Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 16

 

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்

மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்

சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்



Advertisement

என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்

 

           ???இனியவள் இளங்கோவன் ???

Advertisement

 

Advertisement

பெயரை பார்த்தவனுக்கு, தான் காண்பது நிஜம் தானா… அவளின் உண்மையான பெயரே இது தானா…. என்ற அதிர்ச்சியில் கண்கள் இமைக்கவும் மறந்து… சுற்றம் மறந்து… தெரியாம தான் அவளுக்கு அவளோட பெயரையே வெச்சேனா…. அதிர்ச்சி கலந்த பெருமிதம் அவனுள்… 

 

அடுத்த பக்கத்தை திருப்ப…. 

Advertisement

 

இனியவள்… இது எங்க அப்பா எனக்கு அசையா வெச்ச பெயர்.   அவர் எனக்குன்னு செஞ்ச முதலும் கடைசியுமான விஷயமே இதுதான்… 

 

அப்பாக்கு சங்க காலத்து கதைகள் ஆராய்ச்சிகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்… அக்காக்கும் எனக்கும் சங்க காலத்து பெயர் தான் இருக்கனும்ன்னு அக்காகு யாழினினும்… எனக்கு இனியவள்னும் வெச்சாரு… 

 

என்னோட வாழ்க்கை எப்போதும் எனக்கும் மத்தவங்களுக்கும் இனிமையாகவே இருக்கணும்னு அந்த பெயரை வெச்சாரு… அவர் பெயர் வைத்த நேரமோ என்னமோ…என் வாழ்வின் அணைத்து இன்பமும் தொலைந்து… தாய் தந்தையை விபத்தில் பறிகொடுத்து… அக்காவிற்கு கடமையாய் மாறி… அவளின் வாழ்வின் இன்பத்தையும் சேர்த்து அழித்து விட்டேன்… 

 

ஆரம்ப காலத்துல ரொம்பவே கஷ்ட பட்டோம்… நானும் கஷ்ட பட்டு படிச்சி டாக்டர் ஆகணும்னு ஆசை பட்டு… அப்படியே டாக்டர் படிப்பில் சேரவும் செய்தேன்… 

 

அப்போ தான்… எங்க அக்காவுக்கும் பெரிய கம்பெனியில நல்லா வேலை கிடைத்து… எங்கள் வாழ்க்கை ஒரு நிலைக்கு வந்தது… 

 

அந்த நாள்… எங்கள் வாழ்வின் வசந்தங்கள் எல்லாம் எங்களுக்கு திரும்பிய நாள்…. 

 

என் அக்காவின் திருமண நாள்… 

 

[the_ad id=”6605″]

 

 

செழியன்… ss குரூப் ஆப் கொம்பனிஸின் முதலாளி….தன் தந்தை தாயை விபத்தில் பறிகொடுத்து…பின்னர் கம்பெனி பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்….  

 

அவரின் கம்பெனியில் அக்கா வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது… அவளை பார்த்த மாத்திரத்தில் அவளை பிடித்து போக.. அவரின் விருப்பத்தை கூறியவரை அப்போதே மறுத்து விட்டாள்  யாழினி… 

 

அதை அக்கா என் கிட்ட சொல்லவே இல்லை… சமீபத்தில் அவரை பார்க்க… அவரின் விருப்பம் தெரிந்து… அக்காவை சம்மதிக்க வைத்து… இருவரின் திருமணமும் இனிதே நடந்தது…. 

 

இறுதியில் என் பெயரை போலவே… இனிமையான வாழ்க்கை எங்களுக்கு கிடைத்தது…. 

