Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 29 2

“ப்ச்… நம்ப கல்யாணத்தன்னைக்கு தான்டி உன்னை பார்த்தான். அப்புறம் நம்ப கடையில் வச்சு தான் பார்த்திருக்கிறான். இரண்டுக்கும் தான் நூறு வித்யாசம் இருக்கே! நீ வெயிட்லாஸ் பண்ணினது அவனுக்கு தெரியலை. நீ தான் கமலின்னும் அவனுக்கு தெரியலை? கமலி இருக்கும் போது இதென்னடா இன்னோரு பொண்ணோட சவகாசம்னு என்னையும் திட்டிட்டு தான் போனான். அதுக்கு நான் என்ன பண்ண?” இவன் விளக்கம் கொடுக்க

“ஏன் நீங்க, ராம் மாமா, உங்க சித்தப்பா, சித்தப்பா குடும்பம் எல்லாருமே, முதலில் பார்க்கும் போதே கமலின்னு கண்டுபிடுச்சீங்க தானே. அப்படீன்னா உங்க ப்ரண்ட்டு மட்டும் எப்படி கண்டுபிடிக்காமல் போனாங்க?” இவள் சரியாய் கேட்டிட

“அது..” என ஏதோ சொல்ல வந்து “நாங்களும் அவனும் ஒன்னாடி.. இதெல்லாம் ஒரு கேள்வின்னு.. கேட்டுட்டு இருக்க!” என்றான் கிரி.



Advertisement

அவனையே கவனித்தவள் “இல்லை நீங்க ஏதோ மறைக்கிறீங்க..” என அலர்ட் ஆக

அலர்ட் ஆக விடாத இவனோ “நீயும் தான் எங்கிட்ட இருந்து மறைச்சு வச்சிட்டு இருக்க!” அவளை ஒரு பார்வை பார்த்து வைக்க.

அவனின் பார்வை மற்றும் வார்த்தைகளின் கோர்வை அறிந்தவளோ  “கிரி!”  என அதிர

Advertisement

அவளையே விடாது பார்த்து வைத்தவன், “இப்போ உங்க வீட்டுக்கு போகனுமா.. இல்லை நம்ப வீட்டுக்கு போகனுமா. நீயே முடிவு பண்ணிக்கோ” என கூறி

Advertisement

 “நீ இப்படியே ஷாக் ஆகிட்டே இருந்தன்னு வை.. நிச்சயம் நம்ப வீட்டுக்கு தான் உன்னை இழுத்துட்டு போவேன்” என உறுதியாய் கூறிட, இவளிடமோ பேரமைதி.

அதன் பின் இவள் ஜூஸில் கவனமெடுக்க, குடித்து முடித்து பில்லை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினர்.

“ஏதாவது பேசுடி.. இவ்வளவு அமைதியா வர்ற!” பைக்கில் செல்கையிலேயே இவளிடம் கேட்டான் கிரி.

Advertisement

“கேட்டா அப்படியே ஒழுங்கா பதில், சொல்லற மாதிரி தான். நான் ஒன்னு கேட்டா, நீங்க ஒன்னு சொல்றது”

“என்னடி பேசுறதுக்கே கோப படுற, இன்னும் செயல்னு ஒன்னு இருக்கே..” என நிறுத்தி “பர்ஸ்ட்நைட் நடக்கும் போது என்ன பாடு படுத்த போறியோ என்னை!” இவன் சொல்ல

“ஹ.. படுத்துவேன். முடிஞ்சா சமாளிங்க.. இல்லை” இவள் முடிக்காமல் விட

“இல்லைன்னா” என இவன் எடுத்து கொடுக்க

“வழக்கம் போல தூங்கிடுங்க” பட்டென இவள் சொன்ன நொடி, சடன் பிரேக் அடித்து நிறுத்தி இருந்தான் வண்டியை, பேலன்ஸ் பண்ண முடியாது இவன் முதுகிலேயே வந்து விழுந்தாள் கமலி.

அதீத கோபத்தோடு இவளை திரும்பி பார்க்க “வாய் விடாத கமலி” என்றவன் “அன்னைக்கு நீ எவ்ளோ பீல் பண்ணிருப்பன்றத, நீ வாய் திறந்து சொல்லையே தவிர, சுவரோட சுவரோட சாய்ஞ்சு  உக்கார்ந்த மாதிரியே தூங்கின உன்னோட நிலையே சொல்லிடுச்சு. விடாமல் என்னையே சுத்திட்டு இருக்கும் உன் கண்ணு சொல்லிடுச்சு. அதையே தாங்க முடியாமல் தான் பாரினுக்கே ஓடிட்டேன். இப்போ உன் வாயல வேற சொல்லி காட்டாத கமலி. எங்கெங்கேயோ வலிக்குது” வலி நிறைந்த இவனது பேச்சில், பைக்கை விட்டு கீழிறங்கி “வேணும்னு சொல்லலை கிரி” இவள் தயங்க

“தெரியும்.. நீ பட்ட வலி உன்னை பேச வைக்குது. எப்படி இதெல்லாம் சரி பண்ண போறேன்னு தெரியலை கமலி..” திணறி நின்றான் கிரி.

