Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 17.2

  • காலை எட்டு மணி…

சாம்பவி சமையலறையில் இருக்க, தனதறையிலிருந்து வந்த செல்வி, “ம்மா போன் அடிக்குது” என்றாள்.

“லன்ச் பேக் பண்ணிட்டிருக்கேன், யாருனு பாரு செல்வி”

“ம்” என்று மொபைலை எடுத்தவள், சமையலறை சென்று, “ம்மா” என நீட்டினாள் பதட்டத்தோடு.

“யாரு?” என்றபடி மொபைலை வாங்கியவருக்கும் பதட்டம். பொற்செல்வன் மகளிடம் காதல் சொல்லியிருக்கிறான் என்று அறிந்த பின்னே, அவனிடம் பேச அத்தனை சங்கடமாக இருந்தது.



Advertisement

முன்பு செல்விக்கு பார்த்த வரனை தாமோதரன் தடுத்திருக்க, அடுத்த வரன் பார்தாலும் இப்படி செய்வாரோ? மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடித்து வைக்க விடமாட்டரோ என்ற கவலை இருந்தது சாம்பவிக்கு.

‘என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணியிருக்கார், எல்லா அம்மாக்கும் கோபம் வர மாதிரி உனக்கு ஏன்ம்மா வரல?’ என்று செல்வி கேட்டதற்கு, ‘நல்ல வரன் அமையும்போது எதுக்கு கோபப்படனும்? நான் பார்த்த வரனை உன் அப்பா மிரட்டியிருக்கார். செல்வா தம்பிகிட்ட அது நடக்காது. உன்னை நல்லா புரிஞ்சவர், உனக்கும் அவரை பிடிக்கும். அப்போ எதுக்காக கோபப்படனும்?’ என்றிருந்தார் சாம்பவி.

அன்னை சொல்வது உண்மைதான். தனது தந்தையை எதிர்கொள்ள சரியானவன் பொற்செல்வன். ஆனாலும் செல்வனை திருமணம் செய்ய இன்னும் சம்மதிக்கவில்லை செல்வி.

Advertisement

செல்விக்கு இதில் விருப்பமில்லை என்பதால், பொற்செல்வனிடம் என்ன பேசுவது என்று சாம்பவிக்கு தயக்கம். தயக்கம் களைந்து அழைப்பை ஏற்பதற்குள் அழைப்பு நின்றிருந்தது.

Advertisement

அழைப்பை ஏற்காமல் இருந்தது தவறு, முக்கியமான காரணம் இல்லாமல் அழைக்கமாட்டார் என்று பொற்செல்வனுக்கு அழைப்பு விடுத்து, “கிச்சன்ல இருந்தேன் தம்பி, வரதுக்குள்ள கட் ஆகிடுச்சு” என்றார்.

“கடைக்கு கிளம்ப ரெடியாகிட்டிருப்பிங்கனு தெரிஞ்சுதான் போன் செய்தேன் ஆன்ட்டி, அண்ணிக்காகத்தான் கடை வச்சேன். அண்ணா அண்ணியோட சேர்ந்துட்டார். இனி நீங்க கஷ்டப்பட வேண்டாம். இவ்வளோ நாள் அண்ணியை பார்த்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ் ஆன்ட்டி”

“நவீனா எங்களோட கொஞ்ச நாள்தான் இருந்தா, அதுக்கே தேங்க்ஸ் சொல்றிங்க, அப்போ நான் உங்களுக்கு எவ்வளோ தேங்க்ஸ் சொல்றது?”

