Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 18 3

“ஏன் சீதா நான் உன்னை பார்க்க வரகூடாது, “?.

“நீங்க யாரு, யாரு நீங்க எனக்கு, என்கிட்ட பேச உங்களுக்கு ஒன்னுமில்லை, என் நிம்மதியை கெடுக்காதீங்க, நான் சந்தோஷமா இருக்கேன், நான்  என் குழந்தைகளை வளர்க்கனும், என்னை தயவு செஞ்சு பேச வைக்காதீங்க ரவி, உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கல, கோபம் வருது, ஆத்திரமா வருது, அது என் வயித்துல இருக்குற பிள்ளைகளுக்கு நல்லது இல்ல, இனி என்னை பார்க்க வர வேண்டாம், பிலீஸ்,” என்றவள்..



Advertisement

தலை குனிந்து கொண்டு வேதனையான குரலில் சொல்ல..

Advertisement

“குழந்தையை பார்த்துக்கோ, உன்னையும் தான்” என்றவன் ஒரு நிமிடம் கூட நிற்க வில்லை   கிளம்பி விட்டான் ரவி…

Advertisement

மனதில் ஆயிரம் வேதனை, சீதாவிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என்று  வந்திருந்தான்.

Advertisement

அவள், போ போ என்று சொல்லவும் அவள் நிம்மதி முக்கியம், என்று கிளம்பி வந்திருந்தான்.

சீதா நியூஸ்சில் சொல்லியதை ரவியால்  நம்ம முடியவில்லை,.. இருந்தாலும் அவள் சந்தோசமாக  சொல்லியதும் ஒரு வேளை திருமண முடிந்திருக்குமோ என்று தான் நினைத்தான்.

இன்று காலை சீதா இருக்கும் நேபாளத்துக்கு சென்ற தன்னுடைய  ஆள், சீதாவை பற்றி சொன்ன தகவல்களை கேட்டவனுக்கு, தலை சுற்றியது…

ஆம் சீதா இருக்கும் இடத்துக்கு சென்ற ரவியோடு ஆள் சீதாவை பற்றி விசாரிக்க.. சீதா யாரையும் திருமணம் முடிக்க வில்லை, அவள் இங்கே வந்து ஒரு மாதத்தில் கருவுற்று இருக்கிறாள் என்று தகவல் வர..

ரவிக்கு அனைத்தும் புரிந்தது அவள் சுமந்து கொண்டு இருப்பது தன்னுடைய வாரிசு என்று தெரிந்தவனுக்கு எதுவும் பேச முடியவில்லை அமைதி தான்.

ஏன் டி. வியில் சீதா  பொய்  சொல்ல வேண்டும்,, பின்பு அவள் எப்படி உண்மையை சொல்லுவாள்..

உன் பெயரை சொல்ல முடியுமா? நீ அவளை பணம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டாய் தானே, என்று அவனின் மனசாட்சி அவனை கொல்லாமல் கொள்ள.

சாரி சீதா, சாரி டி, நான் அப்படி உன்கிட்ட கேட்டு இருக்க கூடாது,, என்று புலம்பிய படியே  காரையோட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு தூக்கம் எங்கேயோ போயிருந்தது, அவனின் வீட்டில் உள்ள பார்ருக்கு சென்றவன் விடிய, விடிய  குடித்தான், சீதா தன்னை போ, போ உன்கிட்ட பேச எனக்கும் ஒன்னுமில்லை என்று சொன்னதை  சொல்லிய படியே குடித்தான்,..

அங்கே சீதாவுக்கு  ரவி  சென்றதும் கதவை முடியவளுக்கு அப்படி ஓர் அழுகை….

ஏன்டா என் வாழ்க்கையில மறுபடியும் வர்ர, என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீயா, நான் தான் உன்னை விட்டு விலகி  போயிட்டேனே மீண்டும் வந்து ஏன் பேசுற, உன்கிட்ட பேச என்னால முடியாது டா, உன்னை பார்த்தா எனக்கு ஆத்திரமா வருது, உன் சட்டை பிடிச்சு சண்டை போட தோணுது, ஆனா அது என்னால முடியாதே, போயிடு வரதா,” என்றவள் சிறிது நேரம் அழுதுவிட்டு. அவளே அவளிடம் பேசினாள்..

