Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 19

அத்தியாயம் 19
ராஜீவன் தன் மகனோடு உள்ளே நுழைய ஒரு புறம் ரஞ்சிதாவின் குடும்பத்தினரும் மறுபுறம் கந்தசாமியின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர்.

ஹாலில் அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் இருவரின் மீதே இருந்தது. இவ்வளவு நாட்களாக ராஜீவனைப் பார்த்தாலே முகத்தைச் சுருக்கி,”பேட் பாய்” என விலகிச் சென்றவன், இன்று அவன் கையை விடாது பிடித்திருந்தான். அதோடு ராஜீவன் முகத்தில் இருந்த அந்த புன்னகையும்,திருப்தியும் இதுவரை அங்கிருந்த யாருமே காணாத ஒன்று.

சித்தார்த், ரஞ்சிதாவை பார்த்ததும் அவனிடம் இருந்து நழுவி ஓடி,”ம்மா…!டைகர்..”என கையிலிருந்த புலி பொம்மையை காட்டினான்.

ரஞ்சிதாவும் புன்னகையோடு,நல்லா இருக்கு..யார் வாங்கித் தந்தா?என எதார்த்தமாக கேட்டாள்.



Advertisement

சித்தார்த் முகம் முழுவதும் புன்னகையோடு,தனது பற்களை காட்டி சிரித்தபடி…”நாஜீவா” என பெருமையாக அவனை நோக்கி கைகளை காட்டி கூறினான்.

அதைக் கேட்ட ராஜீவனின் இதழோரத்தில் ஒரு சிறிய புன்னகை.

ஆனால் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பிரியாவின் முகம் மட்டும் கடுகடுவென இறுகியது.

Advertisement

சில மணி நேரத்திற்கு முன்பு வரை ராஜீவன் தன்னுடையவன் என்று நினைத்திருந்த மனதிற்குள் இப்போது வேறொரு காட்சி கண்முன்னால் நடக்க அதை அவளால் சாதாரணமாக பார்க்க முடியவில்லை.

Advertisement

“அவன்…அவனுடைய மனைவி… அவனுடைய மகன்…”என ஒரே குடும்பமாக மாறி நிற்பது போல இருந்தது.அவளால் அதை சகித்துக் கொள்ளவும் முடியவில்லை.

அதே நேரத்தில் ரஞ்சிதாவின் அண்ணி மாதவி அவள் கணவன் கார்த்தியின்  கையை தட்டி,” பேசு” என ஜாடை செய்தாள்.

இங்க பாருங்க நான் சுத்தி வலச்சு பேச வரலே…நேரடியாவே விஷயத்துக்கு வரேன்.இவ்வளவு நாளா நான் என் தங்கச்சி இந்த வீட்டுல சந்தோசமா குடும்பம் நடத்திட்டு இருக்குனுதான்  நினைச்சிட்டு இருந்தேன்.ஆனா அவ இங்க ஒரு நிமிஷம் கூட சந்தோசமா வாழல.வாழும் போதே நரகம் எப்படி இருக்குனு ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு நீங்க காட்டியிருக்கீங்க. -கார்த்தி

Advertisement

என்னப்பா ஒரேயடியா எங்க மேல மட்டும் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சொல்றே.எனக்கு பிரியா,மித்ரா மட்டும் இல்லப்பா,ரஞ்சிதாவும் பொண்ணுதான். ஏன் நீயும் கூட ஒரு வகையிலே எனக்கு பையன்தான் – கந்தசாமி.

நாங்க ஒன்னும் இல்லாததே சொல்லுலே.நடந்தததானே சொல்றோம். எங்க வீட்டு பொண்ணு இந்த வீட்டுல அவ்வளவு சந்தோசமா ஒன்னும் வாழலே -மாதவி.

அது இவ்வளவு நாள் உங்களுக்கு தெரியலே.இப்போதா புதுசா ஞானம் வந்த மாதிரி தெரிஞ்சிருக்கோ- சரோஜா

அம்மா வீணா எதுவும் பேச வேண்டா. பேசறதுனாலே என் பேத்தி வாழ்க்கை எதுவும் மாறப்போறது இல்ல.அவ இவ்வளவு நாளா இங்க சந்தோசமா இருக்கானுதான் நான் நினைச்சுட்டு இருந்தேன்.ஆனா அவ இவ்வளவு பெரிய வலியோட வாழ்ந்துட்டு இருக்கானு இப்போதா புரியுது.போதும் இனி எம்பேத்திக்கு விடுதலை கொடுங்க.அவள நான் என்கூட வெச்சு சந்தோசமா பார்த்துக்கறே -அலமேலு.

