Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 26 3

 “நீ யாரு இவ்ளோ பெரிய வயிறை வச்சுகிட்டு நைட் இங்க என்ன உனக்கு வேலை கிளம்பு” என்றான்..

 “ரவி என்னோட புருஷன்”என்று அவள் சொல்ல..



Advertisement

” புருஷனா?  இருந்தா காலையில வாம்மா இப்போ கிளம்பு,  இப்போ எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று அவர்களை விரட்டுவதிலே  இருந்தான் சேதுபதி..

Advertisement

 “எங்களுக்கு  வீடியோ புட்டேஜ்  காபி வேணும், அதுக்கு  தேவையான லெட்டர்  கோர்ட்ல இருந்து சைன் வாங்கி வந்திருக்கோம்”,.  என்று சிவா கூற.

Advertisement

 சீதாவுக்கு நிற்க முடியவில்லை சிரஞ்சீவி கையை பிடித்தபடி நிற்க “முதல்ல அவங்கள கூட்டிட்டு போங்க அவங்க முகத்தைப் பார்த்தாலே சரியில்ல காலையில வாங்க பார்க்கலாம்” என்றான் சேதுபதி..

Advertisement

 சீதா பரவால்ல  “நான் வெயிட் பண்றேன்,,  இப்ப முடிஞ்சா வீடியோவை  கொடுக்க முடியுமா” என்று கேட்க,,.

 “எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சீங்களா சிசிடி கேமராவை  நான் பாக்கெட்ல வச்சா சுத்திகிட்டு இருக்கேன் போம்மா..

 காலை வாம்மா பார்க்கலாம்”.. என்றான்.

 “சார் நாளைக்கு கோர்ட்ல, விசாரனை  நீங்க நைட்டே கொடுத்தால்தான் நாங்க ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கனும்” என்று கூற.

 “நீங்க என்ன முயற்சி பண்ணாலும் என்னால அதை இப்போதைக்கு கொடுக்க முடியாது..

 முடிஞ்சா நாளைக்கு அதுவும் கோர்ட் விசாரணை முடிஞ்சதுக்கு அப்புறம் தான் கொடுக்க முடியும்” என்றான்..

நான்கு பேரும்  முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டு சரி நாளைக்கு பார்க்கலாம் என்று நால்வரும் கிளம்பினார்கள்.

 சீதாக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்லை. நாளைக்கு  எப்படி ரவியை  பார்ப்பேன்,  அவனுக்கு என்ன சமாதானம் சொல்வேன் என்று விடிய விடிய தூங்காமல் முளித்து இருந்தாள்..

 நான்கு பேரும் கோர்ட்டுக்கு கிளம்பினார்கள் கோர்ட்டில் ஆங்காங்கே  ரவிக்கு எதிரான போஸ்டர்களை  வைத்துக் கொண்டு பலர் நிற்க.

 சில பெண்கள் ரவிக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் ரவிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்,  இல்லை அதைவிட மோசமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கத்தி ஆர்பாட்டம் பண்ண…

சீதாவுக்கு இதை பார்த்த வேதனையில் கண்ணீர் வந்தது, என் ரவி அப்படி இல்லை என்று கத்த தோன்றியது.

 இவர்கள் அனைவரும் காலையிலே சென்றிருக்க கோர்ட்  விசாரனை நேரம் நெருங்க,நெருங்க கூட்டம் இன்னும் அதிகமாக வந்தது…

 என்னென்ன  பெண்கள் சங்கம் இருக்கோ அத்தனை சங்கமும் ரவிக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டு பேனர்களை கையில் பிடித்து வைத்து கொண்டு ரவிக்கு எதிராக  ஆர்பாட்டம் பண்ண..

 சீதாவுக்கு அப்போது தான், இந்த கேஷின்  தீவிரம் தெரிந்தது,  இதிலிருந்து ரவியை எப்படி வெளியே கொண்டு வர வேண்டும் என்று  யோசனையிருந்தாள்..

 பெரிய போலீஸ் ஜீப்பிலிருந்து  ரவியின்  முகத்தை  மூடிய படியே  அழைத்து வந்தார்கள் ,..

  ரவி இறங்கியது நேராக அவர்கள் விசாரிக்கும்  விசாரனை அறைக்கு அழைத்து சென்றனர்..

