Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 2

அத்தியாயம் 2

ஸ்மிருதி நன்றாக சமையல் செய்ய பழக்கப்பட்டவள், சமையல் செய்வதில் அவளுக்கு ஆர்வமும் அதிகம், சில மாதங்களாக தான் தன் விருப்பபட்ட எதிலும் ஈடுபடாமல் நடை பிணமாக திரிகிறாள், ஸ்மிருதியின் வாழ்வில் அப்படி என்ன சம்பவம் நடந்தேறியது என்பதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நாம் தெரிந்து கொள்வோம்…



Advertisement

தன் தமையனின் வார்த்தைக்கு அடிப்பணிந்து, அவனுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து முடித்தவள், உணவு மேஜையில் அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருந்தாள், அந்த நேரம் சரியாக காலிங் பெல்லின் சத்தம் ஒலிக்க, கடிகாரத்தை ஏற்று பார்த்தவள், மணி ஒன்று என்பதை காட்டவும்,.. ‘அண்ணா வந்துட்டாரு போல’ ஒருவித உற்சாகத்துடன் ஓடிச்சென்று, கதவை திறந்த நேரம், ஸ்மிருதி எதிர்பார்த்தது போல் அவளின் தமையனான விஷ்ணு வரதன் தான் நின்று கொண்டிருந்தான்,…

தமையனை பார்த்த மகிழ்வில் ரோஜா பூவாய் மலர்ந்த ஸ்மிருதியின் முகம், விஷ்ணுவிற்கு அருகில் நின்றிருந்த தனது கணவனான அஜய் க்ரிஷ்ணாவை கண்டதும் சட்டென்று முகம் இறுகி போனது,…

Advertisement

Advertisement

“என்ன ஸ்மிருதி, உன்னோட வீட்டுக்குள்ள என்னை வான்னு கூட கூப்பிட மாட்டியா” அவள் முக இறுக்கத்தை கவனிக்காத விஷ்ணு,  சற்று கிண்டல் தொனியில் கேட்டிருக்க, தன் முகத்தில் இருந்த இறுக்கத்தை மறைத்தவள் “உள்ளே வாங்க அண்ணா” என்றவாறு முன்னேறி நடந்தாள்,…

“வாசனை மூக்கை துளைக்கிது” என்றவாறு உள்ளே வந்த விஷ்ணு, உணவு மேஜையில் உணவு தயாராக இருப்பதை கண்டு “யாரோ சமைக்க தெரியாதுன்னு சொன்ன மாதிரி இருந்தது” என்றான் தங்கையை வாரியபடி…

Advertisement

“எனக்கு சமைக்க வருமா வராதான்னு உங்களுக்கு தெரியாதா” என்று சொன்னவள்,.. “ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வாங்க, நான் சாப்பாடு பரிமாறுறேன்” என்றாள் உணவு மேஜையின் பக்கம் சென்றவாறு,..

அவனும்… “அஜய் வாடா” என்றவாறு நண்பனை அழைக்க,… அஜய்யும் சிறு தலையசைப்ப்புடன், விஷ்ணுவுடன் சேர்ந்து கைகழுவி வந்தான்…

இருவரும் உணவு மேஜையின் நாற்காலியில் வந்து அமர, ஸ்மிருதி விஷ்ணுவிற்கு உணவு தட்டை எடுத்து வைத்தாள், அஜய்யோ தனக்கான தட்டை அவனே எடுத்து கொள்ள, விஷ்ணுவோ “ஸ்மிருதி வைப்பாடா,” என்று சொல்ல, “ம்ம்” என்ற முணங்களோடு முடித்துக் கொண்டான் அஜய்,…

தான் சமைத்த உணவு வகைகளை விஷ்ணுவின் தட்டில் பரப்பினாள் ஸ்மிருதி, பரிமாறி முடித்தவள் நகர போகையில்,.. “அஜய்க்கு யார் பரிமாறுவா” என்ற  தமையனின் குரலில் பதில் பேசாது மௌனமாய் நின்றாள்,…

“இட்ஸ் ஓகே டா, நானே போட்டுப்பேன்” என்ற அஜய் தனக்கு பரிமாற போன நேரம்,.. “நிறுத்துடா நீ முதல்ல” என உரிமையாக தடுத்த விஷ்ணு, தன் தங்கையை நோக்கியவாறு “உன்கிட்ட தான் கேட்டேன், அஜய்க்கும் பரிமாறு” என்றான் கட்டளை தொனியில்….