ஏய் லூசு அவன பார்த்து நீ ஏன்  அழுவுற, உனக்கு என்ன டி ராசாத்தி, உன் பிள்ளைகள் இருக்குடி, அழகூடாது சீதா ப்ரேவ் கேர்ள் தானே, சந்தோஷமா இருக்கனும், நீ வருத்தபட்ட, பிள்ளைகள் வருத்த படும் தானே, இப்போ உன் ஹெல்த் தான் முக்கியம்,  சீதா எழுந்து உள்ளே போய் தூங்கு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்.. தூங்க சென்றாள், இன்று காலையிலிருந்து அழைந்ததுக்கு  படுத்தவுடனே தூங்கியும் விட்டாள்.

இங்கே  ரவி விடிய, விடிய குடித்தவன், விடிந்த பிறகு தான்  தூங்கி இருந்தான்…

சீதாவுக்கு  அன்றைய நாள் நன்றாக விடிந்தது,, சிரஞ்சீவியிடம் நேற்றே சொல்லி விட்டாள், பிரபு மத்தியான வருகிறான் சாப்பாடு கொண்டு வர வேண்டாம், வேலைக்காரியை வைத்து நானே சமைத்து கொள்கிறேன் என்று.

சரி என்ற சிரஞ்சீவி காலை மட்டும் சீதாவிற்கு உணவு எடுத்து வந்தவன்..

மதியம் பிரபுவை  ஏர்போர்டில் இருந்து அழைத்து வந்து சீதா வீட்டில் விட்டு செல்ல.

“டேய் சிரஞ்சு உள்ளே வா” என்று சீதா சிரஞ்சீவியை அழைக்க.

“இரண்டு பாசமலரும் மீட் பண்ணுறீங்க, நல்லா பேசி உங்க பாச பயிரை வளருங்க, எனக்கு வேலை இருக்கு சீதா” என்று சொல்லி சிரித்து   விட்டு சென்றான்.

சீதாவுக்கு தம்பியை பார்த்தும் கண்கலங்கியது,  தனக்கு இருக்கும் ஒரே  ஒரு உறவு அல்லவா,!  தம்பியை அணைத்து கொண்டவள், அவனின்  நெற்றியில் முத்தமிட்டு “எப்படி இருக்க” என்றதும்.

சீதாவின் தோற்றத்தை பார்த்தவன் வேதனையோடு,நல்லா இருப்பதாக  “ஊம்ம் ” என்று  தலையாட்ட.

“ஏன்டா ஒரு மாதிரி இருக்க”? என்றாள் சீதா,.

“ஒன்னும் இல்லைக்கா நீ எப்படி இருக்க?, பேபி எப்படி இருக்காங்க?” என்றான்,,

“நாங்க நல்லா  இருக்கோம்டா வா வந்து சாப்பிடு” என்க, குளித்து வந்து சாப்பிட்டான் பிரபு, தம்பிக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்திருந்தாள் சீதா,,.

மறுநாள் சீதாவை ஒரு பெரிய ஹாஸ்பெட்டலுக்கு செக்கப் அழைத்து சென்றான் பிரபு, சீதாவுக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுக்க பட்டன..

அவளின்   இரட்டை குழந்தைகள்  நன்றாக இருப்பதாக ரிப்போர்டு வர.

அக்காவுக்கும் தம்பிக்கு சந்தோஷம், குழந்தைகள் ஸ்கேன் போட்டோவை பார்க்க.. ஸ்கேனை  பார்த்து பிரபு, ஏதோ  சீதாவிடம் சொல்ல வர.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம், எனக்கு பிறக்க போகுறது, என் அம்மா, அப்பா அது தானே” என்றதும் பிரபுவின்  தலை “ஆமாம்” என்று ஆட..

தம்பியை தோள் அணைத்தவள், “இது போதுமட எனக்கு, இது போதும்” என்று சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது சீதாவிற்கு.

பிரபு மனதில் சீதாவின் வாழ்க்கையை கெடுத்தவனை, கொல்லும் ஆத்திரம் வர.

அவன் யார்ரென்று சொல்லாத தமக்கையிடம் என்ன கேட்பது..

சீதா தம்பியிடம் ஏற்கனவே சொல்லிவிட்டாள், அவள் கர்பமாக இருப்பதாக, இதற்கு யார் காரணம் என்று என்னிடம் கேட்க கூடாது, இது என் பிள்ளைகள், என்று…

அக்காவின் உணர்வுகளை புரிந்து கொண்டவன், அவள் வாழ்க்கை அவள் பார்த்துக்கொள்வாள் என்ற எண்ணம் தோன்ற, ஏனோ நான் நல்ல தம்பி இல்லையோ, அக்கா வாழ்வில் அப்படி என்ன நடந்தது, அவள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு யாரு காரணம், என்று தெரிந்து கொண்டு சீதா வாழ்க்கையை சரி பண்ண வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

பிரபுவுக்கு ஹைதெராபாத்திலிருந்து கால் வந்து கொண்டே இருக்க.

