நமட்டு சிரிப்போடு “ம்.. என் டீசர்ட் வச்சு நீ என்னடி பண்ற? கேட்டாலும் சொல்லி தொலைக்க மாட்டற..! அந்த டீசர்ட்டை கிழிச்சிட்ட.. இப்ப இதை எரிக்க போறியா!” இவன் நக்கலடிக்க
பதில் சொல்லாமல் இவள் முறைக்க
“டீசர்ட் எடுத்தது எனக்கு, உனக்கில்லை” என இவன் இன்னுமே பேச
“நீங்களோ எனக்கு தான் நியாபகம் வச்சுக்கோங்க!” இவள் பட்டென பேசிட
Advertisement
இவன் பார்வையோ வேறு மாதிரி மாறிப்போக, “தைரியம் இருந்தா நேரில் வந்து இதை சொல்லுடி.. பார்ப்போம்”
“சொல்லிட்டா..”
“நீ தான் என்னை எடுத்துக்கனும், நீயா என்னை எடுத்துகிற வரை உன்னை விடவும் மாட்டேன். தைரியம் இருந்தா இதை நேரில் வந்து சொல்லு பார்ப்போம்” இவன் சவால் விட அதன் வீரியம் தாங்க முடியாமல் இவள் தான் பார்வை திருப்பும் படி ஆனது.
Advertisement
அந்நேரம் அறையை திறந்து கொண்டு வந்தார் மீனாட்சி.
Advertisement
“ஏமா.. கமலி இங்கனயே செத்த தூங்கிக்கிறோம், மண்டபத்துக்கும் வீட்டுக்கும்லா அலைய முடியாது” மீனாட்சி பாட்டியோடு ஒரு நால்வர் சேர்ந்த குழு இவள் அறைக்குள் என்ட்ரி கொடுக்க, “கிரி அப்புறம் பேசுறேன்” என வைத்து விட்டாள்.
அதன் பிறகு பாட்டி, சின்னத்தை என இருவரும் கமலியை பிடித்து கொண்டனர். கிரியை, அவனது அம்மா, அக்கா என அனைவர் பற்றியும் கேள்வி கேட்டு கொன்று எடுக்க, அவர்களுடன் வந்த சில்வண்டுகள் என அவள் அறையை தொம்சம் செய்து கொண்டிருந்தனர்.
************
Advertisement
வளைகாப்பு விழாவுக்கேற்ப ஒவ்வொருவரும் தயாராகி மண்டபம் வந்து சேர்ந்தனர். ஆட்களால் மண்டபமும் நிறைய துவங்கியது.
வரவேற்பில் ஆரம்பித்து சமையல்கட்டு வரை பரபரவென இருந்தனர் இரு குடும்பமும்.
பிரபா முழு அலங்காரத்துடன் வீட்டிலிருந்து அழைத்து வந்திருந்தனர், மேடையை ஒட்டி இருந்த அறையில், பிரபா, அவள் குடும்பம் என முழுதாய் ஆக்ரமித்திருந்தனர்.
“ம்.. பரவாயில்லைடி.. நான் கூட இரண்டாவது குழந்தை தானேனு, சிம்பிளா வளைகாப்பை வீட்டில் வைப்பாங்கனு நினைச்சேன். முதல் சீமந்தம் எப்படி நடந்நதோ அதே போல இப்போவும் நடத்தி வச்சுட்டாங்க, குடுத்து வச்சவடி நீ..” மீனாட்சி பாட்டி தான் கூறிக்கொண்டிருந்தார்.
“என்ன பாட்டி, புதுசா என் புகுந்த வீட்டுக்கு சொம்படிக்குற! என்னவாம்?” என பிரபா கேட்டிட
“ம்.. நீயும் உங்காத்தாளும் புலம்புன புலம்பளுக்கு, மல்லிகா உன்னை கொடுமை படுத்துறானு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் நீங்க தான்டி அவளை பாடா படுத்துறீங்க”
“கிழவி” என பிரபா முறைக்க
“நேத்திலிருந்து நானும் பார்க்குறேனே, அந்த மல்லிகாவும், கமலியும் ஓடி ஓடி வேலை பார்க்குறதை! நீ தின்ன தட்ட கூட உன் புருஷன் தான் எடுத்துட்டு போறான்” மீனாட்சி கடுப்பாக பேசவிட்டு வெளியேறிவிட்டார்.
