Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 19

அத்தியாயம் 19

அடுத்த மாதம் திட்டமிட்டபடி பிள்ளைகளுடன் பத்தும்மா வந்தியத்தேவன் மணிமேகலை அனைவரும் திருப்பதிக்கு சென்றனர்.



Advertisement

அனைவரும் சேர்ந்தே கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்றனர். அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டே செல்ல, மிகவும் நன்றாக இருந்தது.

அங்கங்கே தண்ணீர் பந்தல்கள் இருந்தன. அவசரத்துக்கு மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது

Advertisement

Advertisement

ஆனால், பத்தும்மா சுலபமாகவே ஏறினார். இறைவன் மீது அவருக்கு இருந்த பக்தி, மகன் மருமகள் மேல் அவருக்கு இருந்த பாசம், அவர் உடல்நலன் மீது அவர் எடுத்துகொண்டு மெனக்கெடல் என்று அனைத்தும் அதற்கு காரணம்.

“நானா, எங்க கிளாஸ்ல ஒரு பையன் ட்ரெக்கிங் போனதா சொன்னான். நாமளும் ட்ரெக்கிங் மாதிரி போலாமா?” என்றான் அப்பொழுது வல்லபன் வந்தியத்தேவனிடம்.

Advertisement

“ஓ கண்டிப்பா போலாமே.. உங்க எல்லாருக்கும் எப்ப லீவுன்னு பார்த்து சொல்லுங்க. முன்னவே பிளான் பண்ணா போறது ஈசி.”

“நீங்க போயிருக்கீங்களா நானா?”

“என்ன வல்லபன் கேள்வி இது? அவர் தான் மிலிட்டரி மேன் ஆச்சே.. நாட்டுக்காக காடு மலை எல்லாம் ஏறி இறங்கி இருப்பாங்க” என்றாள் வீர்யா.

“அதானே.. நம்ம தாத்தா தீவிரவாதியை சுட்ட கதை மறந்து போச்சா? தீவிரவாதியை காட்டுக்குள்ள தானே பிடிச்சு வச்சிருந்தாரு” என்றான் சம்பவ் உணர்ச்சி வசப்பட்டு.

வீர்யா அவன் காலை நங் என்று மிதித்து வைத்தாள்.

“விடு வீரு.. நீ சொன்ன கதைக்குள்ள அவன் கதாபாத்திரமாவே மாறிட்டான். எதுக்கு அவனை மிதிக்குற?” என்றார் பத்தும்மா நமட்டு சிரிப்புடன்.

“முதல்ல சின்ன மலைப் பிரதேசத்துக்கு கூட்டிட்டு போறேன்.. அப்புறம் சம்மர் லீவுக்கு நம்ம ஹிமாலயாஸ் போலாம் சரியா?” என்று வந்தியத்தேவன் சொன்னதும், அனைவர்க்கும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

“நிஜமாவா நானா?” என்றாள் வராஹி ஆசையாக.

“நிஜமா தான் சொல்றேன்.. பட் அதுக்கு எல்லாரும் ட்ரெயினிங் எடுத்துக்கணும். ஃபிட்டா இருந்தா தான் ஹிமாலயாஸ் போக முடியும்..“

“நானும் வருவேன்.. சும்மா உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு எல்லாம் சொல்லக்கூடாது” என்றார் பத்தும்மா.

“அது எல்லாம் ட்ரெயினிங்ல பாஸ் ஆகறவங்கள தான் கூப்பிட்டு போக முடியும்..” என்றாள் வீர்யா கெத்தாக..

“போடி அரை டிக்கெட், பெரிய புடலங்காய் ட்ரெயினிங்..”

“அய்யோ பத்தும்மா.. இது புடலங்காய் ட்ரெயினிங் இல்ல.. மிலிட்டரி மேனோட பூசணிக்காய் ட்ரெயினிங்”

ஹா ஹா ஹா என்று பத்தும்மா சிரிக்க, பிள்ளைகளும் சேர்ந்து சிரிக்க, மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்கும் தான் வெட்கமாகி போனது..

சிரித்து முடித்துவிட்டு, பின் “அந்த மிலிட்டரி மேனுக்கே நான் அம்மா தெரியுமில்ல? அவனுக்கு நடக்க சொல்லிக்கொடுத்ததே நான் தான்.. எனக்கே அவன் சொல்லிக்கொடுப்பானா?” என்றார் பத்தும்மா.