Advertisement

“ஹெல்ப் பண்ணினாத்தான் தேங்க் பண்ணனும். நீங்க எதுக்கு ஆன்ட்டி தேங்க்ஸ் சொல்லனும்? இங்கே ஒர்க் பண்ணுனிங்க, சேலரி கொடுத்தேன், வீட்டுக்கு ரெண்ட் கொடுத்துடுவிங்க. நான் வேற ஏதும் உதவி பண்ணலையே”

“எனக்கு வேலை கொடுத்து, தங்குறதுக்கு பாதுகாப்பான வீட்டை கொடுத்ததே பெரிய உதவிதான். தவிர, நவீனா எனக்கும் பொண்ணு மாதிரிதான்”

“ஓகே ஓகே. தேங்க்ஸ் வாபஸ்” என்றான் சிரிப்போடு.

சாம்பவியும் சிரிக்க, மேலும் சில விசயங்களை சொல்லி “பை ஆன்ட்டி” என்று இணைப்பை துண்டித்தான்.

“யார்ம்மா?” என்றான் இளவரசன்.

சாம்பவி விசயத்தை சொல்ல, “வேற ஏதும் கேட்கலையா?” என்றான்.

“கேட்கல செல்வா, போன் வந்தப்போ செல்வியைப் பத்தி பேசுவாரோனு எனக்கு அட்டன் பண்ண அவ்வளோ சங்கடமா இருந்தது. ஆனா அதை பத்தி ஏதும் பேசாம நவீனாக்கு ஹெல்ப் பண்ணினதை பத்தி பேசினார்.

கடையில வேலை செய்யிறவங்களுக்கு மூணு மாசம் சம்பளம் கொடுத்து ரிலீவ் பண்ணப்போறாராம்”

“கடையில அவ்வளோ இருக்கு, எல்லாம் ரொம்ப காஸ்ட்லி, நஷ்டமாகிடாதாம்மா?” என்றாள் செல்வி.

“அது அவங்க பிரச்சனை” என்றான் இளவரசன்.

“ஆமாம்ல? அதை அவங்க பார்த்துப்பாங்க, எனக்கு பசிக்குது, சாப்பிட கொடும்மா” என உண்ண அமர்ந்தாள்.

“நேத்து என்கிட்ட பேசினார்ம்மா” என்றான் இளவரசன்.

“செல்வா தம்பியா? என்ன பேசினார்?”

“செல்வி விருப்பம் இல்லாம இதைப் பத்தி அவங்க அம்மாகிட்ட ஏதும் பேசக்கூடாதாம். உங்ககிட்ட சொல்ல சொன்னார்” என்றான்.

“நான் சொல்லமாட்டேன், அமிர்தாம்மாக்கு செல்வியை ரொம்ப பிடிக்கும், அவங்க மகன் ஆசைப்பட்டு செல்விக்கு பிடிக்கலைனு அமிர்தாம்மாக்கு தெரிய வந்தா அவங்க மனசு கஷ்டப்படும். நான் சொல்லமாட்டேன்” என்றார்.

தனது சம்மதத்திற்காக காத்திருக்கிறான் என்று புரிய, உண்டு கொண்டிருந்தவளுக்கு தொண்டைக்குள் இறங்க மறுத்தது உணவு. பாதியில் எழுந்தாலும் அண்ணன் கத்துவான் என்று சிரமப்பட்டு உண்டு கொண்டிருந்தாள்.

“எனக்கும் சாப்பிட கொடும்மா” என்று இளவரசன் சொல்ல, மகனுக்கு பரிமாறி தானும் உண்டு முடித்து, “கடைக்கு போனாலாவது பொழுது போகும். இனி அங்கையும் போக முடியாது” என புலம்பியபடி அனைத்தும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் சாம்பவி.

“பை செல்வி, பை ம்மா” என்று இளவரசன் பணிக்கு கிளம்பிவிட, செல்வி அறைக்குள் சென்றுவிட்டாள்.

மதியம் நவீனாவிடமிருந்து அழைப்பு வரவே, ஏற்று “நவீனாக்கா, எப்படி இருக்கிங்க? எங்க இருக்கிங்க? காலைலயே போன் பண்ணுவிங்கனு எதிர்பார்த்தேன்” என்றாள்.

