Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -20

 

 

அத்தியாயம் 20:

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

பருவத்தின் திருமணநாளுக்கு முதல் நாள் பத்மநாதனின் உறவில் ஒருவர் இறந்துவிட சிறியவர்களை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு விடிந்தவுடன் வந்துவிடுவதாக சொல்லி சென்றவர்கள்… அதை பயன்படுத்திக்கொண்ட மகன்கள் மற்றும் மகள்கள் நால்வரும் சேர்ந்து அன்னை தந்தையை சந்தோசப் படுத்த தங்கள் கைகளால் உணவினை சமைத்து வைத்து காத்திருந்தனர்… நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு வந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்… இவர்களை அதிகம் காக்கவைக்காமல் வீடுவந்துசேர்ந்தனர்… அதுவும் உயிரற்ற உடல்களாக.

 

 

Advertisement

 

 

 

 

இந்த நிகழ்வை ஜீரணிக்க முடியாமல் அழுகையும் ஓய்ந்து போயிருந்தனர். 

 

 

 

 

 

அப்பொழுது தன் மகளை காண ஆசையாசையாக சுந்தரத்துடன் வந்த பார்வதி கண்டது உயிரற்ற மகளின் உடலையும், அவரின் கணவன் பத்மநாதன் மற்றும் மருதாயியின் உடலைத்தான்… 

 

 

 

 

ஆசையாசையாக மகளுக்கு பிடிக்குமே என திரட்டி பால் செய்து கொண்டுவந்தவர் கண்டது வீட்டிற்கு முன் கும்பலாக நின்றுருப்பதும், அங்கு இருந்த பெண்களின் அழுகை சத்தமும் தான் கேட்டதும், என்னமோ ஏதோ என்று பதறியவர், ஒரு நிமிடம் கூட தயங்காமல் கூடிநின்ற அனைவரையும் நகர்த்திக்கொண்டு சென்றவர் கண்டது மகளின் உடலை கண்டதும் பெரிதா உடைந்து போய் விட்டார்…  

 

 

 

 

 

அங்கு இருந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட சுந்தரம்… தானே முன்னே நின்னு அனைத்து காரியத்தையும் செய்தார்… அவருக்கு துணையாக அம்முவினால் காப்பாற்ற பெண்ணின் பெற்றவர்களும் விஷயம் கேள்விபட்டு உடனே வந்தவர்கள் சூழ்நிலையை உணர்ந்தவர்கள் சுந்தரத்துற்கு உதவியாக காரியத்தில் இறங்கினர். 

 

 

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சுந்தரத்திற்கு துணையாக அனைத்தையும் உடனிருந்து செய்தனர்… இந்த விபத்தினால் ஓய்ந்து  போயிருந்த பிள்ளைகள் ஒரு பக்கம், மகளை காண ஆசையாக வந்த தாய் ஒரு பக்கம் இருக்க யாரை சமாதானம் செய்வது எனத்தெரியாமல் தவித்து போய்விட்டார் சுந்தரம்.

 

[the_ad id=”6605″]

 

 

காரியம் முடிந்தவுடன் அனைவரும் சென்றுவிட மீதியிருந்தது இவர்கள் ஆறு பேர் மட்டுமே… சுந்தரம் ஓரளவு பிள்ளைகளை சமாதானம் செய்து தேற்றி சாப்பிட வற்புறுத்தியதில் சிறிது உணவினை உண்டர்கள், சற்று சுயம் பெற்றவர்கள், மூலையில் அமர்ந்து இலக்கின்றி எதையோ வெறித்த பார்வதியிடம் வந்தனர்… 

 

அரவம் கேட்டு திரும்பிபார்த்த பார்வதி குழந்தைகளை கண்டதும் இவ்வளவு நேரம் அடக்கிவைத்திருந்த அழுகையை ஒரே மூச்சாக அழுது தீர்த்துவிட்டார்… உமா, “பாட்டி இனி இந்த ஊரில் இருக்க வேண்டாம்… எங்கேயாவது போய்விடலாம் பாட்டி… இங்க இருக்க இருக்க அப்பா அம்மா நியாபம் தான் அதிகமாக இருக்கு பாட்டி”… “ஆமாம் பாட்டி… அக்கா சொன்னமாதிரியோ போய்டலாம் பாட்டி எனக்கூறிய கண்ணனின் கூற்றில் மனதில் பாராங்கல்லை வைத்தது போல் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது”.

