Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 30 1

அத்தியாயம் 30

“நீ சாப்பிட்டியா கமலி” உண்டபடியே இவன் கேட்கையில், “நீ நான் வச்ச பிரியாணியை டேஸ்ட் பண்னேன்” என இடையில் புகுந்தார் சுபா.

“ஐய்யோ சாப்பிட்டு தான் உங்களுக்கும் எடுத்துட்டு வந்தேன்” என கிரியிடமும், “இப்போ தான் சாப்பிட்டுட்டு வரேன் த்தை. மறுபடியும் உடனே சாப்பிடனும்னா ரொம்ப கஷ்டம்” என இவள் கூறிட,

அவள் முகத்தையே பார்த்தான் கிரி. பின் ஒரு தட்டை எடுத்து, நிறைய பிரியாணி வைக்க போனவன், பின்  கொஞ்சமாய் பிரியாணியும், ஒரு லைக் பீஸையும் வைத்து இவள் கையில் திணித்தான்.



Advertisement

“கிரி.. நான்.. ஏற்கனவே சாப்பிட்டுடேன்” என அவன் காதோரமாய் இவள் சொல்ல

இவள் காதோரமாய் குனிந்து “காலையில் நீ பேசின பேச்சுக்கு, சாப்பிட்டுட்டு தான் வேற வேலை பார்த்திருப்ப, பைத்தியம் மாதிரி ஓவர் திங்ன்கிங் பண்ணிட்டு உக்கார்ந்திருப்ப!” சரியாய் அவளை கணித்திட

விழி விரிய இவனை தான் பார்த்திருந்தாள் கமலி. “நீயா சாப்பிடுறியா? இல்லை ஊட்டி விடனுமா?” என கேட்க, தட்டில் கவனமானாள்.

Advertisement

இவன் சொன்னது போல இவளும் உண்ணவில்லையே! இவர்களை கண்ட சுபா, ராமோ வாய்க்குள்ளேயே சிரித்து கொண்டனர். மோகனோ கண்டும் காணாமல் அமர்ந்திருந்த மோகனோ, “நாளைக்கு பங்க்‌ஷன் எத்தனை மணிக்கு கமலி” ஆரம்பித்தார்

Advertisement

“எட்டறை டூ பத்து மாமா” இவள் சொல்ல, “உங்கண்ணன், அப்பா ரெண்டு பேருமே வந்து அழைச்சிருக்காங்க கமலி, ஒரு ஒன்பது மணி போல வரோம்” என்றிட, “ம்.. வாங்க மாமா” என்றாள் இவள்.

இப்படி சில சில விசயங்களை பேசியபடியே உணவுண்டு முடித்தனர். பின் நேரமாவதை உணர்ந்து “போகட்டுமா” என இவள், கிரியிடம் பார்வையாலேயே கேட்டிட, ‘இரு வரேன்’ என செய்கை செய்தவன், கமலியை அனுப்பிட்டு வரேன் சித்தப்பா, என சொல்ல, இவளுமே அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் லன்ச் பேக்கோடு. அலுவலக அறையிலிருந்து கடைக்குள் நடந்து வருகையிலேயே

“கடை வேலை நிறைய முடிஞ்ச மாதிரி இருக்கு!” கடையை சுற்றி பார்வையிட்டபடியே இவள் கூற, “ம்.. நிறைய முடிஞ்சது கமலி” என்றவன் “வர்றியா, சுத்தி பார்த்திட்டு போகலாம்” என கேட்க

Advertisement

“இன்னோரு நாள் வரேன் கிரி, அண்ணிக்கு மெஹந்தி வச்சிடனும், அப்புறம் வீட்டுக்கு கெஸ்ட் வர ஆரம்பிச்சுடுவாங்க, பார்க்கனுமில்ல” என இவள் கூற அவனுடன் இவளும் நடந்தான்.

“நைட் வீட்டுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரவா.. என்ன வேணும்.. சொல்லுங்க சமைச்சி எடுத்துட்டு வரேன்”

“வேணாம் கமலி”என மறுத்து “எப்படியும் உன் அண்ணி வீட்டாளுங்க இந்த நேரத்துக்கு வந்திருப்பாங்க தானே. நைட் இன்னுமே ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க. உன் அம்மா ஒரு ஆளு எப்படி சமாளிப்பாங்க. நீ அங்க பாரு. நான் இன்னைக்கு ஹோட்டலில் லைட்டா சாப்பிட்டுகிறேன்” என இவன் கூற

“இல்லை.. நான் வரேன்” என்றவளை பார்த்து

“கஷ்டபடாதடி.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்” என்றுவிட்டான் கிரி.

“ம்” என தலையசைத்து கொண்டவள் “நாளைக்கு எத்தனை மணிக்கு மண்டபத்துக்கு வருவீங்க..”

“காலையில் நேரா அங்க தான் கமலி, முடிச்சிட்டு தான் கடைக்கு வரனும்” என்றிட, இவர்கள் பேசியபடியே பார்க்கிங் வந்திருக்க “சரி நான் அப்போ கிளம்பவா” என கேட்டு, கிளம்பியும் விட்டாள் கமலி.

மதியத்திற்கு மேல் மோகன் சிறிது ஓய்வு தேவை என வீட்டிற்கு சென்று விட, வேலைகள் சக்கரம் கட்டிகொண்டு வரிசையில் வந்து நிற்க அதனுடன் சேர்ந்து ராம், கிரி இருவருமே ஓட துவங்கி விட்டனர்.

