சீதாவிற்கு உள்ளே செல்ல பயமாக இருந்தாலும் சத்தம் அதிகமாக வர.. செல்லலாமா வேண்டாமா? என்று நினைக்க..
Advertisement
அவளுக்கு அவர்கள் குடும்ப விஷயம் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போல பேசட்டும் என்று தள்ளி நின்றவள்..
Advertisement
கதிர் அழுகும் சத்தம் மாதிரி கேட்க. அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பத்மாவதி ரூம் அருகே சென்றாள் …
தமிழிலும் தெலுங்கிலும் பேசி வெங்கட்டும் அவர் மூத்த மகனும் சேர்ந்து இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்..
சீதா கதிர் அழுகும் சத்தம் கேட்டு பத்மாவதின் அறையை எட்டிப் பார்க்க..
.
“எனக்கு பணம் வேணும் பெருமாள் கோயில் நிலத்தை வித்து எனக்கு தர்ரீங்கா” என்றான் வெங்கட்டின் மூத்த மகன் ரவிகிருஷ்ணன்..
“முடியாது” என்றார் வெங்கட்.
‘ஏன், உன் பையன் தானே நான், குடுக்கமுடியாதுன்ன என்ன, அர்த்தம், வேற ஏதாவது குடும்பத்தை வச்சு இருக்கீயா, அவங்களுக்கு அந்த பெருமாள் கோவில் இடத்தை கொடுக்க போறீயா” என்று மகன் பேசியதும்,.
கொதித்து எழுந்த வெங்கட் “உனக்கு பணம் வேணுமுன்னு என்ன வேணா பேசுவீயா” என்று மகனின் சட்டையை பிடித்தவர்.
“பெருமாள் கோவில் பக்கத்தில் இருக்குற 40 ஏக்கர் காடு எங்க அப்பா சம்பாரிச்சு வாங்கிய சொத்து, அந்த பெருமாள் கோவில் நம்ம குலதெய்வம் மாதிரி, அத விக்க சொல்றீயா, ” என்றார்.
“பிள்ளைக்காக விக்காம, நீ என்ன செய்ய போற காட.. அது தான் உனக்கு 60 வயசு மேல ஆச்சுல, எல்லாம் சொத்தையும் வித்துட்டு, கோவில், கோவிலா போக வேண்டியது தானே”.
“எல்லாத்தையும் வித்துட்டு தெருவுல நிக்க சொல்லுறீயா”? என்றார் பெரிய மகனிடம்.
“பிள்ளைகளை விட உனக்கு என்ன சொத்து வேண்டியது கெடக்கு”?..
என்றான் ரவிகிருஷ்ணா……
“உனக்கு சேர வேண்டியா எல்லா சொத்தையும் உன் பேருக்கு எழுதி கொடுத்தாச்சு, இது சின்னவன் ரவிதேஸ்சா பங்கு, உனக்கு கொடுக்க முடியாது, உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்கோ” என்றார் வெங்கட்.
“அவனுக்கு எதுக்கு சொத்து, அவன் மாதம், மாதம் ஒரு பிஸ்னஸ் பண்ணுறான், சிப் வாங்கியிருக்கான், அவனுக்கெல்லாம் சொத்து கொடுக்க முடியாது, எனக்கு எல்லாம் சொத்தையும் வித்து காசு குடு” என்றான்.
“அது நான் சாகுற வறைக்கும் நடக்காது” என்றார் வெங்கட்.
“அப்போ முதல்ல நீ சாவு, 60 வயசு நீ வாழ்ந்தது போது, நீ செத்துரு, உன் சொத்தையெல்லாம் நான் வித்துக்கிறேன்” என்றதும்.
வெங்கட்டுக்கு உடல் நடுங்கியது, தன் மகனே தன்னை பணத்துக்கா சாக சொல்கிறானே என்று..
