திடீரென்ற நிகழ்வில் அலறப்போனவள் இவனை கண்டு, சடுதியில் நிதானமடைந்தாள்.
‘ப்ச்.. நீங்க தானா..’ சொல்ல வரும் முன்னே, கிரி தான் என அவள் ஆசுவாசம் அடையும் முன்பே அவளின் முகத்தில் அழுந்த பதிந்தது இவன் முகம். எத்தனை தூரம் அழுத்தி துடைத்தாலும், இன்னுமே ஒட்டிக்கொண்டிருந்த சந்தன வாசம் இவனை கிறங்க வைத்திட, மலர் இதழ்களை ஆவேசமாய், அவசரமாய் கொய்தது கிரியின் இதழ்கள்.
முத்தங்கள் சிறு சத்தங்களோடு அதிவேகமாய் கொய்யபட, வெகு நேரப்போராட்டத்தில் தோய்ந்து போனது மலரிதழ்கள்.
Advertisement
வெகு நேரம் தொடர்ந்த போரில், எங்கே இதழ்கள் காயம் கண்டிடுமோ என கிரிக்கே பயம் கொடுத்திட, மெதுவாய் அவளை விட்டு இவன் விலக, மூச்சுக்கே திணறி போனாள் கமலி. இவனோ ‘எனக்கு போதாதே’ என அவளை பார்த்து வைக்க
“எங்க வச்சிட்டு, எப்படி பிகேவ் பண்ணிட்டு இருக்கீங்க, யாரும் பார்த்தா என்னாகுறது” கோபமாய் கேட்க நினைத்தவளுக்கு, காற்று தான் வந்தது.
“முதல்ல நான் என்னவாக போறேனேனு பாருடி.. ஏக்கத்திலேயே செத்துருவேன் போல” வார்த்தைகள் வந்த போதும் நெருக்கத்தை விடவில்லை இவன்.
Advertisement
“நீங்க அப்போ இருந்து சரியில்லை கிரி. உங்க கிட்ட இருந்தா ஒரு கம்பர்ட் பீல் கிடைக்கும். இப்போ உங்களை பார்த்தாலே தெறிச்சு ஓடற அளவு பண்றீங்க.. என்ன தான் ஆச்சு” கிரியின் நடவடிக்கை புரியாது இவள் கேட்க
Advertisement
இவனோ, அந்த அவசர கதியிலும் தன் போனை எடுத்து எதையோ தேடி, அதை அப்படியே இவள் கைகளுக்குள் திணித்து “நீ கட்டிக்க போற பொண்ணு இவ தான், புடிச்சிருக்கா பாருனு” அம்மா அனுப்பின போட்டோ டி” என கூறிவிட்டு அதற்கு மேலும் தாங்காதவனாய் அவள் கழுத்தடியில் புதைந்தான் கிரி.
அவனின் அணைப்பு ஒரு பக்கம் திகிலடைய செய்ய, போனிலிருந்த போட்டோவோ அவள் காலடியில் பூமியை நழுவ செய்தது.
கிரியின் கைகளுக்குள் இருக்கும் கமலியும், போட்டோவில் இருக்கும் கமலியும் ஒரே தோற்றத்தில் இருந்தனர்.
Advertisement
இந்த போட்டோவை ஏற்கனவே பார்த்ததினால் தான், முதல் நாள் கல்லூரியில் தன்னை பார்த்தபோது அந்தளவு அதிர்ச்சி கொள்ளவில்லையா? ராம், சுபா, மோகன், ராஜி இவர்கள் கூட அந்தளவிற்கு அதிர்ச்சியை காட்டவில்லையே!
இதோ இப்போது வசந்தா காட்டிய அதிர்ச்சியில் ஒரு பங்கு தானே ராஜியின் முகத்தில் கூட தெரிந்தது.
‘போட்டோவில் இருப்பது போல் நான் மாறி இருக்கிறேனா! ஆனால் இதெப்படி சாத்தியம், இப்போது தான் நானே இந்த புகைபடத்தை பார்க்கிறேன்! இதென்ன புதுகதை! பல வித யோசனைகளோடு மீண்டும் போனில் பதிந்தது இவளது பார்வை.
