Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெநெஞ்சம் ஏங்குதே…. 2 1

நெஞ்சம் ஏங்குதே….

அத்தியாயம் -2



Advertisement

Advertisement

  நெஞ்சம் பட, படவென துடிக்க ..

Advertisement

தன் கனவு நாயகனை காண சென்றாள் அருள்ஜோதி…

Advertisement

ரிஷிக்கு அவளை  தூரத்திலிருந்து  பார்த்த போதே மனம் சிறகு இல்லாமல்  பறந்தது..

இப்போது பக்கத்தில் பார்க்க போகிறான் தன்னவளை என்ற நினைப்பே அவனுக்கு ஜிவ்வென்ற உணர்வை தர..

கார் பார்க்கிங் வாசலையே அவன் ஆசையாக  பார்த்திருந்தான்..

அவன்  எண்ணத்தை பொய்யாக்காமல்  அவனின் தேவதை பெண் நடந்து   வந்து கொண்டிருந்தாள்.

கையில் ஒரு பெரிய  சூஸ் டம்புளர் இருக்க,.

அவன்  எங்கே என்று அவள் கண்கள் தேட..

“ஜோ” என்று அழைத்திருந்தான் அவளை…

அருள்  ஜோதிக்கு அவன் அருகில் போகவே  வெட்கமாக, இருந்தது.

அவன் தூரத்தில் நின்றிருந்ததை பார்த்தவள் போகலாமா,  வேண்டாமா, இல்லை இப்படியே ஓடிவிடலாமா என்று மனதில் பட்டி மன்றம் நடத்தியவள்..

மெல்ல நடந்து வர.

ரிஷிக்கு சிரிப்பு.

மாடியிலிருந்து வேகமாக ஓடி கீழே வந்தவளுக்கு,  தன்னை பார்த்ததும் வெட்கப்பட்டு தலை குனிந்து மெதுவாக நடந்து வந்த பெண்னை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவளோ அவன் அருகில் வர, வர அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்பது போல இருக்க.

கையில் உள்ள சூஸ் கிளாஸ்சை எங்கே  கீழே போட்டு விடுவோமோ என்று பயந்தவள்.

அவன் இருக்கிற திசை பக்கம்  மெதுவாக செல்ல.

ரிஷியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

ஒரு மீட்டிங்கிற்கே இப்படியா? இன்னும் எவ்வளவோ இருக்கே, என்றவனுக்கு அவளை பார்த்து சிரிப்பு வர.

இவள் நடந்து வருவதை பார்த்தான் இன்னைக்கு நிச்சயதார்த்தம்  முடிந்தவுடன் தான்  இவள்  என் பக்கத்தில் நடந்து வருவாள் போல என்று நினைத்தவன், அவனே நடந்து அவள் அருகில் வர..

அவன் அருகில் வரவும், அருளுக்கு நெஞ்சம் பட, படவென அடிக்க.

பயந்து போனவள் போல குனிந்து நின்றவளின் அருகில் வந்தவன்.

“ஜோ” என்றான்..

அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து  வெட்கப்பட்டு சிரிக்க..

“ஓய்… கல்யாண பொண்ணு” என்றான் அவளை பார்த்து.

அவளோ இன்னும் வெட்கபட.

 “இப்படி நீ வெட்கபட்டா,  நான் எப்படி உன் கிட்ட பேசறது ஜோ” என்றான் .

அவள் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தவளுக்கு பேச்சு வரவில்லை,..

“கையில் என்ன” என்றான்.. அவளை கொஞ்சம் இயல்புக்கு கொண்டு வர.

“சூஸ்” என்றவள்,, அவனிடம்  அதனை தர.

அதை வாங்கி கொண்டவன், ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தவன்.

அவளை பார்த்து “பேசு ஜோ ஏன் பேச மாட்டேங்குற” என்றான்..

அவளுக்கு அவனை பார்த்த சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை,  இரண்டு வருடம் முன்  கடைசியாக அவனை  திருவிழாவில்  பார்த்தது, மீண்டும் இப்போது தான் பார்க்கிறாள்.

அன்றை விட, இன்று இன்னும் கம்பீரமாக தெரிந்தான், 6 அடிக்கு மேல் இருந்தான்.

 கம்பீரமான முகத்தோற்றம், கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தான், லைட் ப்ளுகலர் சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்தவன் கையில்  கல்யாணத்திற்க்காக  காப்பு  கட்டியிருந்தவன், நெற்றியில் சின்னதாக சந்தனம், திருநீர் வைத்திருந்த  அவன் முகத்தை பார்த்திருந்தவளை..