ஆமா ரஞ்சிதா.இதுவரைக்கும் நீ இங்க வாழ்ந்த வாழ்க்கை போதும்.எங்ககூட வந்துரு நாங்க உன்ன ராணி மாதிரி பார்த்துக்கறோம்-கார்த்தி.

அதோட உனக்கு இந்த வாழ்க்கையிலே இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்து இன்னொரு திருமணம் செஞ்சு வைக்கிறோம்- மாதவி

இந்த வார்த்தைகளை கேட்ட ராஜீவனின் தலையில் இடி இறங்கியது போல இருந்தது.தன்னைச் சுற்றி காற்று கூட தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது போல அவனுக்கு தோன்றியது.சற்று நேரத்திற்கு முன்பு இருந்த சந்தோசம், திருப்தி எல்லாம் சட்டென காற்றில் பறந்தது போலவும் இருந்தது.

இதுநாள் வரை மனைவியையும் பிள்ளையையும் விலக்கி வைத்தவன்தான்,ஆனால் ஓரேயடியாக விலக என்றுமே நினைத்தது இல்லை. தன்மேல்தான் முழுத்தவறும் என்று உணர்ந்ததால்தான்  இவ்வளவு நேரம் மூன்றாமவர்கள் பேசியபோது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தும் இவர்கள் அளவுக்கு மீறி தங்கள் வாழ்க்கைக்குள் உள்ளே நுழைகிறார்கள் என கண்டு கொண்டான்.

“யாருக்கு இன்னொரு திருமணம்?” என அதிர்ச்சி குரலில் கேட்டாள் ரஞ்சிதா.

உனக்குதா ரஞ்சிதா- மாதவி.

“எனக்கு இன்னொரு திருமணம் எல்லா வேண்டா.எனக்கு இந்த வாழ்க்கையே போதும்” என அவள் சொன்ன விதத்தில் எந்தவொரு சலனமும் இல்லை.

உனக்கு இந்த வாழ்க்கையே போதும் ஆனா உன் புகுந்த வீட்டு ஆட்களுக்குதான் நீ வேண்டாமே. இவ்வளவு நேரம் நீ மட்டும்தான் பேசிட்டு இருக்கே.உன் புருஷனும் உன் மாமியாரும் வாயைத் திறக்கவே இல்ல. இப்பவாவது புரிஞ்சுக்க இந்த வீட்டுல உனக்கான இடத்தை…நீ விவாகரத்து வாங்கிட்டு இன்னொரு திருமணம் செய்துக்கறதுல இவங்களுக்கெல்லாம் எந்த ஆட்சேபனையும் இல்ல- மாதவி

ஆமா ரஞ்சிதா.உங்க அண்ணி சொல்றதே கேளு.உன் நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்.உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்.வெளியே வந்துரு.நாங்க உனக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்கறோம்- கார்த்தி.

கணவன் மனைவிங்கற உறவு மூனுவேளை சோறு ஆக்கி போட்டு துணி துவைச்சு …வீட்டை சுத்தமா வெச்சுக்கறதுல மட்டும் இல்ல.அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கு ரஞ்சிதா.ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழனும்.ஒருத்தர் சோர்ந்து போகையிலே இன்னொருத்தவங்க தட்டிக் கொடுத்து மேல கொண்டு வரனும்.அதோட இதுல உன் வாழ்க்கை மட்டும் இல்ல.சித்தார்த்தையும் பாரு. நீ இன்னொரு திருமணம் செஞ்சிட்டா அவனுக்கும் ஒரு நல்ல அப்பா கிடைப்பாங்க- மாதவி

அந்த வார்த்தைகள் ரஞ்சிதாவின் நெஞ்சை இன்னும் கனமாக்கின.தன் கழுத்தை கட்டிக்கொண்டு அந்த புலி பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த மகனைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“என்னால இன்னொரு திருமணம் எல்லாம் செய்துக்க முடியாது.எனக்கு என் பையன் மட்டும் போதும் அவன் தான் என் உலகம்.அவனுக்காக மட்டும் நான் வாழ்ந்துக்கறேன்.”என்றாள்.

அவளது வார்த்தைகள் கார்த்திக்கு கோபத்தை தர வேகமாக எழுந்து அவளது தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டான்.

ரஞ்சிதா நிலை தடுமாறி சித்தார்த்தை கீழே இறக்கி விட்டாள்.மீதமிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.

