Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 18.1

அத்தியாயம் 18

“என் அம்மாகிட்ட சொல்லிடவா?” என்றான்.

“இப்போ வேண்டாம், இன்னைக்கு தேவாசார், நவீனாக்கா டே. நாங்க போனதுக்கு அப்புறம் சொல்லுங்க. எனக்கு நவீனாக்காகிட்ட போகனும், கையை விடுங்க”

“எனக்கு உன்கிட்ட பேசனும்”



Advertisement

“நைட் கால் பண்ணுங்க, இப்போ விடுங்க”

“போன்ல இல்ல, இப்படி பக்கத்துல பேசனும்” என்று தன்னருகே இழுத்தான்.

“கல்யாணத்துக்கு அப்புறம் பேசத்தானே போறோம்”

Advertisement

“பக்கத்துல உக்கார்ந்து பேசுறதுக்கு கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ணனுமா?”

Advertisement

இவள் கையை விடுவிக்க முயற்சி செய்துகொண்டிருக்க, “லவ்வரா பேச வேண்டாம்டீ, நான் இல்லாத நேரம் என்னென்ன நடந்ததுனு முன்னலாம் ஒன்னு விடாம ஒப்பிப்பல்ல? அதுமாதிரி எதாவது பேசு. என்கிட்ட அப்படி பேசி எத்தனை மாசமாச்சு? சொல்ல நிறைய இருக்கும்தானே?”

“இல்ல.. இப்போ ஏதும் பேசத்தோணல”

“ராஜஸ்தான் லைஃப் எப்படி இருந்ததுனு சொல்லு” என்றவன், யாரோ வரும் சத்தம் கேட்கவே செல்வியின் கையை விடுவித்தான்.

Advertisement

சாம்பவிதான் வந்தார். செல்வி மேலே இருக்கிறாள் என்ற இளவரசன், பொற்செல்வனும் இங்கேதான் இருக்கிறான் என்று சொல்லவில்லை.

“நவீனா தேடிட்டிருக்கா” என்றார் மகளிடம்.

“இதோ போறேன்ம்மா” என்று செல்வி வேகமாக செல்ல, பின்னோடு சென்றவரிடம், “நீங்க இருங்க ஆன்ட்டி, எனக்கு உங்ககிட்ட பேசனும்” என்றதும் செல்வியும் நின்றாள்.

“ஆன்ட்டி வர வரைக்கும் போகனும் போகனும்னு சொல்லிட்டிருந்த? இப்போ ஏன் நிற்குற? போ”

“ம்மா நீயும் வா, அமிர்தா ஆன்ட்டி தேடுவாங்க”

“தேடினா நான் பேசிட்டிருக்கேனு சொல்லு”

“உங்ககிட்ட பேசவா அம்மா வந்தாங்க? நவீனாக்கா கல்யாணத்துக்குத்தான் வந்தோம்”

“செல்வி” என சாம்பவி மகளை அதட்டி, “நவீனாவோட அப்பாம்மா எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டிருக்காங்க, வயசானவங்க… மேல ஏறி வர முடியாது. வாங்க போவோம், சாப்பிட்டு பேசலாம்” என்றார்.

“இரண்டு நிமிஷத்துல பேசிடறேன், செல்விக்கிட்ட என் விருப்பம் சொன்னேன், சம்மதிச்சிருந்தா அப்போவே உங்ககிட்ட சொல்லியிருப்பேன். அவளுக்கு என்னை பிடிக்கலன்றதால யார்கிட்டயும் சொல்லல ஆன்ட்டி”

“இப்போ சொல்றிங்க?” என்று செல்வாவிடம் கேட்டபோதும் சாம்பவி பார்வை மகளிடம் இருந்தது.

“இப்போவும் அவளுக்கு பிடிக்கலதான். ஆனா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா” என்றதும் செல்விக்கு இதயம் படபடவென அடிக்க, சொல்ல வேண்டாம்னா சொல்லிட்டான் என்று திட்டியபடி கீழே போனாள்.

“அப்பாம்மா சம்மதிப்பாங்களா தம்பி? அவங்ககிட்ட எப்போ சொல்லப்போறிங்க?”

“உங்களுக்கு சம்மதமா ஆன்ட்டி?”

“உங்களை விட செல்வியை புரிஞ்சவங்க யார் இருக்கா? நான் எதிர்பார்த்ததை விட என் மகளுக்கு நல்ல வரன் கிடைச்சதில பெரிய சந்தோசம், நான் முன்னாடி பார்த்த வரனை செல்வி அப்பா வீட்டுக்கு வர விடாம பண்ணிட்டார். உங்ககிட்ட அவர் மிரட்டல் வேலைக்கு ஆகாதுன்றதுல இரட்டிப்பு சந்தோசம்.

