Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 25 1

சீதா கல்யாண வைபோகமே..



Advertisement

  அத்தியாயம் -25

Advertisement

Advertisement

 சீதா தன் மேல் நம்பிக்கை இல்லை என்று சொன்னவுடன்  மனம் வெறுத்து போனது ரவிக்கு.

Advertisement

 நான் பல பெண்கள் கூட பழகும்  போது என்னை நம்பியவள்,  நான் இன்று யாரு கூடவும் பேசாமல் நல்லவனாக மாறும்போது என்னை நம்பவில்லை என்கிறாளே இவளை என்ன சொல்வது,, என்று தன் விதியை அவனே நொந்து கொண்டவன்,, கெட்டவனா இருக்குறப்போ இந்த உலகம்  நம்மலை  நம்புது,,  நல்லவனை இந்த உலகம் நம்பாது என்பது சரியாக இருக்கிறது என்று அவன் மனதில் புலம்பிக் கொண்டே இருந்தவனுக்கு..

 சீதாவை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயே அவளுக்கு டெலிவரி பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை, தந்தை,, தாய், பாட்டியையும் இங்கே அழைத்து வந்துவிடலாம் என்று அவன் நினைத்திருக்க, சீதா அனைத்தையும் முடித்து வைத்திருந்தாள் ஒரே வார்த்தையில் உன்னை நம்ப மாட்டேன் என்று.

 நம்பிக்கை இல்லாதவளிடம் என்ன சொல்வது அந்த நம்பிக்கை வர நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தவன்..

 அமைதியாக பீச்சை பார்த்துக் கொண்டிருந்தான் ரவி,, கதிர் நன்றாக விளையாடி  முடித்துவிட்டு “வீட்டிற்க்கு  போகலாம்  தூக்கம் வருது” என்று சொல்ல மகனை தூக்கிக் கொண்ட ரவி  சீதாவை கைப்பிடித்து எழுப்பி இருந்தான்.

 கதிர் தூக்கம் வருது என்று சொல்வதால் கதிரை தூக்கியப் படியே பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் சீதா.. அவனை பின் சீட்டில் படுக்க வைத்து அவனின் தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டவள் , “போலாம் ரவி” என்றாள்..

 “எங்கே போலாம் சீதா, என் வீட்டுக்கு” என்றவன் “நம்ம வீட்டுக்கு வர்ரீயா”? என்றான்.

 “நான் நாளைக்கு போயிடுவேன் ரவி அப்புறம் உனக்குத் தான் கஷ்டம்” என்றாள்.

 “பரவால்ல வாயேன்” என்றான் ..

“இல்லை பரவாயில்லை நீ என் வீட்டுல  என்னை கொண்டு போய் விடு” என்றாள்..

 போகும் வழியிலே அவளை ஒரு ஹோட்டலில்  நின்று,  அவளுக்கு உணவு வாங்கி கொடுத்து உண்ண வைத்து அழைத்து வந்திருந்தான்.

 அவனை உண்ணச் சொல்ல “எனக்கு பசி இல்லை சீதா” என்று மறுத்து விட்டான்.

 சீதாவை அவள் வீட்டில் விட்டவன் கதிரை தூக்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்று படுக்க வைத்து விட்டு..

 “நான் என் வீட்டுக்கு போறேன் சீதா காலையில் வரேன்” என்று அவன் கிளம்ப.

 பதில் பேசவில்லை சீதா அவள் அமைதியாக இருக்க..

 “சீதா” என்றான் ரவி..

அவளோ அமைதியாக ஓய்வு  அறை சென்று வந்தவள் படுக்க தயாராக..

 “சீதா நான் கிளம்புறேன் காலையில் வரேன்” என்றான் மீண்டும்..

 அவள் பதில் சொல்லாமல் படுத்து விட,,  கோபம் வந்தது ரவிக்கு ..

 அவனை இங்கே இரு என்று சீதா சொல்லவும் இல்லை, போகாதே என்று சீதா கூறவுமில்லை ..

 பின்பு  ரவிக்கு நான் எப்படி  இங்கே இருப்பது, என்பது  போல் அவனுக்கு ஒரு உறுத்தலை தர வெளியில் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 சீதாவுக்கு தங்களை இருவரை தனியே விட்டு செல்கிறானா இவன், என்று கோபம் வர அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள்.

 இருக்கனுமுன்னா இரு,  போக வேண்டும் என்றால் போ  நான்  ஒன்றும் சொல்ல மாட்டேன் நீ போ என்று அவள் அமைதியாகி படுத்து விட..

 ரவிக்கு சீதா  தன்  மேல் நம்பிக்கை இல்லை என்றவுடன்  தான் அவனுக்கு இங்கே  தங்குவதற்கு  விருப்பம் இல்லை..

 சீதா படுத்ததும் கண் அசந்து விட்டாள்..

 சிறிது நேரம் கழித்து முழிப்பு வர.

 அனைத்து லைட்டுகளும் வீட்டில் எறிந்து  கொண்டிருந்தது எழுந்தவள் வெளிவந்து பார்க்க தலைமேல் கைவைத்து சோபாவில்  அமர்ந்திருந்த ரவியைத்தான்.

 இவள் வந்த சத்தம் கேட்டு,,அவன் நிமிர்ந்து பார்க்க “நீ உன் வீட்டுக்கு  போகலையா ரவி “? என்றாள் சீதா.

 “நீதான் என்னை போக சொல்லலையே, போகாமல்  இருக்கவும் சொல்லல” என்றான்..