“ஏன்டி! இவ்ளோ சொல்றோம்.நீ கேட்க மாட்டியா?அப்படி என்ன பிடிவாதம் உனக்கு”என தலைமுடியை பிடித்து உலுக்க…

ராஜீவன் முன்வந்து கார்த்தியின் கையைப் பிடித்து திருக ஆரம்பித்தான். வலி தாங்காமல் ரஞ்சிதாவின் தலையில் இருந்து கையை எடுத்தான்.
சித்தார்த்தும் தன் பங்கிற்கு தனது குட்டி கைகளால் கார்த்தியின் காலை அடித்து தன் எதிர்ப்பை தெரிவித்தான்.

இது கார்த்திக்கு அவமானத்தை ஏற்படுத்தவே ராஜீவனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு,”என் தங்கச்சியை நான் அடிப்பே,அதே கேட்க நீ யாருடா?கல்யாணம் ஆன நாள் முதலா அவளை ஒரு வேலைக்காரியாதானே நீ நடத்திட்டு இருக்கே.இப்ப மட்டும் என்ன புதுசா அக்கறை வந்துட்ட மாதிரி நடிக்கறே”என அடித்துவிடும் பாணியில் மிரட்ட ஆரம்பித்தான்.பதிலுக்கு ராஜீவனும் கண்கள் சிவக்க…  அவனை அடிக்க தயாரானான்.

“வேண்டா நீ அவனை விட்டுரு.எதுவும் செஞ்சிடாதே” என ரஞ்சிதா ராஜீவனை நோக்கி கூற அவனும் அவளுடைய செல்லுக்கு கட்டுப்பட்டு அவனை விடுவித்தான்.

இவர்களின் இந்த செய்கைகளை பார்த்த அனைவருக்கும் அவர்களின் உறவின் ஆழம் புரிந்தது.

“என்றிலிருந்து இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் “நீ வா போ” என பேசி பழகினார்கள்?அவனின் கோபத்தின் தீவிரத்தை ரஞ்சிதா எப்படி உடனே உணர்ந்தாள்?அவள் சொன்னவுடன் அவனும் உடனே விட்டுவிட்டானே… எப்படி இரண்டு வருடங்களாக பிரிந்து இருந்தவர்களுக்குள் இந்த புரிதல்” என பிரியாவின் மனது கடலலை போல் அடிக்க ஆரம்பித்தது.

அப்போது கந்தசாமி மெதுவாக எழுந்து
“கார்த்தி… நீ கவலைப்படாதே. நாங்க இருக்கோம்.”என்றவன் ரஞ்சிதாவை நோக்கி திரும்பி,”நீ கவலைப்படாத ம்மா உனக்காக தான் இவ்வளவு பேரும் ஒன்னா கூடி இருக்கோம். உன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு விடை கிடைக்கனும்னுதான் நாங்க எல்லாரும் இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கோம்” என நிலையை சமாளிக்க முயன்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட ரஞ்சிதா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் சந்தேகம்.
“இவ்வளவு பேரும் ஒன்னா கூடி இருக்கோம்”என்ற கந்தசாமியின் வார்த்தை அவளின் மனதிற்குள் கேள்வியை  எழுப்பியது. அதே சமயம் இன்று எல்லோரையும் பஞ்சாயத்திற்கு அழைத்தது கந்தசாமிதான் என்ற பதிலையும் தந்தது.

அம்பிகாவிற்கு இவர்களின் செய்கைகள் பிடிக்கவில்லை. எப்படியாவது தம்பியின் மகளையே மருமகளாக கொண்டு வருவதே அவரின் விருப்பம்.இன்று அதற்கு மாறாக தன் மகன் நடந்து கொள்வதில் வருத்தம்.அதற்கு மேலும் எல்லோரும் தன் மகனை நோக்கி குற்றம் சுமத்தும் வகையில் கையை நீட்டுவது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் நிலையை சமாளிக்க “சரி ராஜீவா நீ உன் இஷ்டப்படி வாழு.நான் உன் விருப்பத்திற்கு எப்பவும் தடையா இருக்க மாட்டே.நான் என் தம்பி வீட்டுக்கு போறே.”என கந்தசாமி குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

எப்படியாவது தன் குடிகார தம்பிக்கு ரஞ்சிதாவை கட்டி வைத்து விடலாம் என்றிருந்த மாதவிக்கும் இது பெருத்த ஏமாற்றமாக இருக்க…கணவனையும் அவனின் பாட்டியையும் அழைத்துச் சென்று விட்டாள்.