“டேய் என்ன வார்த்தை சொன்ன டா” என்று பத்மாவதி ரவிகிருஷ்ணாவை அடிக்க வர…
, “முதலில் உங்களை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகனும், அப்போ தான் இவர் கொலுப்பும், இவர் அம்மா நாகம்மாள் கொலுப்பும் அடங்கும், 90 வயசு கிளவியை திண்ணையில் உட்கார வைத்து சோரு போட்டுகிட்டு இருக்காரு, அந்த கிளவியை ஒரு விச ஊசி போட்டு கொல்ல வேண்டியது தானே.. யாரோ ஒருத்தியை மடியில போட்டு கொஞ்சிட்டு இருக்கு, நாளைக்கு அவ வந்து சொத்து கேட்ட நான் எங்கே போறது”என்றதும்.
“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் மிஸ்டர்” என்றாள் சீதா.
“ஏய் நீ யாருடி எங்க நடுவுல வந்து பேசுறதுக்கு. எங்க அம்மா, அப்பா ரூம்புக்குள்ள வர்ர தைரியம் உனக்கு வந்துருச்சா”?.
“அவ கேட்பா, அவ என் தங்கை வரலட்சுமி பொண்ணு, அவளுக்கு கேட்க உரிமை இருக்கு அவளுக்கு சேர வேண்டிய 25 பர்சென்ட் சொத்த நான் அவளுக்கும், அவ தம்பிக்கும் எழுதி குடுப்பேன் டா” என்று வெங்கட் சொன்னதும்.
“கண்ட, கண்ட அனாதைக்களுக்கு சொத்து எழுதி வைப்பா, பெத்த பிள்ளைக்கு எழுதி வைக்க மாட்டா”? என்றான் ரவி கிருஷ்னண்..
பத்மாவதி கிருஷ்ணாவை பார்த்து “வெளியே போடா, வெளியே போ, நீ என் பிள்ளையே இல்ல என்று கத்த”.. கதிர் மெல்ல அழுதவன் பத்மாவதி கத்தவும், சத்தமாக அழ.
உங்க மகன் அவன் அப்பன் செத்துட்டான், அவ அம்மா இன்னொருத்தன் கூட போயிட்டான்னு இங்கே கொண்டு வந்து இவனை கொடுத்தா, நீங்க சொந்த பேரன் மாதிரி கொஞ்சிட்டு வளர்க்குறீங்க, உங்க பேரன், பேத்தி கேரளாவுல இருக்காங்க, உண்மையான பேரபிள்ளைகளை விட்டுட்டு இப்படி அனாத பையனை தூக்கி வளர்த்தா என்ன அர்த்தம்?” என்றான்.
“நீ உன் பிள்ளைகளை எங்க கண்ணுல காட்டுலன்னு அர்த்தம்” என்றார் பத்மாவதி,
” நீங்க வந்து உங்க பேர பிள்ளைகளை பார்க்க வேண்டியது தானே,”.
“எதுக்கு டா பார்க்கனும், நீ எங்கள உன் வீட்டுக்கு கூப்டீயா, பிறந்தப்போ நாங்க வந்து உன் பிள்ளைகளை பார்த்ததோடு சரி, உன் இரண்டு பிள்ளைக்கா பேரு கூட எங்களுக்கு தெரியாது,, உன் பிள்ளைகளுக்கு பிறந்த முடி நம்ம குலதெய்வத்துக்கு தான் கொடுக்கனும், நீ அத செஞ்சீயா, உன் பொண்டாட்டி பேச்சு கேட்டு அவ சொன்ன கோவில்ல போயி மொட்டை போட்டு வந்த, நாங்க ஏதாவது கேட்டோமோ.. நீ நல்லா இருந்த போதும் அப்டியின்னு தானே நெனச்சோம்.இப்பா வந்து பாசம் காட்டுன எப்படி காட்ட முடியும்”?..,
“நீங்க இந்த அனாத பையல தூக்கி வளருங்க, வேற யாரவேனாலும் கூட்டிட்டு வந்து சோறு போடுங்க, எனக்கு பணம் வேணும், அதுக்கு அந்த பெருமாள் கோவில் பக்கத்துல இருக்குற காடை வித்து கொடுங்க, இல்ல, இந்த வீட்ட வித்து கொடுங்க, நமக்கு ஊருக்குள்ள ஒரு சின்ன வீடு இருக்குல, அங்கே போய் நீங்க தங்கிக்கோங்க.” என்றான் கிருஷ்னண்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்டடா, இந்த வீட நான் சின்னவன் ரவி பேர்ல எழுதி வச்சுட்டேன்,,…என்றதும்.
