Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 25 3

 என்ன பாவம் பண்ணாங்க இந்த பிள்ளைங்க பிடிக்கலைன்னா பெத்துக்காம இருக்க வேண்டியதுதானே பெத்துக்கிட்டு   ஏன் இப்படி   விட்டுட்டு போறாங்க…

அவங்க சந்தோஷத்துக்கு பிள்ளைகள் பலியா” என்றான்.



Advertisement

சீதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்.

Advertisement

 “சாரி சீதா உன்ன நான் ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா”.. என்றான்.

Advertisement

“இல்ல கதிர  நெனச்சா கஷ்டமா இருந்தது “என்றாள், கண்களில் உள்ள  நீரை துடைத்தபடியே..

Advertisement

 “எனக்கு  இந்த சம்பவம் நடந்ததால எதுலையுமே  இன்ட்ரஸ்ட் இல்லாம் ஆகிடுச்சு சீதா,

 கல்யாணம் வாழ்க்கை, குடும்பம் , குழந்தை எதுவுமே இஷ்டமில்லை ..

 இப்படியே கடைசி வரைக்கும் கதிருக்கு அப்பாவா இருந்திடலாமுன்னு என்று நெனச்சேன்..

 எல்லாரும் மாதிரி நீயும் என்கிட்ட காசு வாங்கிட்டு போயிருந்தா நீயும் பத்துல 11 னா ஆகியிருப்ப சீதா.

 உன்ன பத்தி நான் விசாரிச்சேன் சீதா நீ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவ காச பார்த்ததும் வாங்கிட்டு போயிடுவேன்னு நினைச்சேன் ஆனா நீ அப்படி இல்ல காச  நீ துளி கூட நினைக்கல..

 இந்த காலத்துல எல்லாருக்கும் காசு, பணம் சொகுசான வாழ்க்கை, சந்தோஷம் என்ஜாய் மென்ட்  அப்படித்தான் இருக்காங்க ஆனா நான் பார்த்ததிலே வித்தியாசமானவள்   நீ  சீதா..காசு மேல உனக்கு இஷ்டமே இல்ல.

 என் பாசத்துக்காக என் அன்புக்காக தானே நீ ஏங்குன, அது  உன் கண்ணுல  எனக்கு  தெரிஞ்சது,,  தெரிஞ்சும் நான் உன்னை கஷ்டப்படுத்தி பேசிட்டேன் என்னை மன்னித்துவிடு டா” என்றான் ..

 “சரி எங்கையாவது போய்   நீ நல்லா இருப்ப உனக்கு பின்னாடி ஏதாவது உதவி செய்யலாம்னு நினைச்சேன் ஆனா நீ என் பிள்ளைகளை சுமந்து கொண்டு வந்து, நீ என் முன்னாடியே வந்து நின்னு,  என்கிட்ட எதுவுமே கேட்காமல், சண்டை போடாமல், தனியா நின்னு என் பிள்ளைகளை வளர்க்க முடிவு பண்ணியிருக்க..

 இதுவே வேற யாராவது இருந்தா என்கிட்ட குழந்தையை காட்டி சண்டை போட்டு இருப்பாங்க,, என்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி என்கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் வாங்கி என்ன வேணாலும் செஞ்சுயிருக்கலாம்,, நான்  கதிரை விட மோசமான நிலைக்கு கூட என்னை கொண்டு போய் இருக்கலாம் நீ. ஆனா நீ அப்படி இல்லை.

 அழகா என் குழந்தைகள் உன் வைத்துல வளர்த்து,,அவங்களுக்கு  ஒரு பொய்யான அப்பனை உருவாக்கி, என் பிள்ளைகளுக்கு   எந்த கெட்ட பெயர் வர விடாம வாழ வைக்க நினைத்த உன்ன மாதிரி பொண்ணு பார்க்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம்  சீதா..

 நீ நினைச்சிருந்தா,  நீ கர்ப்பமான உடனே என்கிட்ட வந்து இருக்கலாம் சண்டை போட்டு இருக்கலாம் எனக்கு வாழ்க்கை கொடு என்னை கல்யாணம் பண்ண கேட்டு இருக்கலாம்,, நீ ஏண்டா என்னை கேக்கல என்கிட்ட உனக்கு சண்டை போட தோணலையா ” என்றான்.