 

 

 

 

சிறிது யோசனைக்கு பின் சுந்தரத்திடம் யோசனை கேட்டு ஒரு வருடம் வீட்டை லீசுக்கு விடலாம் என முடிவு செய்தார் பார்வதி… அந்த யோசனையை சிறியவர்களிடம் கூறி, அவர்களின் சம்மதத்தையும் பெற்றபின், அதற்கான வேலையை விரைவாக செய்து முடித்தனர். 

 

 

 

அந்த வேலை முடிந்த அடுத்த வாரமே வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு, போலீஸில் வழக்கு பதிவு செய்து இருந்ததால் அவர்களிடம் தகவல்கள் கூறி பேத்திகள் மற்றும் பேரன்களை கூட்டிக்கொண்டு அல்லியூர் சென்று விட்டார் பார்வதி. 

 

 

 

 

அல்லியூர் வந்தவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பாட்டியை இழந்த சோகம், புதிய ஊரின் சூழ்நிலை அனைத்து சேர்ந்து அவர்கள் இயல்புநிலைக்கு வர முழுதாக ஆறு மாதங்கள் ஆனது… அந்த ஊரே அவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்ததால் மேற்கொண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகவே வாழ்க்கை சென்றது. 

 

 

 

 

 

பார்வதி பாட்டி இவர்களை இங்கு அழைத்து வந்த அன்றிலிருந்து மல்லி தன் பேச்சால் சிறியவர்களை இயல்புக்கு கொண்டுவந்தாள்… இயல்பாகவே துடுக்கு தனம் நிறைந்த குட்டி இவளின் பேச்சும் செயலிலும் பிடித்து போக சிறிதுசிறிதாக அவர்களில் ஒருவளாக மாறி போனாள்

 

 

 

 

“அல்லியூருக்கு வந்த ஒரு மாதம் கழித்து சுந்தரம் உதவியுடன் அம்மு, கண்ணன் மற்றும் அம்முவின் டீசி மற்றும் மார்க் சீட் வாங்கி வந்தவர்கள்… அதற்கு அடுத்தவாரமே கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்று அட்மிஷன் போட்டவிட்டனர்”.

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அடுத்த மாதத்திலேயே லீசுக்கு விட்ட வீட்டை அவர்களே வாங்கிக்கொள்வதாக கூறியதால், மொத்தனமாக விற்றுவிட்டனர். 

 

 

 

 

இதற்கிடையே உமா தன்னை பற்றி அனைத்தையும் பார்வதியிடம் கூறிவிட்டாள்… எங்கே தன்னை பற்றி தவறாக நினைத்துவிடுவாரோ என உமா பயத்திற்கு மாறாக, அவரோ எனக்கு முன்னையே தெரியும் உமா… “எந்த வகையிலும் நீ என் பொண்ணு ஜாடையிலும் இல்லை… மாப்பிள்ளை ஜாடையிலும் இல்லை… எது எப்படியோ என் பொண்ணும் மாப்பிள்ளையும் உன்னை அவங்க மகளாத்தான் பாத்தாங்க, இனியும் இந்த ஊரை பொருத்தவரை நீ அவங்களுக்கு மூத்தமகளாவும், எனக்கு மூத்த போத்தியாவும் இரு உமா”… அதுவே எனக்கு போதும் எனக்கூறியவரை அழைத்துக்கொண்டு கண்ணீர் வடித்த உமா. அவரும் அவளின் மனபாரம் நீங்கட்டும் என அமைதியாக விட்டுவிட்டார். 