“என்ன மேடம்  என் முகத்தை நல்லா பார்த்தாச்சா? ” என்றவுடன் தான்.

ஐயோ நாம இப்படியே அவரை வச்ச கண் வைத்து பார்த்தோம் என்று தோன்ற.

வெட்கப்பட்டு குனிந்தவளை.. பார்த்து ரசித்தவன்.

 “அப்படி நீ வெக்கப்பட்டு இருந்த நான் எப்படி உன் கிட்ட பேசுறது ஜோ” என்றான்.

 அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க.

 “நான் வருவேன்னு  நினைச்சியா”?..

 என்றான் .

 அவள் இல்லை என்று   தலையாட்ட.

 அவளின்  முன்னாடி தன் கையை நீட்டி இருந்தான் ரிஷி.

அவளோ  என்னவென்று அவன் முகத்தை பார்க்க “கை கொடு” என்றான்..

 அவளோ  தயங்கியபடியே  தன் கையை அவன் முன் நீட்ட.

 அவள் கையை தன் கையோடு இணைத்து வைத்து பிடித்துக் கொண்டவன்.

 “என்கிட்ட என்ன பயம் அருள்,

ரிலாக்ஸ் டா” என்று,  அவளின் கை இறுக்கமாக பிடிக்க அந்த சில்லிட்டு இருந்த  கையை பிடித்து தட்டிக்கொடுத்தவன்,,.

 “என்கிட்ட முதல் முதல்ல அடாவடியா பேசுற அந்த அருள் தான் எனக்கு புடிச்சிருக்கு..

 ஓய் என்ன பாத்து சைட் அடிக்கிறீயா?  என்ற  கேட்ட  அந்த  தைரியமான அருள் தான் எனக்கு வேணும்”… என்றான்.

 அருள்ஜோதி அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க..

 “என்ன  இவன் எல்லாத்தையும் ஞாபகம் வச்சுட்டு இருக்கான்னு பாத்தியா “? என்றான்.

 அவளோ அவனை  ஆராய்ச்சி பார்வை பார்க்க..

 “ரிலாக்ஸ் டா,   உன்ன பாக்க தான் வர சொன்னேன், பார்த்துட்டேன் போ, எல்லாரும் நம்மள பாக்குறாங்க” என்றவன்   கார் பார்க்கிங்கில்  ஒரு சிலர் அவர்களை பார்ப்பதை சுட்டி காட்டியவன்..

 “நிச்சயதார்த்தம் நடக்கறப்போ  பார்க்கலாம் நீ கிளம்புடா” என்றான் அவளின் கன்னத்தை தட்டி..

 அருள் ஜோதி “சரி” என்று அவனிடம் தலையாட்டி விட்டு வேகமாக அவள்  அறைக்கு வந்தாள்..

 சரியாக குறித்த நேரத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது..

 பெண்ணின் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் பேசி நிச்சயம் முடித்து அருள்ஜோதிக்கு பட்டு புடவையை கொடுத்து  கட்டி அழைத்து வர நிச்சயதார்த்தம் இனிதாக நடந்தது.. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தது கடைசியாக ரிஷி  மணமேடை ஏறினான்..

ரிஷியை பார்த்தவள் அசந்து போனாள் கரும்நீல கலர் குர்தா அணிந்திருந்தான், அவன் கம்பீரமாக தன் அருகில் நடந்து வருவதை  நிமிர்ந்து பார்த்தவளுக்கு, வெட்கம் வர. குனிந்து கொண்டாள்

அவளும் லைட் ப்ளுகலர் பட்டு புடவை கட்டி இருக்க, இருவரின் ஜோடி பொறுத்தம் ப்பிரமாதமாக இருந்தது.

 இருவரும் அருகில்  நின்று   மாலை மாற்றிக் கொண்டனர்.

ரிஷி அருளுக்கு வைரமோதிரம் போட.

அருள் ரிஷிக்கு தங்க மோதிரம் போட்டு விட்டாள்..

பெரியவர் அனைவரும் அவர்கள் இருவருக்கு திருநீர் வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

இளையவர்கள்  கடைசியாக பெரிய கேக் கொண்டு வந்து அதை  இருவரையும் வெட்ட சொல்லி கேலி பண்ணி பேசி முடிக்க இரவு லேட்டானது.

