“கேஸ் ரொம்ப ஸ்டாங்கா இருக்கு சீதா, கொலை நடந்த இடத்தில் தான் ரவி இருந்திருக்கிறார், ரவியின் ரூமில் தான் கொலை நடந்திருக்கு.
Advertisement
Advertisement
யாரோ ரெண்டு பெண்களையும் கொலை செய்துவிட்டு அதை ரவியின் பெட்டின் மேலேயே போட்டுட்டு போயிருக்காங்க …
ரவியை அந்த ரெண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டதோடு சேர்த்து அரெஸ்ட் பண்ணி இருக்காங்க அதனால கேஸ் ரொம்ப ஸ்டாங்கா இருக்கு, அந்த பெண்களோட மேல இருந்த ரத்தக்கரை ரவி மேலையும் இருக்கு.. அதனால ரவி தான் அந்த கொலையை செய்திருக்கிறான் என்று கேஸ் ரொம்ப ஸ்டாங்கா இருக்கு வீடியோ ஆதாரம் போட்டோ என எல்லாம் பக்காவா செட் பண்ணி ரவியை இதுல மாட்டி விட்டிருக்காங்க ரவி இதிலிருந்து வெளியே கொண்டு வர்ரது ரொம்ப கஷ்டம்” என்றான் சிரஞ்சீவி..
Advertisement
“ரவி இத பண்ணி இருக்க மாட்டார் சிரஞ்சு” என்றாள் சீதா.
“அது எங்களுக்கு தெரியும்டா நம்ம எப்படி இதுல இருந்து ரவியை வெளியே கொண்டு வர்றது, ரவி கிட்ட எங்களால நெருங்க முடியல கொலை நடந்த ஷிப்புக்குள்ள நம்மள அலோ பண்ண மாட்டேங்குறாங்க”.என்றான்.
“கொல நடந்தது ஷிப்புலயா” என்றாள் சீதா.
” ஆமா சீதா கொலை ஷிப்பில தான் நடந்திருக்கு. ஷிப் சென்னை வந்திருக்கு,, சென்னை வந்த ஷிப்பை பார்க்கத்தான் ரவி போயிருக்கான்.. அவன் போன நைட்டே ரெண்டு கொலையும் நடந்திருக்கு.
“ரவியை ஜாமில்ல எடுக்கறது ரொம்ப கஷ்டம்,, ரவிக்கு எதிராக நிறையா பேர் இருக்காங்க..
ரவியை எங்களை பார்க்கவே விடல. அவர் கிட்ட பேச கூட எங்களால முடியல. இப்ப ரவி எங்க இருக்காருன்னு கூட எங்களுக்கு தெரியல.. கொலைகாரன் யாருன்னு கண்டு பிடிக்கனும் சீதா”..
“ஷிப் எங்க இருக்கு”?.
“சென்னை துறைமுகத்தில் தான் நிக்குது ஷிப், அதுல பயணம் பண்ணவங்க எல்லாரும் வெளியே வந்துட்டாங்க ஆனா வேலை செய்றவங்க மட்டும் அங்க தான் இருக்காங்க” என்றான் சிவா.
“நீங்க ஷிப்புக்கு போய் பாக்கலையா” என்றாள் சீதா..
“நான் ஷிப்புக்கு போனோம் சீதா எங்களை விடல..
அதனால நாங்க ரவியை வெளியே எடுக்க வக்கீல் மூலமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்.”
வெங்கட் அமைதியாக இருக்க “மாமா நீங்க வருத்தப்படாதீங்க” என்று ஆறுதல் சொன்னவள்.
சிரஞ்சீவியிடம் என்ன,ஏது நடந்தது என்று ரவியின் கேசை பற்றி கேட்க..
அவளுக்கு ஒரு வீடியோ ப்பிளே செய்து காட்டினான்..
அதில் ரவி வெள்ளை பனியனோடுபெட்டில் படுத்திருப்பது போல் பக்கத்தில் தீப்தீயும் சோணாலியும், செத்து கிடுப்பது போன்ற போட்டோ, வீடியோ,, போலீசார் வந்து ரவியை கைது செய்து போது எடுத்த வீடியோவை பார்த்தவள்.
