“ம்மா…இப்படி சாப்பிடாம இருக்காதீங்க….அப்பா சீக்கிரம் திரும்பி வந்துடுவாங்க….”என்று வசந்தி கூறிக் கொண்டிருக்க,
“என்னை விட்டுட்டு எங்க போறேன் கூட சொல்லாம போயிட்டாரு வசந்தி….அவர் முகமே சரியில்லை….நான் வருவேன்னு சொன்னா என்னை அடிக்க வந்துட்டாரு தெரியுமா….”என்று தேம்பிய படி கூறிக் கொண்டிருக்க,வசந்திக்குமே ஒன்றும் புரியவில்லை.திடீரென்று தன்னை அழைத்த நேசன்,
“நான் வெளியீர் போறேன்…வரதுக்கு ஒரு இரண்டு மூணு நாள் ஆகும்….லட்சுமியை பார்த்துக்கோ….”என்று மட்டும் கூறி சென்றிருந்தார்.எங்கு சென்றாலும் மனைவியை அழைத்து செல்லுபவர் இன்று இப்படி நாள் கணக்கில் விட்டு சென்றது இதுவே முதல் முறை அதுவே லட்சுமிக்கு மனது தாளவில்லை.சுந்தரி வீட்டிற்குள் நுழையும் போதே லட்சுமியின் அழுகை வாசல் வரை கேட்டிருக்க,
Advertisement
“என்ன லச்சு….என்னாச்சு எதுக்கு அழுதுக்கிட்டு இருக்க….”என்று கேட்டபடி உள்ளே வர,
“போடீ…..”என்று கணவனிடம் காட்ட முடியாத கோபத்தை சுந்தரியிடம் காட்ட,
“நல்லதுக்கே காலம் இல்லப்பா….மீ பார்த்தியா…..நீ என்னை சொல்லுற….”என்று சுந்தரி சண்டைக்கு தயாராக,
Advertisement
“நீ சும்மா இருடீ….அவங்களே அழுதுக்கிட்டு இருக்காங்க….நீ இன்னும் அழ வச்சிக்கிட்டு…..”
Advertisement
“எதே நானா????”என்று சுந்தரி வாயை பிளக்க,
“நீ வீட்டுக்கு போ….”என்று வசந்தி அவளின் கையை பற்றி வெளியில் அழைத்து வந்து நேசன் ஊருக்கு சென்றதை கூற,
“என்ன??தாத்தா லச்சு விட்டுட்டு போயிருக்கா???நம்ப முடியலையே….இங்க இருக்குற கோவிலுக்கு கூட தனியா போகாது…..”என்ற கூறிய சுந்தரியின் முகத்தில் யோசனை பரவ,
“சரி விடு நான் கேட்டுக்குறேன்….”என்று கூறிக் கொண்டே மாடி ஏறிபடி நேசனிற்கு அழைக்க அவர் எடுக்கவில்லை.சுந்தரிக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று மனது கூறியது ஆனால் அது தன்னை சார்ந்தது என்று அவள் அறியவல்லை.தன் திருமணத்தை தடுப்பது யாராக இருக்கும் யோசித்தாளே தவிர அது விக்ரம் என்று சந்தேகிக்க கூட இல்லை.நேசனின் பேரனாகிற்றே அவனை சந்தேக வளையதிறிகுள் அவள் கொண்டு வரவில்லை.
“அது ஒரு ஆணோட குரல் தான்….”என்று தீபக் கூறியதிலிருந்து சுந்தரிக்கு வீடு வர வரைக்கும் அது யாராக இருக்கும் என்று ஓடிக் கொண்டிருக்க,வீட்டில் அவள் எதிர்பாரா நிகழ்வு நிகழ்ந்திருக்கவும் தன்னுடையதை மறந்து தான் போனாள் எனலாம்.நேசன் ஒரு வாரம் கழித்து தான் வந்தார் ஊரிலிருந்து வந்தலிருந்து யாரிடமும் பேசுவதில்லை இரண்டு முறை சுந்தரி முயற்சித்தும்,
“சுந்தரிம்மா….நான் இப்ப பேசற மனநிலையில இல்ல….”என்று தளர்ந்து போய் கூறியவரை பார்த்து அவளும் அதன் பிறகு கேட்டகவில்லை.லட்சுமி தான் தவித்து போனார் கணவனின் இந்த ஒதுக்கம் கண்டு.