“எங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போக உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என்று அவனை அடிப்பது போல்  சீதா அவன் அருகில் வர…

 அருகில் வந்தவளை அணைத்து தன் மடி மீது வைத்துக் கொண்டான் ரவி.

 “ஹலோ பாஸ் நான் உங்களை அடிக்க வந்தேன்” என்றாள்.

 “அடி இப்படியே இருந்தபடியே  அடி வாங்கிக்கிறேன்  சீதா” என்றான்…

  “நான் நாளைக்கு  ஈவினிங் கிளம்புறேன் ரவி” என்றாள்.

 “ம்ம்ம்  போய்ட்டு வா” என்றான்..

 “என் மீது கோபமா ரவி நான் உன் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டேனே என்று” அவள் கூறியதும் .

 அவன் தலை “ஆமாம்” என்று ஆடியது.

 “சாரி” என்றாள்.

 அவனோ நிமிரவே இல்லை அவளை அணைத்தபடியே அவள் கழுத்தில் தன்  முகத்தை புதைத்திருந்தான் ரவி.. ..

 “அந்த ரூம்ல படுத்து  தூங்கு ரவி காலையில கிளம்பு” என்றாள்.

 அவனோ  பதில் பேசவில்லை அமைதியாக அவள் வாசத்தை உணர்ந்து படியே  இருந்தான்..

 ரவியின் காதை பிடித்து சீதா இழுக்க.

“ஏய்  வலிக்குதடி” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்..

 “என்ன பண்ணுற ரவி   நீ போய் தூங்கு” என்றாள்..

 “நீ நாளைக்கு போயிடுவ இன்னைக்கு பூரா உன்னை பாத்துட்டு இருக்கேன்”.. என்றான்..

 “இந்த டயலாக்குக்கு  ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றாள் அவனை முறைத்து..

 “வேற என்ன குறைச்சல் சீதா உனக்கு சொல்லு பூர்த்தி பண்ணிவிடுகிறேன்” என்றான் டபுள் மீனிங்கில்.

 “உங்களுக்கு  கால் வலிக்க போகுது ரவி என்னை இறக்கி விடுங்க” என்றாள்.

 “கால் எல்லாம் வலிக்காது,  நீ ஒரு பாரமா எனக்கு, என் பிள்ளைகளை மட்டும் நீ சுமக்குற , அப்போ உனக்கு வலிக்குதா” என்றான்…

 “இல்லை” என்றவளுக்கு   பிடிமானம்  இல்லாமல் இருக்க அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

 அவளின் தலைகோதி விட்டவன் அவள் தலையில் முத்தமிட்டு “தூங்கு டா” என்றான் ..

“தூக்கம் வரல ரவி, ஒன்னு கேட்டா சொல்லுவீயா ரவி?” என்றாள்..

“ம்ம்ம்ம் கேளுடா ” என்றவன் அவளின் கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டான்..

“அது” என்றவள் “கதிர் அம்மா, அப்பாவுக்கு என்னாச்சு”? என்றாள்..

 “இப்ப வேணாம்டா நீ மாசமா இருக்க இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன், அது தெரிஞ்சா  நீ ரொம்ப வருத்தபடுவா, வேண்டாமே கதிர் நம்ம பையன்” என்றான்.

“கதிர் நம்ம பையன் தான் நான் இல்லையின்னு சொல்லல்ல, அவன் பெரிய பையனாகி, அவனுக்கு நம்ம அவன் உண்மையான அப்பா, அம்மா இல்லண்ணு தெரியவரும் போது அவன் என்கிட்ட வந்து கேட்டா நான் அவன்கிட்ட என்ன சொல்லுவேன் சொல்லுங்க,  எனக்கு தெரிஞ்ச மாதிரி அவன சமாதானப்படுத்த எனக்கு ஏதாவது  உண்மை தெரிய வேண்டாமா, அதனால நீங்க சொல்லுங்க கதிர் அப்பா, அம்மாவுக்கு  என்ன ஆச்சு, ஏன் பிரிஞ்சாங்க என்ன நடந்தது ” என்றாள்…

 “சின்ன வயசிலிருந்தே நானும் கதிர்ஹாசனும் பிரண்ட்ஸ் , ஒரே ஊரு, எங்க வீட்டு பக்கத்துல தான்  அவன் வீடும், ஒன்னா ஸ்கூல் படிச்சோம், ஒரே காலேஜ் , நாங்க ரெண்டு பேரும்,  திக் ஃப்ரெண்ட்ஸ், எங்களுக்கு   நிறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ்..

 நாங்க ரெண்டு பேரும் நல்லா  படிப்போம், என்ன விட கதிர் ஹாசன் ரொம்ப நல்லா படிப்பான் ரொம்ப அமைதி,, நான் எல்லாம் பொண்ணுங்ககிட்டையும்  பேசுவேன்,, அவன் எந்த பொண்ணுங்க கிட்டையும் பேச மாட்டான் ரொம்ப அமைதி,, எந்த பொண்ணாவது வந்து அவன் கிட்ட  பேசுனா  கேட்டா கேள்விக்கு பதில் சொல்வான். ஆனால்  நான் அப்படி இல்லை,,.” என்றதும்.

 “அதான் எனக்கு தெரியுமே உங்க பிரண்ட்ஷிப்  எப்படி இருக்கும்னு” என்றாள் சீதா.

 “ஏய் நான் அப்போ அப்படி இல்லடி, ஜஸ்ட் பிரண்டா தான் பழகுவேன்”..

 “நம்பிட்டேன்,  நம்பிட்டேன் மேல சொல்லுங்க கதிர் அண்ணாவை பற்றி” என்றாள் சீதா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!