“சாரி.. கிரி.. இனி இப்படி பேசாமல் இருக்க டிரை பண்றேன்” திக்கி திணறி இவள் பேச, ஹேண்ட்பரில் இருந்து விலகிய கை, இவளை இழுத்து தன் பக்கமாய் நிறுத்தியது.

என்ன கோபமென்றலும், என்ன பிரச்சனையென்றாலும் தன்னிடமே வந்து நிற்கும் கமலியை ஆழ்ந்து பார்த்து “நீ எதுக்குடி சாரி கேட்குற” என, இருவரிடமும் பெருத்த அமைதி..,

சில நிமிடங்கள் அப்படியே கடக்க, நிற்பது நடு ரோட்டில் என உணர்ந்து, அவளை விலக்கி விட்டான்.

“உட்காரு கமலி, போகலாம்” என நிலைமையை சீராக்க முடியாமல், அவளை மீண்டும் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவள் வீட்டிற்கு விரைந்தான்.

இவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு, இவனும் “கடைக்கு கிளம்புறேன் கமலி.. வேலை நிறைய இருக்கும் ஃப்ரியானால் நானே கால் பண்றேன்” என அவளிடம் விடை பெற்று இவன் கடைக்கு வந்து சேர்ந்தான்.

*********

கமலிக்கு சொல்லாமல் போன ஒரே குற்றத்திற்காக, கிரி இங்கே வரவே இல்லையே என்ற ஆதங்கம் என வசந்தாவும் ராஜியும் சற்று அதிகமாகவே பேச வைத்து விட்டது.

கிரியின் மாற்றத்திற்கு கமலி தான் காரணம், அவளால் தான் இவன் தங்களை ஒதுக்குகிறான், இனி கிரியிடமும், கமலியிடமும் பார்த்து பழக வேண்டும், கமலி வீட்டு விசேஷத்திற்கோ, கடை திறப்பிற்கோ  போக கூடாது, வரகூடாது, அப்படி இப்படி என அத்தனை வாக்குவாதங்கள் செய்து கொண்டிருந்தனர் அம்மாவும் மகளும்

அவர்களிடம் ஒரு பார்வை வைத்திருந்த செந்திலோ, ஒரு கட்டத்தில் இவர்களது பேச்சை சகித்து கொள்ள முடியாமல் “நீ பண்றது சரியில்லை ராஜி”  குரலுயர்த்தினான் செந்தில்.

திடீரென்ற கணவனின் பேச்சில் “வேண்டாம் இதில் நீங்க தலையிடாதீங்க. இப்போ தான் நம்ப பிரச்சனை ஓய்ஞ்சிருக்கு” எச்சரித்தாள் ராஜி.

“அதுக்காக, ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு, நீ பண்றதையெல்லாம் சரினு எடுத்துக்க முடியாது ராஜி. கூடப்பொறந்தவன்னு கூட பார்க்காமல்  இந்த பேச்சு பேசுற, உன்னை மாதிரி அந்த கமலியும் வாழ வந்தவ தானே, அவளையும் விட்டு வைக்காமல் பேசுற!” என்றான் செந்தில்.

“ஓ, கட்டின பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணாமல் இதென்ன, கண்டவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றீங்க.. இவ்வளவு நேரம் கிரி பேசினதை நீங்களும் கேட்டீங்க தானே! என் தம்பிகிட்ட கத்துகோங்க பொண்டாட்டிக்கு எப்படி மரியாதை கொடுக்கனும்னு” எரிந்து விழுந்தாள் ராஜி.

“ஏன் உனக்கு மரியாதை குடுக்குறதில் நான் என்ன குறைஞ்சு போயிட்டேன்” செந்திலும் மல்லுக்கு நின்றான்.

“கமலியை அழைக்கலையாம், அவளை அழைக்காமல் நானும் வரமாட்டேனு இருந்துட்டான். ஆனால் நீங்க.. நாளைக்கு நடக்க போற கமலி வீட்டு பங்க்ஷனுக்கு போகனும்னு தவ்விகிட்டு நிக்கிறீங்க” இவள் பேசி முடிக்கும் முன்பே

அதுவரை அமைதியாய் பார்த்து கொண்டிருந்த வசந்தா “செந்திலு, இதென்ன புது பழக்கம். அவ வீட்டுக்கு நீங்க எதுக்கு போகனும். உங்களை அழைக்காத வீட்டுக்கு நீங்க எதுக்கு போகனும்!” என கேட்க

“என்னை அழைக்கலைன்னு உங்ககிட்ட யார் சொன்னா? கர்ணா  நேரில் வந்து அழைச்சாப்ல.. கண்டிப்பா குடும்பத்தோட வரனும்னு சொல்லிட்டு தான் போனாப்ல” வெடியை கொழுத்தி போட்டான் செந்தில்.