இப்போது கட்டியிருப்பது போல அதே பிங்க் கலர் புடவை, அதே கண்ணாடி வளையல்கள், அதே போல ஜிமிக்கி, கழுத்திலிருந்து முன்புறமாய் வழிந்த மல்லிகைப்பூ என போட்டோவில் இருந்த ஏஐ கமலி, நேரில் உயிர் பெற்று வந்ததை போல இருந்தாள் இந்த நிஜ கமலி. ஏஐ என சொன்னால் நம்பவே முடியாதளவிற்கு தத்ரூபமாய் இருந்தது அந்த போட்டோ. நிஜமாகவே ஏஐக்கு கைகால் முளைத்து நடந்து வந்ததைப்போல தான் இருந்தாள் கமலி.
போட்டோவில் இருந்த அதே புடவை, அதே மாடல் ஜிமிக்கி, அதே போல் கண்ணாடி வளையல்கள் என ஒவ்வொன்றையும் தேடி தேடி வாங்கியிருக்கிறான் என சடுதியில் புரிந்து போனது கமலிக்கு.
எனக்கே இத்தனை அதிர்ச்சி என்றால், கிரியின் நிலை! அதனால் தான் தன்னை புடவையில் பார்த்த நொடியில் இருந்து கொதிகலனாய் கொதித்து கொண்டிருக்கிறானா? கிரியின் மனதையும் தெள்ள தெளிவாய் உணர்ந்தாள்.
ஆனால் கிரியோ அவளிடம் முழுதாய் சரணடையும் முடிவோடு இருந்தான். “முதன் முதலில் எனக்குள்ள வந்த நீ இப்படி தான் இருந்த கமலி. இந்த போட்டோவில் இருக்குறவ தான் தினம் தினம் என் தூக்கத்தை தூக்கிட்டு போனவ கமலி.
அதே ஆசையோட ஊருக்கு வந்து முதல் முறை உன்னை பார்த்து ஏமாந்தேன் கமலி. சரி இது தான் வாழ்க்கை. இவ தான் இனி எல்லாமேனு ஏமாந்த மனசை தேத்திட்டு திரும்ப வந்தா, அதிர்ச்சி குடுத்து திணற வச்சுட்ட.. ஆனால் இன்னைக்கு” பேச முடியாமல் திணறிப்போனவன்
“போட்டோவில் இருக்குற மாதிரி அப்படியே என் கண்முன்னாடி வந்து நிக்கிறியேடி..” “என்னடி பண்ணறது நான்!” பேசிக்கொண்டிருந்தவன், நிதனாமிழந்து கழுத்திலேயே கடித்து வைத்தான். அலறியவளின் இதழ்களை விரல் கொண்டு தடுத்து “கத்தாதடி” அடி குரலில் உறுமியவன்,
பட்டென விலகி அவள் முகம் கண்டான், துன்பமா இன்பமா என எதை காட்டுவது என திணிறிய அவள் முகம் கண்டு “ஐம் ஹெல்ப்லஸ்.. சாரி.. சாரி பார் எவ்ரிதிங் இஸ் கோயிங் டூ பீ டன்” என இவன் புலம்ப,
அவன் வார்த்தையும், செய்கையும், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை இவளுக்கு அப்போது தான் புரிய வைத்தது.
இருக்குமிடம் உணர்ந்து, இவள் நழுவி ஓட, அதற்கு அனுமிதிக்காதவனோ பிடறியை இறுக பற்றி திருப்பி, “நான் நெருங்கும் போதெல்லாம் தப்பிச்சு ஓட தான் பார்க்குற! என்கிட்ட நீயா எப்போ தான்டி வருவ..!” பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவன், இன்னும் அழுத்தமாய் பிடறியை இறுக பற்றி, அதே வேகத்தோடு தன் முகம் நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களில் தன் இதழ்களை நச்சென பதித்தான்.
