Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 33 4

“இதோ பாருமா.. இவ்வளவு நேரம் உக்கார்ந்து உனக்கு அட்வைஸ் பண்ணிருக்கேன். மூளைக்குள்ள ஏறிச்சா இல்லையா”

“ம்..”

“ம்.. சொன்னா பாத்தாது. கிரி கூப்பிட்டா தான் போகனும். இல்லைன்னா நீ இங்க தான். இனிமேல் அவங்களை பிரிக்கலாம்னு கனவு கூட கண்டிராத. வாயை மூடிட்டு இருக்குற காலத்தை ஓட்டு. இல்லை உனக்கு பெரிய சைஸில் பட்டை நாமம் தான், அவன் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டான்னா, நீ தேன் வாங்கி நக்கிட்டு போக வேண்டியது தான்” வசந்தாவிற்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் ராஜி.

ஆனால் அவரோ.. “ஒரு வாரம்னு சொல்லி தானே அழைச்சிட்டு வந்த.. நான் ஒரு வாரம் கழிச்சு கிளம்பிடுவேன். அதுக்கு மீறி என்னை இருக்க சொல்லாத” ராஜி சொன்ன கட்டளைகளையெல்லாம் பறக்கவிட்டுவிட்டு, அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என வசந்தா ஒரு பதிலை சொல்ல



Advertisement

ஸ்பீக்கரை ஆப் செய்து காதில் வைத்தபடி “என்ன கேட்டியா..” என வாய்விட்டு சிரித்தவன் “மவனே ஒரு வாரம் தான். எவ்ளோ வாழனுமோ வாழ்ந்துரு.. அதுக்கு பிறகு உயிரோட இருப்பியா இல்லையான்னே தெரில” எதிர்காலத்தை இப்போதே அவன் கண் முன் கொண்டு வந்தான் செந்தில்.

“ஏண்டா நீ வேற நேரம் காலம் தெரியாமல் காமெடி பண்ணிட்டு இருக்க.. எரிச்சலா வருது” கிரி எகிற

சிரிப்பை விட்ட இவனும் “ஒரு நாளில் தீராதுடா மாமியார் மருமக பிரச்சனை. அது எண்டே இல்லாத கேம். நடுவில் நாமலாம் ஜஸ்ட் சப்ஸ்டியூட்.. சான்ஸ் கிடச்சா தான் நமக்கு வாய்ப்பு வரும். இல்லைன்னா வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருக்கனும். ஆம்பளைங்க வாழ்க்கை அம்புதான் மச்சா. புரிஞ்சதா?” ஆண்கள் வாழ்வை அழகியலாய் இவன் கூற

Advertisement

“நீ உங்கம்மாகிட்ட இருந்து தப்புச்சிட்டன்னு ஆணவத்துல ஆடுறியா..” ஒரே போடாய் இவன் போட

Advertisement

“ம்க்கும்” என்றான் செந்தில்

“என்னடா பதில் ஒரு மார்க்கமா இருக்கு” என இவன் கேட்க

“எங்க தப்பிக்க, எந்தம்பி பொண்டாட்டிக்கும், எங்கம்மாக்கும் இப்போ தானே கேம் ஸ்டார் ஆகி இருக்கு. அங்க பர்னீச்சரை உடச்சிட்டு எங்கம்மா நேரா எங்கிட்ட தான்டா வருவாங்க. அநேகமா உங்கம்மா கிளம்பினதும் எங்கம்மா வந்திடும்னு நினைக்கிறேன்”

Advertisement

“என்னடா சொல்ற!”

“ம்.. அங்க ஜாயின்ட் பேமிலியா இருந்தப்போ ராஜி எல்லா வேலையும் பார்த்து வச்சிருவா. ஆனால் இப்போ சின்ன மருமக மெய்ட் கேக்க, அம்மா வேண்டாம்னு சொல்ல இனிதே ஆரம்பமாகிவிட்டது சண்டை” எதுகை மோனையோடு இவன் பேச

“ரைட்டூ…” என சிரித்தவன் “எனக்காவது ஒரு வாரம் இருக்குடா.. உனக்கு…” என கிரி இழுக்க

“இப்போ நீ ஆணவத்துல ஆடாத” பல்லை கடித்தான் செந்தில்.

“ஏண்டா, அம்மா திருந்த வாய்ப்போ இல்லையாடா.. நான் எப்படி சமாளிக்க போறேனே தெரியலைடா” கிரி கவலை கொள்ள

“மாமியார்னா சும்மாவா, அப்படி பட்ட பவர்புல் போஸ்டிங் மச்சி. நம்ப கையில் எதுவுமே இல்லை. இட்ஸ் எ யூனிவர்சல் பிராப்ளம்”

“அப்போ என்ன தாண்டா பண்ண!”

“சிம்பிள் கமலி கையில் ஹெண்ட் ஓவர் பண்ணிடு. அவ டீல் பண்ணிப்பா” என செந்தில் கூற

“அவ.. பாவம் செந்தில்” என்றிட

“நினைச்சிட்டு இரு. தனி வீடு வரலைன்னா, உன்னை கடத்திட்டு வர சொல்லி எங்களுக்கே ஆர்டர் போடறா, நீ வேற” என வீட்டில் நடந்ததை சொல்லி இவன் சிரிக்க

“கமலியாடா சொன்னா.. நிஜமாவா!” இவன் ஆச்சர்யம் கொள்ள

“சத்தியம்டா. உங்கம்மாவை டீல் பண்ண அவ தான் சரியான ஆளு” என இவன் சொல்லி கொண்டிருக்கையிலேயே

“கிரி..” என்ற சத்தம் இருவரின் காதுகளையும் சென்று அடைய “பை மச்சான்” என செந்திலே போனை அனைத்துவிட, சோபாவிலேயே போனை வைத்துவிட்டு, அறைக்குள் வந்தான் கிரி.