அவன் சீதாவிடம் “நாளைக்கு ஹைதெராபாத் போயிட்டு சைன் பண்ணிட்டு வந்து விடுவோமா” என்று கேட்க.

“சரிடா” என்றாள் சீதா.

பிரபு லாயரிடம், நாளை வருவதாக சொல்ல.

லாயர் ஹைதெராபாத்தில் உள்ள, ரெஜிஸ்டர் ஆபீஸ்சுக்கு காலையில் வருமாறு சொல்ல, சரி என்றவன்,.

சீதாவை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கே ஹைதெராபாத்திற்கு பிளைட்டில் வந்திருந்தான் பிரபு..

ஏர்போர்ட்டில் இருந்து ரெஜிஸ்டர் ஆபிஸ்  செல்ல 50 கிலோ மிட்டர் தூரம் இருக்க. இருவரும் வாடகை காரில் சரியாக பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தனர் ,..

இவர்களுக்காவே   காத்திருக்க லாயர் இவர்களை பார்த்து “வாங்க”என்றவர்.

“ஒரு அரைமணி நேரமாகும் வெய்ட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு செல்ல.

காரிலிருந்து  இறங்கிய சீதா “என்ன சொல்லுறாருடா லாயர்” என்றாள்..

“அரைமணி நேரமாகுமாம் கா” என்றான்.

“அப்படியா” என்றவள் சுற்றி பார்க்க, பசுமையான இடம் நிறைய ஆலமரங்கள் இருக்க. தூரத்தில் ஓய்வு அறை  இருப்பது தெரிந்தது

“நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்ரேன்” என்றவள், தனது  கை   பையை தம்பியிடம் கொடுத்து விட்டு சென்று வந்தவள்.

 ஒரு பெரிய ஆலமரத்தை சுற்றி வட்ட வடிவில் சிமெண்ட் திண்ணை போல அமைத்திருக்க, அங்கே சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டவள்.

தம்பியை அழைக்க. அவனோ வேகமாக வந்தவன், “பில்லோ கொண்டு வரட்டாக்கா, முதுகுல  பின்னாடி வச்சு சாஞ்சுக்கோ” என்றான்.

“வேண்டாம்  டா என் பேக் குடு” என்றவள்,, அதில் இருந்த பழசூஸ்சை எடுத்து  குடிக்க, “வேற ஏதாவது வேணுமா கா” என்றான் பிரபு..

“வேண்டாம்” என்றவள், சற்று வேடிக்கை பார்க்க..

ரெஜிஸ்டர் ஆபிஸ் கொஞ்சம்  கூட்டமாகவே இருந்தது,  பல கார்களும் வந்திருந்தது, அவளுக்கு பின்னாடி ஒரு பெண்மணி தோளில் ஒரு குழந்தையை வைத்து தட்டிகொடுப்பதை பார்த்திருந்தாள் சீதா..

அப்போது நன்றாக உற்று பார்த்தாள், அது குழந்தையில்லை ஒரு நான்கு இல்லை ஐந்து வயது பையன் என்று, அக்குழந்தையை  பார்க்க கொழு,  கொழுவென இருக்க.

அவனை தொட்டு தூக்கும் ஆவள்வர.

அந்த பையனை பார்த்து கையாட்டி  சிரித்தாள் சீதா.

அந்த பையனுக்கு உடம்பு சரியில்லை போல, முகமே சோர்வாக இருந்தது, தன் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு இவளை பார்த்து தன் அவ்வா பத்மாவதியை அழைத்து “ஈ அம்மாய்  நானா மூவியில பார்த்தேன்” என்று கூற.

அப்போது தான்  பத்மாவதி சீதாவை பார்த்தார்.

யார் என்று தெரியவில்லை, அவளை எங்கேயே  பார்த்தது போல தோன்ற..

அவளை பார்த்து சிரித்தார்.

கதிர் பத்மாவிடம்,  “வீ லன்னி நேனு மூவில்ல பார்த்தேன்”. என்றதும்..

“என்ன படம் டா”,,  என்று பேரனிடம் கேட்க.

சீதா முந்திக்கொண்டு “என்னை தெரியுமா உனக்கு” என்றாள் அவனின் கொழு, கொழு கன்னத்தை தொட்டு.