மறு கையால் கைகளுக்கு பிடித்தமான இடங்களை முழுமையாய் ஆக்ரமிக்கும் ஆக்டோபஸாய் மாறி இருந்தான் கிரி.
இவள் திமிர, திமிர இதழ்களும் விரல்களும் அவளிடம் புதைந்து போக சொல்லி அவனை ஏவி விட, அவளுக்கு இடைவெளியே கொடுக்காமல் ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கிரி.
இதற்கு மேல் தாங்க முடியாது என ஒரு கட்டத்தில் அவளை விட்டு பிரிந்து “வீட்டுக்கு போகலாம் கமலி” மூச்சிரைக்கும் குரலோடு இவன் பேச அவனை விட அதிகமாக மூச்சு வாங்கியவளோ இவனை நிமர்ந்து பார்த்தாள்.
நால்விழிகளும் மோதிக்கொள்ள, “ப்ளீஸ் ட்…டீ…” அவனின் வார்த்தைகளிலேயே அவனை முழுதாய் உள்வாங்கி ‘சரி’ என்பதாய் தலையாட்ட, கொண்டாட்டமானான் கிரி, அவளை கைகளில் அள்ளி இரண்டு மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு பூகம்பத்தை அவளுள் உண்டாக்கி, அவனின் இதழுக்கு நேராய் இருந்த அவள் வயிற்றில் அழுத்தமாய் முத்தம் பதிக்க, “கிரி.. போதும்…” வெட்கம் சூழ்ந்த குரலில் இவள் கெஞ்சிட, அதன் பின்பே இவளை தரையிறக்கினான் கிரி..
“போலாமா” அவள் மீதான காதலும், தாபமும் இரண்டற கலந்தது அவன் வார்த்தைகளிலேயே.
“இப்படியே எப்படி வரது.. நீங்க போங்க நான் வரேன்” என்றிட, அப்போது தான் அவளை தலை முதல் பாதம் வரை இன்ச் மை இன்ச்சாக பார்த்தவன், அவளை எத்தனை தூரம் கலைத்து வைத்திருக்கிறான் என்பதே புரிய “ஐய்யோ கமலி.. கொல்றடி” என இவளை மீண்டும் நெருங்க
“அப்புறம், நான் உங்களை கொல்ல வேண்டிருக்கும். ப்ளீஸ் போங்க” அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள, “கொல்லு.. நான் ரெடி தான்” முகம் விகசிக்க பிடறியை வருடிக்கொள்ள, அவனது சிவந்த முகத்தையும், இதழ் நிறைந்த சிரிப்பையும் இமை சிமிட்டாது பார்த்து ரசித்தாள் கமலி.
“சைட் அடிச்சது போதும்” ஒற்றை புருவத்தை உயர்த்தி கொண்டு இவன் கூற
கண்கள் சுருக்கி, தலை குனிந்தவள், நெற்றியிலேயே தட்டி கொண்டு “இனி இங்க நின்னா டேஞ்சர் ஆகிடும்.. போங்க” என இவள் வலுக்கட்டாயமாய் இவனை பிடித்து தள்ளிட,
“கிரி இஸ் இன் டேஞ்சர்னு நீ் நினைக்கிற.. பட் கிரி இஸ் டேஞ்சர்டி, இன்னைக்கு உனக்கு தெரிய தான் போகுது” வாய் கொள்ளா சிரிப்போடு இவன் சொல்ல சிவந்த முகத்தை மறைக்க இவள் போராட “லேட், பண்ணாத சீக்கிரமா வந்து சேரு” விலகிய புடவை மறைக்காமல் விட்ட இடையில் நறுக்கென கிள்ளி, அவளை துள்ளவிட்டு, அதன் பின்பே அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கிரி.
‘எப்போதடா வீட்டிற்கு செல்வோம்’ என நிதானமின்றி திரிந்தவன், இடம், பொருள், ஏவல் என அனைத்தையும் உணர்ந்து, ‘கிரி.. கன்ட்ரோல் டா..’ என தனக்கு தானே கூறி, தன்னை சமன் படுத்தி கொண்டிருந்தான்…