 

 

 

 

அதன் பின் வந்த நாட்களில் பாட்டி ஒருவரால் மட்டும் கல்லூரிக்கும், தம்பிகளின் பள்ளிக்கு பணம் கட்டமுடியாது என்பதால் உமா, மல்லியுடன் சேர்ந்து கிடைத்த வேலையை செய்தால்… இவளின் கஷ்டத்தை உணர்ந்த சிறியவர்கள் பொருப்பாக நடந்துகொண்டனர்… குட்டி மட்டும் தன் சேட்டையை அவ்வப்போது சிறப்பாக செய்துகொண்டு இவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தான்…  

 

 

 

 

 

“மல்லியும் மெல்லமெல்ல உமாவின் ஆழ்மனக்காயங்களை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்துகொண்டாள்”…  அதே போல் மல்லியின் அனைத்து ரகசியங்களும் உமாவிற்கு தெரியும்…. உமா சோர்ந்து போகும் சமயத்தில் எல்லாம் மல்லி அவளை உற்சாகமூட்டுவாள். நல்ல தோழிக்கு உதாரணமாக வாழ்ந்துவந்தார்கள் இருவரும். 

 

 

 

 

 

இப்படியே அவர்கள் வாழ்க்கை நீரோடை போல் போய்கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் தூக்கத்திலேயே பார்வதி பாட்டி இறந்துவிட்டார்… இவரின் இறப்பினால்  பாதிக்கப்பட்ட சிறியவர்கள் தேற்றி ஒரு நிலைக்குகொண்டு வருவதற்குள் உமாவிற்கு போதும்போதும் என்றாகிவிட்டது…”பார்வதியின் இறப்பினால் மொத்த குடும்பசுமையும் உமாவின் மீது விழுந்தது”.

 

 

 

‘தன் இறப்பிற்கு பிறகு உமாவும் மற்றவர்களும் பாதிக்கப்பட்டக்கூடாது என்பதற்காகவோ என்னவோ உள்வேலைகள் வெளிவேலைகள் என அனைத்தும் உமாவிற்கு கற்றுத்தந்தார் பார்வதி… தன் இறப்புக்கு பிறகு இவர்கள் பாதுகாப்பாக இருக்க சுந்தரம் போன்ற நல்லவர்கள் அடையாளம் காட்டிவிட்டு சென்றிருந்தார்’… இப்படி பலவிதங்களில் சிறியவர்களுக்கு வழிகாட்டிவிட்டே இந்த புவியை விட்டு சென்றார் பார்வதி.

 

 

 

 

அவரின் வழிகாட்டுதலின் படிதான் இன்று வரை உமா வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்… சிறுவர்களையும் வாழவைக்கிறாள்… முடிந்தவரை அம்முவை தைரியமாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்தையும் கற்றுத்தந்தாள். அதற்காக வழியையும் ஏற்படுத்தி தந்திருந்தார் அந்த முதியவர். 

 

 

 

 

 

இப்படித்தான் நான் இவங்க வாழ்க்கைக்குள் வந்தேன்… பருவதம் அம்மாவும் அப்பாவும் அவங்களோட பொண்ணுமாதிரி என்னைய பார்த்துக்கிட்டாங்க… 

 

 

 

 

மருதாயி பாட்டி இவங்களை விட என் மேல்தான் அதிக பாசம் வைத்திருந்தாங்க… இவங்களும் அப்படித்தான் இருந்தாங்க… இப்பவும் அப்படித்தான் இருக்காங்க, இனி எப்பவும் அப்படித்தான் இருப்பாங்க… இவங்க என்மேல் காட்டிய அளவுகடந்த பாசம் போதும்,  அதுக்காக என்னவேண்டுமானாளும் செய்வேன் என கண்கள் மின்ன கர்வமாக கூறினால் உமா… 

 

 

 

 

இவர்களின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கேட்டவர்களுக்கு சிறிது கவலையாகவும், இவர்களின் சுயநலமில்லா குணத்திலும், அன்றியும்  பிரமிப்பாக உமாவை பார்த்தனர்… இதை எல்லாம் கேட்டவர்களுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ஆனால் அம்மு தங்கள் வீட்டு மருமகளா வரவேண்டும் என்று முன்பைவிட உறுதியாக இருந்தனர். தங்களின் இந்த முடிவை கண்களால் பகிர்ந்து கொண்டனர் அந்த வீட்டின் பெரியவர்கள்.