அப்பாம்மா முன்னாடி கேட்டுருந்திங்கனா இன்னும் சந்தோசமா இருந்திருக்கும். பெரியவங்களுக்கு தெரியாம நீங்க என்கிட்ட சம்மதம் கேட்டதும், நான் சம்மதிச்சதும் ஒருமாதிரி குற்றவுணர்வா இருக்கு”

“பத்து நிமிஷம் முன்னதான் செல்வி சம்மதம் சொன்னா, உடனே நீங்க மேல வரவும் உங்ககிட்ட கேட்டேன், அப்பாம்மாகிட்ட இங்க வச்சு சொல்ல வேண்டாம்னு செல்வி சொல்லியிருக்கா, வீட்டுக்கு போனதும் சொல்லிடுவேன்”

“சரிங்க தம்பி, வாங்க கீழ போவோம், சாப்பிட கூப்பிட்டாங்க” என்று கீழே வந்த சாம்பவி, செல்வி திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை மகனிடம் சொன்னார் மகிழ்வோடு.

செல்வியிடம் சென்றவன், “செல்வாவைப் பத்தி எவ்வளோ கேட்டேன்? என்கிட்ட சொல்றதுக்கென்ன? எத்தனை மன உளைச்சல்?” என்றான் கடுப்போடு.

“ப்ளீஸ் ண்ணா, இதைப்பத்தி இப்போ பேச வேண்டாம்”

“நீ இப்போதான சம்மதம் சொல்லியிருக்க?”

இளவரசனை பார்த்திருந்த பொற்செல்வன், “சண்டை அப்புறம் போட்டுக்கலாம், சாப்பிட வாங்க” என்று இளவரசனின் கைப்பிடித்து அழைத்து போய் அமர வைத்து தானும் அருகே அமர்ந்தான்.

“நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.

“அவ சம்மதம் சொன்னது பிரச்சனையா? இல்ல என்கிட்ட சொன்னது பிரச்சனையா?”

“உங்ககிட்ட சொன்னதுதான்” என்றதும் பக்கென சிரித்தான் பொற்செல்வன்.

“ம்ப்ச், இது அப்படியில்ல, உங்களை ஃபேஸ் பண்ண பயந்துட்டு நவீனா கூப்பிட்டும் வரலைனுதான சொன்னா. இங்க வந்தா சம்மதிச்சிடுவோம்னு அவளுக்கே தெரிஞ்சிருக்கு. கம்ப்பல் பண்ணிதான் கூட்டிட்டு வந்தேன்.

உங்களை அவளுக்கு பிடிச்சிருக்கு, ஆனா எவ்வளோ கேட்டும் உங்களை பிடிச்சிருக்குன்ற விசயத்தையே ஒத்துக்கல. இப்போ கூட அவளா சொல்லியிருக்கமாட்டா, நீங்க சொல்ல வச்சிருப்பிங்க.

இராஜஸ்தான் வந்ததுலயிருந்து ஒரு நாள் கூட செல்வி சந்தோசமா இல்ல. எதுக்கு இவ்வளோ அடமெண்ட்? பிடிச்ச விசயத்தை அக்ஸப்ட் பண்ண எவ்வளோ ஆர்பாட்டம்? இப்படி மனசை போட்டு உலட்டிக்கிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“இது அடமண்ட் இல்ல, அவளுக்கு என்மேல எதோ கோபம் இருந்திருக்கு, இன்னமும் இருக்கு. ஃபோர்ஸ் பண்ணி காரணத்தை கேட்டா சொல்லமாட்டா. அவளோட வாழ்ந்துதான் தெரிஞ்சுக்கனும், செல்வியை சரி பண்றதுக்காகவே சீக்கிரம் தெரிஞ்சிப்பேன். டோன்ட் வொரி, ஐ வில் டேக் ஆஃப் ஹெர்”

பொற்செல்வனின் அக்கறையில் நிம்மதி அடைந்தபோதும், “அவளைப் பத்தி இவ்வளோ தெரிஞ்சிருக்கு, பொள்ளாச்சில இருக்கும்போதே செல்வியை சரி பண்ணியிருக்க வேண்டியதுதானே?” என்றான்.

“நான் ப்ரப்போஸ் பண்ணின கோபத்துல இருக்கானு நினைச்சேன், அந்த கோபத்தோட வேற காரணமும் இருக்குனு வேலையை விட்டு நிற்கும்போதுதான் புரிஞ்சது. அதுக்கப்புறம் அவளோட பேச வாய்ப்பில்லாம போச்சு. ட்ரை பண்ணியிருந்தா வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம்தான். அப்படி பண்ணினாலும் அவளுக்கு பிடிக்காதுனுதான் விட்டுட்டேன்”

“எப்போ கல்யாணம் வைப்பிங்க?”