‘”இதுல பாரு சிரஞ்சீவி ரவி ஏதோ போதையில் இருந்து எழுந்தது போல் தலையில கைவைக்கிறார் பாரு” என்றாள் சீதா..
“ஆமாம் சீதா ரவிக்கு எதுவும் தெரியாது போல தான் தெரிகிறது அவன் திரும்பி அவங்க ரெண்டு பேத்தையும் பார்த்து ஷாக்காவது போல் தான் தெரிகிறது யாரோ பிளான் பண்ணி ரவியை மாட்டி விட்டு இருக்காங்க” என்று கூற..
“கேஸ் என்னைக்கு விசாரனைக்கு வருது”.
“நாளை மறுநாள் வருது சீதா”.
“அதுக்குள்ள நம்ம கண்டு பிடிக்கனும்” என்றவள்.
“சரி வா நாம கிளம்பலாம்”.என்றாள் சீதா.
“எங்க கிளம்ப போற சீதா இப்பதான் ஏர்போர்ட்டிலிருந்து வர்ற நாளைக்கு போகலாம்” என்று வெங்கட் கூற
” இல்ல, இல்ல மணி ஆறு தான் ஆகுது நாம ஷிப்ல போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் வாங்க, வாங்க மாமா” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சீதா கிளம்ப.
அனைவரும் ஷிப் வரைக்கும் வந்து விட்டனர்.. ஷிப் உள்ளே போக அனுமதிக்க முடியாது என்று அங்கே உள்ள போலீஸ் சொல்ல.
சிரஞ்சீவியும், சிவாவும் அந்த போலீஸ் காரரிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்..
சீதாவும் அந்த போலீஸ்காரரை பார்த்து “ஷிப்பே என் புருஷனோடது இந்த ஷிப்பில தான் கொலை நடந்திருக்கு,, அத நாங்க விசாரிக்க கூடாதா” என்று கேட்க.
“மேம் ஃபுல் போலீஸ் செக்யூரிட்டி இருக்காங்க நீங்க ஏதாவது போய் குழம்ப பண்ணிட்டீங்கன்னா அப்புறம் கஷ்டம்,, கேஸ் முடியற வரைக்கும் யாரையும் ஷிப்ல அலோ பண்ண முடியாது” என்று அந்த போலீஸ்காரர் கூற.
வெங்கட் தனக்கு தெரிந்த அமைச்சர்களிடம் பேசி,, போலீஸ்காரரிடம் பேசி புரிய வைத்து அனுமதி வாங்கி உள்ளே வந்தனர்..
ஆட்கள் யாரும் நடமாடுவது போல் தெரியவில்லை அங்கு வேலை செய்பவர்களை பாதிப்பேர் அனுப்பி வைத்திருந்தனர்.. பாதி பேர் மட்டும் வேலை செய்து கொண்டிருக்க அவர்களையும் போலீஸ்காரர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்..
சிவா, சிரஞ்சீவி, வெங்கட் அவர்களுக்கு ரவியின் அறை தெரியாது ஆனால் சீதாவுக்கு தெரியும் சரியாக அவன் அறைக்கு கூட்டி சென்றவள்,,
அவன் ரூமுக்கு செல்ல பார்க்க அங்கே செக்யூரிட்டி இன்னும் டைட்டாக இருந்தது கொலை நடந்த ரூமுக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை.
இரண்டு போலீசும் எப்பொழுதும் வாசலில் நின்று இருக்க.
சீதாவை அறைக்கு உள்ளே செல்ல விடவே இல்லை அவர்கள்..
சீதா நான் ஒரு ஐந்து நிமிடம் அறையை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூற அவளுக்கு அனுமதி வழங்கவில்லை.
சீதா எவ்வளவு முயற்சி பண்ணியும் விடவில்லை ..
அவர்களுக்கு ரவியின் அறைக்கு செல்ல அனுமதி தராததால் ஷிப்பில் உள்ள சிசிடி கேமரா செக் செய்ய போனாள்.