‘இது எப்போ..’ என  வசந்தா, ராஜி இருவருமே ஒன்றாய்  செந்திலை பார்த்து வைக்க,

“சும்மா சமாளிக்காதீங்க மாப்பிள்ளை.. இப்படிலாம் பேச சொல்லி கிரி சொன்னானா?” என வசந்தா பேச

“நீங்கலாம் அவனுக்கு அம்மாவானு எனக்கே சந்தேகமா இருக்கு” வசந்தாவை நோக்கி தீப்பார்வை பார்த்து வைத்தவன், ராஜி பக்கம் திரும்பி

“எனக்கு என் மச்சினன் குடும்பம் மரியாதை குடுத்து கூப்டிருக்காங்க. நீ வரலைன்னு நானும் அதை தவிர்த்தால் அசிங்கம் இரண்டு பேருக்கும் தான்” என

“புதுசா இருக்கு செந்தில் நீங்க பண்றது!” முறைத்தாள் ராஜி

“நீங்க பண்றதை விட ரொம்ப புதுலாம் இல்லை. இப்போ கூட வீடு நிறைய பொருளை அனுப்பி விட்ருக்கான் கிரி, அவன் பணம் வேணும், பொருள் வேணும், ஆனால் அவன் வேண்டாம்.. அப்படி தானே!” இவன் கேட்க

வார்த்தையில்லை அம்மா மகள் இருவருக்கும்.

“நாளைக்கு என்னையும் நீ பணம் சாம்பாதிச்சு போடுற மிஷினா பார்க்க மாட்டன்னு என்ன நிச்சயம்?” என ராஜியிடம் செந்தில் கேட்டதில்

“என்ன செந்திலு, நீ பெரிய ஒழுக்க சீலன் மாதிரி பேசுற, ஒரு நாள் ராஜியையும் குழந்தைகளையும் ராத்திரினு கூட பார்க்காமல் அடிச்சு பத்திவிட்டவன் தானே நீ” வசந்தா குரலுயர்த்திட

“ஒழுக்க சீலன் இல்லை தான்..  ஆனால் இனியாவது இருக்கனும்ல. ஒழுக்கமா நான் இருந்தா தான் என் பிள்ளைகளும் ஒழுக்கமா வளர்வாங்க” எதார்த்தத்தை இவன் பேச ஏற்க முடியவில்லை இவர்களால்.

“நீ உங்கம்மாவை பார்த்து வளர்ந்த மாதிரி தான் நாளைக்கு நம்ப பிள்ளைகளும் உன்னை பார்த்து வளருங்க. பணம் மட்டுமே பிரதானம்னு உன்னை மாதிரியே நம்ப பிள்ளைகள் வளருறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். நாலு நல்லவங்க மத்தியில் எம்பிள்ளைகளும் வளரனுமில்ல” முடிவாக செந்தில் பேச

“இப்போ என்ன நான் தான் சரியில்லைனு சொல்றீங்களா!”  ராஜிக்கு குரல் கமறியது.

“தனியா நீயே யோசிச்சு பாரு ராஜி. பேசிக்கா நீ நல்லவ தான். இல்லைன்னா நான் உன்னை காதலிச்சிருக்கவும் மாட்டேன், கல்யாணமும் பண்ணி இருந்திருக்க மாட்டேன். தேவையில்லாமல் உங்கிட்ட பொறாமையை தூண்டிவிட்டது எங்கம்மா. இருக்குறதை வச்சு சிறப்பா வாழலாம்னு சொல்லி குடுக்காமல் ஊதாரிதனமா மாத்தினது உங்கம்மா.

நான் எங்கம்மா கிட்ட இருந்து விடுதலை வாங்கி குடுத்திட்டேன்” இன்னும் ஏதோ சொல்ல வந்தவன், வசந்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இனி நீ தான் திருந்தனும்” சொல்ல

புரிந்து போனது வசந்தாவிற்கு “நான் இங்க இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க மாப்பிள்ளை.. நான் கிளம்பிடுறேன். சும்மா சும்மா என் மேல பழி போடாதீங்க” முகத்தை கடுகடுவென வைத்து கொண்டு, வராண்டாவில் சென்று அமர்ந்து கொண்டார் வசந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!