அவளோ… “ப்ளீஸ் அண்ணா, நான் யாருக்கும் பரிமாற மாட்டேன், அவங்க வேலையை அவங்களாவே செஞ்சிக்கிறது தான் எல்லாருக்குமே நல்லது” என சிறு கடினத்துடன் சொல்ல,.. “நீ என்ன பேசிக்கிட்டு இருக்க ஸ்மிருதி, அஜய்க்கு சாப்பாடு பரிமாறுரதுல உனக்கு அப்படி என்ன கஷ்டம்” என்று எகிறினான் தங்கையிடம்…

அவளோ… “உன்னோட ஃபிரண்ட் உன்கிட்ட எதையும் சொல்லலையா, அவருக்காக நான் ஒரு டம்ளர் வாட்டர் கூட எடுத்து கொடுக்க மாட்டேன், அப்றம் எனக்காகவும் அவர் எதுவும் செய்ய கூடாது, நாங்க இந்த வீட்ல ஒன்னா இருந்தாலும் கூட, எங்களை பொறுத்தவரைக்கும் நான் யாரோ அவர் யாரோ அப்படி தான் இத்தனை நாட்களும் இருந்துகிட்டு இருக்கோம், இப்போ உனக்காக எல்லாம் என்னுடைய முடிவை மாத்திக்க முடியாது” என்றாள் கண்களில் அனல் தெறிக்க,….

விஷ்ணுவிற்க்கோ அவளுக்கும் மேல் கோபம் வந்தது,… “என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும், இதற்காக தான் உங்களுக்கு நாங்க கல்யாணம் பண்ணி வைச்சோமா? உங்களுக்கு கல்யாணமாகி நேத்தையோட ஒரு மாசம் முடிஞ்சி போச்சு, எங்க கூட இருந்த போது தான் முகத்தை திருப்பிக்கிட்டு யாரோ மாதிரி நடந்துகிட்டீங்க, தனியா வந்தாளாவது மனசு விட்டு பேசி ஒன்று சேருவீங்கனு பார்த்தா இப்போதும் அதே போல தான் இருக்கீங்க, நீங்க ரெண்டு பேரும் மாறவே மாட்டீங்களா,” என ஆதங்கத்துடன் கேட்க, இருவரிடத்திலும் மௌனம் மட்டுமே நிலவியது,..

“ஏய் ஸ்மிருதி,… நீ தான் எல்லாத்துக்கும் காரணம்னு எனக்கு தோணுது” என தங்கையின் மீது ஆத்திரப்பட… அவளோ… “ஆமா நான் தான் எல்லாத்துக்கும் காரணம், நீ சொன்னன்னு என் மனசை கல்லாக்கிகிட்டு இந்த கல்யாணாத்தை செஞ்சிகிட்டேன்ல சொல்லுவ நீ” என்றாள், கண்களில் சட்டென்று நீரும் வழிந்து விட்டது,…

ஸ்மிருதியின் அழுகையை கண்ட அஜய்யோ… தன் நண்பனை நோக்கியவாறு,.. “ப்ளீஸ் விஷ்ணு, இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்” என்று இறைஞ்சலுடன் சொல்லிருக்க,.. ஸ்மிருதியோ கோபபார்வையை அவன் மீது வீசியவாறு “எதுக்காக என் அண்ணா என்கிட்ட எதுவும் பேச கூடாது, இதை சொல்றதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை, எந்த இடத்துல இருக்கணுமோ அங்கே இருக்கிறது தான் உனக்கு நல்லது” அவள் வெடுக்கென்று கை நீட்டி சொல்லி முடித்த நேரம், விஷ்ணுவின் கரம் ஸ்மிருதியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது,….

