செல்வியும் செல்வாவும் தோழர்கள் என்பதால் அமிர்தவள்ளி குடும்பத்தில் யாரும் தவறாக நினைக்கவில்லை. முன்பானால் சாம்பவியும் நினைத்திருக்கமாட்டார்தான். ஆனால் இப்போது அப்படி இல்லையே.
அமிர்வள்ளியும் புருஷோத்தமனும் சம்மதித்துவிட்டால் பெரும் நிம்மதி கிடைக்கும். அமிர்தவள்ளி ஜாதகத்தில் நம்பிக்கையுள்ளவர், இருவருக்கும் பொருத்தம் இல்லை என்றால் சம்மதிக்கமாட்டார். பெரியவர்கள் சம்மதிக்கும் முன்னே செல்வா தம்பி இப்படி பண்றார் என்று பதட்டம் உண்டானது.
Advertisement
ராஜலஷ்மி தேவேந்திரன், நவீனா தேவராஜ் என இருமகன்களும் மலர்ந்த முகத்தோட ஜோடியாய் அமர்ந்திருக்க, இனி அடுத்து பொற்செல்வனுக்கும் பார்த்திட வேண்டும் என்று எண்ணம் தோன்ற, பொற்செல்வன் அருகே அமர்ந்திருந்த செல்வி அமிர்தவள்ளியின் கண்களை கவர்ந்தாள்.
நவீனாவின் திருமணம் என்பதால் பன்னீர் ரோஜா நிறப் பட்டில் அனார்கலி உடுத்தியிருந்தாள். வழக்கத்தில் இல்லாமல் தலை நிறைத்திருந்த மல்லிகை செல்வியின் அழகை மேலும் கூட்டியது.
பெண் கேட்டுவிட மனம் துடித்தபோதும், மகனுக்கு விருப்பம் இருக்குமோ? தோழர்களாக பழகியதால் வேண்டாம் என்றிடுவானோ? செல்விக்கும் செல்வன் மீது கோபம் இருந்தது, தற்போது கோபம் குறைந்திருந்தபோதும் திருமணம் செய்ய சம்மதிப்பாளா? என்று தயக்கம் வந்தது.
Advertisement
சற்று நேரம் அமைதியில் கழிய, “என்னம்மா செல்வியையே பார்த்திட்டிருக்கிங்க? எதாவது கேட்கனுமா?” என்றான் பொற்செல்வன்.
Advertisement
“தலைநிறைய பூ வச்சு ரொம்ப அழகா இருக்கா, பார்த்திட்டே இருக்கலாம் போல இருக்கு” என்றார் ஆசையோடு.
“சார்…” என்று செல்வி சிவந்த முகத்தோடு தலைகுனிய, “சாரா? இனி சார் மோர்லாம் சொல்லக்கூடாது. மாமா சொல்லனும்” என்றான்.
பேசுவது தேவேந்திரனா என வியந்து விழித்தாள் செல்வி. இத்தனை பேசி ஜாதகம் சரிவரவில்லை என்றால் அமிர்தாம்மா மறுப்பார்களோ என்று சாம்பவிக்கு தோன்ற, “எனக்கு ஜாதகம் பார்த்துதான் கல்யாணம் செய்தாங்க, ஜாதகத்துல சொன்ன மாதிரி என் வாழ்க்கை அமையல” என்றார்.
ஜெயப்ரதா பொண்ணை பார்க்கும்போது பொருத்தம்லாம் சரியாகத்தான் இருந்துச்சு, ஆனா பொண்ணு சரியில்லாமல் போனதை நினைத்த அமிர்தவள்ளி, “நம்ம செல்வாவைப் பத்தி செல்விக்கும், செல்வியைப் பத்தி செல்வாக்கும் நல்லா தெரியும். செல்வி என் மனசுக்கு பிடிச்ச பொண்ணுனு உனக்கு தெரியும்தானே? இவங்க கல்யாணத்துக்கு ஜாகதம் பார்க்கப்போறதில்ல. கடவுளை வேண்டிக்கிட்டு கல்யாண வேலையை ஆரம்பிப்போம்” என்றார்.