“என் அன்பு மச்சானே… உன் தங்கை இன்னைகுத்தான் சம்மதம் சொல்லியிருக்கா, கல்யாணத்தை பத்தி இனிதான் யோசிக்கனும். பசிக்குது, முதல்ல சாப்பிடுவோம்” என்றான்.

“எனக்கும் பசிக்குது” என்று உண்ண ஆரம்பித்தான்.

ராஜலஷ்மியும் நவீனாவும் அனைவருக்கும் பரிமாற, நவீனாவிடமிருந்த சாம்பாரை வாங்கிய சாம்பவி, “நீ போய் தம்பியோட உக்கார்ந்து சாப்பிடு, நானும் ராஜியும் பார்த்துக்கிறோம்” என்றார்.

நான்கு பேர் மட்டும் உண்ணுமளவிலான டேபிள் இருக்க, அதில் பொற்செல்வனின் பெற்றோரும், நவீனாவின் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் கீழேதான் உண்ண அமர்ந்தனர்.

கணவன் வீட்டினில் சுகமாக வாழ்ந்து பழகிய ராஜலஷ்மிக்கு கீழே அமர்ந்திருப்பவர்களுக்கு பரிமாற சற்று சிரமாகத்தான் இருந்தது. பிறந்ததிலிருந்து வசதியாக வாழ்ந்த தேவராஜ் எப்படித்தான் இங்கே மூன்று நாள்கள் இருந்தார் என வியந்தவள், எல்லாம் காதல் படுத்தும் பாடு’ என்று இன்பமாக நினைத்துக்கொண்டாள்.

கூடவே அத்தை மாமா மனவேதனை தீர்ந்துவிட்டதில் ராஜலஷ்மி மனமும் மகிழ்வாகிட, “இனி உன் ஃப்ரண்ட்கிட்ட முன்னமாதிரி பேச முடியாது செல்வி, நவீனா செம பிஸி” என்றாள் சிரிப்போடு.

“பரவால்லக்கா, அவங்க பிஸியா இருக்கட்டும்” என்றாள் செந்தமிழ்செல்வி.

“இன்னைக்காவது வீட்டுக்கு வருவியாடா?” என்றான் தேவேந்திரன்.

தேவராஜ் சிரிக்க, நீண்ட வருடங்களுக்கு பின்னே மகனின் இயல்பான சிரிப்பை ரசித்தனர் பெற்றோர். முன்பு நடந்த கசப்பான நிகழ்விற்கு சம்மந்தியிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பையும் வேண்டி, மருமளை அழைத்துப் போக அனுமதி கேட்டனர் தேவராஜின் பெற்றோர்.

நவீனாவின் பெற்றோர் மகளை அனுப்பி வைக்க மகிழ்வோடு சம்மதிக்க, அனைவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

சாம்பவி, “நாங்க இப்படியே கிளம்பறோம்” என்றார்.

“வீட்டுக்கு வந்துட்டு போ சாம்பவி, எவ்வளோ பெரிய மனவேதனையில இருந்து மீண்டு வந்துருக்கோம். மத்த விஷேசத்தை விட இது முக்கியமான விஷேசம். நீயும் செல்வியும் இல்லாம நல்லா இருக்குமா?” என அழைப்பு விடுத்தார் அமிர்தவள்ளி.

“இல்லம்மா, இளவரசனுக்கு லீவ் கிடைக்காது, இன்னொரு நாளைக்கு வரோம்”

“ஃப்ளைட் நைட்தானே? வீட்டுக்கு வந்துட்டு போங்க ஆன்ட்டி” என்றான் பொற்செல்வன்.

“அம்மாப்பாக்கு ட்ராவல் பண்றது கஷ்டம், அவங்களுக்கு பதிலா நீங்க வாங்கம்மா” என்றாள் நவீனா.

நவீனா இப்படி அழைத்த பின்னே எப்படி போகாமல் இருப்பது என்ற சங்கடத்தோடு மகனைப் பார்த்தார் சாம்பவி.

இளவரசனுக்கும் தங்கை வாழும் வீட்டைப் பார்க்கும் ஆவல் வர, “போலாம்மா” என்றவன், பொற்செல்வனிடம் “ஆனா ஒன் ஹார்ல கிளம்பிடுவோம்”  என்றான்.

குறுநகையோடு தலையசைத்து பொற்செல்வன் சம்மதிக்க, செல்விக்குத்தான் பெரும் சங்கடமானது.

