ப்ரொடியூசர் மனைவி சீதா இப்பொழுது கணவருக்காக தலைமைச் செயலகம் வாசலில் நின்று போராடும் சீதா என்று மீடியாக்கள் பேசிப்பேசியே அதனுடைய டி ஆர் பி ஐ ஏற்றிக்கொண்டிருக்க.
வெளிநாடு சென்ற முதலமைச்சரோ சீதாவின் போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார், அவர் இரண்டு நாள் கழித்து வருவதாக தான் இருந்தார்.. சீதா நிறைமாத கர்பினியாக போராடுவதை பார்த்தவர் அடுத்த நாளே இந்தியா செல்ல முடிவு பண்ணி வந்து கொண்டிருந்தார்..
Advertisement
சீதாவுக்கு ஒன்றும் முடியவில்லை வயிற்றில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டிருந்தாள்.
மறுநாள் மாதர் சங்கத்திலிருந்து பலர் வந்து சீதாவின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூற..
Advertisement
Advertisement
சீதா முடியாது என்றாள்.
அவள் கர்ப்பிணியாக இருப்பதை பார்த்த, மாதர் சங்க பெண்கள் வேண்டாமா தீர்ப்பு, உன் கணவனுக்கு எதிராக தான் இருக்கும், உன் கணவன் தப்பு செய்திருக்கான் என்று அவர்கள் பேச.
Advertisement
“என் கணவர் தப்பு செய்திருக்க மாட்டார்” என்று சீதா உறுதியாக கூற.
“கோர்டே தீர்ப்பு சொல்ல போறாங்க நீ என்னம்மா உன் கணவனுக்கு சப்போர்ட் பண்ணுற” என்றுகூற.
“என் கணவனை பற்றி எனக்கு தெரியும், அவர் இதை செய்திருக்க மாட்டார்” என்று உறுதியாக சீதா பேச.
சீதா பேட்டியை பார்த்த முதலமைச்சர் அவளுக்கு காணொளியில் போனில் அழைத்து தங்கள் கோரிக்கையை ஏற்று தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க..
“எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும்,, என் கணவன் ரவி கேஷில் மறுவிசாரனை செய்ய வேண்டும் நீங்கள், அதற்கு உத்தரவு தர வேண்டும்” என்று சீதா முதலமைச்சரிடம் கேட்க..
“உடனே என்னால் உத்தரவு தர முடியாதும்மா கொஞ்ச நேரம் காத்திருங்கள் நான் அதிகாரிகளிடம் பேசி விட்டு உங்கள் கணவரின் கேஷிற்க்கு மறு விசாரணைக்கு, தர முடியுமா என்று கேட்டு பதில் சொல்கிறேன்” என்றார் முதலமைச்சர்.
“சரி சார்” என்று சீதா காத்திருக்க..
சிறிது நேரத்தில் மறுபடியும் சீ எம் சீதாவை கணொளியில் அழைத்தவர்,, “சாரி ம்மா என்னால் முடியாது கோர்ட்டிலிருந்து மறு விசாரணைக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டார்கள், உங்க கோரிக்கை கைவிட்டு விட்டு கழைந்து சொல்லுங்கள்” என்று கூற..
“முடியாது சார் எங்களுக்கு ஒரு வாய்ப்பு நீங்கள் அளித்தே தீர வேண்டும்,, இல்லை என்றால் என் உயிர் இங்கேயே போகட்டும்” என்று சீதா போனை கட் செய்து விட்டு அங்கே அமர்ந்த விட ..
சீ எம் மால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர் எவ்வளவு சொல்லியும்..
கோர்ட்டில் இருந்து மறு விசாரனை செய்ய முடியாது, ரவியின் கேசில் அனைத்தையும், விசாரித்து முடிந்து விட்டனர் என்று கூற ..
