Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 7 1

நெஞ்சம்  ஏங்குதே…

அத்தியாயம் -7



Advertisement

Advertisement

ரிஷிக்கு டாக்டர் சொல்லியதை நம்பவே முடியவில்லை, தந்தையை அணைத்து அவன் அழுதுக்கொண்டிருக்க.

Advertisement

“டைம்  ரொம்ப  இல்ல அவங்க இருக்குற வரைக்கும், நல்லா பாத்துக்கோங்க”, என்று  டாக்டர் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

Advertisement

இந்த அறைக்கு முதலில் ரிஷி  வரும் போது டாக்டர் ஏதாவது சர்சரியை பத்தி பேசுவார், அருள்ஜோதியை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் ரிஷி வர..

அவரோ “அருள்ஜோதிக்கு, தலையில் பயங்கர அடி, ஆப்ரேசன் பண்ணவே முடியாத ஸ்டேஜில் இருக்கு அவங்க நிலைமை.

 பல்ஸ் கம்பியாகிட்டே வருது, இனி இருந்த டூ ஹவர் இல்லை ஒரு பைவ் ஹவர்  உயிரோட இருப்பாங்க, என்ன பேசனுமோ  பேசிக்கோங்க” என்று டாக்டர் சொல்ல..

ரிஷியால் இதை தாங்கவே முடியவில்லை,  “இல்ல டாக்டர் இப்படி சொல்லாதீங்க,  நீங்க ஏதாவது பண்ணுங்க, எனக்கு  என் அருள்ஜோதி வேணும் பிலீஸ்,” என்று அவன் கதற..

“சாரி ரிஷி அவங்க பிழைக்க 5% சான்ஸ் இருந்தா கூட நான் முயற்சி பண்ணுவேன், ,   எங்களால ஒன்னும் பண்ண முடியாது, ஆப்ரேசன் தேட்டருக்கு கொண்டு போய் அவங்க உயிர் போகுறத விட,  நீங்க கொஞ்சம் நேரமாவது அவங்க கூட இருங்க,”.

ரிஷிக்கு ஏதாவது பண்ணி அவளை காப்பாற்றி விடலாமா என்று யோசித்தவன், “பாரின் அழைத்து சொல்லலாமா, இல்ல வேற ஹாஸ்பெட்டல் போகலாம், அவளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்” என்று,  டாக்டரிடம் மீண்டும் அவன்  பேச.

“சாரி ரிஷி புரிஞ்சுக்கோங்க, அவங்க பிரைன் ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு, ஆப்ரேசன் பண்ண தலையை ஓபன் பண்ணாவே அவங்க இறந்துடுவாங்க, இது தான் அவங்க பிரைன் ஸ்கேன் ரிப்போர்ட், இதை நீங்க யார் கிட்ட வேணா காண்பித்து, செகெண்ட்  ஒபினியன் கேளுங்க.எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.

ஆனா பேசன்ட் இருக்குற போற கொஞ்சம் நேரத்துக்கு அவங்கள கொஞ்சநேரம் சந்தோஷமா வச்சிருங்க..

எல்லார்கிட்டையும் சொல்லிடுங்க, பார்க்குறவங்க பாருங்க, பேசுறவங்க பேசுங்க, ஆனா அவங்க இறந்த போவங்க அப்படியின்னு அவங்க கிட்ட சொல்லா தீங்க, போற உயிர் கொஞ்ச நேரம்  சந்தோஷமா இருக்கட்டுமே” என்று டாக்டர் சொல்லி விட.

ரிஷிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை தந்தையை அணைத்துக்கொண்டு அழுதான்.

“தப்பு பண்ணிட்டேனே, யாருமேல இருந்த கோபத்துல இவள விலக்கி வச்சு கொடுமை பண்ணிட்டேனே”, என்று அவன் அழுக.

“ரிஷி, ரிஷி அழுதா எழுந்துறு, மருமகளை போய் பாரு, அவ கண்முழிச்ச உன்ன தேடுவா டா, நல்லா பிள்ளடா, அந்த பிள்ள அவ இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் எழுந்துடு” என்று கூறி மகனுக்கு  தண்ணீர் கொடுத்து, அருள் ஜோதி இருந்த  அந்த தனி ஐ சி யூ வார்டுக்கு அனுப்பி வைத்தவர்.

 மனைவியை  தேட.

சுதாவை காணவில்லை, “சுதா, சுதா” என்று அவர் தேட.