சாம்பவியின் மனக்குறை தீர்ந்துவிட, மகளுக்காக என்ன சேமித்திருக்கிறேன் என்பதைப் பற்றி பேச ஆரம்பித்தார். புருஷோத்தமனிற்கு சாம்பவியின் கணவனைப் பற்றி மனைவி சொல்லி தெரியும்தான்.
சாம்பவி இப்படி பயப்படும் அளவிற்கு என்ன செய்திடுவார் என்று தெரிய வேண்டியிருக்க, இளவரசனிடம் விசாரித்துக்கொண்டிருந்தார் புருஷோத்தமன். தேவேந்திரனும் அதில் இணைந்துகொள்ள, ப்ரித்திகாவை அழைத்துக்கொண்டு உடை மாற்ற சென்றிருந்தாள் ராஜலஷ்மி.
“உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு வருசம் பக்கம் ஆகிடுச்சு, உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி எட்டு மாசம் ஆச்சு, எதாவது மெமரீஸ் இருக்கா? மெமரீஸை விடு, முகம் கொடுத்து பேசுறியா? லவ் சொன்னதுலயிருந்து சண்டை. சரி போனது போகட்டும்னு இப்போ கூட்டிட்டு வந்தா அதுக்கும் முறைக்கிற? நான் உன்னை எவ்வளோ தேடுறேனு நிஜமா உனக்கு புரியலையா?”
“எனக்குத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல சந்தோசம். உனக்கு அப்படியில்ல. வேற யாரோடவும் உன்னால வாழ முடியாது. அதனால என்னை அக்ஸப்ட் பண்ணிக்கிட்ட” என நினைவூட்டினான்.
“என்னால வேற யாரோடவும் வாழ முடியாதுதான். உங்களோட மட்டும்தான் வாழ முடியும்னு உணர்ந்துருக்கேன். உங்க நினைப்புலயிருந்து மீள முடியாதுனு புரியவும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இதுக்கு பேர் என்ன? என்னைப் பொறுத்தவரை இதுதான் லவ்”
‘அப்போ எனக்கு லவ் இல்லைன்றியா?’ என்று கேட்க வந்தவன் செல்வியின் வேதனையான முகத்தில் சற்றே நிதானித்து சட்டென முகத்தை இயல்பாக்கினான்.
“எஸ்… ஐ அக்ரி” என அணைக்க கை விரித்து செல்வி அருகே வர, செல்வியின் மறுப்பான முகம் பார்த்து இவன் கையை தளர்த்தினான்.
பொற்செல்வன் ஆசையை நிறைவேற்ற விடாமல் ஏமாற்றுகிறோமே என்று வருத்தமாகிட “யாரும் இல்ல” என சன்னக்குரலில் சொல்லி செல்வனிடம் நெருங்கி நின்றாள் செல்வி.
தயக்கம் வந்தபோதும் முயன்று அதனை புறம்தள்ளி அணைத்துக்கொண்டாள் செல்வனை. முதலில் வியந்தவன் பின்னே அதிர்ந்து தானும் அணைத்துக்கொண்டான். “ரிலாக்ஸ் செல்வி” என்று முதுகை தட்டிக்கொடுத்தான்.
செல்வியின் அணைப்பு மேலும் இறுகியது. சத்தியமாய் இதில் காதல் இல்லை, தன்னை விட்டுவிடக்கூடாது என்ற தவிப்பு மட்டுமே என்பதை செல்வனால் நன்கு உணரமுடிந்தது.
பல மனஉளைச்சல்களை தாண்டி தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதியில் இளைப்பாருகிறாள். அணைப்பு தனக்கு மட்டுமல்ல, செல்விக்கும் தேவை என்பது புரிய, அவளின் அணைப்பில் நின்றிருந்தான் கால்மணி நேரம்வரை.