வீட்டில் இருந்த கூட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றிருந்தது.தற்போது ராஜீவன் ரஞ்சிதா சித்தார்த் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

சித்து ஹாலில் ஒரு புறம் ராஜீவன் வாங்கி தந்த விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.ரஞ்சிதா சமையல் அறையில் இருந்தாள்.ராஜீவன் ஹாலில் எங்கோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் அவன் மனதில் படங்களாக ஓடிக் கொண்டிருந்தது.ரஞ்சிதா இரவு உணவை தயாரித்து சித்துவிற்கு ஊட்ட வந்தாள்.உணவை ஊட்டி விட்டு அவனை அப்படியே தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைத்துவிட்டு கதவை அடைக்க வந்தாள்.

அதுவரை அசையாமல் அமர்ந்திருந்த ராஜீவன் மெல்ல எழுந்து,”ரஞ்சிதா சாரி” என்றான்.

சாரியா எதுக்கு?

எல்லாத்துக்கும் தான்.

எல்லாத்துக்கும்னா.நம்ம கல்யாணத்துக்கா?இல்ல அதுக்கு அப்பறம் நம்ம வாழ்ந்த வாழ்க்கைகா?இல்ல நாம்ம பெத்த பையனுக்கா?இல்ல இரண்டு வருஷம் என்னையும்,என் பையனையும்,வீட்டையும் விட்டு நீ தள்ளி இருந்தையே அதுக்கா.இல்ல இன்னைக்கு நடந்த விஷயத்துக்கா?

ராஜீவனிடம் எந்த பதிலும் இல்லை.
அதே சமயம் ரஞ்சிதாவின் கேள்வியிலும் எந்த விதமான அலட்சியமும் நக்கலும் இல்லை.மாறாக திடமாக நேருக்கு நேர் நின்று ஒவ்வொரு கேள்வியாக கேட்டாள்.

அவளை எதிர் கொள்ள முடியாமல் ராஜீவன் சற்று தடுமாறினான்.

இப்போவாவது வாயை திறந்து எதாவது பேசு – ரஞ்சிதா.

நான் செஞ்சது எல்லாமே தப்புதான் ரஞ்சிதா என்னை மன்னிசிடு.

மன்னிப்பா.இப்போ நீ கத்தியை எடுத்து ஒருத்தரை குத்திடறே.அவன் செத்து போய்ட்டான்.அதுக்கு அப்பறோம் நீ நான் செஞ்சது தப்புன்னு உணர்ந்து மன்னிப்பு கேட்கறே.உடனே அவன் உயிர் திரும்ப வந்திடுமா?

அவளின் கேள்விக்கு இல்லை என்றவாறு தலையை மட்டும் ஆட்டினான்.

அதே மாதிரிதான் இதுவும்…நான் ஒன்னும் வாழ்றதுக்கு வேற போக்கிடம் இல்லாமையோ…உன்னை விட்டுட்டு தனியா வெளியே போனா ஊர் உலகம் என்னை பத்தி என்ன பேசுமோனு பயந்துட்டு ஒன்னும் எல்லாத்தையும் சகிச்சிட்டு உன்னோட வாழுலே.எனக்கு உன்னை மாதிரி கீழ்த்தரமா நடத்துக்க தெரியலே.அதை நீ உனக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டே.

அந்த கந்தசாமியும் அவனோட குடும்பமும் உன் முதுகுக்கு பின்னாடி எவ்வளவு கேவலமாக வேலை பண்ணிட்டு இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா? இல்ல எல்லாம் தெரிஞ்சும் நீயும் அதை மறைமுகமா ஆதரிச்சுட்டு இருக்கையா?

ரஞ்சிதா அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்ல.நமக்கு கல்யாணம் ஆன முதல் கொண்டு உனக்கு மட்டும்தான் உண்மையா இருக்கே.

உன் உண்மையே கொண்டு போய் குப்பையில போடு.அது கால் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத உண்மை.வாயைத் திறந்து எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு மனைவி,மகன் இருக்கா நீ உன் வாழ்க்கையே பாருனு தைரியமா அந்த பிரியாகிட்ட சொல்ல விருப்பம் இல்லாத உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்?எதுக்கு குழந்தை?
என்ன பொறுத்தவரை நீ ஒரு முதுகெலும்பு இல்லாத ஆள்.

இப்படி முதுகெலும்பு இல்லாத ஆள் கூட இனியும் என்னால வாழ முடியாது. நானும் என் பையனும் எங்க வாழ்க்கையே பார்த்துக்கறோம்.இனிமே எங்க வாழ்க்கையிலே குறுக்க வராதே
என சொல்லிவிட்டு தங்கள் துணிமணிகளை பேக் செய்ய ஆரம்பித்தாள் ரஞ்சிதா.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!