அதிகாலை முகூர்த்தம் என்பதால், அனைவரையும்   வேகமாக  உணவு உண்ண சொல்லிக்கொண்டிருந்தனர்..

ரிஷி அருள் ஜோதியை தொந்தரவு பண்ணவில்லை, கேக் கட் பண்ண சிறிது நேரத்தில் மேடையை விட்டு கீழே  இறங்கி விட்டான்.

பின்பு கல்யாண பொண்ணுக்கு நாத்தனார், அண்ணி, அக்கா, அத்தை முறை பெண்கள் அனைவரும்  அருள்ஜோதிக்கு  கல்யாண வளையல் அணிவிக்க நேரமானது..

ரிஷி தூரத்தில் நண்பர்களோடு அமர்ந்து அருள் ஜோதியை பார்த்திருந்தான்.

 மிகவும் சோர்ந்து போயிருந்தாள்  சாயங்காலம் பார்த்த போது எவ்வளவு புத்துணர்ச்சியாக இருந்தாள். இப்பொழுது  கொஞ்சம் பயந்தது போல்,  ஏதோ யோசித்தபடியே இருப்பது போல் ரிஷிக்கு   தெரிந்தது.

என்ன யோசனை இவளுக்கு என்று அவளை பார்த்திருந்தான், ஒரு வேலை பெற்றோர்களை பிரிய வேண்டும் என்று நினைத்து வருந்தி கொண்டிருக்கிறாளோ.. என்று நினைத்தவன்.

அவளுக்கு “என்ன யோசனை ஜோ, சிரி உன் முகமே சரியில்ல” என்று அருள் ஜோதிக்கு மெசேஜ் போட.

 தன் போனில் சத்தம் கேட்டதும் அதை எடுத்து ஓபன் பண்ணி பார்த்தாள் அருள் ஜோதி..

ரிஷி அனுப்பிய மெசேஜ்ஜை பார்த்தவள்..

நிமிர்ந்து அவனை பார்க்க.

அவனோ இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிரி என்பது போல்  செய்கை செய்தான்.

அருள் சரியென்று தலையாட்ட.

அனைத்து பெண்களும், கல்யாண பெண்ணிற்க்கு வளையல் அணிவித்து முடித்தனர்..

இரவு உணவு அனைவருக்கும்  பரிமாற பட.

ரிஷியையும், அருள்ஜோதியை ஒன்றாக பக்கத்தில் வைத்தே உணவு பரிமாறினார்.

ரிஷிபரிமாறிய உணவு அனைத்தையும் உண்ண.

அருள்ஜோதி  அவளுக்கு பரிமாறவே விடவில்லை, கொண்டு வந்த அனைத்து விதமான உணவையும் வேண்டாம், வேண்டாம்  என்று மறுத்தவள், பால் சாதம் மட்டும் போதும் என்று  வைத்து உண்டாள்.

ரிஷி அவளை பார்த்து,

“என்னாச்சு அருள், உடம்பு சரியில்லையா”? என்று கேட்க.

“ஆமாம்” என்று தலையாட்டி இருந்தாள்.

அவனுக்கு அவளை பார்க்க கஷ்டமாக இருந்தது,.

எல்லாம் உணவுமே அவ்வளவு நன்றாக இருந்தது, பின்பு ஏன் என்று தோன்ற…

“நீங்க சாப்பிடுங்க , எனக்கு சாப்பிட பிடிக்கல, இந்த மேக்கப், ரொம்ப நேரம் மேடையில நின்னது, அப்பறம் கொஞ்சம் கேக் சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கு அதனால தான்.

நீங்க சாப்பிடுங்க” என்றவள்..

பால் சாதத்தை உண்ண முடியாமல் உண்ண.

“பிடிக்கலன்னா சாப்பிடாதா”, என்றவன், தன் நண்பனை அழைத்து, அருளுக்கு  பல ஜூஸ் வாங்கிட்டு வர சொன்னவன்..

 பழ சூசை  அவளிடம் கொடுத்து “குடிச்சிட்டு  போய் தூங்கு அருள் காலையில பார்க்கலாம்” என்றான்.

 அவன் அன்பில் அவளுக்கு கண் கலங்கியது..

 “போடா, போய் தூங்கு”  என்று அருளை அவள்  ரூம்பிற்க்கு அனுப்பி வைத்தான்.

 ரூமிற்கு வந்தவள் உடனே கதவை தாழ்பாள்  போட்டுவிட்டு மொழியை  போனில் அழைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!