 அவனிடமிருந்து பிரிந்து அமர்ந்த சீதா.

 “உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் ரவி.

 ஏன்னு  எனக்கு தெரியல நான் உன்கூட இருந்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ரவி,  நீ என்னை லவ் பண்றேன்னு தான் நான் நினைச்சேன் ஆனா உன்ன பத்தி எனக்கு தெரியும், உனக்கு கல்யாணத்து மேல இஷ்டம் இல்லன்னு  தெரிஞ்சும் தப்பு பண்ணது நானும் தானே…

 உன்மேலேயே எல்லா பழியும் போட முடியாது இல்லையா,,  ஆனால் நீ என்கிட்ட என்ன வேணுமுன்னு  கேட்டது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

 நீ எல்லா பெண்களும் மாதிரி என்னை நினைச்சுட்டியோன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்..

 உன்கிட்ட சண்டை போட என்னால முடியல,, இருந்தும் சண்டை போட்டேன்” என்றாள். ..

” நீ கர்ப்பமானவுடன்   என்கிட்ட சொல்லன்னு உனக்கு தோணலையா சீதா.. என்மேல கோபம் வரலீயா”? என்றான்.

 “இல்லை” என்றாள்.

“ஏன்டா” என்றான் ரவி.

 “கோபம் எல்லாம் வரல ரவி ரொம்ப சந்தோஷப்பட்டேன் யாருமே இல்லாத எனக்கு உறவாய் என் குழந்தைகள் வர்றாங்கன்னு அவ்வளவு சந்தோஷம் எனக்கு.

 அதை கொடுத்த உனக்கு நன்றி கூட சொல்லனும்னு நினைச்சேன் பிறகு நீ என்கிட்ட பேசுனது ஞாபகம் வர அதையும் மறந்துட்டேன்..

 தனியா இருந்து பார்த்தா  தான் தெரியும் ரவி நமக்கு யாருமே இல்லை என்ற உணர்வு,  எனக்கு  என்குழந்தைகள் எனக்கு கிடைத்த பாக்கியம்,,..

 உன் மேல எனக்கு கோபம் இருந்துச்சு ரவி. ஆனா சில பெண்களும் தப்பா தான இருக்காங்க, சில ஆண்களும் தப்ப தான் இருக்காங்க அதாவது அவங்க சூழ்நிலை, வளர்ர விதம்,  அவங்களுக்கு கிடைத்த நண்பர்கள்.. நல்ல நண்பர்கள் நல்ல குடும்பம் எல்லாருக்கும் கிடைத்தால் எல்லாரும் நல்லவங்களா தானே இருப்பாங்க. அவங்க சூழ்நிலை அவங்க கெட்டவனா ஆக்குகிறது  ..

 அது அவங்களே  திருத்திக்கிட்டு வெளியே வரணும் நம்ம யாரையும் போயி நல்லவங்களா இரு இப்படி இருன்னு  திருத்த முடியாது”.. என்றாள்.

 “நான் திருந்திட்டேன்  சீதா என்னை நம்பு  , உன்னை தவிர நான் எந்த பெண்ணையும் இனிமேல்  திரும்பி கூட பார்க்க மாட்டேன்,   நீதான் எனக்கு எல்லாம் சீதா,,  பெண்களின் மேல் இருந்த தப்பான ஒரு கருத்தை உன்னை பார்த்து நான் மாத்திக்கிட்டேன் எல்லா பெண்களும் தப்பானவங்க கிடையாது, சில பெண்கள் அப்படி இருக்காங்க அதனால எல்லாரையும்  தப்பா நினைச்சுட்டேன் உன்ன பாக்குற வரைக்கும்.

 உன்னை பார்த்துட்டேன்..

 இனி நான் தப்பு பண்ண மாட்டேன் சீதா என்னை நம்புடா” என்றான்.

 “நீ மாறியிருக்கேன்னு  எனக்கு தெரியும்” என்றாள்.

 ரவி “எப்படி” என்று அவள் முகத்தை பார்க்க..

 “என் பிரண்ட்ஸ் சொன்னாங்க ..

 ரவி முன்னாடி மாதிரி இல்ல ரொம்ப திருந்திட்டான்னு சொன்னாங்க”..

