Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெநெஞ்சம் ஏங்குதே…. 2 2

மொழிக்கு  போன் போகவேயில்லை…

 மீண்டும் மீண்டும் அழைத்தவளுக்கு  அழுகை வர..



Advertisement

 ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

 திடீரென்று கதவு தட்டப்பட யார் என்று உள்ளிருந்த படியே  அவள் கேட்க…

Advertisement

Advertisement

“அக்கா நான் தான் குகன்” என்ற குகன்   கூற.

 தன்னை சரி செய்து  கொண்டு முகத்தை துடைத்தவள் கதவை திறக்க..

Advertisement

 “என்னக்கா நீ சரியா சாப்பிடலியாமே மச்சான் சொன்னார்” என்று கேட்க..

 “சாப்பிட பிடிக்கலடா” என்றவள்.

 “மொழிக்கு போன் போட்டியா டா? மொழி உனக்கு போன் போட்டாளா”? என்று கேட்க..

 “நான் போட்டேன்க்கா அவ எடுக்கல அவளா  எனக்கு போன் போட்டா” என்றான்.

 “எப்படா போன்  போட்டா எங்க இருக்கா அவ?  கேட்டியா” என்றாள்…

 “அவள் ஆசியா போய்க்கிட்டு இருக்கா போல அவளோட போன் இன்டர்னெட் கட்டாகிடுச்சுன்னு சொன்னா, யாருகிட்டையோ போன் வாங்கி பேசுனா, நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சதான்னு கேட்டா?..

 நான் அவ மேல இருந்தா கோவத்துல சரியா பேசல நிச்சயதார்த்தம் நல்லா படியா  முடிஞ்சது மட்டும் சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டேன்” என்றான்.

 “சரி அவ நாளைக்கு உனக்கு போன்ல கூப்பிட்டா, என்ன கூப்பிட,,  இல்ல என்கிட்ட போன குடு பேசனும்” என்றாள்.

 “சரி நீ அவள பத்தி  நினைக்காத, நாம முக்கியம் இல்லன்னு தானே  அவ போன,  போயிட்டு போறா,  நீ உன் லைப்ப பாரு மச்சான் ரொம்ப பீல் பண்றாரு, நீ சாப்பிடலன்னு, அவரு ரொம்ப நல்லா மாதிரி தெரியுது, உன் அத்தை மாமா கூட  குணம் நல்லா தான் தெரியுது நீ நல்லா இருக்க போற சந்தோஷமா இரு,” என்றவன்..

அவளின் சிவந்து இருந்த கண்களை பார்த்து. “ஏன் உன் கண் சிவந்து இருக்கு”  என்று தம்பி கேட்டதும்.

 தம்பியை  அணைத்துக் கொண்டு அழுதிருந்தாள் அருள்ஜோதி..

 “ஏன் கா, என்ன ஆச்சு அக்கா”? என்றான்..

 அவளால் துக்கம் தாங்க முடியவில்லை அனைத்தையும் குகனிடம்  சொல்லிவிட்டாள்.

 குகனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவள் சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை.

 அக்காவை என்ன சொல்லி தேற்றுவது என்று அவனுக்கும் புரியவில்லை இருவரும் கலங்கி நிற்க..

 தேவகி மகளை பார்க்க அவள் அறைக்கு  வந்தவர்,  அதிர்ந்து போனார்.

 தன் பெற்ற பிள்ளைகள் கலங்கி இருப்பதை பார்த்தவர் “என்ன ஆச்சு ஏன் அழுகிற இவ” என்று மகளிடம் வர..

 “அது நாளைக்கு  கல்யாணம் முடிஞ்சா சென்னைக்கு  போயிடுவள  அதுக்கு தான் அழுகிற நான் தான் சமாதானம் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான்…

 “உன்ன பாத்தா சமாதானம் பண்ணுற மாதிரியா இருக்கு,  கூட சேர்ந்து நீ அழுகிற” என்றவர் மகளை பார்க்க அவள் கண்களோ கலங்கி இருந்தது..

