“இப்போ இந்த பதிலை பாசிட்டிவ்வா எடுத்துக்கறதா? இல்லை நெகட்டிவ்வா எடுத்துகிறதா?” அவளது பதிலில் இவன் மீண்டும் கேள்வி எழுப்பிட
“உங்களுக்கு எது வசதியோ அப்படி எடுத்துக்கோங்க”
“ஓ.. அப்போ என இஷ்டபடி எடுத்துக்கலாம்” தனக்கு தானே சொன்னானோ இல்லை, அவளிடம் வம்பு வளர்த்தானோ.. “நேரம் வரும் போது நிச்சயமா என் இஷ்டபடி எடுத்துப்பேன்” இவளது பதிலை எப்படி திரித்திட முடியுமோ அப்படி திரித்து பேசினான் கிரி.
Advertisement
“ஹா.. இதெல்லாம் போங்காட்டம்..நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க” இவள் பதற
“ஆட்டம் முடிஞ்ச முடிஞ்ச பிறகு தான் முடிவு சொல்லனும். ஆடவே ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள போங்காட்டாமா!” இவன் அப்போதும் விடாமல் பதில் சொல்லி கொண்டிருக்க
“கிரி.. ப்ளீஸ்.. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை” பின் வாங்கினாள் கமலி.
அவனையோ, அவன் விழிகளையோ எதிர்கொள்ளவே முடியவில்லை இவளால். “ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்கனும் கிரி. ஆனால் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முடியுதா? அப்படியா கேட்குறீங்க”
“ஓகே.. பேசலை” சொல்லிவிட்டு இவளை பார்த்தபடியே இவன் பிடறியை வருடிக்கொள்ள,
“பார்க்குறதும் சரியில்லை” இவன் பார்வையை கண்டு, இவள் அவனை மிரட்டிட, “பார்க்கவும் கூடாதா? சரி பார்க்கலை” என பார்வையை திருப்பிட
Advertisement
அந்நேரம் சரியாய் இருவருக்குமான ஜூஸ் வந்து சேர, அதில் கவனமெடுத்தனர் இருவரும்.
பிரபல டிரெண்டிங் பிஜிஎம்மோடு அவள் போன் அடித்தது. கிரியிடமிருந்து கவனத்தை பிரித்து போனை பார்க்க தெரியாத எண்ணில் இருந்து வந்தது அழைப்பு. யாராக இருக்கும் என யோசிக்கையிலேயே “அட்டெண்ட் பண்ணு இல்லை கட் பண்ணு.. பார்த்துட்டு இருந்தா தன்னால பேசுமா” என்ற கிரியின் குரலில், இவள் போனை அட்டெண்ட் செய்து காதுக்கு கொடுத்தாள்.
கிரியோ அவளையே பார்த்தபடி ‘இதுக்கு முன்னாடி இவ வேற ஒரு பாட்டை ரிங் டோனா வச்சிருந்தா.. இப்போ என்ன மாத்திட்டா’ என யோசித்து கொண்டிருந்தான்.
“கமலியாமா” அந்த பக்கம் கனீரென்ற குரலில் இவள் “ஆமா, நீங்க? யாரு?”
“ஏம்மா, அவன்கிட்ட பேசனும்னா நான் அவனுக்கே போன் அடிச்சிருப்பேன், எதுக்கு உன்னோட போன் நம்பருக்கு அடிக்க போறேன். நீ இவ்வளவு வெள்ளந்தியா இருக்காதம்மா. அதான் அவன் உன்னைய ஏமாத்திட்டு திரியுறான்” ஏக கடுப்பில் பேசினான் துரை.
அதற்குள் ‘போன்ல யாரு?’ என செய்கையாலேயே கேட்டான் கிரி. ‘பேசிட்டு வரேன்’ என இவளும் செய்கையிலேயே இவளும் சொல்ல.. ‘ஓகே’ என்ற உடல் மொழியை காட்டி, ஜூஸில் கவனமானான் கிரி.