“இப்போதான் தூங்கி எழுந்தேன் செல்வி, இங்க அம்மா வீட்டுல இருக்கோம்” என்றாள்.

“சூப்பர்க்கா, தேவா சார் அங்க கூட்டிட்டு போயிருக்கார்னா உண்மையா உங்களை விரும்ப ஆரம்பிச்சிட்டார்னுதான் அர்த்தம்” என்றாள் மகிழ்வோடு.

“ஆமாம் செல்வி, நாளை மறுநாள் கல்யாணம் வச்சிருக்கார், ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டேங்குறார்.

“வாவ் சூப்பர்க்கா”

“நீ, அண்ணா, அம்மா மூணு பேரும் வரனும்” என்றாள்.

“அங்கையா? அ… அண்ணாக்கு லீவ் கிடைக்காதே” என்று செல்வி அதிர்வாக,

“என் அப்பாம்மாக்கு நான் ஒரே பொண்ணு. ஆனா இனிமேல் அப்படியில்ல. உன்னையும் அண்ணாவையும் என் கூடப் பிறந்தவங்களா நினைக்கிறேன். சாம்பவிம்மா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி.

இந்த முறை அவர் என்னை விரும்பி கல்யாணம் செய்துக்கிறார். இன்னைக்கே கல்யாணம் வைக்கனும்னார். இன்னைக்கு வச்சா நீங்கள்லாம் வர முடியாதுனு நான்தான் நாளை மறுநாள் வைக்க சொன்னேன்.

வெளியாள்கள் யாரையும் கல்யாணத்துக்கு கூப்பிடல. நம்ம இரண்டு குடும்பம் மட்டும்தான். நீங்க இல்லாம எப்படி? வேலையிருக்குனு அண்ணா வராம போய்டப் போறார், நீ சொல்லி கூட்டிட்டு வா செல்வி. நானும் அண்ணாகிட்ட பேசுறேன்”

“சரிக்கா” என்றாள் வேறு வழியின்றி.

“அம்மாகிட்ட கொடு” என்க, சாம்பவியிடம் தனது திருமணத்தைப் பற்றி சொல்லி அழைப்பு விடுத்தாள்.

“ரொம்ப சந்தோசம் நவீனா. ஆனா உனக்கு இங்க சூழ்நிலை தெரியும்தானே? நாங்க வந்து செல்வா தம்பிக்கு சங்கடம் ஆகிடும்”

“அப்படி ஆகாதும்மா, இதைப் பத்தி பேசனும்னு நினைச்சிருந்தா சின்னவர் ரொம்ப முன்னாடியே பேசியிருப்பார். செல்வி விருப்பத்தை மதிச்சுதான் பேசல. இனியும் பேச மாட்டார். நீங்க வாங்க”

சாம்பவிக்கு தற்போதும் கூட சங்கடம்தான். “சரிம்மா, இளவரசன்கிட்ட சொல்றேன்” என்றார்.

சாம்பவியும் செல்வியும் இதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. இரவு எட்டு மணிபோல் இளவரசன் வந்தான். மகன் உண்டு முடித்ததும் விசயத்தை சொன்ன சாம்பவி, “தேவராஜ் தம்பியும் பேசினார் இளவரசா, என்ன பண்றதுனு தெரியல” என்றார்.

“ம் எனக்கும் போன் பண்ணினாங்க, போய்ட்டு வரலாம்” என்றான்.

“எப்படி இளவரசா?”

“என் அம்மா தன்மானத்தோட வாழறதுக்கு காரணமானவர் குடும்பத்துலயிருந்து கூப்பிட்டிருக்காங்க, போகாம இருக்குறது தப்பு. போய்ட்டு வரலாம்”

“நீங்க போய்ட்டு வாங்க” என்று செல்வி சொல்ல, “உன்னை தனியா விட்டுட்டு எப்படி போறது? செல்வா வேண்டாம்ன்றதுல ஸ்ட்ராங்கா இருந்தா அங்க வரதுல உனக்கு எதுக்கு தயக்கம்?” என்றான் கோபத்தோடு.