 

அந்த வீட்டில் அக்கா ராணியாக… நான் இளவரசியாக வளம் வந்த அந்த இனியமையான நாட்கள்… நம்பனுக்கு நண்பனாய் எனக்கு தோல் கொடுப்பதும்… தகப்பனாய் எனக்கு துணை நிற்பதும்… மாமனாய் என்னை வம்பிழுப்பதும் என… வீடே சந்தோஷத்தில் திளைத்தது…… 

 

தந்தையின் அரவணைப்பும் தாயின் பாசமும் அந்த சில நாட்களிலேயே எனக்கு தெறிய வந்துச்சு….. இனிமையா போய்டு இருந்த வாழ்க்கைல… இன்னும் சந்தோசத்தை தர… வைஷுவும் பிறந்தாள் 

 

என்னதான் வைஷு அந்த வீட்டு வருசா இருந்தாலும்… என்னை தான் எங்க மாமா முதல் வருசா நெனச்சாரு… அதனாலேயே வைஷு என்னை அம்முன்னு கூப்பிட அரமிச்சிட்டா…. அம்மா போல நான் என்று நினைத்து… அக்காவை அம்மானும்.. என்னை அம்முனும் கூப்பிட…. 

 

தொழில்ல நல்ல முன்னேற்றமும்… வீட்டில் அளவு கடந்த சந்தோஷமும் சேர்ந்து நாங்கள் இனியா விழுந்து கிட்டு இருந்த காலம் அது… 

 

இத்தனை இனிமையையும் குடுத்த ஆண்டவன்…..அதுக்கு கால வரை அறையையும் வெச்சி…எங்கள் சந்தோசத்தை அழிக்க ஆட்களையும் அனுப்பி வெச்சாரு….. 

 

பிறந்த குழந்தையாய் இருந்த வைஷுவை பார்க்க… மாமாவோட தொழில் வகை நண்பர் ஒருத்தர் தன் குடும்பத்தோட வந்து இருந்தார்… 

 

லோகநாதன்…. செழியன் அப்பா காலத்தில் இருந்தே… உடன் இருக்கும் தொழில் வகை நண்பன்… செழியனின் தந்தை இறந்த பிறகு அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்…. 

 

மாணவி கீதா.. மகள் ஹேமா… மகன் மோகன்…. தன் தந்தையுடன் சேர்ந்து கம்பெனியை பார்த்து கொள்கிறான் மோகன்… அவரின் குணங்கள் அனைத்தும் பெற்றவனாய்… தன் தந்தையை உரித்தார் போல இருந்தான்… உருவத்திலும் குணத்திலும்…. 

 

லோகநாதனுக்கு தன் மகளை செழியனுக்கு மனம் முடிக்க எண்ணி இருக்க… அவனோ யாழினியை கை பிடிக்க… அது பிடிக்காத அவரோ… அவன் திருமணத்திற்கு கூட வரவில்லை…. 

 

இப்பொது வைஷுவை காண வந்தவரை இன் முகத்தோடு வரவேற்று உபசரித்தான் செழியன்…. 

 

வந்தவர், செல்லும் போது… இனியவளை மோகனுக்கு பெண் கேட்டு விட்டு செலவும் தவற வில்லை…. 

 

இரண்டு நாட்கள் இதை பற்றி யோசித்த செழியனுக்கு வேணும் என்று சொல்ல ஏனோ மனம் தடுத்தது… வேண்டாம் என்று சொல்லவும் காரணம் இல்லை… இந்த போராட்டத்தில் இருந்த செழியனை தெளிவாக்கி சம்மந்தம் தெரிவிக்க வைத்தாள் யாழினி… 

 

தன் தங்கை தன்னுடனே ஒரே ஊரில் இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்…. 

 

திருமணம் நிச்சயிக்க பட்டு.. வேலைகள் அனைத்தும் மிக மும்முரமாக நடக்க தூங்கியது…. 

 

திருமண ஏற்பாட்டில் ஏனோ லோகநாத்துணுக்கு அவசரம் அதிகமாகவே இருந்தது… இது செழியனுக்கு உறுத்தினாலும்…. அமைதி காத்தான்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

திருமண நாளும் வர… அழகிய பட்டுடுத்தி… தலை நிறைய பூ வைத்து… ஆபரணங்களுடன் இனியவளை தயார் செய்த யாழினியின் கண்கள் அவளை விட்டு அகல மறுத்தது… அத்தனை அழகாய் தன் தாயை பார்ப்பது போலவே இருந்தது… அவளுக்கு…. 