“இதுக்கு தாம்மா, உன் அம்மாவை இங்கே கூட்டிட்டு வராதன்னு சொன்னேன். கேட்குறியா நீ.. கர்ணாலாம் சும்மாவே குதிப்பார். இந்த கிழவி பேச்சை கேட்டார்னு வை.. அவ்ளோ தான்” என பிரபா ஒரு பக்கம் ஆட,
“முதல் குழந்தை பிறந்தப்போ உன்னை எங்கம்மா தான் பாத்துகிச்சு, அப்புறம் உன் மாமா வீட்டுக்கு போனது தான், இப்போ மறுபடியும் உன்னை பார்த்துகிறத்துக்காக தான் வம்படியா வரவழைச்சிருக்கேன்! கொஞ்ச மாசத்துக்கு வாய மூடிட்டு இரு” என பிரபாவின் அம்மா அவள் வாய்க்கு பூட்டு போட்டார்.
அந்நேரம் சந்தோஷிற்கு உணவு ஊட்டிமுடித்து, வாயை துடைத்து கொண்டிருந்த கமலியிடம் வந்தார் மல்லி. “டி உம் மாமியாரும், நாத்தனார் குடும்பமும் வந்திருக்காங்க.. வர்றியா” என கமலியிடம் வந்து கேட்டார் மல்லிகா.
“அவங்களா.. இங்கையா?” என கமலி கேள்வி எழுப்பிட “வர்றியா இல்லை நான் பார்த்துக்கவா?” என மல்லி டென்ஷனாக
“வரேனே” என சந்தோஷை கையில் பிடித்தபடி கமலி கூற, மகள் மாமியாரையும், நாத்தனாரையும் எதிர் கொள்ள தயங்குவாள் என நினைத்திருக்க, அவளது “வரேனே” என்ற வார்த்தையில் தெளிந்து போனார் மல்லிகா. பின் அங்கே சென்று கொண்டிருந்த கணவனை அழைத்து “நீங்களும் வாங்க” என செல்வத்தையும் இழுத்து சென்றார் மல்லிகா.
பிரணியை ராஜி தோளில் போட்டிருக்க, சுற்றி நடமாடிக் கொண்டிருந்தவர்களை வெறித்து பார்த்தபடி வசந்தாவும், பிரண்வ்வை கையில் பிடித்தபடி நின்றிருந்தான் செந்தில்.
“வாங்க அண்ணி.. வா ராஜி” என சம்மந்தி குடும்பத்தை மல்லிகா வரவேற்க, “வாங்க தம்பி, எப்படி இருக்கீங்க! நீங்க குடும்பத்தோட வந்தது ரொம்ப சந்தோஷம்” என செந்திலையும் வரவேற்றார் செல்வம்..
அவர்களின் வரவேற்புக்கு சிறிதாய் தலையாட்டி, மல்லிகா செல்வத்தோடு இத்தனை உரிமையோடு நின்றிருந்த கமலியை ‘யார் இந்த பொண்ணு?’ என்ற ரீதியில் சந்தேகத்துடன் பார்த்து வைத்தனர் வசந்தாவும், செந்திலும்.
ராஜிக்கோ அவர்களை விட அதிகமாகவே அதிர்ச்சி. விழிகள் தெறிக்க பார்த்தாள். கண்கள் சொல்வது உண்மை தானா என இமை தட்டி தட்டி விழித்தாள்.
ஆனாலுல் இவள் ‘கமலி’ என சரியாய் அடையாளம் கண்டு, ‘இதெப்படி சாத்தியம்’ என பேரதிர்ச்சிக்குள்ளானாள். ‘எப்படி இவளை இத்தனை நாளாய், இல்லையில்லை மாதங்களாய் கவனிக்காமல் போனேன்’ தனக்கு தானே கேள்வி எழுப்பி, அதிர்ச்சியில் நகத்தை கடித்து பெயர்த்து கொண்டிருந்தாள் ராஜி.