கொலை நடந்த அன்னைக்கு இருக்கிற வீடியோ அனைத்தையும் போலீஸ்காரர்கள் எடுத்து சென்று இருக்க..
அங்கே ஒரு புட்டேஜ்ஜும் இல்லை..
சீதா அனைத்து கேமராக்களும், வொர்க் செய்கிறது என்று செக் செய்து கொண்டாள்.
“யார் வந்து இந்த வீடியோ எல்லாம் எடுத்து சென்றார்கள்”? என்று சீதா கேட்க.
“சேதுபதி” என்ற போலீஸ் காரரின் பெயரை சொன்னார், அந்த கேமரா ரூம்பில் வேலை பார்க்கும் நபர் ஒருவர்..
சீதா “அந்த போலீஸ்காரனை பார்த்து விசாரிக்கலாமா சிரஞ்சீவி” என்று சொல்ல.
“சரி வா சீதா” என்று.
அந்த போலீஸ்காரரை பார்த்து சென்றனர் இரவு வெகு நேரம் ஆகி இருந்தது.
பதினோரு மணிக்கு ரவுண்டில் இருந்த சேதுபதியை “யாரோ பார்க்க வந்திருப்பதாக கூற”.
“நாலு பேர் வந்திருக்காங்க சார் அதுல ஒரு பிரெக்னன்ட் லேடி இருக்காங்க அவங்கள பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்று அந்த போலீஸ் டேசனில் வேலை செய்யும் அதிகாரி கூற..
“வெய்ட் பண்ண சொல்லு” என்ற சேதுபதி அவன் எப்போதும் போகும் ரூட்டில் சென்று விட்டே வந்தான்..
சீதாவுக்கு உட்காரவே முடியவில்லை.
சிவாவும், சிரஞ்சீவியும் வீட்டிற்க்கு செல் என்று கூற.
இருக்கேன் என்றவள், உட்கார முடியாமல் நடந்து கொண்டே இருந்தாள்.
சேதுபதியின் கார் சர்ர் என்று போலீஸ் டேசனில் வந்து நிற்க..
நாற்பது வயதுடைய சபின்ஸ்பெக்டர், அந்த இரவு நேரத்திலும் சுறு சுறுப்பாக, வேகமாக நடந்து வந்தவன், சீதாவை ஒரு பார்வையை பார்த்து விட்டு அவன் அறைக்கு செல்ல.
வெங்கட், சிவா, சிரஞ்சீவி, சீதா நால்வரும் “சாரை பார்க்க வேண்டும்” என்று கான்ஸ்டெபிள் முன் நின்றார்கள்.
“இருங்கமா சார் கூப்பிடுவாரு,ஒரு பத்து நிமிஷம்” என்று கான்ஸ்டபிள் சொல்ல..
நான்கு பேரும் அமைதியாக காத்திருந்தனர். சரியாக பத்து நிமிடம் கழித்து பெல் அடிக்க.
” இப்ப போங்க” என்றார் கான்ஸ்டபிள்.
நால்வரும் உள்ளே வந்ததும்..
” உட்காருங்க” என்று சொன்னவன்..
” ஏன் இந்த நேரத்துல வந்து டைம் வேஸ்ட் பண்றீங்க” என்றவன்.
‘சொல்லுங்க என்ன விஷயம்” என்றார்..
“சார்” என்று வெங்கட் தான் பேச ஆரம்பித்தார், “சார் என் பையன் ரவி கேஸ் வீடியோ புட்டேஜ் ஃபுல்லா உங்ககிட்ட இருக்குன்னு சொன்னாங்க இந்த ஃபுட்டேஜ் கொஞ்சம் கிடைக்குமா “?.. என்று கேட்க.
“ரெண்டு பொண்ணுங்களை கெடுத்து கொன்னுட்டு, அவங்க கூடவே உன் மகன் படுத்திருப்பான் அந்த வீடியோ போட்டேஸ் உனக்கு வேணுமா அசிங்கமாக இல்ல வெளியே போடா”என்று சேதுபதி கத்த.
“என் ரவி அப்படி பண்ணி இருக்க மாட்டார்” என்றாள் சீதா.