உள்ளே வந்தவன் கண்டது, துண்டை மட்டுமே கட்டிக்கொண்டு பாத்ரூம் வாசலில் நின்றிருந்த கமலியை தான். இதழ் குவித்து விசிலடித்து கொண்டு “செக்ஸி லேடி…” என பாடல் ஒன்றை முனுமுனுத்து கொண்டு இவன் இவளை நெருங்க

“கிரி.. ஸ்டே பேக்” என அவன் எண்ணம் புரிந்து தடை போட

அப்படியே நின்றவன் “பின்ன எதுக்குடி கூப்பிட்ட!” என்றான் அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி.

“உங்க ட்ரெஸ் ஏதாவது குடுங்க. என்னால மறுபடியும் அதே புடவையை கட்ட முடியாது” என இவள் வேறு பக்கம் பார்க்க, அவள் கண்ணில் பட்டதோ சுவற்றில் மாட்டபட்டிருந்த இவளது போட்டோக்கள்.

விழிகள் வியப்பில் விரிந்து போக, இவள் கிரியை திரும்பி பார்த்தாள். அவனோ, அறைக்கு வெளியே சென்று, சிதறி கிடந்த டிராலியில் இவளுக்காக உடையை தேடிக்கொண்டிருந்தான்.

மீண்டும் இவள் பார்வை சுவற்றில் பதிந்தது. மூன்று பிரேம்கள், ஒன்றில் கிரி சிரிப்பை அடக்கி, வாயில் விரல் வைத்து நின்றிருக்க, எதிரில் விரல் நீட்டி அவனை மிரட்டி கொண்டிருந்த நிஜ கமலி. இன்னோரு பிரேமில் பெண் பார்க்கும் படலத்தின் போது கிரிக்கு அனுப்பி வைக்கப்பட ஏஐ கமலியின் புகைப்படம். அதே பிங்க புடவை, கண்ணாடி வளையல்கள், ஜிமிக்கி, கழுத்தோரம் வழிந்த மல்லிகைப்பூ என இரு பிரேம்களுமே அத்தனை அழகாய் இருக்க, அதன் நடுவில் இருந்தது கிரி கமலிக்கு தாலி கட்டிய போட்டோ பிரேம். இது என்னோட ரூமில் இருந்த போட்டோ மாதிரி இருக்கு. இவள் யோசித்து கொண்டிருக்கையிலேயே

“இந்தா கமலி” என அவனது டீசர்ட், ட்ராக்கை அவளிடம் நீட்ட

இவளோ, பிரேமில் பதிந்த பார்வையை இவனிடம் திருப்பாமலேயே நின்றிருந்தாள்.

அவள் பார்வையும் நின்ற தோரணையும், அணிந்திருந்த துண்டும் அவனை வேறு ஓர் உலகத்திற்கு இழுத்து செல்ல, கையிலிருந்த உடைகளை கட்டிலுக்கு அடியில் விசிறி அடித்து நிமிர்ந்தான். நிமிர்கையில் கட்டிலின் தலைமாட்டில் கிடந்த இவனது டீசர்ட் கவனத்தை ஈர்க்க, இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்போடு, அதை எடுத்து கொண்டு இவளருகில் வந்தான்.

அவன் அருகே நெருங்குவதை உணர்ந்து, “கிரி, இந்த போட்டோ..” என இவள் கேட்க

“ஒன்னு நம்ப கல்யாண ஆல்பத்திலிருந்து சுட்டது. இன்னோன்னு துரை அனுப்பி வச்சது. இன்னோன்னு ஏஐ கமலி” என இவன் இவளுக்கு விளக்கம் கொடுத்தபடியே, டீசர்ட்டை தலைவழியாய் இவனே மாட்டிவிட்டு, கையை டீசர்ட்டினுள் வீட்டு இடுப்பின் கீழ் வரை இறக்கிவிட்டான். அப்படியே டீசர்ட்டினுள் கைவிட்டு துண்டின் முடிச்சை தேடி விடுவிக்க, துண்டு இவன் கையோடு வந்தது.

“என்னால நம்பவே முடியல கிரி, நான் வெயிட் லாஸ் பண்ணினா இப்படி தான் இருப்பேன்னு ஏஐக்கு எப்படி தெரியும்” இவள் அதிசயத்தை பார்ப்பது போல பார்த்து வைக்க

இவனும் அவளை மேலிருந்து கீழ் வரை அதே போல் பார்த்து வைக்க

டீசர்ட்டை நன்றாக கீழ் இழுத்து விட்டு கொண்டு “என்ன பார்வை, போங்க அங்கிட்டு” என இவள் விலக எத்தனிக்க

விலக்கிய கையை இறுக்க பிடித்து “ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி” குரலோடு பார்வையும் மாறியது.

அவன் பார்வையில் சிவந்தவள் “ம்.. புடவையில தெரியாத அழகெல்லாம் இதில் தெரியுதாக்கும்” என்றவள் குனிந்து டீசர்ட்டை பார்க்க, ‘பே..’ என அலறிக்கொண்டு கைகளாலே அவளை மறைக்க முயற்சி செய்ய.. வாய்விட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான் கிரி.

“கிரி… கிரி…” என சினுங்கியவள் “என்ன கிரி.. இது” அவளை மறைக்க இரு கை போதாமல் துள்ளி கொண்டிருக்க

“ம்.. நீ கோபத்துல தார் தாரா கழிச்சியே அதே டீசர்ட் தான்.. சும்மா சொல்ல கூடாது. கன கச்சிதமா வெட்டி விட்ருக்க” என பார்த்தவனின் விழிகள் மயங்கி கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!