“பத்து நிமிஷத்துல வரேன்ம்மா” என்று இணைப்பை துண்டித்து “செல்வி” என்றான்.
செல்வியிடம் பேச்சேயில்லை. அவளின் மூச்சுக்காற்றிலும், உடல் அசைவிலும் அழுகிறாள் என்று புரிந்தது. “செல்வி, உன் அண்ணன் கூப்பிடறானாம்” என்றான் சற்றே குரல்உயர்த்தி.
“ம் தெரியுது”
“இப்படியே போலாமா?” என்று அவளோடு சேர்ந்து இரண்டடி நடக்க, பொற்செல்வனை விடுவித்து திரும்பி நின்றாள்.
செல்வியின் முன்னே போய் நின்றவன், பிறகுதான் தனது சர்ட்டை பார்க்க, அது செல்வியின் கண்ணீரில் நனைந்திருந்தது. “முகமெல்லாம் எப்படி சிவந்திருக்கு? எதுக்குடீ இவ்வளோ ஸ்ட்ரெஸ் ஆகிக்கிற?” என்றான் கோபமாக.
“தெரியல, ரொம்ப படபடப்பாகுது. சீக்கிரம் கல்யாணம் வைங்க, என் ஸ்ட்ரெஸை குறைச்சிவிடுங்க” என்று தோட்டத்தில் செடிக்கு போய் கொண்டிருந்த தண்ணீரில் முகத்தை கழுவிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
முகம் சிவந்திருந்தபோதும், செல்வி சிரித்த முகமாக இருக்கவே, மகன் மருமகளை வெக்கப்பட வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டார் அமிர்தவள்ளி.
சாம்பவிக்கும் அமிர்தவள்ளி போலவே தோன்ற, மகளிடம் “இவ்வளோ ஆசையை வச்சிக்கிட்டு எதுக்குடீ கல்யாணத்துக்கு சம்மதிக்காம உன்னையும் வருத்திக்கிட்டு, எங்க நிம்மதியையும் கெடுத்த?” என கடிந்தார்.
“ம்மா ப்ளீஸ், என்னை எதுவும் கேட்காதிங்க” என்றாள் கெஞ்சலாக. ஆனால் நொடிக்கொருமுறை பொற்செல்வனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்னே இளவரசனின் வற்புறுத்தலில் சாம்பவி குடும்பம் விடைபெற்றது.
*** *** *** *** **** ***
அதிகாலை எழுந்தது, பகலில் உறக்கமின்மை, இவ்விரண்டை விட முக்கியமாக தேவராஜ் நவீனாவின் திருமணத்திற்கு பிறகு இழந்த நிம்மதியை தற்போது மீட்டெடுத்திருப்பது, அதனால் கிட்டிய மகிழ்ச்சி என நிறைந்த சந்தோசத்தில் இருந்தனர் பொற்செல்வனின் பெற்றோர்.
இரவு எட்டு மணிபோல், அமிர்தவள்ளி புருஷோத்தமன் உறங்க சென்ற பின்னே, “நவீனா இதைப் பிடி” என்று பால் டம்ளரை நீட்டினாள்.
“அவர் குடிக்கமாட்டாக்கா” என வெக்கப்பட்டாள் நவீனா.
“இவ்வளோ நாள் பழக்கம் வேற, இனி பழக்கம் வேற. போய் கொடு, இன்னைக்கு குடிப்பார்” என கண்ணிமைத்து சிரித்தாள் ராஜலஷ்மி.
“பாலை வாங்கவே வெக்கப்பட்டா, அப்புறம் எப்படி ப்ரித்துக்கு தம்பி, தங்கை வரும்?”