“என்னங்க என்கிட்ட கூட பேச மாட்டேங்குறீங்க….நான் என்ன தப்பு பண்ணேன்….”என்று அழுது கூட பார்த்து கேட்டுவிட்டார் ஆனால் நேசன் இறுகி போய் நின்றிருந்தாரே தவிர பதில் கூறவில்லை.இரண்டு நாட்கள் வரை அந்த நாடகம் தொடர,அன்று காலை சுந்தரி எழுந்ததே லட்சுமியின் ஆவேச குரலில் தான்,
“என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க….நானும் பொறுமையா போனா என்னமோ முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்க…..”என்று லட்சுமி கத்திக் கொண்டிருக்க,வசந்தியும்,சுந்தரியும் அடித்துபிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
சாப்பாட்டு மேஜையில் நேசன் தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க அவரின் அருகே இரு புறமும் கையை ஊன்றியபடி லட்சுமி நின்று கொண்டிருந்தார்.
“வாவ் லச்சு இத இதை தான் நான் எதிர்பார்த்தேன்….அப்படியே புடி விட்டுடாத……”என்று சுந்தரி அப்படியே இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டாள்.
“ஏய்….என்ன பண்ற….”என்று நேசன் எழ முயற்சிக்க,
“எங்கேயும் ஓட முடியாது முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…..எங்க போயிட்டு வந்திருக்கீங்க….”என்று லட்சுமி விடாமல் கேட்க,இனி மறைக்க முடியாது என்று உணர்ந்தவர்.
“லண்டன்…..”
“……”
“என்ன???தாத்தா என்ன சொன்னீங்க???”என்று சுந்தரி கேட்க,லட்சுமி அதிர்ந்து நகர்ந்துவிட்டார்.
“கொடுக்க என்ன கொடுத்துட்டு தான் வந்துருக்கேன்….”என்ற நேசனின் முகத்தில் தான் மிதமிஞ்சிய கோபம்,வெறுப்பு,இயலாமை குடி கொண்டிருந்தது.
“என்ன சொல்லுரிங்க நீங்க விக்ரமை….”என்ற லட்சுமிக்கு அடுத்த வார்த்தைகள் வர மறுக்க,வசந்தியும்,சுந்தரியும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.
“ஆமா உன் உத்தம பேரனை தான் அடி வெளுத்துட்டு வரேன்….புள்ளை பெத்து வச்சுருக்கான் பாரு உன் புள்ளை….நான் பெத்ததும் சரியில்ல அவன் பெத்ததும் சரியில்ல….”என்ற நேசனை,
“நீங்க எல்லாம் மனுஷனா….என் பேரனை அடிச்சேன் என் கிட்டயே சொல்லுறீங்க….அப்படி என்னங்க பண்ணான் என் பேரன்….ஆங்…ஆங்….”என்று ஆவேசத்துடன் லட்சுமி நேசனி சட்டையை பிடித்துவிட்டார்.
“அய்யோ….அம்மா….”
“லச்சு என்ன பண்ற விடு….”என்று வசந்தியும்,சுந்தரியும் அவரை பிடித்து இழுக்கவே மிகவும் சிரம்பட்டு போயினர்.அத்தனை ஆவேசம் அவரிடம்.நேசனோ தன் மனைவியை அர்த்தமான பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர தடுக்க முற்படவில்லை.
“அவளை தடுக்காதீங்கமா….இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணிட்டு வந்திருக்கேன்னா….அவன் என்ன தப்பு பண்ணிருப்பான் அவ யோசிக்கவேயில்ல….அந்தளவுக்கு அவ மூளை மழுங்கி போச்சு…..”என்று நேசனின் குரலில் இயலாமை வெளிப்பட்டுதுவோ.
“அப்படி என்ன செஞ்சிட்டான் என் பேரன்….சொல்லுங்க….இன்னைக்கு எனக்கு தெரிஞ்சாகனும்….”என்று அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய துவங்க,
“ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்க பார்த்தான்….அவளை பத்தி தப்பான விஷயத்தை வெளில பரப்பி அவ வாழ்க்கை ஒண்ணுமில்லாம ஆக்கினவனுக்கு நான் கொடுத்த தண்டனை கம்மி தான்…..”என்ற நேசனின் பார்வை சுந்தரியின் மீதிருந்து விலக அதுவரை லட்சுமியின் கைகளை பிடித்து தடுத்துக் கொண்டிருந்தவளுக்கு அனைத்தும் புரிந்து போனது.