“யார கேட்டு அவனுக்கு வீட்ட எழுதி கொடுத்தீங்க,”..
யார கேட்கனும் நீ படம் எடுக்குறேன்னு சொல்லி என்னிகிட்ட இருக்குற காசையெல்லாம் தொலச்ச, சரி நம்ம பையன் நேரம் சரியில்ல அடுத்த படம் சரியாக ஓடுமுன்னு நெனச்சேன், நீ அடுத்த எடுத்த இரண்டு படமுமே ஓடல.
காசெல்லாத்தையும் லாஸ் பண்ண, அப்பறம் பிஷ்னஸ் பண்ண போறாத சொல்லி எத்தன லட்சம், வாங்கிட்டு போனா, அதுவும் நஷ்டம், அப்பறம் ஒரு மலையாளி நடிகையை லவ் பண்ணுறேன்னு சொன்ன, சரியின்னு அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம், அங்கேயே வீடு, இடமெல்லாம் வாங்கி கொடுத்தாச்சு, உன் வாழ்க்கையை நீ பாத்துக்க வேண்டியது தானே, என் மாமியார் வீட்டுல என்னை மதிக்கலன்னு சொன்ன,..உன் பங்கு சொத்தை எல்லாம் வித்து கொடுத்தேன், அதையும் தொலச்சுட்டு, மறுபடியும் வந்து பணம் கேட்ட,.. இப்பா இருக்குறது சொத்து எல்லாம் உன் தம்பிக்கு சேர வேண்டியது, அப்புறம் என் தங்கச்சி பிள்ளைகளுக்கும் நான் சொத்து தர போறேன்” என்றார்.
“என்ன தங்கச்சி பிள்ளைகளா? எது 25 வருஷத்துக்கு முன்னாடி ஓடி போன, உன் தங்கச்சி பிள்ளைகளுக்கு சொத்தா?, அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன், கோர்ட்ல கேசு போடுவேன்,”.
“நீ என்ன வேணா பண்ணு, இனி உன்ன நம்பி ஒரு பைசா பணம் தரமாட்டேன்”என்று வெங்கட் சொன்னதும்..
தந்தையின் சட்டையை பிடித்தவன்.
“கண்ட, கண்டவங்களுக்கு சொத்த எழுதி வைப்பா, பெத்த பிள்ளைக்கு சொத்து தர மாட்ட” என்றதும், சீதாவும், பத்மாவும் கிருஷ்ணனை, வெங்கட்டிடமிருந்து பிரிக்க..
அவன் தந்தையின் சட்டையை உடும்பிடியாக பிடித்தவன் இவர்களை தள்ளி விட்டு, மரியாதை இல்லாமல் பேசி அவரை கீழே தள்ளி விட.
பத்மாவதி மகன் புருஷனை கீழே தள்ளியதும், அவனை முதுகில் அடித்தவர், “நாங்க செத்த கூட நீ வரதா போ, வீட்ட விட்டு போ” என்று அவனை அடிக்க, சீதாவுக்கு கிருஷ்ணன் அவளை தள்ளிவிட்டதும் கீழே விழுந்தவள் எழமுடியாமல் எழுந்து நிற்க…
“நீங்களா சாவீங்க, எனக்கு காசு குடுக்காம சாகடிக்குறீங்க” என்றான்,,.