 “அப்ப என்னை நீ நம்புறியா” என்றான்..

“நம்புறேன்,  நம்புறேன் இருந்தாலும் ஒரு சின்ன டவுட் இருக்கு” என்றாள்..

 “என்ன சீதா” என்றான்.

 “உன் சூழ்நிலை ரவி,  நீ இருக்குற இடம் அப்படி  ரவி,, நீயே சரியா இருந்தாலும் உன்னை சரியா இருக்க விட மாட்டாங்க” என்றாள்.

 “ஆயிரம் சூழ்நிலை அமைஞ்சாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ண நினைச்சா தான் தப்பு நடக்கும் சீதா. இல்லனா எதுவும் நடக்காது” என்றான்.

 “அது உனக்கு புரிஞ்சா சரி” என்றாள் சீதா.

 “சரி அப்போ நம்மளுக்கு எல்லாம்  சரியாயிடுச்சு தானே,  நீ இனிமே என் கூட இருக்குறீயா” என்றான் ஏக்கமாக.

 “நான் எங்க சொன்னேன் எல்லாம் சரியாச்சுன்னு” என்றாள்.

“அடப்பாவி இப்பதாண்டி இரண்டு பேரும்  பேசி சமாதானம்  ஆனோம்”… என்றான்.

” நீ சொன்ன உடனே நாங்க எல்லாம் மறந்து சார்ர அப்படி நம்பிடனுமா  என்ன, அதெல்லாம் நம்ப முடியாது”.. என்றாள் சிரித்தபடியே…

 அவளின் சிரிப்பை ரசித்தவன் “இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு” என்றவன்..

 “இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போயேன்  சீதா”  என்றான்.

 ‘ஐயோ என் மாமியார் பத்மா என்னை விட மாட்டாங்க இந்த இரண்டு நாளைக்கே அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டு வந்தது பெரிய விஷயமா போச்சு”. என்றாள்.

 “அம்மா கிட்ட நான் சொல்றேன் நீ ஒரு வாரம் இருந்துட்டு போமா” என்றான்..

 “முடியாது  ரவி” என்றாள்.

“அதெல்லாம் முடியும் வா தூங்கலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு  சென்றான்..

 சீதா ரவியை  பார்த்து “நீ அந்த ரூம்ல போய் படு ரவி” என்றாள்.

 அதெல்லாம் முடியாது என்றவன் அவள் அறையில் அவளை அணைத்தபடித்துக் படுக்க போக.

 என்ன என்பது பார்த்தாள்  சீதா, “ஒன்னும் பண்ண மாட்டேன் டி தூங்குடி” என்றவன் படுத்து சில நிமிடங்களில் தூங்கிவிட்டான்..

 இருவருக்கும்  நிம்மதியான தூக்கம் நீண்ட மாதம் கழித்து இருவருக்கும் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்தது போல் நன்றாக தூங்கி எழுந்தனர்.

 ரவி சொன்னது போல ஒரு வாரம் கழித்து தான் ஹைதராபாத் சென்று சீதாவை விட்டான் அந்த ஒரு வாரத்திலே ரவிக்கும் சீதாவுக்கும்  நல்ல புரிதல்  வந்திருந்தது, இனி நம் வாழ்க்கை   சந்தோஷம் இருக்கும் என்று நம்பிக்கை வந்திருந்தது இருவருக்கும்…

 ரவி எப்பொழுதும் குழந்தைகளை பற்றி கேட்டுக் கொண்டே இருப்பான்.

 சீதாவை அவ்வப்போது  மெல்ல அணைத்து நெற்றியில்  முத்தமிடுவான்..

 சீதாவுக்கே  ஆச்சரியம் ரவி இப்படி மென்மையாக நடந்து கொள்வது அவளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது..

 முழுவதுமாக சீதாவும் அவனை ஏற்று இருந்தால் ரவியும் முழுவதாக அவளை  ஏற்று வாழ்ந்துக் கொண்டிருந்தான்.

 சீதாவுக்கு 9 மாத தொடக்கத்தில் பிரம்மாண்டமாக வளைகாப்பை ஏற்பாடு பண்ணி இருந்தான் ரவி…

விலை உயர்ந்த சிவப்பு  காஞ்சி பட்டில், ஜொலித்தாள் சீதா.