“என்ன சொல்லுறீங்க நீங்க….விக்ரம் அப்படிபட்டவன் இல்லை….உங்களுக்கு அவனை பிடிக்கலைனு….அவன் மேல அபாண்டமா பழி போடாதீங்க….”என்ற லட்சுமியை விரக்தியாக அவர் பார்க்க,வசந்தியோ,
“என்னப்பா என்னனென்னவோ சொல்லுறீங்க…..”என்று புரியமல் கேட்டார்.நேசனோ அதிர்ந்து விலகி கலங்கி நின்ற சுந்தரியையே பார்த்துக் கொண்டிருக்க,
“ப்பா சொல்லுங்க எந்த பொண்ணு…யாரை என்ன செஞ்சாங்க….”என்று கேட்க,
“அதான் கேட்குறாள்ல சொல்லுங்க…..எங்காயவது யாராவது எதாவது சொன்னா அதை நம்பி என் பேரனை….”என்று மேலும் கூற முடியாமல் லட்சுமி விம்ம,
“என் பெயரை தான்…..என்னை தான் தாத்தா சொல்லுறாரு….”என்று சுந்தரி கூற,
“என்ன???”என்று வசந்தி அதிர,
“ஏய்…..”என்று லட்சுமி எதுவும் பேசும் முன்,
“லட்சுமி வார்த்தையை விட்டுடாத அப்புறம் அல்ல முடியாது…..நான் பொய் சொல்லுவேன் நினைக்கிறியா….அதுவும் என் பேரன் மேலேயே….”என்று நேசன் அவரின் அருகில் சென்று மனைவியை தன் அருகே இழுத்துக் கொண்டார்.அவருக்கு தெரியுமே மனைவிக்கு விக்ரமின் மீது எத்தனை ப்ரியம் என்று அதனால் அவர் நிச்சயம் வார்த்தையால் சுந்தரியை காயப்படுத்திவிடுவார் என்று பயந்து அவரை தன்னுடன் வைத்துக் கொண்டார்.
“சுந்தரி என்ன பேசுற நீ….புரிஞ்சு தான் பேசுறியா….”என்று வசந்திக்கு கோபம் மகளின் மீது.விக்ரம் நேசன்,லட்சுமியின் பேரன் அவன் இது போல் எல்லாம் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை அவரால்.
“அவளை ஏன்மா திட்டுற….நான் சொல்லுறேன்….”என்ற நேசன் தன் கை வளைவில் இன்னும் எத்தனை அதிர்வை தான் நான் தாங்குவேன் என்ற நிலையில் நின்று கொண்டிருந்த லட்சுமியை பார்த்து,
“நான் சொல்லுறுதை நீ நம்பி தான் ஆகனும்…..”என்று கூற,
“இல்ல அப்படி எதுவும் இருக்காது….”என்று ஈன சுரத்தில் கண்களில் கண்ணீர் மல்க லட்சுமி தலையை ஆட்ட,
“என்னங்க நான் நம்புறேங்க….நான் நம்புறேன்….நீங்க கலங்காதீங்க….”என்று லட்சுமி கணவனை அணைத்தபடி தேற்ற,என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் வசந்தி தான்,
“என்ன தான் ஆச்சு சொல்லுங்கப்பா….எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு….”
“போன மாசம் சுந்தரிக்கு ஒரு வரன் வந்து திடீர்னு தட்டி போச்சுல்ல….அப்ப ஒரு இரண்டு நாள் கழிச்சு செல்வம் என்னை தனியா பார்க்க வந்தான்….”என்றவர் அன்றைய நிகழ்வுக்கு சென்றார்.
“என்ன செல்வம் எதுக்கு என்ன தனியா பார்க்கனும் சொன்ன….என்ன விஷயம்???”என்று நேசன் கேட்க,
“ஐயா….இதை எப்படி சொல்லுறதுனு தெரியலை…நான் சொல்லுறதை நீங்க நம்புவீங்களானும் தெரியலை….”என்று செல்வம் பீடிகை போட,
“விஷயத்தை சொல்லு செல்வம்….”என்றார் நேசன்.
“அது உங்க வீட்டுல உள்ள யாரோ தான் நம்ம சுந்தரி கல்யாணத்தை வேலு மூலமா தடுத்துக்கிட்டு இருக்குறது….”
“ஏய் எங்க வந்து என்ன சொல்லிக்கிட்டு இருக்க….”என்று நேசன் அவேசத்துடன் எழுந்துவிட்டார்.
“ஐயா உட்காருங்க….நான் எதையும் விசாரிக்காம சொல்லைங்க….என் காதால கேட்டதை தான் சொல்லுறேன்….”என்ற செல்வத்தின் முகத்தில் நிச்சயம் பொய் இல்லை,
“என்ன என்னய்யா சொல்லுற….”என்று வார்த்தைகள் வர மறுத்தது அவருக்கு.