“ஏன்.. என்னாச்சு” தலை முடி காற்றிலாட குனிந்து ஜூஸ் குடித்து கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்து இவள் பேச,
“இன்னோரு பொம்பளை கூட சவகாசம் வச்சிருக்கான்மா” என பட்டென துரை கூற
“என்ன..!” இவள் சத்தமாகவே கேட்டுவிட, திடுக்கிட்டு இவனுமே அவளை பார்த்து “என்ன? யாரு போன்ல..” கிரியுமே சத்தமாய் கேட்டிட, இவளோ யோசனையாய் இவனை பார்த்து வைத்தான்.
“ம்மா.. நீ் நம்பலைன்னாலும் அது தான் நிஜம், இரண்டு பேரையும் நான் நேரிலேயே பார்த்தேன். போன்ல போட்டோ கூட எடுத்து வச்சிருக்கேன். கிரி இதெல்லாம் ஆகாத வேலைன்னு அவன் கிட்டேயே சத்தம் போட்டேன். அவன் கேட்குற மாதிரி தெரிலை” என, மனப்பாடம் செய்த வசனமாய் பேசிக்கொண்டிருக்க
“கிரி அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டார்” என இவள் அசால்ட்டாய் கூற, அந்த பக்கம் துரை ஷாக் ஆக, இந்த பக்கம் கிரி குடித்து கொண்டிருந்த ஜூஸ் புரையேறியது.
ஆனால் விடாத துரையோ “நம்ப மாட்டீங்களே… தப்பை கண்டு புடிச்சு சொன்னா கூட நம்ப மாட்டீங்களே!” என சலித்து கொண்டவன் “நான் சொல்றதை சொல்லிட்டேன், இனி உம்பாடு.. அவன் எங்க போறான், எங்க வரான்னு கொஞ்சம் கவனிம்மா.. இல்லை இவன் ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செஞ்சு வச்சிட போறான். அந்த பொண்ணு வேற அம்புட்டு அழகா இருந்துச்சு, பார்த்துக்கோ” என விடாது துரை பேசவும்.
“இது மட்டும் தானா.. இல்லை வேற எதுவும் இருக்கா?” என கமலி நக்கலாய் கேட்டிட
‘ஆத்தி, விட்டா இவ கிரிக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வச்சிடுவா போல’ என நினைத்து “வேற ஒன்னுமே இல்லைமா” என வைத்துவிட்டான் துரை. அதற்காகவே காத்திருந்ததை போல
“எதுக்குடி சரிபட்டு வரமாட்டேன்” இவளது பேச்சை கேட்டு காண்டானான் கிரி.
ஆனால் முதலில் இருந்த கமலியின் சாந்தமான முகம், இப்போது உக்கிரமாய் மாறியதில் “என்ன.. யாரு போனில்?” என இவன் அருகில் வர
“ஏதோ பொம்பள சவகாசமாமே.. யாரது?” என்றாள் கமலி.
“பொம்பளை சவகாசமா..?” அதிர்ச்சியானவன்..
“எம் பொம்மாணாட்டி சவசகாசமே எனக்கு கானல் நீரா இருக்கு! இதில் வேற ஒருத்தி வேறையா!” நக்கல் தெறித்தது இவன் குரலில்.
“வாய மூடுங்க” அடிக்குரலில் இவள் மிரட்ட
“என்னடி, கொஞ்சம் விட்டா ஓவர போற என்னையே மிரட்டுற, அடிக்கிற டீசர்ட்டை கிழிக்கிற!” என
“என் புருஷன், அப்படி தான் பண்ணுவேன்!” இவள் உரிமை பேச
“ஹ.. இந்த உரிமையை எல்லாத்திலேயும் கொடுக்கனும் தானே! வஞ்சகம் பண்றடி…. எனக்கு!” என்றான் இவன்.