பேச்சும் சிரிப்புமாக சென்று கண்குளிர ஏழுமலையானை தரிசித்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

சொன்னது போலவே கிடைக்கும் விடுமுறைகளில், பக்கத்தில் இருந்த இடங்களுக்கு முதலில் அரை நாள் ஒரு நாள் என ட்ரெக்கிங் அழைத்து சென்றார் வந்தியத்தேவன். அதில் அவ்வப்பொழுது நிவேதா, நிரஞ்சன், ரகுவும் சேர்ந்துகொண்டார்கள்.

இயற்கை என்பது மிக பெரிய வரப் பிராசதம். உடலையும் மனதையும் சீரமைக்கும் சக்தி இயற்கைக்கு உண்டு. மனதில் உள்ள சஞ்சலங்கள் அகன்றது.. உடலில் உள்ள பிரச்சனைகளும் விலகியது..

இந்த பயணங்களில் மேகாவை இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது வந்தியத்தேவனுக்கு. மணிமேகலை மிகவும் அசால்ட்டாக மலை ஏறினார். வந்தியத்தேவன் தடுமாறிய இடங்களில் கூட அவர் ஏறிவிடுவார். அதே போல பிள்ளைகளுக்கும் எளிதாக ஏற கற்றுக்கொடுப்பார்.

வீர்யா, வராஹி, சம்பவ் மூவரும் கொஞ்சம் சோம்பேறி.. கடின பாதையில் வர தயங்குவார்கள். அவர்களை உருட்டி மிரட்டி அழைத்து வருவது மணிமேகலை தான்.

அவ்வப்பொழுது மனைவியை யாரும் அறியாமல் சைட் அடிப்பார்.. என்ன ஒன்னு. அது எப்படியும் பத்தும்மா கண்ணில் மாட்டி, பலமாய் கலாய்க்கப்படுவார்.

—————

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆனது.. மணிமேகலைக்கு ஆறு மாதங்கள் தான் ஆகுது என்றால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்.

படிப்பை நிறுத்தியதில் இருந்து சென்னை வரும்வரை இருந்த நாட்களை அவர் அடியோடு மறந்து போனார். நடுவில் கொஞ்சம பக்கத்தை காணும் என்பதை போல. சொர்க்கம் போல இருந்தது வாழ்க்கை இப்பொழுது.

பத்தும்மாவிற்கு இப்பொழுது நன்றாகவே குணமாகிவிட்டது. அதனால் அவரது லூட்டிகளும் கொஞ்சம் அதிகரித்தது என் சொல்லலாம்.

அன்று காலையில் இருந்தே மணிமேகலை கொஞ்சம் பரபரப்பாக இருந்தார்.

அதில் சமையலை வேறு சொதப்பி கொண்டு இருந்தார். ஒரு அடுப்பில் சாதமும் ஒரு அடுப்பில் பாலும் இருந்தது. டீ தூளை எடுத்து சாதத்தில் போட்டு, அதை கிண்டிவிட்டு கொண்டிருந்தார்.

“என்ன மேக்ஸ் இது.. புது ரெசிபியா? டீ தூள் சாதமா?” என்று கேட்ட கணவரின் குரலில் அதிர்ச்சியாகி, பின்னர் கவனித்து ‘அய்யோ’ என்று அசடு வழிந்தார்.

அவரையே குறுகுறுவென பார்த்து நின்றார் வந்தியத்தேவன்.

“இப்ப என்ன தேவ் பண்றது? டைம் வேற ஆகுதே. .லன்ச் பாக்ஸ் போடணுமே ?” பதட்டமானது அவருக்கு.

“கூல் மேக்ஸ்.. நீ தள்ளு நான் ரொட்டி பண்ணி வெங்காயம் வதக்கிடறேன்..” என்று மனைவியை நகர்த்திவிட்டு, இருபது நிமிடங்களில், அனைவருக்கும் ரொட்டிகளை சுட்டு அடுக்கி விட்டார்.

நான்கு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி, பச்சை மிளகாய் நாலையும் கீறி, சீரகம் தாளித்து நறுக்கியத்தையும் அரைவேக்காடு வதக்கி, அதில் கொஞ்சம் உப்பு, மஞ்சள்தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறி எடுத்தது வைத்தார்.

“நீங்க சூப்பர் தேவா” என்று கணவரை காதலாக பார்த்து நின்றார்.

“நான் சூப்பரா இருக்கிறது இருக்கட்டும். உன் சின்ன மண்டைக்குள்ள என்ன ஓடிட்டு இருக்கு, அதை சொல்லு..” என்றார் அவர் மனைவியை தன் பக்கம் இழுத்துக்கொண்டு.

“அது நம்ம மார்க்கெட் போகலாமா இன்னிக்கு?”

“உனக்கு காலேஜ் இருக்கு தானே? டைம் இருக்கா?”