 “என்னடா ஆச்சு அருளு  எங்க வீட்டு மூத்த பிள்ளை நீ அழலாமா டா” என்றவர் மகளை அணைத்துக்கொள்ள..

 மனைவியை தேடிக் கொண்டு வந்தார் ஐய்யனார்…

 தன் குடும்பம் கலங்கி இருந்த  கோலத்தைப் பார்த்தவர் “என்னாச்சு அருள் மா” என்று  மகளிடம் வர.

 அப்பா என்று  தந்தை அணைத்து அழுதிருந்தாள் அருள் ஜோதி…

 மகள் அழுததும் அவருக்கு தாங்க முடியவில்லை கண்ணெல்லாம் கலங்கி விட்டது ..

 “எதுக்குடா அழுவுற  பாப்பா” என்றார் மகளிடம்..

 தேவகி  மகளை  அதட்டி இருந்தார்.. “ஏண்டி கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே  இப்படி அழுதுகிட்டு இருக்க மாப்பிளை விட்டுகாரங்க  பார்த்தா தப்பா நினைக்க போறாங்க கண்ணத்தோட” என்றார்..

 குகனும்  அதையே சொல்ல தன் கண்களை துடைத்துக்கொண்டவள்  தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

 அருள் ஜோதி அப்பா செல்லம்..

 தந்தை என்று வந்தால் அவளுக்கு தாய்யை விட ஒரு படி மேலேதான்..

 ஐய்யனார் பார்க்க கரடு முரடாக இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர் பிள்ளைகள் மேல் உயிரே வைத்திருப்பவர் அதுவும்  மூத்த பெண் பிள்ளையின் மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார்,

தேவகி ஐய்யனார் தம்பதிகளுக்கு நீண்ட வருடம் கழித்து பிறந்தவள் தான் அருள்ஜோதி முதல் பெண் பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்,

 அவள் பிறந்ததிலிருந்து சிலசில தொந்தரவுகள் அவளுக்கு இருக்க மகள் தன்னை விட்டு போய்விடுளோ என்று பயந்தவர்.. மகளின் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார்.

 தேவகிக்குமே அளவு கடந்த பாசம் தன் மூத்த மகள் மீதுதான்..

 அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்..

 சொந்தக்காரர்கள் அனைவரும்வெளியே இருக்க..

 தேவகி ஐய்யனாரும் மகளை சமாதானம் பண்ணி விட்டு, குகனை பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு   சென்றனர்..

 தம்பியை ஏக்கமாக பார்த்தாள் அருள்ஜோதி..

 அக்காவிடம் என்ன சொல்லி சமாதானம் பண்ணுவது என்று தெரியவில்லை அவனுக்கும்..

 “நீ முதலில் அமைதியா இரு.. தூங்கு நாளைக்கு கல்யாணம் நடக்கட்டும் அதுக்கப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கலாம்” என்றான்…

 “என்னால முடியலடா,,  என்ன எப்படி நீ அவரா  கல்யாணம் பண்ணிக்க சொல்ற” என்றாள்.

 “அக்கா என்ன சொல்லுற சிச்சுவேஷன் அப்படி இருக்கு,  இப்ப போய் கல்யாணத்த  நிப்பாட்ட முடியாது..

  கல்யாணம் நடக்கட்டும் நீ பேசாம இரு”,, என்றான்..

 “என்னால முடியல குகா” என்றாள் அருள்ஜோதி..

 “எல்லாம் விதி அக்கா நம்ம கையில ஒன்னும் இல்ல இப்ப கல்யாணம் நின்னா உங்க ரெண்டு பேரும்  வாழ்க்கையும் தான் போகும்..

 அப்பா அம்மாவா பத்தி நினைச்சு பாத்தியா உனக்கு எத்தனை தடவை கல்யாணம் தட்டி போய் இருக்கு இப்பதான் அவங்க சந்தோஷமா இருக்காங்க அந்த சந்தோஷத்தை கெடுக்க போறியா”?.. என்றவன்.

 அருள் ஜோதியை  சமாதானம்  பண்ணி தூங்க வைத்துவிட்டு அவன் அறைக்கு வந்தான்..