 

அவளை தயார் படுத்தி கொண்டு இருக்கும் போதே… உள்ளே வந்தா செழியனுக்கு… மகளை மனம் முடிக்கும் தந்தையின் கவலை ஒட்டி கொண்டது… 

 

முகத்தில் சோகமும்… மனம் நிறைய மகிழ்ச்சியும் கொண்டு.. அவளை ஆர தழுவி கொண்டான்… 

 

பின் யாழினியிடன்… முகுர்த்தத்திற்கு முன்… கோவிலுக்கு சென்று தாலியை சாமியிடம் ஆசிர்வாதம் பெற்று வர வேண்டும் என்று கூறி அழைத்து செல்ல… வைஷுவை இனியவளிடமே விட்டு சென்றனர்…. 

 

ஏனோ செழியனுக்கு செல்ல மனமே இல்லை… இனியவளை பிரியும் போது மனதை தாக்கும் ஒரு வலி… செல்லாதே என்று யாரோ சொல்லும் உணர்வு…திரும்ப மாட்டோம் என்று மனத்து அவனுக்கு புரிய வைக்க முயற்சித்தது போல…. 

 

அவர்கள் சென்ற அரைமணி நேரத்தில்… இனியவளின் கைபேசிக்கு… அவர்கள் சென்ற கார் விபத்துக்குள் ஆனது என்ற செய்தி மட்டுமே வந்தது… 

 

கேட்டவள் அதிர்ச்சியில் இன்ன செய்வது என்பது புரியாமல்… தன் மடியில் அமர்ந்து தன் நகையுடம் விளையாடி கொண்டு இருக்கும் வைஷுவை பார்த்தவளுக்கு அழுகை தான் முட்டி கொண்டு வந்தது… 

 

இனி யாரை நம்பி… யாருக்காக வாழ வேண்டும்… வைஷுவை பார்த்தவளுக்கு..  இவளின் வாழ்விற்காவது நான் வாழ்ந்து தான் ஆக வேண்டும்… இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்தவள்… 

 

அதை கூற வைஷுவுடன் லோகநாதனின் அறைக்கு சென்றவள்.. அவர்களின் வாசலிலேயே அவர்களின் பேச்சை கேட்டு சம்பித்து நின்றாள்… 

 

“என்ன டாட்….. நம்ப ஆளுங்க சொன்ன வேலையை முடிச்சாங்களா, இல்லையா? செழியனை லாரி விட்டு தூக்க எவ்வளவு நேரம்” பேசி கொண்டு இருக்கும் போதே கைபேசி அலற… அவர்களின் காரியம் வெற்றி பெற்ற சந்தோசம் அவர்களின் முகத்திலேயே மின்னியது…. 

 

அதற்குள் அடுத்த அழைப்பு வந்து விட… அதை பேசிய லோகநாதன் முகம் இரண்டும்… கலை இழந்தும் போயின… 

 

“என்ன டாட் அச்சு… உங்க முகம் ஏன் இப்டி இருக்கு” விசாரித்த மோகனை யோசனை பார்வையை பார்த்தவர்… 

 

“நாம நெனச்சத விட செழியன் புத்திசாலியா இருக்கான்டா… வக்கீல் தான் பேசுனாரு… நமக்கு அப்புடிக்குற மாதிரி உயிலை எழுதி வெச்சிட்டு போயிருக்கான் அவன்” மேலும் தொடர்ந்தவர் 

 

“எதிர் பாரத விதமா அவன் இறந்து போய்ட்டா… அவனோட சொத்துக்கள் முழுசும் வைஷுவையும் இனியவளை தான் சேருமாம்… அதிலும் வைஷு பதினெட்டு வயசு பெறாமல்.. அவளோட பங்கை யாராலும் பயன் படுத்த முடியாதாம்… இனியவள் நினைத்தாள் கூட முடியாதாம்”

 