“இப்ப இல்ல, நீங்க ஈவினிங் காலேஜ் வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க, அப்படியே மார்க்கெட் போகலாம்..”

அதற்குள் கீழே இருந்து,

“டேய் நீங்க லவ் பண்றதுன்னா, நேத்தே சொல்லிட்டு போக வேண்டியது தானே டா.. நான் பிள்ளைங்களுக்கு சமைச்சிருப்பேன்” என்று குரல் கொடுத்தார் பத்து.

“அய்யயோ.. தேவ்.. சீக்கிரமா எல்லாம் கொண்டு போங்க.. இல்லைனா நம்ம மானத்தை இன்னிக்கு கப்பல் ஏத்திடுவாங்க பத்து” என்று மீண்டும் பரபரப்பானார் மணிமேகலை.

“கூல் மேக்ஸ்.. இரு இரு.. டென்ஷன் ஆகாத” என்று மணிமேகலையை அமர வைத்துவிட்டு,

“வல்லப்.. கொஞ்சம் மேலே வந்து எல்லாம் எடுத்திட்டு கீழே போப்பா” என்று குரல் கொடுத்தார்.

அடுத்த ஒரு நிமிடத்தில் வல்லபன் வந்து எல்லாம் எடுத்து சென்றான்.

“அவ்வளவு தான்.. எதுக்கு டென்ஷன்.. நீ ஆளே சரி இல்லை, கிளம்பு, நானே காலேஜ்ல விட்டுட்டு போறேன்” என்று அவரும் தயாராகி கீழே வந்தார்.

பத்தும்மா இருவரையும் எதாவது விஷயம் கிடைக்குமா என்று பார்க்க, இருவரும் அவர் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

சொன்னதை போலவே வந்தியத்தேவன் மாலை வந்து மணிமேகலையை அவர் கல்லூரி வளாகத்தில் இருந்து அழைத்து வந்தார்.

பின் இருவரும் மார்க்கெட்டுக்கு சென்றனர்.

மலரும் நினைவுகள் இருவருக்குமே..

மார்கெட்டுக்குள் நடக்க ஆரம்பிக்கவும்,

“என்ன வாங்கணும் மேக்ஸ்..” என்றார் வந்தியத்தேவன்.

“எனக்கு ஒன்னு சொல்லணும்..”

“சொல்லு..சொல்லு, அதுக்குன்னு மார்கெட்டுக்குள்ள ஒன்னும் வாங்காம நடந்தா எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க.. எதாவது வாங்கிட்டே பேசலாம் வா..”

இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை உறைந்து இருந்தது.. கீரை, காலிஃளார் , என்று வாங்கி கொண்டு அமைதியாக நடந்தனர்.

‘என்ன சொல்லணும் மேகான்னு கேட்டா தான் என்ன? இப்படி அமைதியா வராரே.. எப்படி ஆரம்பிக்க’ என்று மேகா யோசனையோடு வந்தார்.

அவர்களது பெவரைட் ஸ்பாட்க்கு வந்தனர். மஞ்சள் பூசணி கடை!

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மலர்ந்த புன்னகையோடு பார்த்தனர்.

மணிமேகலை அங்கே சென்று ஒரு குட்டி பூசணியை எடுத்தார்.

“இந்த காய் கொடுங்க அக்கா”

“பெருசா நிறைய காய் இருக்கு பாரு கண்ணு.. தம்மா துண்டு காய் எப்படி பத்தும்” என்றார் அந்த கடைக்கார பெண்மணி.

“இல்லக்கா.. இந்த காய் அழகா இருக்கு.. இதுவே கொடுங்க..”

வந்தியத்தேவனின் முகத்தில் புன்னகை மட்டும் மாறவில்லை.

வாங்கிக்கொண்டு சற்று தள்ளி வந்ததும்,

“இந்தாங்க தேவ்.. நம்ம வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு போக நமக்கு ஒரு குட்டி பூசணிக்காய் வரப்போகுது..” என்று கூறி அந்த பூசணிக்காயை தேவ்விடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

“ஹா ஹா ஹா” என்ற கணவரின் சிரிப்பு சத்தம் அவரை பின் தொடர, நிக்காமல் காருக்கு சென்றுவிட்டார்.

நிதானமாக, அந்த பூசணிக்காயை பத்திரமாக பிடித்துக்கொண்டு வந்து காரை எடுத்தார். இருவரும் வரும் வழியில் கோவிலுக்கு சென்று விட்டு, ஸ்வீட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

ஹாலில் தான் ஒரு பக்கம் அமர்ந்து வராஹி, வீர்யா வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். பத்தும்மா புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

ஒரு கையில் மனைவியை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் குட்டி பூசணிக்காயோடு உள்ளே நுழைந்தார் வந்தியத்தேவன்.