இப்போது இவனுக்கு முழுதாய் புரிந்திட வாய் விட்டு சிரித்தவன் “யாரு அந்த துரை சொன்னானா!”
இவன் சிரிப்பை கண்டு மேலும் உக்கிரமானவள் “அப்போ.. பொம்பளை சவகாசம் உண்மை தானா! எவ அவ..!” என
“அந்த அவ, நீ தான்!” இவன் இன்னுமே சிரித்திட
“கிரி விளையாடாதீங்க” என இவள் சீரியஸாக கேட்க.
“என்னை பத்தி இவ்வளவு கம்ளைண்ட் பண்ணினவன், எவிடன்ஸையும் உனக்கு அனுப்பி இருப்பான் பாரு” என போனை கண்களால் காட்ட, இவளும் வேகமாய் வாட்ஸ் ஆப் பார்க்க, போட்டோ ஒன்றை அனுப்பி இருந்தான் துரை.
அது மெல்ல மெல்ல டவுன்லோட் ஆக, போட்டோவை பார்த்தவள் அதிர்ந்தாள், அதில் கமலி அவனை விரல் நீட்டி மிரட்டி கொண்டிருப்பது போலவும், வாயில் விரல் வைத்தபடி அடக்கப்பட்ட சிரிப்போடு கிரி நிற்பதையும் அத்தனை அழகாய் புகைபடமாய் எடுத்து அனுப்பி இருந்தான் துரை.
இது எப்போ எடுத்தது விழி விரித்து பார்க்கையிலேயே, ‘இது அவனது சூப்பர் மார்க்கெட்டிற்கு’ முதல் முறை சென்ற போது நடந்த வாக்கு வாதத்தில் எடுக்கப்பட்டது போல இருக்க, அதை பார்த்து கொண்டிருந்தாள் கமலி.
எதிரில் அமர்ந்திருந்த கிரி, இப்போது இவளருகில் எழுந்து வந்து அமர்ந்தான். அவளது போனை தன் கைக்கு மாற்றி கொள்ள, அந்த புகைபடத்தை கண்டு இவனுக்குமே வாய் கொள்ளா சிரிப்பு தான். அந்த போட்டோவும் அதில் இருந்த இருவரின் முகமும் அவன் மனதை அழகாய் கவர்ந்திழுத்தது.
‘நேத்திலிருந்து கேட்குறேன்.. போட்டோவை அனுப்பி வைடான்னு, எரும எனக்கு அனுப்பாமல் உனக்கு அனுப்பி இருக்கான் பாரு.. இதில் பொம்பளை சவகாசம்னு போட்டு வேற குடுக்குறான்.. மவனே.. இரு வந்து வச்சுகிறேன்’ துரை எதிரில் இருப்பது போல் இவன் பேசக்கொள்ள, இவள் தான் விழித்து கொண்டிருந்தாள்.
அதை தன் போனுக்கு மாற்றுவதற்காக “என் பேரை என்னனு சேவ் பண்ணிருக்க” என இவன் கேட்க, இவளோ சொல்ல மாட்டேன் என அமர்ந்திருக்க,
அவளின் வீம்பை சிரிப்போடு பார்த்தபடி, நம்பரை போட்டு இவனே தேடினான் வெகு ஆர்வத்தோடு.
கிடைத்த பெயரோ ‘Mr.World’ என காட்டியது. போனையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்தவன் “என்னடி பேர் இது.. மிஸ் வேர்ல்டு மிஸ்டர் வேர்ல்டுனு.. இப்படி சேவ் பண்ணி வச்சிருக்க” இவன் இமை சுருக்கி கேட்க
“ஆமா.. எப்போவுமே நீங்க தான் உலக அழகன் ரேஞ்சுக்கு பில்டப் குடுப்பீங்களே!” சொல்ல,
“அப்படின்னா நான் அழகா இல்லைனு சொல்றியா! நீயே என்னை எத்தனை முறை விடாமல் சைட் அடிச்சிருக்க” இவன் கேட்டதற்கு.