“இனியவள் திருமணம் ஆகி.. அவளுக்கு குழந்தை பிறந்தாள் தான் அந்த சொத்து அவளின் குழந்தைக்கு போகுமாம்… அதுவும் அவள் விரும்பினாள் மட்டும்” வன்மையான கோபத்துடன் கூறினார் லோகநாதன்… 

 

“இப்போ என்ன பண்றது டாட்.. இத்தனை வருஷமா நாம போட்ட பிளான் எல்லாம் போச்சா…..ஹேமாவை கட்டி வெச்சி சொத்தை பிடுங்காலம்ன்னு பார்த்தா… அந்த யாழினி நடுவுல வந்துட்டா…இப்போ அவளோட தங்கச்சி” வெறுப்புடன் வழி தேடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான் மோகன்… 

 

“பரவாயில்லை மோகன்… ஒன்று செய்யலாம்… வைஷுவையும் அவளின் தாய் தந்தை இடத்திற்கு அனுப்பி விடுவோம்… நீ இனியவளை மனத்து கொள்… இஷ்டம் உள்ள வரை அவளை அனுபவித்து… குழந்தை பெற்று கொள்… ஆசை தீர்ந்த உடன் அவளை யாருக்காவது விற்று விடுவோம்… இப்டி செய்தாள் சொத்து நம்மை விட்டு எங்கும் போகாது” ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் என்ற எண்ணம் கூட இல்லாமல்… இழிவாய் வந்தது வார்த்தைகள்….. 

 

[the_ad id=”6605″]

 

 

வெளியே இவற்றை கேட்டு கொண்டு இருந்த இனியவளுக்கு தலையே சுற்றுவது போல் இருக்க… அதில் தடுமாறியவள்… அருகில் இருந்த குடத்தை தன்னை அறியாமல் உதைத்து விட… அதில் அவளை கண்டு கொண்டவர்கள்… அவள் தாங்கள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டாள் என்பது புரிய.. 

 

துரத்த ஆரம்பிக்க… அங்கிருந்து ஓட ஆரம்பித்தவள்… கீழே நின்று கொண்டு இருந்த காரில் ஏரி தப்பித்து… ரயில் நிலையம் அடையவும்… ஒரு ரயிலில் புறப்பட தயாராக இருக்கவும்… அதில் ஏரியவள்…. இன்று இங்கு உங்கள் வீட்டில் மருமகளாய் நிற்கிறேன்… 

 

படித்து முடிக்கும் போது அதை கேட்டு கொண்டு இருந்த அனைவரின் கண்ணிலும் கண்ணீர் இருக்க… மனதில் துக்கம் இருக்க….. “இப்டி செய்து விட்டாயே” என்ற பார்வையில் அன்பை பார்த்தனர்… 

 

தான் செய்த தவறு அவனுக்கு இப்பொது புரிந்தது அவனுக்கு… தான் எப்படி பட்ட சுயநல வாதி என்பதை புரிந்து கொண்டவனுக்கு யாரையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வாழ்வில் முதல் முறையாக இல்லாமல் போனது…. 

 

அவன் மனம் பலவீனம் ஆக.. மனதுடன் உடலும் சோர்ந்து போய் இருக்கும் தருணத்தில்… அவன் கையில் இருந்த டைரி அவன் கை நழுவி கீழே விழுந்தது…. 

 

அதை புரிந்தவன்… குனிந்து டைரியை எடுக்க… பக்கத்தில் டைரியில் இருந்து விழுந்த காகித துண்டு இருக்க… அதை எடுத்தவன்… யாரையும் எதிர்கொள்ள தைரியம் இல்லாமல்… தன் அறை புகுந்து கொண்டான்… 

 

சென்றவன்..  எதிர்ச்சியாக அதை பிரித்து படிக்க… அதில் இருந்த வார்த்தைகள் அனைத்தும்.. அவன் நெஞ்சை கீறியது என்று தான் கூற வேண்டும் 

 

இனியவள் மொழியில்:

 

இதுவரை நடந்த வற்றை அவள் எழுதி இருக்க… 

 

மீனு வாள் நடந்த அந்த விபத்தின் பின் தன்னுள் ஏற்பட்ட மன மாற்றத்தை பற்றி எழுதி இருந்தால் இனியவள்… அன்பால் அந்த மாற்றத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை…. 