வீட்டில் இருந்த மூவரும் அவர்களை பார்த்துவிட்டு, பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“அப்ப நம்ம வீட்டுக்கு குட்டி பம்ப்கின் வரப்போகுதா?” என்றாள் வீர்யா சத்தமாக.

வந்தியத்தேவன் மணிமேகலை இருவரின் சிரிப்பும் ஆம் என்று பதில் கூறியது.

பத்தும்மா மணிமேகலையை கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் நெற்றியில் முத்தம் வைத்தார்.

“சூப்பர் அத்தம்மா” என்று வராஹியும் அவரை கட்டி பிடித்துக்கொண்டாள்.

மறுநாள் பத்தும்மாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்றனர். அவரும் உறுதி செய்யவே, மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

சுந்தர்ராஜன் பரிமளாவிற்கு விஷயத்தை கூற அவர்களுக்கும் பெருமகிழ்ச்சி.

“கல்லூரிக்கு இனி செல்ல வேண்டாம்” என்று பரிமளா ஆரம்பிக்க,

“எதுக்கு நீங்க தடங்கல் சொல்றீங்க? அது எல்லாம் நாங்க பார்த்துகிறோம்” என்று இம்முறை முடித்துவிட்டார் பத்தும்மா.

மணிமேகலையை அவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டார்.

இந்த அம்மாவிற்கு நர்ஸ் வேலை செய்ய தான் மணியை கட்டிக்குறாங்க என்று சொன்னதை நினைத்து பரிமளாவிற்கே வெட்கமாக போனது.

தாய்க்கு மேல் நன்றாக பார்த்துக்கொண்டார். இயற்கையிலே மணிமேகலை ஆரோக்கியமான பெண் என்பதால் இலகுவாகவே கர்ப்பகாலத்தை எதிர் கொண்டார்.

வராஹியும் வல்லபனும் எப்பொழுதையும் போல தங்கள் அத்தம்மாவை தங்கமாக தாங்கினார்கள்.

அடுத்த மாதமே சாம்பவியும் கர்ப்பமானாள்.

குழந்தை எங்களை மாதிரி சிவப்பா அழகாய் பிறக்கணும் என்று குங்கம்பூ பாதம் பால் எல்லாம் அளவுக்கு அதிகமாக கொடுத்து, ஒருவகையான அன்பை காட்டி சாம்பவியை பார்த்துக்கொண்டனர் ஹரியும் பரிமளாவும்.

“என்ன இப்படி அழகு சிவப்புன்னே சொல்றாங்க. குழந்தை கருப்பா பொறந்தா வேண்டாம்னு சொல்லிடுவாங்களோ?”சாம்பவிக்கு பயம் வர தொடங்கியது.

அதை பார்த்து சுந்தர்ராஜன் தான், “குழந்தை ஆரோக்கியமா இருக்கணும். சம்பாவியும் குழந்தையும் நல்ல படியா இருக்கணும்னு நினைச்சு பார்த்துக்கோங்க.. இல்லையா, பேசாம சாம்பவியை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுலாம்.. இப்படி அந்த பொண்ணை பயமுறுத்தாதீங்க” என்று அதட்டலிடவும் கொஞ்சம் அடங்கினர் இருவரும்.

இதில் சடகோபன் வேறு “ வலது பக்கமாவே படு சாம்பவி, அப்ப தான் ஆண் குழந்தை பிறக்கும்” என்று அவர் பங்கிற்கு வந்து படுத்தினார்.

“இரண்டு நாள் இடது பக்கம் இரண்டு நாள் வலது பக்கம் படுத்தா இரட்டை பிள்ளையா பிறக்கும்?” என்று அவரை கடுப்படித்து அனுப்பிவைத்தார் சுந்தர்ராஜன்.

“சப்பா.. சுத்தி லூசுங்களா இருக்கே.. நீ பயப்படாத மருமகளே, நான் பார்த்துக்கிறேன்” என்று சாம்பவிக்கு பக்க பலமாய் நிற்பது சுந்தர்ராஜன் தான்.

ஒரு பக்கம் ‘எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்’ என்று ஹரியும், என் பெயர் சொல்ல பேரன் தான் பிறப்பான் என்று சடகோபனும்.. என்னை மாதிரி பேத்தி பொறக்கட்டும் என்று பரிமளாவும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ‘லிட்டில் பம்கின் எனக்கு தான் செல்லம்’ என்று போட்டி போட்டு கொண்டு வராஹி, வீர்யா, தேவ், வல்லப், பத்தும்மா என்று அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

———————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!