அவன் அழுகை அவள் மட்டுமே உணர “கிரி..” என அவனை முகத்தை தன்னிடமிருந்து விலக்க எத்தனிக்க,
அவள் வயிற்றுக்குள் இருந்த முகத்தை எடுக்கவே மாட்டேன் என என இவன் இன்னுமே அவளுள் புதைந்து போயிட,
‘என்ன, கிரி அழுகிறானா?’ அவள் கேள்விக்கு ‘ஆம் அழுகிறான்’ என அவள் வயிற்றில் ஊர்ந்த கண்ணீரே சாட்சி சொல்ல, பிடறியோடு கை போட்டு இழுத்து அவனை தனக்குள் இறுக்கி கொண்டாள் கமலி.
வசந்தா இவர்களை பார்த்து வாய் பிளந்து நின்றிருக்க, என்ன இப்படி போட்டு அடிக்கா என முதலில் இமை மூடாது பார்த்திருந்த இளவட்டங்கள், இருவரும் அனைத்து நிற்பதை பார்த்து ‘அப்பாடா’ என்ற நிம்மதியோடு, இளஞ்சிரிப்பும் எழுந்தது.
Advertisement
அதுவும் செந்தில், கர்ணனின் முகத்தில் அப்படி ஒரு ஆசுவாச பெருமூச்சு.
அதே சிரிப்போடு அறையை இரண்டெட்டில் நெருங்கிய செந்தில் கதவை வெறுமனே சாத்திவிட்டு, மீண்டும் ராஜி வசந்தாவிடம் வந்தான்.
“ராஜி, உங்கம்மாவை கூட்டிட்டு கிளம்பு” என கட்டளையிட
Advertisement
“நான்.. நான்.. வர மாட்டேன்” பீதியில் வசந்தா தவிக்க
Advertisement
“ஏன் இருந்து விளக்கு பிடிக்கபோறீங்களா” கேட்டானே ஒரு கேள்வி, செந்தில் பக்கென சிரித்துவிட
வசந்தாவின் முகம் தொங்கி போனது “கமலி இடத்தில் நீங்களும், உங்க இடத்தில் உங்க மாமியாரையும் வச்சு பாருங்க. அப்போவாவது ஏதாவது புரியுதானு பார்ப்போம்” சொல்லிவிட்டு “வாங்க கர்ணா நாம போகலாம்” என இருவருமே நிற்காமல் அங்கிருந்து வெளியேற
“உனக்கு அவ்வளவு தான்மா மரியாதை. கிளம்பி வா என் வீட்டுக்கு. கிரியா வந்து உன்னை அழைக்கிற வரைக்கும் இந்த வீட்டு பக்கம் எட்டி கூட பார்த்திடாத” ராஜி பற்களை கடித்து கொண்டு சத்தம் போட்டு, “வாம்மா” என அவரை தள்ளிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
Advertisement
கர்ணா கிளம்பி சென்றிருக்க, செந்தில் ஏற்கனவே பிரணியோடு ஆட்டோவில் ஏறி இருக்க,
வீட்டையும், கேட்டையும் வெறுமனே சாத்திவிட்டு, ராஜி, பிரணவ்வோடு ஆட்டோவில் ஏறிட, முகத்தை ஏழு முழத்திற்கு நீட்டிக்கொண்டு ஆட்டோவில் ஏறினார் வசந்தா.
*******
அடித்தாலும் அன்னையை தேடும் குழந்தையாய் தன்னை இறுக்கி கொண்டு கிடக்கும் கிரியை பார்க்க பார்க்க மனது வலித்தது. அவனாக பிரியட்டும், என அவனை கட்டிக்கொண்டு நின்றிருக்க.
அவளணைப்பிலேயே வலி கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவதை கண் கூடாய் உணர்ந்தான் கிரி.
அதற்காகவே காத்திருந்தவள், அவனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றாள்.
கமலி வந்துவிட்டாள் என்றிதிலேயே நிதானத்திற்கு வந்திருந்தான் கிரி. வர வைத்திருந்தது கமலியின் ஒற்றை அணைப்பு.
சற்று முன் வரை வாழ்வை தொலைத்து விட்டோமோ என விரக்தியில் இருந்தவனின் மனம், இந்த நொடி ‘டின்ஜக் டின்ஜக்’ என கொண்டாட்டமானது.
ஒற்றை கையை கையை நீட்டி ‘வாடி’ என இவன் அழைக்க,
வேண்டுமட்டும் முறைத்து தள்ளியவள், “நான் வேணாம்னு மண்டபத்திலேயே விட்டுட்டு வந்திட்டீங்கல்ல… இப்போ என்ன வாடி போடின்னுட்டு” இவள் முகம் திருப்பிட
கட்டிலை விட்டு எழுந்து இவளருகே வந்தான் கிரி “அதான் நீ என்னை தேடி வந்துட்டல்ல..” என்றவன் “கடைசியில இந்த கிரி மேல நம்பிக்கை வந்துடுச்சு போல. எனக்காகவே தேடி வந்துட்ட…” விழியோடு விழி வைத்து பேசியவன் “இந்த ஜென்மத்துக்கு இது போதும்டி..” மனதினுள் இருந்து இவன் பேச,
“எதையாவது பேசி சமாளிக்காதீங்க.. நான் வேண்டாம்னு வந்துடீங்க தானே! எனக்கும் நீங்க வேணாம், போங்க” என நெருங்கி வந்தவனை நெஞ்சில் கை வைத்து தள்ளி விலக்க
விலக விடாது, அவள் கையை தட்டிவிட்டு, அவளை இறுக்கி “நான் வேணாம்னா.. நான் வாங்கி கொடுத்தது மட்டும் எதுக்கு உனக்கு.. குடுத்துடு” முற்றிலும் வேறு கிரியாய் மாறி இருந்தான் இவன்.