 வளைகாப்புக்கு அனைத்து நண்பர்களையும் அழைத்திருந்தான்  ரவி.. ஜூலி, கண்மணி, ரமேஷ் சந்தோஷ் என  அவன் நண்பர்கள் அனைவரும் வந்திருக்க,, சிரஞ்சீவியும், சிவாவும் கூட வந்திருந்தனர்..

 சீதாவின் தம்பியாக நின்று   பிரபு அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தான்..

 விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது பத்மாவை கையில் பிடிக்க முடியவில்லை..

 ஊர் முழுவதையும் அழைத்து இருந்தார்,  ஊருக்கே விருந்து வைத்திருந்தார் வெங்கட்..

 மருமகள் பக்கத்திலேயே மகனை அமர வைத்து மருமகளுக்கு  நழுங்கிட்டார் பத்மா.

 பக்கத்தில் கதிர் அமர்ந்திருக்க மூன்று பேரையும் பார்க்க அவ்வளவு அழகா இருந்தது .

 சீதா மிகவும் சந்தோஷமாக இருந்தாள், அனைவரும்  அவளுக்கு வாழ்த்தி வளையல் போட்டு, அழகாக வளைகாப்பு பாடல்  பாடினார்கள் “சீதா  சீமத்தம், ஆனந்த வைபோவங்களே, சீதா சீமந்தம் ” என்று பாடல் பாடி சீதாவுக்கு வளையல் அடுக்க..

சந்தோஷத்தில் ஜொலித்தாள் சீதா,,

 வந்த அனைவரிடம் சாப்பிட்டு செல்லுமாறு கூறிக்கொண்டு சிரித்தவளை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரவி..

 கூட்டம் கொஞ்சம் குறையவும் ரவியை  பக்கத்தில் அழைத்தவள்.

” என்ன தூரத்தில் இருந்து என்னை  சைட் அடிக்குரீயா” என்றாள்.

 “ஏன் உன்னை  நான் தூரத்தில் இருந்து  தான் சைட் அடிக்கனுமா,, பக்கத்தில் இருந்து கூட சைட் அடிக்கலாமே ” என்றான்..

 ஜூலியும் கண்மணியும் “நாங்க இங்கதான் இருக்கிறோம் நீங்க ரெண்டு பேரும் நாங்க இல்லைன்னு பேசிகிட்டு இருக்கீங்க” என்றனர்..

 “சாரி தெய்வமே நான் உங்களை பார்க்கல” என்றவன்  வேகமாக கிளம்ப..

 சிரித்த சீதாவை ஜூலியும் கண்மணியும் அணைத்து கொண்டனர்,,..

 “ரொம்ப சந்தோஷமா இருக்கு சீதா உன்னையும் ரவியும் பார்க்க” என்றனர்..

 சீதாவோ அவர்களை இரண்டு நாள்  இருந்துவிட்டு சொல்ல  வேண்டும் என்று சொல்ல..”இல்லை சீதா நாங்க நைட்டே  கிளம்புறோம்” என்றனர்.

 வளைகாப்பு முடிந்தவுடன் சீதாவை குடும்பமாக  மேடையில் உட்கார வைத்து சுத்தி போட்டார்  பத்மா.

வந்த அனைவரின் கண்ணும் சீதா மேல் தான் என்று.

சீதாவிற்கு தான் பட்ட கஷ்டம் எல்லாம் தன்னை விட்டு  நீங்கிவிட்டது, இனி நான் என் குடும்பம், பிள்ளைகள்  என்று சந்தோஷமாக வாழ போகிறேன் என்று  அவள் நினைத்திருக்க.

சீதா என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ,  சீதாவுக்கு, கஷ்டமும், துன்பமும் ஒட்டி பிறந்தது போல அவள்  கூடவே வர..

இன்னும் ஒரு வாரத்தில், போலீஸ், கேஸ் வக்கீல், என்று அழைய போவதை அறியவில்லை சீதா.

அவள் பிள்ளைகள் பிறக்க போகும் வரை உட்கார முடியாமல் ரவிக்காக போறாட போகிறாள் சீதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!