இதனை சற்றும் எதிர்பார்க்காத அஜய் திகைப்புடன் நிற்க, விஷ்ணுவோ… “இன்னும் ஒரு வார்த்தை பேசுன, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என தங்கையை கைநீட்டி எச்சரித்தவன்,… நண்பனை கோபமாக நோக்கி… “என்னடா நடக்குது இங்க, அவ இப்படி தான் உன்கிட்ட நடந்துகிறாளா, இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாம அமைதியா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க,” நண்பனிடம் சீறிய விஷ்ணுவோ, சில நொடிகள் மௌனமாய் நின்று ஏதோ யோசித்தவனாய்,…

“இல்ல இதுக்கு மேலயும் நீங்க இங்க இருக்கிறது சரி இல்லை, நீங்க ரெண்டு பேரும் இப்போவே என் கூட நம்ம வீட்டுக்கு கிளம்புறீங்க, உங்களுக்கு தனிமையை கொடுத்தா ஒன்னு சேருவீங்கன்னு நினச்சோம், ஆனா அது நடக்கவே நடக்காதுன்னு புரிஞ்சி போச்சு, நம்ம வீட்டுல எங்க எல்லார் கண்ணு முன்னாடியும் வந்து இருங்க, உங்களை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு நாங்க பார்த்துகிறோம்” என்று ஒரு முடிவோடு கூறினான் விஷ்ணு..

“இங்க பாரு விஷ்ணு, எதையும் அவசரமா செஞ்சி முடிச்சிட முடியாது,” என அஜய் சொல்ல,.. “என் மேல நீ அன்பும் மரியாதையும் வச்சிருக்கிறது உண்மைனா, என்கூட கிளம்பி வா,” விஷ்ணு அழுத்தமாக சொல்லி முடிக்க, இதற்கும் மேலும் தான் பேசி பிரயோஜனம் இல்லை என்பது புரிந்து அஜய் மௌனமாகி போனான்…

விஷ்ணு சொன்ன வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, அஜய் மற்றும் ஸ்மிருதி இருவரும் போகும் முடிவிற்கு வந்தனர், தங்கள் உடமைகளை தனி தனியாக பேக் செய்து முடித்தவர்கள் அப்பார்ட்மென்டின் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தனர்,…

“நான் என்னோட கார்ல தான் வந்தேன், சோ நான் அதிலேயே போயிடுறேன், நீங்க உங்களோட கார்ல வாங்க” என்று சொல்லிவிட்டு நடக்க, ஸ்மிருதியோ.. “அண்ணா நானும் உங்க கூடவே வரேன்” என்று சொன்னவள், தமையனின் அனல் தெறிக்கும் பார்வையில் அதோடு வாய் மூடிக் கொண்டு  தலைகுனிந்து கொண்டாள்,..

விஷ்ணு தன் வண்டியில் ஏறி கிளம்பிவிட, அஜய்யும் இருவர் பெட்டிகளையும் டிக்கியில் வைத்து விட்டு, ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான், இங்கு ஸ்மிருதிக்கும் வேறு வழி இருக்கவில்லை, எரிச்சலுடனே, காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்,…

அஜய் வண்டி ஓட்டுவதில் மும்முரமாகி விட, ஸ்மிருதி காதில் ஹெட்செட்டை மாட்டி கொண்டு போனில் எதையோ பார்த்தபடி வந்தாள், இருவரும் அந்த ஒருமணி நேர பயண இடைவெளியில் மறந்தும் கூட பேசாமல் தான் வந்தனர்,…

ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு  அஜய் இயக்கி கொண்டிருந்த கார், விஷ்ணு மற்றும் ஸ்மிருதியின் பிறந்த வீடான அந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் முன்பு நின்றது,… வீட்டின் வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் போதே ஆடம்பரம் இல்லாத நடுத்தர தோற்றத்தால் காட்சியளித்தது அந்த வீடு,.. உண்மை தான் விஷ்ணு மற்றும் ஸ்மிருதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் தந்தை ஈஸ்வரன் ஜவுளி கடையில் வேலை செய்கிறார், இது அவருக்கு பிடித்தமான வேலை என்பதால் தன் மகன் நல்ல நிலமைக்கு வந்த பிறகும் கூட அவரால் அந்த வேலையை விட்டு விலக மனம் வரவில்லை, தன் உடம்பில் சக்தி இருக்கும் வரை, தான் அங்கு தான் வேலை செய்வேன் என்று முடிவாக கூறிவிட்டார்,…

தாய் சகுந்தலா, தன் கணவனுக்கு ஏற்ற பாசமான மனைவி, தன் குழந்தைகளுக்கு அன்பான தாய், இவர் தான் வீட்டின் இல்லத்தரசி, இவர்கள் இருவருக்குமே “விஷ்ணு வரதன், ஸ்மிருதிர்ஷிதா” இவர்கள் தான் உலகம்,..

அடுத்ததாக வீட்டின் முதியவர், விஷ்ணு, ஸ்மிருதியின் பாட்டி(ஈஸ்வரனின் தாய்) கனகவள்ளி, இவர் தங்கள் குழந்தைகளின் மீது சில சமயம் அன்பாகவும், பல சமயம் கண்டிப்புடனும் இருந்து கொள்வார்,… மத்தபடி விஷ்ணு, ஸ்மிருதிக்கு சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா என்ற பல உறவுக்காரர்களும் இருக்க தான் செய்கிறார்கள், அவர்கள் வரும் போது அறிமுகம் செய்து கொள்ளலாம்,…

அடுத்தது விஷ்ணு வரதன், நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவனின் தந்தை அவரால் முடிந்தவரைக்கும் மேற்படிப்பும் படிக்க வைத்தார், தான் படித்து முடித்த படிப்பின் உதவியினாலும், தன் நண்பனின் உதவியினாலும் இப்பொழுது  ஹோட்டல் தொழிலில், நண்பனுடன் சேர்ந்து கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறான், அந்த நண்பன் யாரென்பது உங்களுக்கு புரியுமென்று நினைக்கிறேன், அதனை பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்,…

விஷ்ணுவிற்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்ட நிலையில், நான்கு வயதில் அழகான ஆண் குழந்தை ஒன்று இருக்கிறான், விஷ்ணுவின் மனைவி ஹேமவர்ஷினி, அன்பானவள், அறிவானவள் என்று சொல்லிக்கொண்டே போகலாம், தன் மாமனார் மாமியாரை தாய் தந்தையை போல் நினைத்து பழகுபவள், குழந்தை அம்ரிஷ், சரியான சுட்டிக்காரன், இவனை பற்றியும் நாம் கதையில் தெரிந்து கொள்வோம்,..

கடைசியாக ஸ்மிருதிர்ஷிதா கதையின் நாயகி, சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் இவள் தான் இந்த வீட்டின் இளவரசி, செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் அவளை பார்க்க பார்க்க தெவிட்டாது அவளின் தோற்றம், இடையை தாண்டி இருக்கும் அவளது கூந்தல் அவளின் அழகை மேலும் கூட்டி காட்டியது, அவளின் கண்களில் நிலைத்தே இருக்கும் அந்த குறும்பு, இந்த சில மாதங்களாக தான் முடங்கி கிடக்கிறது, அனைவரிடமும் அன்பாக பழகும் இவள், இப்பொழுது அனைவரிடத்திலும், குறிப்பாக அஜய்யின் மீது அதிகளவில் வெறுப்பை காட்டுகிறாள், இதற்கான காரணம் என்னவென்று நாம் கதையில் தெரிந்து கொள்வோம்,

(நாயகனை பற்றி மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டேனே என்று நீங்க கேட்க வருகிறது புரிகிறது, அவனை பற்றி வேறொரு சேப்டரில் தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!