இவள் விழிகள் தெறிக்க பார்க்க, அவள் புடவை, வளையல், ஜிமிக்கி என ஒவ்வொன்றாய் தொட்டு காட்டி “இதெல்லாம் நான் வாங்கி கொடுத்தது தான.. குடுடி” என கேட்க, பட்டென அவனை தள்ளி பின்னுக்கு நகர்ந்தாள் கமலி.
“குடுடி” என இவனுமே அவளை மீண்டும் நெருங்கி நிற்க, இவள் திருதிருவென முழிக்க, “குடுக்குறியா.. இல்லை நானே எடுத்துக்கவா” என அவளை நெருங்க, இவளோ பின்னுக்கு நகர்ந்து கொண்டிருந்தாள்.
அவள் முன்பு கை நீட்டி “வா” என தலையசைத்தான்.
“மாட்டேன்” என இவள் பின்னுக்கு நகர்ந்து கொண்டே இருக்க, சட்டை பட்டன்களை கழற்றி, சுருட்டி தூக்கி எறிந்தான்.
அவனை பார்த்தவளின் விழிகளுக்குள் மின்சாரம் பாய்ந்தது. எக்ஸ்ட்ரா சதை இல்லாத அவனது கட்டுடலை முதன் முறையாய் கண்டு இவள் ஸ்தம்பித்து நிற்க, அதை சரியாய் பயண்படுத்தி கொண்டு “காலையில் இருந்து மனுஷனை உயிரோட கொல்றடி” என எட்டி இவள் சேலை முந்தியை பிடித்து வெக்கென இழுக்க, அவன் இழுத்த வேகத்திற்கு, ஊக்குகள் எல்லாம் பிய்ந்து, புடவை இவன் கையோடு வந்தது.
“கிரி” என அலறியவளை எட்டி பிடித்து இழுத்து தன்னுடலோடு உரசியபடி நிறுத்தினான் அவளை.
அணைப்பெல்லாம் இவர்களுக்கு புதிதில்லை தான் ஆனால் இதென்ன இடையோடு இடை சேர்த்து, ஏதோ செய்றானே! “என்ன பண்ற கிரி” இவள் தவிக்க
“இனி தான் பண்ணனும்” என இவன் அசால்ட்டஆய் சொல்ல, ‘பே’ என விழித்து நின்றவளை இழுத்து கொண்டு கட்டிலில் விழ, ‘இன்னிக்கு என்ன செய்ய போறானோ’ என இவள் பயம் கொண்ட அந்த நொடி, அவள் மேல் படர்ந்து நச்சென இதழோடு இதழ் வைத்தான்.
கமலிக்கு மூச்சே நின்று போனது அவனது அணுகுமுறையில். ஒட்டிக்கொண்ட அவளிதழ்களை பிரித்து மெது மெதுவாய் அவள் உயிரை குடிக்க துவங்கினான்.
இதழ்கள், விரல்கள் என அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த துணையை தேடி தலை தெறிக்க ஓட துவங்கியது.
இவளை கண்ட நாள் முதலாய் கொண்ட ஏக்கங்களை இவளுள்ளே ஒவ்வொன்றாய் கொட்டி தீர்த்தான் கிரி.
‘கிரியா இப்படி’ என இவள் ஒவ்வொரு ஷனமும் நினைக்க
‘ம்.. நான் அப்படி தான், உன்கிட்ட மட்டும்’ என அவளுக்கு நிரூபிப்பது போல் ஒவ்வொரு நொடிக்கும் அவளை கூச செய்தான்.
மார்பின் ஓரம் சாய்ந்து
நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும்
நீ கேட்டு வாதிடு
வேர் வரை சாய்க்காமல்
முதல் புயல் ஓயாது…
இவள் போதுமென்ற போதும் வேண்டும் வேண்டும் என சண்டையிட்டு அவளை பறித்தான்.. பதறவைத்தான். மொத்தத்தில் அவளின் மொத்த உயிரையும் முழுதாய் விழுங்கிவிட்டே ஓய்ந்தான் கிரி.
*******
கமலி பாத்ரூமில் இருக்க, இவனோ போனை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தான்.
ஹால் சோபாவில் சென்று அமர்ந்தவன் செந்திலுக்கு தான் அழைப்பு விடுத்தான். செந்திலும் அந்த பக்கம் எடுத்திட “சொல்லுடா” என்றிட
“சாரி செந்தில்” எடுத்ததுமே இவன் சொல்ல
“ப்ச்.. நீயேண்டா சாரி கேட்குற.. விடு, உன் அம்மாவை ராஜி சமாளிச்சுப்பா. நீ முதல்ல உங்க பிரச்சனையை சரிபண்ற வழியை பாரு” இவன் சொல்ல
சிறு சிரிப்போடு திரும்பி தங்களின் அறையை தான் பார்த்தான் கிரி.
“அம்மா எதுவும் பிரச்சனை பண்றாங்களாடா!” என இவன் கேட்க
“ம்ஹூம்..” என மறுத்தவன் “கிரி வந்து அழைச்சா தான் போகனும். இல்லைன்னா நீ இங்க தான் கிடக்கனும்னு ராஜி, உங்கம்மாவை மிரட்டிட்டு இருக்கா.. இந்தா நீயும் கேளு” என போனை ஸ்பீக்கிரில் போட்ட படி எங்கோ இவன் நடந்து செல்வது கேட்டது.