பொலிவோடு, செதுக்கி வைத்தார்ப்போன்ற பேரழகோடு, இதழ் நிறைத்த புன்னகையோடு, கம்பீரமாய் நின்றிருந்தவளை குறுகுறுவென பார்த்த வசந்தா “இந்த பொண்ணு யாரு” என வாய் விட்டே கேட்டுவிட, ‘ஆமா.. யாரு இந்த பொண்ணு’ என செந்திலும் பார்த்து வைத்தான்.
மல்லிகாவோ “என்ன அண்ணி.. கமலிய தெரியலையா?” சர்வசாதாரணமாய் மல்லி கேட்டதில் ‘என்ன கமலியா இவ?’ என செந்தில் வாய் பிளந்து நின்றிருக்க,
வசந்தாவிற்கோ ‘இவ.. கமலியா!’ என ஏற்றுக்கொள்ள முடியாமல், வேலை நிறுத்தம் செய்து நெஞ்சடைத்து நின்றுவிட்டார் வசந்தா.
“கமலியா இது.. நம்பவே முடியலை சித்தி..” என மல்லிகாவிடம், ஆச்சர்யத்தை காட்டி “என்னம்மா.. இப்படி ஒரு டிரான்ஸ்பார்மில் வந்து நிக்கிற! இந்த கிரி கூட ஒன்னுமே சொல்லலை” என செந்தில் முகத்தில் புன்னகையோடு கேட்க
“சும்மா, வெயிட்லாஸ் பண்ணனும்னு தோணுச்சு. பண்ணிட்டேன்” என இவளும் செந்திலுக்கு பதிலுறைக்க
“முன்னலாம் அண்ணனு தானே கூப்பிடுவ கமலி.. மறந்திட்டியா” என கேட்டு “ஆனாலும் இப்படி ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை கமலி. எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடு கமலி” வியப்பு நீங்காமல் செந்தில் கமலியிடம் சாதரணமாய் பேசி சகஜமாக்கிட,
“குடுத்துட்டா போச்சு.. அப்படியே நான் டிரெயினிங் எடுத்துக்கிட்ட ஜிம்லயும் சேர்த்து விட்டுறேன். தன்னால குறைஞ்சிடும் வெயிட்” இவள் அவனை விட சகஜமாய் பேச,
பேச வார்த்தைகள் எதுவும் இல்லாமல், ராஜியோ இஞ்சி தின்ற குரங்கு போல் நின்றிருக்க, கடலில் போட்ட நங்கூரமாய் நின்றிருந்தார் வசந்தா.
இந்த கதையில் இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்ப்பார்க்கவே இல்லை என்று அவர்கள் முகமே காட்டியது.
கமலியே சிறிதும் தயக்கமல்லாது அவர்களை பார்த்து வைத்தாள் பின் கையில் இருந்த சந்தோஷை மல்லிகாவின் கையில் ஒப்படைத்துவிட்டு, “நீங்க மத்தவங்களை கவனிங்கம்மா.. இங்க நான் பார்த்துகிறேன்” என பெற்றவர்களை அனுப்பிவிட்டு இவள் பொறுப்பெடுத்து கொண்டாள்.
அவர்களை அழைத்து சென்று முன்னால் இடம் பார்த்து அமர வைத்தாள்.
“கூல்டரிங்க்ஸ், டீ, காபி.. என்ன சாப்பிடுறீங்க, என்ன கொண்டு வரட்டும்!” என மூவருக்கும் பொதுவாய் இவள் கேட்டிட
பேச வார்த்தையில்லாமல் பேயறைந்தார்ப்போல் இருந்த மனைவி மற்றும் மாமியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “டீயே கொண்டு வாம்மா.. சாப்பிடுக்கிறோம்” எல்லோருக்கும் பொதுவாய் செந்தில் தான் பதில் கூறினான்.
“ஐஞ்சே நிமிஷம் வந்திடுறேன்” இவளும் பொதுவாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.