சீதா இங்கே வந்து அமர்ந்து ஒரு நாளாகி இருந்தது. அவள் எந்த சூழ்நிலையிலும், தன் நிபந்தனையில் இருந்து பின் வாங்க கூடாது என்று வைராக்கியமாக அமர்ந்திருக்க.. அவளுக்கு ரவியை இந்த கேஷில் இருந்து காப்பாற்றியாக வேண்டும் என்று இருக்க.. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றது ஆனால் சீதாவும், சில நண்பர்கள் மட்டும் அங்கே அமைந்திருக்க..
மறுநாள் சீ எம் மே, சீதா அமர்ந்திருந்த இடத்துக்கே வந்திருந்தார்.
சீதா நிமிர்ந்த சீ எம் மை பார்த்து கண்கலங்கி, “என் கணவர் தப்பு செய்திருக்க மாட்டார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க சார், நான் என் கணவர் தப்பு செய்ய வில்லை என்று நிருப்பித்து காட்டுகிறேன்” என்று கூற.
சீதாவை நடிகையாக தெரியும் அவருக்கு,, அவள் கண்கலங்கி கேட்டதும், அவருக்கு கண் கலங்கியது..
“முதலில் எழுந்து வாங்க உங்கள் கோரிக்கை நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்று வாக்கு கொடுக்க..
சீதாவோ “நீங்க கண்டிப்பாக என் கணவர் கேஸ்சுக்கு மறு விசாரனை பண்ண வாய்ப்பு அளிக்க வேண்டும்” கூற.
“என் மேல் நம்பிக்கை இல்லையா, நம்பிக்கை வைத்து வாருங்கள்” என்று அவர்களை அந்த போராட்டத்திலிருந்து கலைந்து செல்ல கூறிவிட்டு..
சீதாவையும் அவள் நண்பர்கள், வெங்கட்டையும் மட்டும் தன் ஆபீஸ் ரூம்பிற்கு அழைத்து சென்றார்..
சீதாவிடம் அனைத்தும் கேட்டுக் கொண்டவர்..அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் கீழ் .. சில அதிகாரிகளிடம் பேசி, ஒரு நிரபறாதி தண்டிக்கப் படக்கூடாது என்று அவரின் கோரிக்கையை கோர்ட்டுக்கு எடுத்துச் சொல்லி மறு விசாரணை செய்ய சொல்லி அவர் மனு அனுப்பி வைக்க..
அதை ஆராய்ந்து பார்த்த அதிகாரிகள்.. சீதாவின் கோரிக்கை ஏற்று,
அவர்களும் சரி என்று, சீதாவுக்காக ஒரு வாய்ப்பு கொடுக்க..
சீதா “நன்றி” என்று சீ எம் காலில் விலப்போக.. சீத்தாவை தடுத்து சீ எம்..
“உங்களைப் பார்த்தால் உங்கள் கணவர் தவறு செய்திருக்க மாட்டார் என்று எனக்கு தோன்றுகிறது..
உங்கள் கணவரின் கேஷில் வேற ஏதாவது பிரச்சனை வந்தால் என்னை அணுகவும்” என்றார்..
“எனக்கு இன்னொரு உதவி செய்து கொடுக்கணும்”..என்றாள் சீதா..
“என்னம்மா” என்று கேட்க..
“எனது கணவரின் ஷிப்பில் தான் கொலை நடந்தது அங்கே நாங்கள் கேசுக்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எங்களுக்கு, போலீஸ் காரர்கள் ஷிப்பிற்குள் செல்ல தடைவிதிக்கின்றார்கள். ஷிப்பிற்குள் சென்று பார்க்க அனுமதி தாருங்கள்”. என்று கூற..
” சரி மா”என்று தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு கடிதம் எழுதி அதில் சைன் போட்டுக் கொடுத்திருந்தார் இன்றைய சீ எம்….
சி எம் மிற்கு பெரிய நன்றியை சொல்லிவிட்டு, சீதாவுடன் அனைவரும் கிளம்பினார்கள்..
சீதாவிற்கு உடல் சோர்வாக இருக்க, வீடு சென்று குளித்து சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பினாள் சீதா.