அங்கே உள்ள நர்ஸ் ஐ சி யூ பக்கத்தில் உள்ள அறையை காண்பித்து,  “உங்க வைப் அங்கே இருக்காங்க” என்று சொல்ல,

ராமமூர்த்தி அந்த அறைக்கு சென்றார்.

சுதா கட்டில் அமர்ந்து  கொண்டு பேரப்பிள்ளைகளை  கொஞ்சிக் கொண்டிருந்தார்.

 கணவரை பார்த்தது,  “வாங்க வாங்க உங்க பேர பிள்ளைகளை  வந்து பாருங்க அப்படியே நம்ம ரிஷி மாதிரியே இருக்காங்க,  இவனுங்க ரெண்டு பேரும்” என்று கூறி சந்தோஷ பட..

மனதில் வலியோடு வந்தவர் பேர பிள்ளைகளை  பார்த்து இன்னும் பாரம் மேறியது. என் பேர  பிள்ளைகள் தாயில்லாமல் வளர போவதை எண்ணி கண்ணீர் வடித்தார்.

சுதா பயந்து போனார் “எதுக்கு இப்படி அழுவுறீங்க, சந்தோஷமா பாருங்க” என்று கணவனை மிரட்ட.

சுதாவுக்கு அருள் ஜோதியின்  விசயம் தெரிந்தாள் இப்பவே அழுது ஆர்பாட்டம் பண்ணுவாள், மருமகள் உயிரோட இருக்குற வரைக்கும் நிம்மதியா இருந்துவிட்டு  போகட்டும் என்று நினைத்தவர்  அமைதியாக குழந்தையை பார்த்தார்.

ரிஷி சிறு பிள்ளையில் இருப்பது போலவே குட்டி பிள்ளைகள் இருக்க…

பார்த்ததும்  சந்தோசப்பட்டவர்.

 “சம்மந்தி வீட்டுக்கு சொல்லிட்டீயா குழந்தை பிறந்ததை” என்று. சுதாவிடம் கேட்க.

 “நான் அப்பவே சொல்லிட்டேங்க சம்பந்தி வீட்டுக்கும் சொல்லிட்டேன்,  மொழிக்கும்  சொல்லிட்டேன். அவங்க எல்லாம்  கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க”, என்று கூற.

 ரிஷி கனத்த மனதோடு தான் அந்த ஐ சி யூ அறைக்கு சென்றான்.. அவன் உயிரோடு இருக்கும் போதே தன் இதயத்தை யாரோ  பிடித்து இழுத்தது போல் ஒரு  வலியை உணர்ந்தான், தொண்டை வரண்டது.. கால்கள் நடங்கியது.

அருள் ஜோதி மயக்கத்தில் தான் இருந்தாள்..

 அருள்  ஜோதியின் அருகில் சென்றவன் அவள் பக்கத்தில் ஒரு சேரை போட்டு அமர்ந்து கொண்டான்.

 அவளின் கையை எடுத்து தன் கண்களில் வைத்துக் கொண்டான்..

அவளிடம்  மன்னிப்பு கேட்பது போல,  அவன் செய்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டான்…

 தப்பு பெரிய  தப்பு, உன்னை விட்டு நான் வந்தது பெரிய தப்பு யார் மேலேயோ  இருக்கிற கோபத்தை உன்கிட்ட, காட்டுனது என் தப்பு தான், என்னை மன்னித்துவிடு  ஜோ. என்று  அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டவன், அவள் கையை எடுத்து அவன் கண்ணீல் வைத்து  கொண்டு பேசியவன், பிறகு அவன் கன்னதில் அவள் கையை பிடித்து வைத்து கொண்டவன், கண்ணீல் நீரோடு அவளை பார்த்திருக்க.

சிறிது நேரம் கழித்து மெல்ல கண்விழித்தாள் அருள் ஜோதி,.

அவள் கண்விழித்து முதலில் பார்த்தது ரிஷியை தான்,

கண்கலங்கிய படியே அவளை பார்த்திருந்தவன், அவள் கண்விழித்ததும், “ஜோ,  மா” என்க.

“அத்தான் “என்று மெல்ல பேசினாள்.

அவனோ கண்களை துடைத்து விட்டு.

சிரிக்க முயற்சி பண்ண அவனால சத்தியமாக முடியவில்லை, வேதனையில் அவன் உள்ளம் கதறியது, கத்தி அழ தோன்றியது..