இளவரசன் சொல்வது உண்மைதான். செல்வன் வேண்டாம் என்று முன்பிருந்த திடம் தற்போது இல்லை செல்விக்கு.

அங்கு சென்று வந்தாலாவது மகள் தெளிவான முடிவிற்கு வருவாளோ என்று சாம்பவிக்கு தோன்ற, “செல்வா கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவாங்க, உன் கல்யாணத்துக்கும் நாங்க இன்வைட் பண்ணுவோம். இதுக்கே வரலைனா அதையெல்லாம் எப்படி ஃபேஸ் பண்ணுவ?” என்றார்.

அன்னை சொல்வது உண்மைதான். பொற்செல்வனுக்கு திருமணம் என்றால் அமிர்தா ஆன்ட்டி இன்வைட் பண்ணுவாங்க. அதே போல பொற்செல்வன் திருமணத்தை மறுத்தாலும் தன் அன்னையிடம்தான் புலம்புவார்கள். அவனின் திருமணத் தடைக்கு நான் காரணமாவேனா? என அதிர்ந்து, “நான் வரேன்” என்றாள்.

நாளை மறுநாள் காலையில் திருமணம் என்பதால் அடுத்தநாளே கிளம்பியிருந்தனர். நவீனாவின் வீடு சிறியது என்பதால் கோவையில் விடுதியில் தங்கியிருந்தனர்.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் நவீனாவின் வீட்டிற்கு வந்தனர் சாம்பவின் குடும்பம்.

“வா சாம்பவி, நீ வருவேனு நான் எதிர்பார்க்கவேயில்ல. இந்த செல்வாதான் சின்ன ஃபங்ஷனுக்கெல்லாம் அவங்களை கூப்பிட்டு தொல்லை பண்ணக்கூடாதுனு சொல்லிட்டான், உனக்கு சொல்லலையேனு எனக்கு உறுத்திட்டேயிருந்தது” என வருந்தினார் அமிர்தவள்ளி.

“எங்களுக்கு கஷ்டம் வேண்டாம்னு செல்வா தம்பி சொல்லியிருக்கும். நீங்க வருத்தப்படாதிங்க” என தேற்ற,

“என்ன செல்வி இளைச்சி போய்ட்ட? வயசுப்புள்ள இப்படியா இருக்கிறது?” என விசாரித்து, “நீதான் நவீனாக்கு பக்கபலமா இருந்துருக்க” என்று தனது நன்றியை பாராட்டாய் தெரிவித்தார்.

பின்னே இளவரசனின் நலம் விசாரித்து, “போய் நவீனாவைப் பாரு செல்வி, இன்னொருமுறை கல்யாணமானு சங்கடப்பட்டுட்டு இருக்கா. நீ போய் புரிய வை” என்று அனுப்பி வைத்து, சாம்பவியிடம் மகன் மருமகள் சேர்ந்த சந்தோசத்தை பகிர ஆரம்பித்தார் மகிழ்வோடு.

“நவீனாக்கா” என மெல்ல அழைக்க, திரும்பியவள் “வா செல்வி” என்று அணைத்துக்கொண்டாள் நவீனா. பின்னே நவீனாவின் அலங்காரத்திற்கு உதவி செய்து முடித்து, “நான் அவரை… ம்கூம்… உங்க சின்னவரை, ம்ப்ச்… என்மேல உங்களுக்கு கோபமாக்கா?” என்றாள்.