 

அவனுக்கு உதவியாய் அமைந்தது… அந்த பக்கத்தில் அவள் எழுதி வைத்து இருந்த அந்த கடைசி வரிகள் தான்…. 

 

அன்னைக்கு நான் அவர் உயிர்க்கு ஆபத்துனு கேட்டதும் மயங்கி விழுந்தேனே….. அன்னைக்கு என் கிட்ட வந்தவர்… “நீங்க எதுக்காக நடிக்கணும்…ஆனாலும் நீங்க ரொம்பவே நேர்த்தியா நடிச்சி இருந்தீங்க… இல்லாத உணர்வை, தவிப்பை இருப்பது போலவே எங்க வீட்டில் இருப்பவர்களை நம்ப வெச்சீங்க”

 

அப்ட்னு அவர் பேசும் போது… எழுந்தது நின்னு… நான் பண்ணது  நடிப்பு இல்லை… என்னோட தவிப்பு போய் இல்லை… என்னோட உணர்வு போய் இல்லைனு கத்தனும் போல இருந்தது… 

 

ஆனால் இரண்டு நிமிடம் கழித்து…. “நான் ஏன் அவனுக்காக துடிக்க வேண்டும்… நான் ஏன் அவனுக்காக பரிதவிக்க வேண்டும் என்று ஆராய்ந்த போது தான்… நான் என்ன உணர்கிறேன் என்று எனக்கே புரிய வந்தது… 

 

அக்கா கிட்ட ஒரு தடவை பேசும் போது… உனக்கானவனை நீ பார்க்கும் போது… சந்திக்கும் போது… பேசும் போது… உன்னை பற்றி நீ மறந்து… உன்னையே புதிதாக நீ உணர்வாய்ன்னு அவள் சொன்னது இப்போதான் புரியது… 

 

அப்போ நான் அவரை… ஹையோ… இது எப்படி நேர்ந்தது..  இது எப்படி சாத்தியம்… தஞ்சம் புகுந்த வீட்டில்… அவருக்கு சம்சாரமாய் ஆக வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்…

 

இதற்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டும்…தீர்மானித்தாள் அவள்…. 

 

அதை படித்து முடிக்கும் போது… அளவில்லா ஆனந்தம் அன்பின் மனதில்….. “என்னை அவள் காதலிக்கிறாளா… அதை மறைக்க தான் இங்கு இருந்து செல்ல வேண்டும் என்றாளா!!!!” 

 

“கள்ளி”… மனதுக்குள் அவளை கொஞ்சி கொண்டு இருந்தவன்… இதை தன் தாயிடம் கூற கீழே விரைந்து ஓடினான்… 

 

முற்றத்தை அடைந்தவன்… அங்கு இருக்கும் அனைவரின் பார்வையும் வாசலின் பக்கம் ஆராய்ச்சியாய் இருப்பதை பார்த்து.. அவ்வழி பார்த்தவன்… குழப்பத்தில் திகைத்து நின்றான் 

 

நான்கு கார்கள் ஒன்றன் பின் இன்றாய் வர.. அதன் முன்னாலும் பின்னாலும் இரண்டு ஜீப்புகளுடன் ஆட்களை கொண்டு அமைதியான அந்த சாலையில் சீறி பாய்ந்து கொண்டு, புயலை கிளப்பி கொண்டு  வீட்டின வாசலில் முன் வந்து நின்றது…. 

 

அதில் இருந்து இறங்கிய சிலர்… வீட்டின் வாசலின் இருபக்கமும் மூவர் மூவராய் நின்று…. காரில் இருந்து இறங்குபவரை வரவேற்க  அரனாய் நின்றனர் 

 

              மாயம் தொடரும்…..

 

            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!