 

 

 

 

‘மதனோ மனதில் வர்ஷாவையும் உமாவை போல் தைரியமான, துணிச்சலான பெண்ணாக வைக்கவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டான்’. 

 

 

 

 

வெற்றியோ தன்னவளை நினைத்து மிகவும் பெருமையாக உணர்ந்தான்… 

 

 

 

 

 

இவளின் மனக்கவலையை எப்படியாவது கலையவேண்டும் என்பதில் முன்பைவிட தீவிரமாக இருந்தான். 

 

 

 

நாச்சியார், “உமா உன்னுடைய தியாகம், தம்பிகள் மற்றும் தங்கையின் மீதான பாசம், அக்கறை, நீ அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த நம்பிக்கை இவைதான், அவர்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உனக்கு கொடுத்துள்ளது… இந்த உரிமை தான் அவர்கள் இருவளுக்கு செய்யும் மரியாதை உமா”. 

 

 

 

 

“இப்ப உனக்கு நான் வாக்கு கொடுக்கிறேன் உமா… அம்மு இந்த வீட்டில் சகல மரியாதையோடும், நிம்மதியாகவும் இருப்பா… இந்த வீட்டில் இருக்கவங்களால் அவளுக்கு மட்டுமல்ல உங்க யாருக்கும் கஷ்டம் வராது… கண்ணன் மற்றும் குட்டியோட எதிர்காலம் கூட எங்க பொறுப்பு உமா” என்றவரிடம்… “அது சரிவராது பாட்டி… நீங்க அம்முவை மட்டும் நல்லா பாத்துகிட்டா போதும்.

 

 

 

 

 

என் தம்பிங்க நல்ல நிலைக்கு வரவரை அவங்க என் பொறுப்பு பாட்டி… எந்த சூழ்நிலையிலும் நான் என்னுடைய கடமையைவிட்டு விளகமாட்டேன் பாட்டி… 

 

 

 

 

 

 

எனக்கு இருக்க ஒரே ஒரு வேண்டுகோள்… அது என்னனா, இவங்களோட நிச்சியம் திருவிழாவுக்கு பிறகு வச்சிக்கலாம்… கல்யாணம் மட்டும் மீனு கல்யாணம் முடிஞ்ச பிறகு வச்சிக்கலாம் பாட்டி… அம்மு கல்யாணம் என்னால் முடிந்த வரை சிறப்பா செய்யனும் ஆசை என்றாள் உமா”. 

 

 

 

 

 

அவளின் நியாயமான ஆசையை ஏற்றுக்கொண்ட சந்திரன், “கண்டிப்பா நீ ஆசை பட்ட மாதிரியே பண்ணீடலாம் உமா… ஆனா இப்ப இவங்க ரெண்டு பேருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்யப்போறோங்கிற செய்தியை எல்லாருக்கிட்டையும் அறிமுகப்படுத்திடலாம்  ம்மா… அப்ப தான் ஊருக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கமுடியும்”… 

 

 

 

“சரிங்க ஐயா அப்படியே பண்ணிடலாம் என்றவளை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை மீனுவும் ஜெயந்தியும் பகிர்ந்து கொண்டனர்”… அம்முவை கட்டிக்கொண்டு தங்கள் வாழ்த்தை பகிர்ந்துகொண்டனர்.

 

 

 

 

இதற்கிடையே நம்பிக்கு போன் செய்த நவ்யா காங்கேயத்தில் ஒரு உணவகத்தில் அறையெடுத்து தங்கி இருப்பதாக தகவல்  கூறியவள் உடனே வைத்துவிட்டாள்.

 

 

 

 

 

மல்லி, “சாந்தி மற்றும் விசாலாட்சி மூவரும் சேர்ந்து அனைவரும் குடிக்க ஜூஸ் கொடுத்து கவனித்துக்கொண்டார்”. 