“அக்கா” என தடுமாற, “நானும் இரண்டு வருசமா ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கேன், ப்ரித்துவை அக்கா ஆக்க முடியல, என்னால முடியாததை நீ பத்தே மாசத்துல முடிச்சிடனும்” என்க, அதற்கு மேல் நிற்காமல் பாலை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள் நவீனா.
தேவராஜ் “ஹேய்… இதை யாரு கொடுத்து விட்டது?” என சிரிப்போடு வாங்கினான் பால்டம்ளரை.
“ராஜிக்கா” என்றவளை அழைத்துப் போய் அமர வைத்தான்.
நவீனாவின் வீட்டில் இருந்த போது நிறைய பேசினான். அவ்வப்போது அணைத்தான், இரண்டு இரவு ஒரே கட்டிலில் படுத்துறங்கினார்கள். ஆனால் நெற்றிக்கு இட்ட முத்தம் கன்னத்திற்கு கூட இடம் பெயரவில்லை.
தனக்காக இல்லையென்றபோதும் நவீனாவிற்காக அவளோடு வாழ மனம் ஆசைப்படுகிறதுதான். ஆனால் ஆசையோடு எதிர்கால அச்சமும் வர நெற்றி முத்தத்திலிருந்து முன்னேற முடியாமல் தவித்திருந்தான் இரண்டு நாள்களாக.
தன் வீட்டிற்கு வந்த பின்னே மாலை சிற்றுண்டியின் போது, ‘வாழ்க்கை யாருக்கும் நிரந்தரமில்லை. வாழும் வரை நம்மை சுற்றியிருப்பவர்களை நிம்மதியோடு வைத்திருக்க வேண்டும். இரண்டாவது முறை கல்யாணம் பண்ணியிருக்கிங்க. இனியாவது அண்ணிக்காக யோசிங்க’ என்று நவீனாவிற்காக பேசினான் பொற்செல்வன். அதில் சற்று தெளிந்திருந்தான் தேவராஜ்.
இதோ… சிவந்த முகத்தோடும் பால் டம்ளரோடும் வந்தவளை பார்த்த பின்னே, முந்தைய வாழ்வை மறக்க முயன்று, காதலாய் பேசுவதாக நினைத்து, “உன் காதலுக்கு தகுதியே இல்லாதவன் நான்” என்றான்.
“இதையே எத்தனை முறை சொல்விங்க?”
“ஆமாம்ல? வேறதான் பேச நினைக்கிறேன், ஆனா வரமாட்டேங்குது. சொன்னதையேதான் திரும்ப சொல்றேன். உனக்கு தகுதியானவனா மாற ட்ரை பண்ணிட்டிருக்கேன் தெரியுமா?”
மனைவியின் மலர்ந்த முகத்தில் மயங்கியவன், “இதே ரூம்ல இரண்டு வருசம் உன்னோட வாழ்ந்தப்போ வராத ஆசை… இப்போ வருது. எனக்கு ஆசை வந்தா எப்படியாவது அதை நிறைவேத்திடுவேன். இன்னைக்கும் அதேபோல என் ஆசையை நிறைவேத்தப்போறேன்” என்று தன்னோடு சரித்து இதழில் முத்தமிட்டான்.
நீண்ட முத்தத்திற்கு பின்னே ஆடை களைய, வெக்கத்தில் சிவந்து கண் மூடினாள் நவீனா. மூடிய நயணங்கள் கூட மோகத்தை வளர்க்குமென உணர்ந்தான் தேவராஜ்.
தேவராஜ் இதழ்களும் விரல்களும் நவீனாவின் உடலில் அதன் விருப்பத்திற்கு பயணிக்க உடல் நடுங்கியது நவீனாவிற்கு. “உன்னை கஷ்டப்படுத்துறதே எனக்கு பழக்கமா போச்சு, இப்போவும் கஷ்டம்தான் படுத்துவேன் போல, வழக்கம்போல தாங்கிக்கோ” என்றவனின் செயலில் கஷ்டமின்றி தன்னிலை மறந்தாள் நவீனா.