அருள் ஜோதி இருக்குற கொஞ்சம் நேரத்தில், அவளை நன்றாக பார்த்தக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன்

தன் உணர்வுகளை கட்டு படுத்தி.. அமைதியாக அவளை பார்க்க.

 “கோபம் போயிடுச்சா அத்தான்” என்றால் மெல்ல..

  ஊம்ம்  என்று தலையை ஆட்டி இருந்தான்.

 அவன் தன் கையை அவன் கன்னத்தில் வைத்திருந்ததை ஆசையாக பார்த்திருந்தவள். அந்த கையால்  அவன் கன்னத்திற்க்கு ஒரு அழுத்தம் கொடுக்க..

 அந்த கையை இறுக்கமாக பிடித்து அதில் முத்தம் வைத்திருந்தான் ரிஷி..

 அருள்ஜோதிக்கு அத்தனை மகிழ்ச்சி.

 “என்ன குழந்தைங்க நம்மளுக்கு” என்றாள்.

 அப்போதுதான் அவனுக்கு பிள்ளைகளை பற்றி  ஞாபகம் வந்தது இரண்டு ஆண் பிள்ளைகள் என்று அவனுக்கு தெரியுமே..

“இரண்டு  பையங்கடா,  இரு,  நீ பார்க்கணுமா அம்மாவை வர சொல்லட்டுமா”  என்று ஒரு ஒரு வார்த்தையாக மெதுவாக  பேசியவன் எழுந்து கொள்ள பார்க்க.

 “இல்லை கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்துக்கிறேன் நீங்க என்கூடவே இருங்க” என்றாள்.

 மீண்டும் அவள்  கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்..

 அவளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க..

 அவளும் அவனை பார்த்தபடியே கண் மூடுவதும் கண்விழிப்பதுமாக இருந்தாள்..

 “எங்க அப்பா அம்மாவுக்கு சொல்லிட்டீங்களா  குழந்தை பிறந்ததை அவங்க வர்றாங்களா?குகனுக்கு சொல்லிட்டீங்களா? மொழிக்கு சொல்லிட்டீங்களா?” என்ற அவள் கேட்க..

 சுதா சொல்லி இருப்பார் என்று தெரிந்து கொண்டவன் “அம்மா சொல்லியிருப்பாங்கடா வந்துருவாங்க” என்றான்..

“எனக்கு எல்லாரையும் பாக்கணும் சீக்கிரம் வர சொல்றீங்களா” என்றாள்.

 அருள்ஜோதிக்கு எதுவோ  நடக்கப் போகிறது என்று தெரிந்தது.

 அவள் அனைவரையும்  பார்க்க ஆசைப்படுவதை தெரிந்து கொண்டவன்,  “ஒரு நிமிஷம்  டா நான் எல்லாரையும் வர சொல்லிட்டு வர்ரேன்”  என்று அவன் வெளியே  போக பார்க்க அவன் கைகளை பிடித்துக் கொண்டவள்.

 “நீங்க இங்கேயே இருங்க,  என் கூடவே” என்றாள்.

 “சரிடா” என்றவன்  அவளின்  கைகளை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்கா.

மனதில் இவளை யா?  நீ தள்ளி வைத்தாய், நீ ஒரு மனுஷன்  உனக்கு மனசாட்சி  இருக்குதா, என்று அவனை, அவனே திட்டிக்கொள்ள

 சுதா கதவை தட்டி விட்டு  குழந்தையை  தூக்கி வந்தார், அவர் ஒரு குழந்தையையும்,  ராமமூர்த்தி ஒரு குழந்தையும் தூக்கி வந்தனர்.

 “அருளே உன் பிள்ளைகளை பார்த்தியா அப்படியே என் மகன் மாதிரியே இருக்கான்  பாரு” என்று சொல்லி சிரித்தபடியே வந்தார் சுதா..

 மாமியாரைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தவள் , தன் குழந்தைகளை பார்க்க. அச்சு அசல் அவள்  பிள்ளைகள் ரிஷி  முக ஜாடையில இருக்க.

  தன் இரண்டு பிள்ளைகளையும் பார்த்து சந்தோஷப்பட்டவள்

 ராமமூர்த்தியை பார்க்க அவர் முகமோ எதுவோ போல இருந்தது.

 “என்னாச்சு மாமா ஏன் உங்க  முகம் ஒரு மாதிரி இருக்கு?.

எனக்கு ஒன்னும் இல்ல மாமா இன்னும்  ஒரு நாலு  நாள் நான் வீட்டுக்கு வந்து விடுவேன் பயப்படாதீங்க” என்று அவள் கூற.