 

 

 

 

வேலம்மையோ, “நம்பியை சமாதானம் செய்து காங்கேயத்திற்கு நவ்யாவை கவனிக்க அனுப்பி வைத்தார்… வந்த விருந்தாளிகளுக்கு தேவையானவற்றை கொடுத்து அவர்களுக்கு சிறிதும் குறையில்லாமல் கவனித்துக்கொண்டார்”. 

 

 

 

ஆக மொத்தத்தில் உமா வேலம்மையின் மனதில் நல்ல இடத்தை பிடித்திருந்தால்… அவளின் தைரியம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது… அவளை பற்றி பெருமையாக சங்கரிடம் கூறிக்கொண்டு இருந்தார் வேலம்மை.

 

 

 

 

 

 

அங்கு பரமனோ அமைதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தாலும், அவனின் மனதில் எப்படி எல்லாம் அம்மு மற்றும் உமாவை பழிவாங்களாம் என திட்டமிட்டுக்கொண்டு இருந்தான். 

 

 

 

 

 

அந்த திட்டத்தின் விளைவு குட்டியை உமா பிரியும் அளவுக்கு வரபோகிறது… அதில் குட்டிக்கு தன்னை பெற்றவளை பற்றி தெரிய போகிறது என்று உமாவிற்கு தெரியாமல் போனது… 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அதன்பிறகு அனைத்துவேலைகளும் வேகவேகமா நடந்தது.

 

 

 

 

“மீனு – கார்த்திக் நிச்சயம் முடிந்த கையோடு, வீட்டின் மூத்த உறுப்பினராக நாச்சியார், இவ்வளவு நேரம் நடந்த பிரச்சனைக்கு நடுவில் அனைவரும் இருந்து நல்ல முறையாக என்னுடைய பேத்தி-பேரன் நிச்சியத்தை சிறப்பு செய்து கொடுத்த எல்லாருக்கும் நன்றி… இப்ப நான் சொல்லபோற விஷயம் கண்டிப்பா எல்லாரையும் சந்தோஷபடுத்தும்னு நினைக்கிறேன் என்றவர் தொடர்ந்து”…

 

 

 

“நம்ம ஊர் திருவிழா முடிந்து வர முகூர்த்தத்தில் என்பேரன் அருணுக்கும்- நம்ம உமாவோட தங்கையின் அம்முவுக்கும் நிச்சியம் வைக்கலாம்னு இருக்கோம்… இன்னைக்கு வந்து வாழ்த்துன மாதிரியே அன்றைக்கும் நீங்கள் எல்லீரும் வந்து இவங்களை வாழ்த்த வேண்டும் என்றாா்”. 

 

 

 

 

அதில் மகிழ்ந்தவர்கள் சிறியவர்கள் மனதார வாழ்த்தினர்… முகம் சுழித்தவர்கள் வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டு இருந்தனர்… சிலர் வெளிப்படையாகவே பொறணி பேசினர்… இதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல், வந்திருந்தவர்களை வயிறார உண்ணவைத்து அனுப்பினர்.

 

 

 

 

 

“நாச்சியாரின் இந்த முடிவில் வேலம்மை அவரை மெச்சிக்கொண்டார்… இவர் ஒன்றும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அல்ல… நேர்மையானவர்களையும் துணிச்சலானவர்களையும் வேலம்மைக்கு மிகவும் பிடிக்கும்… ஆனால் என்ன கொஞ்சம் கடுமையானவர்”.

 

 

 

 

 

அதன்பின் உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமா செல்ல தொடங்கியதும். மீனு-கார்த்திக், அம்மு – அருண், ஜெயா, ஜெயந்தி மற்றும் பெரியவர் இருவர், குழந்தைகள் என இவர்கள் மட்டும் உணவருந்த சென்றனர். 

 

 

 

இறுதியாக எல்லாரும் சென்றதும் வீட்டில் உள்ளவர்கள், வேலையாட்கள் அனைவரும் என இனைந்து உணவினை உண்டார்கள்… பின் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அமரும்போது மணி இரவு ஒன்பதை தொட்டிருந்தது. 