இடையிலேயே, கிரிக்கு போன் அழைப்பு வந்தது “அண்ணே நீங்க கொடுத்த போட்டோ எல்லாத்தையும் ப்ரேம் போட்டாச்சு” என அந்த பக்கம் கூற,

“கடையில் தான் இருக்கேன்.. பசங்க யார்கிட்டையாவது கொடுத்து விடுப்பா” என வைத்து விட்டான்.

பிரேமும் வந்து சேர்ந்தது. ஐந்து கடவுள்கள் ஒன்றாக சேர்ந்த மிக பெரிய பிரேம் அது. அதனுடன் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாம் இரண்டு பிரேம்கள் கவரால் சுற்றப்பட்டு இருந்தது.

சாமி போட்டோவை அதற்கான இடத்தில் பொருத்தும் வேலைகள் நடந்திட, “நாம ஒன்னு தானேடா ஆர்டர் கொடுத்தோம், இதென்ன எக்ஸ்ட்ரா பிரேம்” என ராம் அதை கையில் எடுக்க “ண்ணே.. அது நான் கொடுத்தேன்” என சொல்லிவிட்டு அதை தனியாய் பத்திர படுத்தினான் கிரி. நமட்டு சிரிப்போடு பார்த்து வைத்தான் ராம். அதன் பின் குட்ஸ் டிராலிக்கள், மற்றும் இதர பேக்கேஜிங்கிற்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியது.

கடையில் வேலைகள் முடிந்து, இவன் வீட்டிற்கு வந்து சேர இரவு பத்து மணிக்கு மேலானது.

நேரமானதால் வரும் வழியிலேயே ஹோட்டலில் லேசான உணவோடு முடித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் கிரி. வந்ததும் முதல் வேலையாய் அந்த இரண்டு பிரேம்களையும் சுவரில் மாட்டி வைத்தான். தூக்கம் வேறு கண்களை சுழற்றினாலும், அந்த நேரமும் கமலிக்கு போன் செய்தான் கிரி. அதுவும் வீடியோ கால் வேறு. முதல் ரிங்கிலேயே இவளும் எடுத்துவிட

“இவ்ளோ நேரமாகிடுச்சா கிரி.. சாப்பிட்டீங்களா” எடுத்ததுமே கேட்க

“நீ் தான் கொண்டு வந்து தரலியே, அதான் ஹோட்டல்ல முடிச்சிட்டேன்” என்றான் உதடு பிதுக்கி கொண்டு.

“ப்ச்.. நான் கொண்டு வரேன்னு சொன்னதுக்கு நீங்க தான் அது இதுன்னு காரணம் சொல்லி வேணாம்னு சொன்னீங்க..” இவளும் சலித்து கொள்ள

“நான் சொல்வேன்.. ஆனாலும் வரனும்டி.. புருஷன் தனியா கெடக்கானேன்னு உனக்கு தான் கவலை இருக்கனும்” வம்பிழுத்தான் இவளிடம்.

“ஏன் எல்லாரும் இதையே சொல்றீங்க..”

“ஏன்.. வேற யாரு சொன்னா.. இந்த கிரியோட மனச புரிஞ்ச அந்த நல்ல உள்ளம் யாரு”

“எல்லாம் பிரபா அண்ணியோட அம்மாவும், பாட்டியும் தான்.. அப்பப்பா என்ன வாய்.. ஏதோ உங்களை நட்டாத்துல விட்டுட்டு நான் மட்டும் பாராசூட்டில் பறக்குற மாதிரி, என்ன பேச்சு.. பேசுறாங்க கிரி”

“ம்.. அப்புறம்.. வேற என்ன சொன்னங்க!” இவன் ஆர்வமாக கேட்க

“ஹ.. வேற ஒன்னும் சொல்லலியே!” இவன் தடுமாற

“என்னடி சொன்னாங்க.. உன் மூஞ்சியே காட்டி கொடுக்குது.. மரியாதையா சொல்லிடு”

‘உனக்கு வளைகாப்பு நடத்த எண்ணமிருக்கா இல்லையா’ என மீனாட்சி கேட்டதை இவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் கமலி.

வயதில் பெரியவர் வேறென்ன சொல்லி இருக்க போகிறார்கள், அதுவாக தான் இருக்கும் என இவனுமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

இவன் பார்வை அவளை வட்டமடித்துக் கொண்டிருக்கையிலேயே கண்ணில் பட்டது கட்டிலில் கிடந்த இவனது டீசர்ட்.. ‘அய்யோ இது என்னோட புது டீசர்ட்.. இதுவும் போச்சா’ என நினைத்தவன்

“என்னடி கட்டில்ல மறுபடியும் டீசர்ட்டை எடுத்து வச்சிருக்க” வாய் விட்டே கேட்டிட

அதை சுவாதீனமாய் திரும்பி பார்த்துவிட்டு “அந்த கிழிஞ்ச டீசர்ட்டை காணோம் கிரி” எனவும்

“அது கிழிஞ்ச டீசர்ட் இல்லடி, நீ கிழிச்ச டீசர்ட், கத்திரிகோலாலா வரி வரியா டிசைன் போட்டு வச்சியே அந்த டீசர்ட்” இவன் ஆதங்கபட

“அவளோ.. ப்ச்.. ஏதோ ஒன்னு.. ஆனா அதை காணோம்.. நானும் வீடு புல்லா தேடிட்டேன். அப்புறம் வேற வழி இல்லாமல் உங்களோடது வேற ஒன்னை எடுத்து வச்சுக்கிட்டேன்” இவள் கவலை கொள்ள,

இவனுக்கோ பல்ப் எரிந்தது, அந்த டீசர்ட் இவனிடமல்லவா இருக்கிறது, கமலியை காலையில் அழைத்து வருகையில் வண்டி பெட்ரோல் டேங்க் கவரில் திணித்து வைத்தது நியாபகம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!