வெங்கட் சீதாவை பார்த்து நீ இருமா நாங்க ஷிப்க்கு போய் பார்த்துட்டு வருகிறோம், என்று சொல்ல.
“இல்லை மாமா என்னால ரவியை காப்பத்தாம இருக்க முடியாது” என்றவள்..
அவர்களுடன் கிளம்பினான்…
இருட்டு அறையில் படத்திருந்தான் ரவி,, அவனுக்கு என்ன நடந்தது ஏது நடந்தது என்று எதுவும் தெரியவில்லை
சென்னைக்கு வந்த ஷிப்பை எப்படி இருக்கிறது என்று பார்க்க சென்றிருந்தான்.
அனைத்தையும் சரி பார்த்துவிட்டு. மீட்டிங்கில் சில வர்றை சரிபார்க்க சொன்னவன், சோர்வில் அவன் அறைக்கு வந்த படுத்து தூங்கி இருந்தவனை எழுப்பி இருந்தார்கள் போலீஸ்காரர்கள்..
என்னவென்று ரவி திரும்பி பார்க்க பக்கத்தில் தீப்தியும் சோணாலியும் பிணமாக கிடக்க ..
அதிர்ந்து போனான் ரவி அவன் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவனை அரஸ்ட் செய்து வைத்து வந்தனர்..
கையில் அவன் போனும் இல்லை அவன் யாரிடம் உதவி கேட்கவும் முடியவில்லை அவன் முகத்தை மூடித்தான் பொலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தார்கள்..
இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அவனுக்கு எதுவும் தெரியவில்லை ஏன் அவனைப் பேசக்கூட விடவில்லை அவர்கள்..
தன்னை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்குவதா,,? ..
இதை தெரிந்த தன் குடும்பம் எப்படி பாதிக்க படும், சீதா என்ன மனநிலையில் இருப்பாள், வயிற்றில் குழந்தையிருக்கும் சமயத்தில் இதை எப்படி அவள் தாங்குவாள், என்று புலம்பிய படியே இருட்டு அறையில், கை, கால்கள் கட்ட பட்டு இருக்க,, உடலெல்லாம் இரத்தம் கன்ணி போய் வலியெடுக்க, முணங்கியபடியே இருந்தான் ரவி.
ரவி இருக்கும் அறைக்க வந்த ஒரு கான்ஸ்டெபல், ரவியின் கைகட்டை அவிழ்த்து விட்டு , சாப்பிடு என்று உணவு கொடுக்க, வேண்டாம் என்றான் ரவி..
அவரும் “மெதுவாக கோஞ்சமாக சாப்பிடுப்பா” என்றார்.
“எப்படியோ என் கேஷை விசாரிக்காம நீங்க என்னை தூக்குல தான் போடுவீங்க, அதுக்குள்ள நான் சாப்பிடாம செத்துப் போறேன்” என்ற ரவி சொல்ல…
“ஏன் பா நீ தூக்குல தொங்கனும்” என்றால் கான்ஸ்டபிள்”.
“சரியா விசாரிக்காமல் ஸ்ட்ரெயிட்டா நீங்க தண்டனை கொடுத்தா”?.
“ஏய் கவலைப் படாதப்பா உன் பொண்டாட்டி வெளியே போராட்டம் பண்ணிட்டு இருக்க, உன் கேஸ் மறு விசாரணை பண்ணுவாங்க” என்று அந்த கான்ஸ்டபிள் கூற.
“என் பொண்டாட்டியா என் பொண்டாட்டி சீதா வா”? என்றான் ரவி..
“ஆமாப்பா உன் பொண்டாட்டி தான் முதலமைச்சர்கிட்ட பேசி சம்மதம் வாங்கி இருக்கா,, உன் கேசை மறுவிசாரனை பண்ணுறதுக்காக ,,இப்போ அதுதான் லேட்டஸ் நியூஸ் எல்லாரும் இதை தான் பார்த்துட்டு இருக்கோம்”..