 

 

 

 

 

இரவு உணவை முடிக்கும் போது மணி பத்தை நெருங்கிருந்தது… உணவை முடித்தும் அன்றைய அசதியினால் சகுந்தலா வெற்றியை அனுப்பி உமா, மல்லி மற்றும் சிறியவர்களை வீட்டில் விட்டுவிட்டு வரசொன்னார்… இவர்களும் இருந்த அசதியினால் மறுப்பு சொல்லாமல் அவனுடன் சென்றார்கள்.

 

 

 

 

மல்லி மற்றும் சுந்தரத்தை முதலில் வீட்டில் விட்டவன், அடுத்ததாக உமா வீட்டிற்கு சென்றான்… சிறியவர்கள் இருந்த அலுப்பில் காரைவிட்டு இறங்கியதும் வீட்டிற்குள் சென்று படுத்துக்கொண்டனர்… உமா சொல்லாமல் தயங்கி நின்றிருப்பதை பார்த்தவன், என்ன உமா ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?… காலையில் இருந்து எதையோ மனதில் போட்டு குழப்பிகிட்டு இருக்க… என்னனு சொல்லு உமா… வேலை வேற இன்னைக்கு ரொம்ப அதிகம், ரொம்ப அசதியா இருக்கு என்னனு சொல்லுமா என்றவனிடம்… 

 

 

 

தான் கேட்டது கூறலாமா வேண்டாமா என தயங்கியவளை பார்த்த வெற்றி, “மகிம்மா… என்னனு சொல்லுமா… நீ சொன்னாதான எனக்கு தெரியும்”… “அது வந்து இன்னைக்கு காலையில மீனு அறையிலிருந்து கீழே வரும்போது, படியிலிருந்து இரண்டாவது அறையில் கோவமா பேசற சத்தம் கேட்டது… என்னனு பார்க்கலாம்னு போனேன், அப்ப தான் யாரோ மரகதலிங்கத்தை  கடத்துவதை பற்றி பேசுனாங்க… அப்புறம் ஏதோ விபத்து, கொலை, பணம், லிங்கம் பற்றி பேசுனாங்க… எதுக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்றவளிடம்…

 

 

 

வெற்றி,  “ஏன் உமா… வேற ஏதாவது கேட்டையா?… அந்த ஆளு முகத்தை பார்த்தியா?”… “முகத்தை பார்க்கவில்லை, ஆனா அந்த குரல்  நியாபகமிருக்கு… மறுபடியும் கேட்டா அடையாளம் கண்டுபிடித்துவிடலாம் என்றவளிடம்”… 

 

 

 

 

 

லிங்கத்தை பாதுகாப்பது பத்தி தான் பார்த்துகிறேன்… நீ அந்த குரல் மட்டும் கண்டுபிடி… “இனி இந்த விஷயத்தை பற்றி யாருகிட்டையும் பேசாத உமா… அது தான் உனக்கு பாதுகாப்பு… இனி கவனமா இரு உமா எனக்கூறியவன்… தன் இல்லம் நோக்கி சென்றான்”. 

 

 

 

 

“இவ்வளவு நேரம் ஆட்டிபடைத்த தூக்கம் முற்றிலுமாக போய், மனதில் குழப்பமே மிஞ்சியது… மரகதலிங்கத்திற்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று அவனை சார்ந்த அனைவருக்கு தெரியும்… இந்த லிங்கத்திற்கு விலை என்ற ஒன்றை நிர்ணயிக்கவே இயலாது”… 

 

 

 

 

 

இதன் உரிமையாளர்கள் மற்றும் பாதுகாவலர் இவர்கள் மட்டுமே இருக்க, இதன் மதிப்பை அறிந்து பலர் கையாடல் செய்ய முயன்று உயிரை இழந்துள்ளனர் என நாச்சியார் மற்றும் சாரதா கூறி கேட்டு இருக்கிறான். 