 சீதா  ரவியை பார்க்கவில்லை அனைவரும் கத்திக்கொண்டு ரவியை அடிக்க போகும் முன் போலீசார் ரவியை பாதுகாப்பாக அழைத்து செல்வதை பார்த்தவளுக்கு இதயம் பயங்கரமாக துடித்தது.

 ரவியின்  கேஷ் விசாரணைக்கு நடக்கும் இடத்திற்க்கு  உள்ளே வர யாரையும் அனுமதிக்கவில்லை இவர்கள் எவ்வளவு போராடியும் சீதா வெங்கட், ரவி, சிவா யாரையும் உள்ளே வர  அலோ பண்ணவில்லை தீர்ப்பு வரும்  வரை வெளியே நில்லுங்கள் என்று விட்டனர் …

 வெங்கட்  ஏற்பாடு பண்ணி இருந்த லாயர்  மட்டும் தான் உள்ளே சென்று வந்தார்.

 ரவியின் தரப்பு லாயர் எவ்ளோ எடுத்து சொல்லியும்..

 ரவிக்கு  எதிராக அத்தனை சிசிடிவி வீடியோ  சாதகமாக இருக்க,  இன்னும் ஒரு வாரத்தில் ரவியின் கேசிற்க்கு தீர்ப்பு வழங்க உத்தரவிட்டனர்…

 எதிர் தரப்பு வக்கீல் வந்து அனைத்து மீடியாக்கள் முன்னாலும் பேசிக் கொண்டிருந்தார்.

 ரவி எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை..

 ரவி கேஸ் பத்தி அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

” இரண்டு பெண்கள்  கொலை வழக்கு கேசில் கைதி செய்ய பட்ட ரவிக்கு அதிகபட்ச தண்டனையாக உடனே தூக்கிலிடும்  தீர்ப்போ, இல்லை மூன்று  ஆயுள் தண்டனையோ இல்லை அதைவிட கடுமையான தண்டனை  உடனே கொடுக்க வேண்டும் அனைத்து ஜட்சும் பேசி முடிவு எடுக்கப்பட உள்ளது, அனைத்தையும்  விசாரித்து முடித்து விட்டனர்,,  இனி தீர்ப்பு ஒரு வாரத்தில் என்று எதிர் தரப்பு லாயர் சொல்ல.

 அங்கே உள்ள அனைவரும் “ஏய். நியாயம் கிடைத்து விட்டது” என்று ஜாலியாக குதித்து ஆட்டம் போட்டனர்..

இதை கேட்ட சீதா  மயங்கி சரிந்தாள்.

 ஹாஸ்பிடலில் அட்மின் செய்யப்பட்டிருந்தால்…

சீதாவுக்கு எந்த உணர்வும் இல்லை..

 நீண்ட நேரம் கழித்து  கண் முழித்த அவளுக்கு அப்படி ஒரு வேதனையான உணர்வு.

 என் ரவியை  எப்படியாவது காப்பாற்றியே  தீர வேண்டும் என்று அவள் ஒரு  முடிவோடு இருக்க..

 வெங்கட் வேதனையாக அமர்ந்திருந்தார்..

  அவ்வளவு  தான் என் மகன் வாழ்க்கை முடிந்தது என்று..

 அடுத்த விசாரணை ஏதும் இல்லை நேராக தீர்ப்பு தான் விசாரிக்க அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை…

சீதாவும், அவள் நண்பர்களும், வெங்கட்டும் பல பேரை சந்தித்து ரவிகேஷை மறுவிசாரனைக்கு  அனுமதி கோரி மனு கொடுக்க..

அவர்கள் சந்தித்த அனைவரும், எங்களால் முடியாது, வேற அதிகாரியை பாருங்கள் என்று கூற, பகல்  முழுவதும் அழைந்தது தான் மிச்சம், அவர் போகாத அதிகாரிகள் இல்லை, அனைவரும் கைவிட.

ஒருவர் மட்டும் இந்த முடிவை, மறுவிசாரனை பண்ண சொல்ல  சீ எம் முக்கு  பவர் இருக்கு, மத்த யாரலையும் ஒன்னும்  பண்ண முடியாது என்று சொல்ல.

 சீதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,, போன இடமெல்லாம் ஒன்றும் நம்மால் செய்ய முடியாது விசாரணைக்கு இடமே கிடையாது எந்த கோர்ட்டுக்கும் நாம  சொல்லவும் முடியாது நேராக தீர்ப்பு என்று சொல்ல..

 என்ன செய்வது என்று யோசித்தவள்.. நேராக அவள் கிளம்பியது தலைமைச் செயலகம் தான்..

 என்ன பண்ணப் போகிறாள் சீதா என்று சிரஞ்சீவியும், சிவாவும், வெங்கட்டும் அவள் பின்னாடியே வர நேராக சென்றவன் தலைமைச் செயலகத்தின் வாசல்  முன் அமர்ந்து கொண்டாள்..

 அனைவரும் யார் இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி தலைமையச் செயலகம் வாசலில்  வந்து அமர்ந்திருக்கிறாள் என்று அனைவரும் கேட்க.. அவளோ பதில் சொல்ல வில்லை…

 தலைமைச் செயலகத்தில் சீ எம் இல்லை..

 அவர் வெளிநாட்டிற்க்கு பயணம்  சென்றிருக்க,  சீதாவுக்கு  இது தெரியாது.

ரவியை  காப்பாத்த வேண்டும் என்று அமர்ந்து கொண்டாள்..

 சிறிது நேரம் கழித்து.. சீதாவின் எண்ணம் புரிந்த சிவா, சிரஞ்சீவி, வெங்கட்டும் அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார்கள்.

 ஒரு போலீஸ்கார் வந்து “‘ஏன் நீங்க நாலு பேரு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க என்ன பிரச்சனை உங்களுக்கு,  பேசி முடிக்கலாம் வாங்க” என்று அழைக்க

“இல்லை எங்களுடைய   பிரச்சனை சீ எம் வந்து கேக்கணும்” என்றனர்.

“சீ எம் வர  இன்னும் இரண்டு நாளாகும் உங்களால்  இங்க இருக்க முடியாது கிளம்புங்க” என்று கூற..

 “இந்த இடத்தை விட்டு நகர முடியாது” என்று சீதா 2 மணி நேரம் அமைதியாக அமர்ந்திருக்க..

 இது தெரிந்து கொண்ட அழகு மலரும்,  சஞ்சீவ்வும்  தனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரும் அழைத்துக் கொண்டு வர.. ஒரு பெரும் படை சீதாவின் பின் அமர்ந்திருந்தது…

 சீதா கூட இதை எதிர்பார்க்கவில்லை முதலில் நான்கு பேர்தான் அமர்ந்திருந்தனர் பிறகு சிவாவுக்கு வேண்டியவர்கள்  வெங்கட்ரோடு இருந்த அரசியல்வாதிகள் என்று நிறைய பேர் வந்து கொண்டே இருக்க அன்று இரவே பெரிய கூட்டம் கூடியது..

 இது பெரிய அளவில் மீடியாக்களில்  முன் பேசப்பட அனைத்தும் டிவி வீடியோ சேனலும் அங்கே தான் இருந்தனர்.

 “என்ன,  எதுக்காக இங்க போராட்டம் செய்கிறீர்கள்” என்று  சீதாவிடம் கேட்க.

 “எனது கணவர் ரவி கேஷை   மறுவிசாரணை செய்ய வேண்டும் தீர்ப்பு வழங்கக்கூடாது இன்னொரு வாய்ப்பு எங்களுக்கு அளிக்க வேண்டும்.. இதுவே எங்களுடைய  கோரிக்கை” என்று சீதா  கூற.

 அனைத்து மீடியா சேனல் காரர்களுக்கும் இது ஆச்சரியம். ‘ரவி உங்க கணவரா”  என்று அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்க “ஆமாம்” என்று பதிலளித்திருந்தாள் சீதா..

 “பின்பு  ஏன் உங்கள் கணவர் பிசினஸ் நேபாளத்தில் செய்கிறேன் என்று சொன்னீர்கள்”  என்று கேட்க..

“ஏன் என் கணவர் ரவி  நேபாளத்தில்  பிசினஸ் செய்யக்கூடாதா” என்றாள் சீதா…

 இதுவே அன்றைய செய்தியாக இருந்தது பிரபல ப்ரொடியூசர் ரவியின்  மனைவி சீதா தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!