 வந்தவனால் தூங்க முடியவே இல்லை,,  மொழிக்கு தான் போன் பண்ணிக் கொண்டிருந்தான் மொழியின் போன்  ரீச்சாக வில்லை..

 யாருக்கும் எதுவும் காத்திராமல் அழகாக விடிந்தது, அன்றைய  காலைப் பொழுது.

 அதிகாலை மூகூர்த்தம்  என்பதால் 3 மணிக்கு எல்லாரும் எழுந்து குளித்து கல்யாணத்துக்கு ரெடி ஆகி 5 மணிக்கு திருமணத்திற்கு அனைத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

 அனைத்து சடங்கும் முடிந்து..

 மணமகனும் மணமகளும் மணமேடைக்கு  வந்தனர்..

 ரிஷி சந்தோஷத்திலும் மிதந்து கொண்டே  மணமேடையில் அமர்ந்திருக்க.. அருள்ஜோதியோ குழம்பியபடியே மணமேடையேறினாள்…

 இருவர்  மணமேடையில் அமர்ந்திருக்க ஐயர் மந்திரத்தை சொல்ல,,  இருவரும் ஐயர் சொல்வதை  சொல்லிக் கொண்டிருந்தனர்..

 ரிஷி  குழப்பமாக இருந்த அருள் ஜோதியின் முகத்தைப் பார்த்தவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு “உடம்பு சரியாகிடுச்சா அருள்?” என்று  மெதுவாக கேட்க.

 அவனைப் பார்த்து “நல்லா இருக்கேன்”  என்று தலையாட்டி இருந்தாள், அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் ஏதோ உலகத்தை வென்றுவிட்ட சந்தோஷத்தில் இருப்பவன் போல் அவன் முகம் அவ்வளவு மகிழ்ச்சியாக ஜொலிக்க..  அந்த சந்தோஷம் அவளையும் கொஞ்சம் தொற்றிக் கொண்டது..

 அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள் நார்மலாக இருப்பது போல் மெல்ல அவனைப் பார்த்து சிரித்திருந்தாள்.

 இது ஓகே என்றவன் அவளின் கையில் அழுத்தம் கொடுத்தான்..

 அனைவரின்  ஆசியோடு அருள்ஜோதியை மணந்து கொண்டான் ரிஷிநந்தன்..

 சடங்குகள்,  சம்பிரதாயங்கள் என்று அன்று நாள் பொழுதும் ஓடிவிட..

 மாப்பிள்ளை வீட்டுக்கு தான் முதலில் வந்தார்கள், திருமணமான தம்பதியர்கள்.. மாப்பிள்ளை வீட்டில் விளக்கு ஏத்தி பூஜை செய்து முடித்து, பால், பழம்  கொடுத்து பின்பு பெண் வீட்டுக்கு செல்வது வழக்கம்..

 பெண்  வீட்டுக்கு  அழைத்து சென்று விட்டு அந்த ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் இருவரும் ஊர்வலமாக சென்று வணங்கி வந்தனர்..

 ஏற்கனவே ரிஷி சுதாவிடம் சொல்லிவிட்டான்,   இரவு  சடங்கு நம்ம வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று.

 தேவகி,  ஐய்யனார் வீட்டில்  சொந்த பந்தங்களும் அதிகம்.வீடும் சிறியதாக இருக்க,,  சுதா வீட்டில் அப்படி இல்லை.

 சொந்த பந்தம் குறைவே,  வெளியூரில் இருந்து வந்தவர்கள் சென்றிருக்க வீட்டில் அப்படி யாரும் இல்லை..

 இதை புரிந்து கொண்ட தேவகி ஐய்யனாரும்,  உங்க இஷ்டப்படியே நடக்கட்டும் என்று இரவு சடங்கை சுதா ராமமூர்த்தி வீட்டிலே நடக்க சம்மதித்தனர்..

 அருள்ஜோதிக்கு  குற்ற உணர்வு கொன்று தின்றது..

 தன்  மனதில் தோன்றிய சந்தேகத்தை  இன்று   இரவு  தனிமையில்  ரிஷியிடம் கேட்டு விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!