 

 

 

‘இவ்வளவு ஏன் இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அந்த வீட்டின் மூத்த வாரிசை தவிர யாரும் தொட்டதில்லை… அதிலும் பெண்கள் எட்ட நின்று தரிசிப்பதோடு சரி… அப்படி இருக்க மூன்றாம் நபர்கள் யாரையும் தீண்டவிட்டதில்லை… அந்த அளவு பயபக்தியோடு இருக்கின்றனர்… இப்படியே பலவற்றை பற்றி நினைத்துக்கொண்டு இருந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்’.

 

 

 

அங்கு உமாவோ இவனிடம் பேசிச்சென்றவள் படுத்தவுடன் உறங்கிவிட்டாள்.

 

 

 

 

காங்கேயத்தில் சென்ற நம்பி, “நவ்யாவை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்… அவருக்கு அவர் பிரச்சனை… அவர் இன்றே முடிக்க வேண்டும் என்று நினைத்து வந்த வேலையும் சரியாக முடியவில்லை… நவ்யாவினால் ஏற்பட்ட அவமானம் என எல்லாம் சேர்ந்ததில் நம்பி உச்சகட்ட கோவத்தையெல்லாம் நவ்யாவின மேல் கொட்டிவிட்டார்”.

 

 

 

ஏற்கனவே உமா மற்றும் பண்ணையார் வீட்டு ஆட்கள் மேல் கோவமாக இருந்த நவ்யா, தந்தை தனக்கு ஆதரவு அளிக்காமல், அவளையே குறை கூறியதில் மேலும்மேலும் உமாவின் மீதான வன்மம் அதிகமானது…. எப்படியாவது உமாவை பழிவாங்க வேண்டும் என்று உறுதியை எடுத்துக்கொண்ட பின்தான் தூங்க சென்றால். 

 

 

 

 

 

“அங்கு மகாலட்சுமியோ ராமனை வாங்குவாங்கு என்று வாங்கிக்கொண்டு இருந்தார்… இவ்வளவு பணம் செலவு செய்தும் அந்த உமாவை கண்டுபிடிக்க முடியலையே ராமா… இப்ப என்ன பண்ண?… அந்த பரமனையும் கண்டுபிடிக்க முடியவில்லை… இவளுக்கு யாரோ உதவராங்கனு நினைக்கிறேன்… இந்த பரமனை கண்டுபிடித்து விட்டால் அனைத்து கேள்விகளுக்கும் விடைகிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்… உமாவை பிடிக்கனும்னா இவனை நம்ம கைக்குள்ள கொண்டுவரனும்”… அதனால் அவளை தேடறதை விட்டுவிட்டு இவனை தேட செல்லுனும்டா அந்த டிடக்டிவ்கிட்ட எனக்கூறி சென்றுவிட்டார். 

 

 

*******////////////////////*******************************

 

 

 

 

நிச்சியம் முடிந்த அடுத்தநாளே ஊர் பெரியத்தலைகளால் திருவிழா தேதி குறிப்பிட்டு, தோட்டியின் தண்டோரா சத்தத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். 

 

 

 

ஊர் பொதுமக்களுக்கு சொல்வதுஎன்னவென்றால்…அருள்மிகு சந்தனமாரியம்மன் திருவிழா,வரும் செவ்வாய்கிழமை கம்பம் நடுவதால்ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஊர் தலைவர்களால் கேட்டுக்கொள்ளபடுகிறது. அன்றிலிருந்து அடுத்த பதினைந்து நாட்கள் யாரும் ஊரைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அப்படி செல்பவர்கள் பொழுசாய்வதற்குள் ஊர்வந்துவிடுமாறும் கேட்டுகொள்ளபடுகிறது. 

 

 

 

 

ஊர் முழுவதும் உள்ள எல்லா தெருக்களிலும் தெரிவிக்க படும் ஊர் தோட்டியால். 

 

 

 

 

 

அன்றிலிருந்தே ஊர் மக்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்… அதே போல் கோயிலில் உள்ள அனைத்து இடங்களும் சுத்தம் செய்யபட்டது.