“என்மேல ஏன் கோபம் வரல, என்னை திட்டுனு நேத்தெல்லாம் சொல்லிட்டிருந்தார். அவர் கேட்டும் கூட எனக்கு கோபப்பட தெரியல, என்னை வேண்டாம்னு சொன்னவர் மேலயே கோபம் வராத போது, உன்மேல எனக்கு கோபம் வருமா?” என கேட்டு,

“என்னைப் பத்தி செல்விகிட்ட பேசக்கூடாதுனு சின்னவர் நேத்தே சொல்லிட்டார். சின்னவரை ஃபேஸ் பண்ணனுமேனு கவலைப்படாத, அவர் உன்னை சங்கடப் படுத்தமாட்டார்”

“எனக்கு அமிர்தா ஆன்ட்டியோட பேசும்போது ரொம்ப கில்ட்டா இருந்ததுக்கா, முன்ன மாதிரி என்னால இயல்பா பேச முடியல” என செல்வி கலங்க, “நீயா எதாவது நினைச்சிக்கிட்டு கஷ்டப்படாத, அத்தைக்கு உன்னை எவ்வளோ பிடிக்கும்னு தெரியும்தான?” என்றபடி செல்விக்கு பூ வைத்துவிட்டாள்.

“அச்சோ இவ்வளோ பூ… நான் இப்படி வச்சதேயில்லக்கா”

“இன்னைக்கு என் கல்யாணம், நீ வச்சுதான் ஆகனும். எவ்வளோ அழகா இருக்க பாரு”

“நான் அழகா? நவீனாக்கா முகத்துல இப்படி ஒரு ஜொலிப்பை பார்த்ததேயில்ல. நீங்கதான் ரொம்ப அழகா இருக்கிங்க” என மகிழ்ந்து, “தேவா சார் எங்க?” என்றாள்.

“அவரும் சின்னவரும் மாடில இருக்காங்க, மாமா, ராஜிக்கா, ப்ரித்து எல்லாரும் வந்துட்டிருக்காங்க, வா சாம்பவிம்மாகிட்ட பேசிட்டு வருவோம்”  என்க, இருவரும் வெளியே வந்தனர்.

உன் கல்யாணத்தை தள்ளிப்போட்டு எனக்கு ஹோப் கொடுக்காதே என்று அன்று பொற்செல்வன் சொன்னதிலிருந்து செல்வியின் மனம் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

பொற்செல்வன் மீது கோபம் இருந்த போதும், அப்படி வருந்தி கேட்ட பின்னே நீ வேண்டாம் என்று சொல்ல மனம் முரண்டிக்கொண்டிருக்கிறது.

“நவீனாம்மா” என்று ஆர்பரித்தபடி வந்த ப்ரித்திகா, பிறகுதான் செல்வியை பார்த்தாள். “செல்விக்கா” என கண்களை அகல விரிக்க, “எப்படி இருக்க ப்ரித்தும்மா?” என தூக்கிக்கொண்டாள் சிறுமியை.

“நீங்கதான் என்கிட்ட சொல்லாமலே வேற ஊருக்கு போய்ட்டிங்க”

“சாரிடாம்மா, நான் ஊருக்கு போகும்போது நீ ஸ்கூல்க்கு போய்ட்டியா… அதான் சொல்ல முடியல” என்றவளின் வார்த்தை பொற்செல்வனைக் கண்டதும் நின்றுபோனது.

செல்வியை பார்க்காமல் பத்து நிமிடத்திற்கு மேல் இளவரசனிடம் பேசிக்கொண்டிருந்தான் பொற்செல்வன்.

“சம்மந்திம்மா நவீனாவை கூட்டிட்டு வாங்க” என்றார் அமிர்தவள்ளி.

தனியாக பூஜையறை இல்லை. ஹாலில் ஓர் அலமாரியில் தெய்வங்கள் இருக்க, மகளை அங்கே அழைத்துச் சென்றார். பின்னே தேவராஜ் தாலிக்கொடியை போட்டுவிட்டு குங்குமம் இட்டுவிட்டான் மனைவிக்கு.