 ரிஷிக்கு தாங்கவே முடியவில்லை “ஒரு நிமிஷம்” என்று தந்தையிடம்  சொல்லிவிட்டு  வெளியில்  ஓடி வந்தவன்.

 கதறி  அழுதான் அவனுக்கு தாங்கவே முடியவில்லை..

 இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தன்னை விட்டு   செல்வாள் என்பதை  அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

 தன் பிள்ளைகளை  பார்த்தவனுக்கு இன்னும் அழுகை வந்தது..

 தன்  தோள் மீது யாரோ  ஒருவர்  கை வந்து  வைக்க,

 யார் என்று அவன் திரும்பிப் பார்க்க குகன்.

 “என்னாச்சு மச்சான் ஏன் இப்படி அழுகுறீர்கள்?  அக்கா எங்கே” என்றான் குகன்…

“குகா”! என்றவன்  அவனை அணைத்துக்கொண்டு   அழுதிருந்தான்.

“என்னால தாங்க முடியலடா”

என்றவன் அருள் ஜோதியை இருக்கும் நிலைமை சொல்ல.

ரிஷி சொன்ன விசயத்தில்  கேட்க, குகன் “என்ன  என்ன சொல்றீங்க, மச்சான்” என்றவனுக்கு  ரிஷி சொல்லவதை நம்பமுடியவில்லை,

ரிஷி உடையில் உள்ள ரத்த கறைகளை பார்த்தவன் அதிர்ந்து போனான், ரிஷி சொல்வது  உண்மையா!.

மறுபடியும், மறுபடியும்  அவன் ரிஷியிடம்  “அக்கா, அக்காவுக்கு அருள்ஜோதி  அக்காவா!” என்று அவன் பேச..

“ஆமாட்டா  உன் அக்கா தான், இன்னும் கொஞ்சம் நேரம் தான் அவ உயிரோடு இருப்பா”?.. என்று ரிஷி சொன்னதும்.

“இல்லா, இல்லா நான் நம்ப மாட்டேன், அக்காவுக்கு ஒன்னும் ஆகாது, எல்லாம் சரியாகும்,” என்றவன் புலம்ப.

“நீ வா”  என்று டாக்டர் அறைக்கு குகனை  ரிஷி அழைத்து செல்ல.

டாக்டர் சொல்லியதை கேட்ட குகன்.

“வேற ஏதுவே பண்ணமுடியாதா”  என்றான்.

டாக்டர் “முடியாது” என்று தலையாட்ட.

விருட்டென்று வெளியே வந்தான்..

“இன்னும் எவ்வளவு நேரம் அக்கா இருப்பா” என்றான் ரிஷியிடம்…

“இன்னும் ஒரு மூன்று மணிநேரம் இல்ல 5 மணிநேரம்” என்றான்.

குகனுக்கு தாங்கவே முடியவில்லை.

அருள் ஜோதிக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது என்று சொன்னதும் ஆசையாக  ஓடி வந்தான், அவன் ஆபிஸ் விசயமாக சூரத் வந்திருக்க, சுதா போன் பண்ணதும் உடனே கிளம்பி வந்திருந்தான், அவன் மீட்டிங்கை கூட விட்டு விட்டு…

நடந்தான், நடந்தான் அந்த ஹாஸ்பெட்டல் காரிடரில் வேகமாக நடந்தான், குகன்  புலம்பிய படியே நடந்தான், ரிஷிக்கு பயமாக இருந்தது அவன் அழுதால்  கூட பரவாயில்லை,..

இப்படி புலம்பி வேகமாக நடப்பவனை பார்த்து  பயந்த ரிஷி.

“குகா, குகா”  என்று  அவன் அருகில் வந்து  அழைக்க, .. “மச்சான்” என்றவன் கதறி அழ,  “டேய் அழாதடா, அழதா குகா” என்றான் ரிஷி

” எங்க அம்மா  எப்படி  இதை தாங்குவாங்க மச்சான், அப்பா என்ன ஆவார், மொழிக்கு இது தெரிந்தாள், அவள் என்ன ஆவாளோ, என் குடும்பம் இதை எப்படி தாங்கும், ஐயோ, ஐயோ” என்று அவன் தலையில் அவனே  அடித்து  கொண்டு. கீழே அமர்ந்து மண்டி இட்டு அழ.

அவனை தாங்கி பிடித்த ரிஷி, அழாதடா, என்று அவனை அணைத்து பிடித்து தேற்ற..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!