 

 

 

“ஊரில் உள்ள அனைத்துவீடுகளும் புதிதாக வெள்ளையடித்து, சானம் போட்டு மொழுக்கிய வாசல்கள், சுத்தம் செய்யபட்டு தெருக்கள் என அவ்வளவு அழகாக இருந்தது”… 

 

 

 

 

“வேலைக்காக வெளியூர் சென்ற இளைஞர்களின் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவதோடு, விடுதி உணவை உண்டு காஞ்சி போய் வந்தவர்களை மேலும் கொஞ்சம் காயவிட்டு வாய்ருசியாக வயிறுநிறைய உணவினை நிறப்புவார்கள் தாய்மார்கள்”. 

 

 

 

 

 

கண்ணிகளின் கடைக்கண் பார்வை, காளைகளின் சீண்டல்கள், முறைமாமனின் உரிமை பேச்சி, வயதானவர்களின் குசும்பு, பெண்ணை பெற்றபெற்றோர்களின் கவனம், உறவினர்கள் வருகை, மருமகனின் அலட்டல்  என அவ்வளவு அற்புதமான காட்சிகள் காணலாம்.

 

 

 

ஒவ்வொரு வீடும் அந்த பதினைந்து நாட்களும் அத்தனை மகிழ்ச்சியாகவும் கலகலப்புமாக ஊரே நிறைந்து போய் இருக்கும்… 

 

 

“செய்தி சொன்ன அடுத்தநாளே பூசாரியும் ஊர்தலைவர்களும் நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்பமரத்தின் மூன்று கவை கொண்ட கம்பாக வெட்டுவார்கள், ஆசாரியின் மூலமாக அந்த கம்பின் பட்டைகளை நீக்கி சிறுபிசிரில்லாமல் நன்றாக செதுக்கி,மஞ்சள் பூசிய பிறகுஙஅதை நன்றாக வெயிலில் காயவைப்பார்கள்… அடுத்தநாளும் காயவிட்டு அதற்கு அடுத்தநாள் கம்பம் நடுவார்கள். அதற்கு அடுத்தபதினைந்து நாட்கள் திருவிழா வெகுவிமர்சியாக நடக்கும்”. 

 

 

 

 

 

உமா ஏற்கனவே வெள்ளையடித்து வீட்டை சுத்தம் செய்திருந்தாலும் தண்டோரா போட்ட அடுத்தநாள் மீண்டும் ஒருமுறை மேலோட்டமாக சிறியவர்கள் மூவரையும் சுத்தம் செய்ய சொன்னவள் வழக்கம்போல் மல்லியுடன் வேலைக்கு சென்றுவிட்டாள்.

 

 

 

 

இவர்களும் அவளுடன் சோ்ந்து சுத்தம் செய்த பின் குளித்துவிட்டு அசதியினால் தூங்கியும் விட்டனர். 

 

 

 

அந்த பிரட்சனைக்கு பின் துவண்டு போய் இருந்த அம்முவை தேற்றுவதற்காகவே அவளை பண்ணையார்விட்டிற்கு உமா அழைத்து செல்லவும் இல்லை, அதை பற்றி பேசவும் இல்லை… அவளுக்கு துணையாக கண்ணன் மற்றும் குட்டியையும்  அவளுடன் விட்டுவிட்டாள்… சூழ்நிலையை புரிந்து கொண்ட கண்ணன் எந்த விதமான கேள்வியும் கேட்காமல் அக்காவுக்கு ஆதரவாக இருந்தான்… அவனுக்கு விளக்கம் கொடுக்க வந்த அம்முவை தடுத்து, “எனக்கு என் அக்காவை பற்றி தெரியும் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட்டான்”. 

 

 

 

 

அவனின் நம்பிக்கையில் நெகிழ்ந்து போய்விட்டாள் அம்மு. தன் குடும்பத்தினர் தன்னை நம்புவது அவளுக்கு போதுமானதாக இருக்க அந்த பிரச்சனையை விட்டு வெளியே வர முயற்சியை செய்தவள், அதில் வெற்றியும் கண்டாள். 

 

 

 

 

இப்படியே அந்த இரண்டு நாட்களும் சென்றது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!