லூசான லாங் டாப் இரவு ஊடையில் குட்டி டால் போல் இருந்த சீதாவை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“எப்படி இருக்க சீதா?” என்றான்..
அவளிடம்.
“சூப்பரா இருக்கேன் ரவி சார்” என்றாள்.
“அது பார்த்தாலே தெரியுது, உன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம், அவ்வளவு பொலிவு , இந்த பொலிவிற்கு நேபாள் பிசினஸ் மேன் தான் காரணமோ” என்றான் அவளை ஆராயும் பார்வையில்..
“எஸ்” என்றால் ஒரே வார்த்தையில்…
“உன்னை பார்த்தது சந்தோஷம் சீதா, உன்னிகிட்ட கொஞ்சம் பேசனும் இப்போ பேசலாமா, இல்லை நாளைக்கு பேசலாமா, நைட் ரொம்ப லேட்டாகிடுச்சு, உன் தூக்கம் கெடுமே” என்று ரவி கூற.
“சீதா என்கிட்ட நீ பேசுறதுக்கு ஒன்னுமில்லையா?”.. என்றான்..
“இல்லை “.. என்றாள்..
அவன் முகம் பார்த்து,, அவனுக்கு அவள் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன்,,,
“சீதா நீ கோபமா இருக்க, நாம நாளைக்கு டின்னருக்கு வெளியே போகலாம், போயிட்டு நிதானமா பேசலாம், இப்போ தூங்கு, செஸ்ட் உன்னை பார்க்க வந்தேன் அவ்வளவு தான்” என்றவன் கிளம்ப பார்க்க.
“டின்னருக்கு கூப்பிடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம், அதுக்கு தான் உங்களுக்கு ஏகாபட்ட கேர்ள் பிரண்ட் இருப்பாங்களே, என்னை ஏன் கூப்பிடுறீங்க,. உங்க புது கேர்ள் பிரண்ட் தீப்தியை கூட்டிட்டு போகவேண்டிடயது, தானே என்ன எதுக்கு கூப்பிடுறீங்க,, “?.. என்றாள் சற்று கோபமாகவே,,
“சீதா, தீப்தியை பத்தி தப்பா பேசாத, அவ சின்ன பெண்ணு, என் பிஸ்னஸ் பிரண்டோட பொண்ணு 17 வயசு தான்,, அவளை போய் என் கேர்ள் பிரண்ட்ணு பேசுற”.. என்றான்.
“அப்போ சோணாலி மேம் யாரு, அவங்களும் சின்ன பொண்ணா”?.
அவள் பேசியதை பார்த்து ரவிக்கு சிரிப்பு வந்தது, ஓ.. இவளுக்கு நான் பொண்ணுங்க கூட, இருக்குறத பார்த்து கோபம் வருதா, என்று நினைத்து பார்த்து சிரித்தான்.
“இங்கே சிரிக்குற மாதிரி நான் ஒன்னும் ஜோக் சொல்லல்ல'”..
“ஏன் சீதா நான் பொண்ணுங்க கூட இருந்தா, உனக்கு ஏன் கோபம் வரணும்”.
“எனக்கு ஏன் சார் கோபம் வரணும்,யார் நீங்க எனக்கு, நான் உங்களை பார்த்து ஏன் கோபப்பட..
ஏதோ பேசனுமுன்னு சொன்னீங்க, பேசிட்டு கிளம்புங்க, எனக்கு தூங்கம் வருது” என்றாள் சீதா.
“சரி சொல்லு உன் ஹஸ்பென்ட் பேரு என்ன”?.. என்றான் ரவி
சீதா என்ன சொல்வது என்று திறுதிறுவென முளிக்க..
“ஓ நீ பேரு யோசிச்சு வைக்க மறந்துட்டீயா, ஒரு நல்ல நேபாளி பேர, உன் ஹஸ்பண்ட்டுக்கு வை சீதா அப்போ தான், நீ சொன்னா பொய்யை மெய்டேன் பண்ண முடியும்”.. என்றவன் சிரிக்க..
“பொய்யா? நானா?.. நான் ஏன் பொய் சொல்லணும், ” என்றாள் சீதா..
“சரி நான் போறேன், நாளைக்கு வருவேன் உன்கிட்ட பேச” என்றான்..
“நீங்க நாளைக்கு இங்கே வந்தீங்கன்னா நான் இங்கே இருக்க மாட்டேன், இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கனுமுன்னு நினைக்குறேன், நீங்க நாளைக்கு வந்தா, திரும்ப நான் எங்கே போவேன்னு எனக்கே தெரியாது” என்றாள்…