“ஐயா…கொஞ்சம் நிதானமா கேளுங்க….நான் பொய் சொல்லலை….அன்னக்கி என் பொண்டாட்டிக்கு உடம்புக்கு சுவமில்லனு ஆஸ்பத்திருக்கு போயிருந்த போது தான்….வேலுவை பார்த்தேன்….யார் கிட்டயோ போன் பேசிக்கிட்டு இருந்தான்…சரி நீங்க தான் வந்திருக்கீங்களோனு நான் அவனை நெருங்கும் போது தான் சுந்தரி பேரு அடிப்பட்டுச்சு….அவன் சுந்தரிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பேரு,ஊரு,அவரோட நம்பருனு எல்லாத்தையும் யார் கிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தான்….அதுக்கு அவங்க ஏதோ சொல்ல….சரி சரி சார் நான் நீங்க சொல்லுற மாதிரி செஞ்சிடுறேன் எனக்கு பணம் போட்டுவிடுறீங்களா என்றவன் பின் தயங்கி….நேசன் ஐயாக்கு இது தெரியாத மாதிரி பார்த்துக்கோங்க….எனக்கு பயமா இருக்குனு சொல்ல அதுக்கு என்ன சொன்னாங்களோ…..சரினு வச்சிட்டு போயிட்டான்…..”என்றார் செல்வம்.
“அது என் வீட்டு ஆளுங்கனு நான் எப்படி நம்பறது….அது எனக்கு வேண்டாதவங்க யார் வேணாலும் இருக்கலாம்ல….”என்றார் நேசன்.
“நானும் அப்படி தாங்க முதல்ல நினைச்சேன்….அதுக்கு அப்பறம் நான் சுந்தரிக்கு வரன் பார்க்க போறப்பெல்லாம் வேலுவை பார்ப்பேன்….அப்ப தான் ஒரு நாள் அவன் எஸ்டீடி பூத்துக்கு போனான்.அப்போ நானும் பின்னாடியே போனேன் அவன் பேசற வரைக்கும் மறைஞ்சு இருந்து அவன் போனதுக்கு அப்பறம் அவன் யார் கிட்ட பேசினானு கேட்க அவன் தான் சொன்னான் ஏதோ வெளி நாட்டுக்கு பேசிட்டு போறாருனு….அவன் கை,காலை பிடிச்சு நம்பர் வாங்கினேன்…..”என்று ஒரு நம்பரை கொடுக்க அதை வாங்கி பார்த்த நேசனுக்கு நெஞ்சமே நின்றுவிட்டது.அது விக்ரமின் நம்பர்.
“இது யார் நம்பர்னு உங்களுக்கு தெரியுதா ஐயா….நான் வெளி நாடுனு சொல்லவும் உங்க பிள்ளை அங்க தான இருக்காரு…அவர் தானோனு….”என்று செல்வம் ஏதோ மேலும் கூற வர,
“இதை நான் பார்த்துக்குறேன்….நீ இதை பத்தி யார் கிட்டேயும் வாய் திறக்காத புரியுதா….”என்று அழுத்தமாக கூற,செல்வம் தலையை ஆட்டினார்.
“அதனால தான் நீங்க லண்டன் போனீங்களா தாத்தா….”என்று சுந்தரி கேட்க,
“லட்சுமீமீமீமீ……..”என்று அத்தனை உக்கிரமாக கத்தியபடி கையை ஓங்கியிருந்தார் நேசன்.திருமணமான நாளிருந்து இதுவரை தன்னிடம் அதிர்ந்து கூட பேசாத மனிதர் இன்று இப்போது தன்னை அடிக்கவே ஓங்குகிறார் என்பதை லட்சுமியை பாதித்துவிட,அவர் தன் கணவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க,
“நான் எதையும் ஆராயாம செய்யமாட்டேன் லட்சுமி….உனக்கு நல்லா தெரியும்….அப்படி இருந்தும் என்னை நம்ப மாட்ட….அப்படி என்னடீ உன் பேரன் மேல அப்படி ஒரு கண்மூடி தனமான பாசம்….உன்னை போல ஆளுங்களால தான் அவன் இப்படி வீணாப்போய் நிக்குறான்….எவ்வளவு கேவலமான வேலை பார்த்து வச்சிருக்கான்….ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கவே பார்த்துருக்கான்….அவனைஐஐஐஐ…..”என்று பல்லை கடிக்க,
“தாத்தா….வேண்டாம்….”
“அப்பா….”என்று வசந்தி மற்றும் சுந்தரி இருவரும் அவரை இழுத்துபிடித்து அமர வைக்கவே முடியவில்லை.அத்தனை அங்காரமாக கத்திக் கொண்டிருந்தவரின் உடலும் மனதை போலவே இறுகி போயிருந்தது.அதே சமயம் லண்டனில்,
“என்னையவே அடிச்சிட்டல்ல…..இனி நீ தான் இந்த விக்ரம் யாருனு நீ தெரிஞ்சுக்க போற…..சுந்தரி…ம்ம்…அவ தான இது எல்லாத்துக்கும் காரணம்….அவளுக்கு இனி நல்ல காலமே இருக்க போறது இல்ல…அவளோட பேட் லக் ஸ்டார்….”என்ற விக்ரமின் கண்களில் வன்மம் கூடி போயிருந்தது.