“ஓஓஓஓ, நேனு இந்திர சேனா படம் பார்த்தேன்” என்று கூற..

பத்மாவதி சீதாவை பார்த்து, “நடிகையாமா நீ” என்றதும்.

“ஆமாம் ஆண்ட்டி” என்றவள்..

“உங்க பேரனா” என்றாள் சீதா.

அவர் “ஆமாம்” என்றதும்..

“நான் இவனை தூக்கட்டுமா?” என்றாள்…

“வேண்டாம் மா அவனுக்கு பீவர், உனக்கும் வந்திட போகுது நீயே  கர்பவதியாக இருக்க, எத்தனை மாதம்” என்றார்.

“ஏழு மாதம் மா” என்று கூற.

“பிரபு வந்து அக்கா வா, ”  என்று அழைக்க.

“என் தம்பி ” என்று பத்மாவதியிடம் பிரபுவை  அறிமுகம் படுத்தியவள். கதிரிடம் பாய்டா கண்ணா என்றவள். பிரபு வாங்கி வந்திருந்த பாரின் சாக்லெட்டை ஒரு கவரில் எடுத்து வந்திருந்தவள். அதை பத்மாவிடம் தந்து “பீவர் குறைந்ததும் கொடுங்க” என்று சொல்ல..

அவளை பார்த்து சிரித்தவர், சீதா கொடுத்ததை  வாங்கிக்கொண்டார்…

அவர்கள் சென்றதும் வெங்கடரவி தேஸ்சா மனைவியை தேடிக்கொண்டு வந்தார்,..

“எங்கே இருக்க பத்மா டைமாச்சு வா” என்று..

லாயர் பிரபுவிடம் படித்து பார்த்து சைன் பண்ணுங்க என்று சொல்ல.

பிரபு  பத்திரத்தை படித்து கொண்டு இருந்தான்,.

“இது தான் உங்க தாய் மாமா” என்று   லாயர் வெங்கட ரவி தேஸ்சாவை காண்பித்து கூற..

சீதா நிமிர்ந்து பார்த்தால் தன் தாய் மாமனை, தன் தாய் சொல்லியது போலவே கம்பீரமாக கருப்பாக இருந்தார் மனிதர்,,

அவரின் பின்னாடி, அவள் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்த பெண்மணி வர.

இவளுக்கு ஐயோ ஏன் இவரிடம் பேசினோம் என்றிருந்தது..

பத்மாவுக்கு சந்தோஷம், தன் நாத்தனாரின்  பிள்ளைகளை பார்த்தது.

 லாயரிடம்  “வரலட்சுமி, அவர் கணவர் எங்கே, பிள்ளைகள் மட்டும் இருக்காங்க” என்று பத்மாவதி  மெதுவாக கேட்க..

“அவங்க ரெண்டு பேரும் இல்ல இறந்துட்டாங்க” என்றதும்.

“ஐயோ என்ன, சொல்லுறீங்க” என்றார் பத்மா?.

“ஏன் வெங்கட் சார் சொல்லலீயா” என்றார்.

“எனக்கு தெரியாதே என்றவருக்கு கண்கலங்கியது”..

கணவரை முறைத்து பார்த்தார்,..

“எல்லாரும் சைன் போட வாங்க” என்றதும் அனைவரும் பத்திரத்தில் கையெழுத்திட..

ரெஜிஸ்டர் பண்ணுபவர் “எங்கே உங்க ரெண்டு  பையன்களை  அவங்க சைன் பண்ணா தான், உங்க சொத்தை கோவிலுக்கு எழுதிகொடுக்க முடியும்” என்று  கூற. பெரிய பையன் வர மாட்டான், அவன் எழுதி சைன் பண்ண பத்திரம் இது, சின்ன பையன்  இதோ வந்துட்டே இருக்கான் பிளைட் லேட்”, என்று வெங்கடரவிதேஸ்சா கூறிக்கொண்டு இருக்கும் போதே,,.

ரவி ரெஜிஸ்டர் ஆபிஸ்சிக்குள் நுழைய….

அவனை பார்த்து சீதா அதிர்ச்சியாகி நின்றாள்..

லாயர் பிரபுவிடம்  ரவியை காண்பித்து “உங்க தாய் மாமாவின் ரெண்டாவது  பையன்  ரவி” என்று லாயர்  கூற…

சீதாவுக்கு என்ன இது? இவனா என் தாய் மாமன் மகன்?…  என்று அதிர்ச்சியாக நிற்க..

விதி அதன் விளையாட்டை  ஆரம்பித்திருந்தது,,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!