“செல்விக்கா நவீனாம்மாக்கு கல்யாணம்” என்று சிறுமி கைதட்ட, பெரியவர்களுக்கு அளவில்லாத நிம்மதி. நிறைவாக அட்ஷதை போட்டு வாழ்த்தினார்கள். நவீனாவின் பெற்றோர் பாதம் பணிந்தெழுந்த தேவராஜ், பின்னே தனது பெற்றோர் பாதம் பணிந்தான்.

அனைவரின் கவனமும் தேவராஜ் நவீனா மீது இருக்க, செல்வியின் கவனம் முழுவதும் பொற்செல்வன் மீதுதான். அவனையே பார்த்திருக்கிறோம், அண்ணன் தன்னை கவனிப்பான் என்று நவீனா புறம் திரும்பியவள் மீண்டும் பொற்செல்வனைப் பார்க்க அவன் அங்கே இல்லை.

“ஹாய், லுக்கிங் குட்” என்ற பொற்செல்வன் குரலில் திடுக்கிட்டுப் பார்த்தவள் கண்கள் கலங்கவே சட்டென வெளியேறிவிட்டாள் செந்தமிழ்செல்வி.

பொற்செல்வனும் வெளியேறப் போக, “உங்க ப்ரப்போஸல்லதான் எதோ தப்பிருந்திருக்கு, அதனாலதான் செல்வி கஷ்டப்படுறா” என முறைத்தான் இளவரசன்.

சிரித்தவன், “அடேய்… நான் ஏதும் ப்ளான் பண்ணி பண்ணல, அந்த நேரம் தோணினதை செய்தேன்” என்றான் இலகுவாக.

“என்ன? செய்திங்களா? என்ன செய்திங்க?” என இளவரசன் அதிர்வாக,

“நீ ஷாக் ஆகுற அளவுக்கு ஏதும் பண்ணல, வழியை விடு, உன் தங்கை அழுதிட்டிருப்பா, நான் போகாம அவ அழுகை நிற்காது” என்று வெளியேறியவன், செல்வியிடம் தான் காதல் சொன்ன நாளின் இனிய நினைவோடு செல்வி முன்னே போய் நின்றான்.

“இங்க எதுக்கு வந்திங்க?  நான் கால் பண்றேன் போங்க” என்று திரும்பி நின்றாள்.

பேசலைனா ஏமாந்து போறா, பேச வந்தா மூஞ்சை திருப்புறா என்ற கோபம் நொடி நேரத்தில் மறைந்து போக, “என்ன சொன்ன? கால் பண்றியா?” என்றான் ஆச்சர்யத்தோடு.

“ம் பண்றேன் போங்க”

“ம்ப்ச் துறத்துறதுலயே குறியா இருக்காத”

“நாம தனியா நின்னா தப்பா நினைப்பாங்க”

“யாரும் நினைக்கமாட்டாங்க”

“என் அண்ணா நினைப்பான்”

“அவனுக்கு நாம இங்க இருக்கிறது தெரியும், உன்னை ஒன்னும் பண்ணிடமாட்டேனு என்மேல நம்பிக்கை இருக்கவும்தான் மேல வராம இருக்கான்”

செல்வியின் முகம் பெரும் தவிப்பிற்குள்ளாக, “எதோ முடிவெடுத்திருக்கவும்தான் பேச நினைக்கிற. கால் பண்ணி சொல்றதை நேர்ல சொல்லேன்” என்றான்.

“எ… என்னால வேற சாய்ஸை யோசிக்கக்கூட முடியல, உ… உங்களையே ஃபேஸ் பண்ணிக்கிறேன்” என்று அவ்விடம் விட்டு நகரப் பார்த்தவளை கைப்பிடித்து நிறுத்தினான்.

செல்வியின் சம்மதம் பெரும் நிம்மதியை கொடுத்த போதும் சந்தோசத்தை கொடுக்கவில்லை. “என்னை அவாய்ட் பண்ணி படுற கஷ்ட்டத்தை விட, என்னோட வாழ்றது ஈஸியா இருக்கும். ட்ரஸ்ட் மீ” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!