“எவ்வளோ நாள் ஆச்சு உன்னைப் பார்த்து? இப்போ போனா திரும்ப எப்போ வருவிங்களோ? உன் அண்ணன் சம்மதிச்சாலும் உன் முகம் கோணலாகுது, செல்வாக்கும் உனக்கும் இன்னும் பிணக்கு தீரலையா?” என உரிமையாக கடிந்தார் அமிர்தவள்ளி.

“வரேன் ஆன்ட்டி” என்றாள் வரவழைத்த இயல்போடு.

பின்னே அனைவரும் கிளம்பினர். பயணத்தின் போது செல்விக்கு படபடப்பாக இருக்க, முக்கால்மணி நேரம் போனதே தெரியவில்லை. கார் நிற்கவும் “அதுக்குள்ள வந்துட்டோமா?” என முணுமுணுத்தாள்.

தேவேந்திரன் இளவரசனின் வேலைப் பற்றி பேசிக்கொண்டு வந்ததில் இருவருக்கும் நட்பாகிட, “சின்ன விஷேசம்னாலும் அம்மா செல்வியை கூப்பிட்டுடுவாங்க” என்று பேசிக்கொண்டே இளவரசனை தன்னோடு அழைத்துச்சென்றான்.

“நவீனா, தேவா இங்கேயே நில்லுங்க” என்று, “ராஜி… போய் ஆரத்தி எடுத்து வா” என்றார் அமிர்தம்.

நவீனாவிற்கு துணையாக செல்வியும் வெளியே நின்றிருக்க, பொற்செல்வனும் வெளியே நின்றிருந்தான். பின்னே ராஜலஷ்மி ஆரத்தி எடுத்து முடிக்கவும் “வலது காலை எடுத்து வச்சு உள்ள போங்க அண்ணி” என்ற பொற்செல்வன்,

“நீ வா செல்வி, அண்ணன் அண்ணி பின்னாடி நாம போவோம்” என்று அவளின் கையை தன்னோடு கோர்த்துக்கொள்ள, இத்தனை பேர் இருக்காங்க, என்ன பண்றான் என செல்வி பொற்செல்வனை முறைக்க, இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அமிர்தவள்ளி, சாம்பவி அனைவரும் உள்ளே சென்ற பின்னே, “கையை விடுங்க” என்றாள் முணுமுணுப்பாக.

“என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்க, வலது காலை எடுத்து வச்சு வாடீ” என்றான் இவனும் கிசுகிசுப்பாக.

“சும்மா சும்மா டீ போட்டு பேசாதிங்க, ஜிவு ஜிவுனு ஏறுது”

“ஜிவு ஜிவுனு ஏறுதா? இல்ல ஜிவ்வுனு ஆகுதா?” என்றான் கண்ணிமைத்து.

செல்வியின் முகமெல்லாம் சிலிர்த்திட, “சரி சரி வா, அம்மாகிட்ட நான் சொல்லும் முன்னாடி நீயே காட்டிக் கொடுத்திடுவ போல” என்று அவளின் கைப்பிடித்தவாறு உள்ளே சென்றான்.

“இப்போவாவது கையை விடுங்க”

“என்மேல கோபம் இருந்தாலும் நான் சொன்னமாதிரி ரைட் லெக் வச்சி உள்ள வந்த பார்த்தியா? அதான் என் செந்தமிழ்செல்வின்றது” என மெச்சியபடி கையை விடுவித்து வீட்டினுள் சென்றவன், சமையலரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

சமைப்பவரிடம் பொற்செல்வன் பேசுவது ஆச்சர்யமாக இருக்க, “என்ன செல்வா?” என்றார் அமிர்தவள்ளி.

“செல்வியும் நானும் திரும்ப சேர்ந்துட்டோம், அதை செலிபிரேட் பண்ண ஸ்வீட் செய்ய சொன்னேன்ம்மா” என்றதும் ப்ரித்திகாவோடு பேசிக்கொண்டிருந்த செல்வி பட்டென திரும்பினாள்.

“என்ன சேர்ந்துட்டிங்களா?” என ராஜலஷ்மி புரியாமல் கேட்க, “திரும்ப ஃப்ரணட்ஸ் ஆகிட்டோம்னு சொல்றதுக்கு பதிலா அப்படி சொல்லிட்டேன் அண்ணி” என்றான்.

ராஜலஷ்மிக்கு சந்தேகம் வந்தபோதும், செல்வியை அப்படி நினைக்க முடியாமல் போக, “ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்ன்றிங்க, ஆனா செல்வியைப் பார்த்தா அப்படி தெரியலையே” என்றாள்.

“அதெல்லாம் பார்த்ததும் தெரியாது. பார்க்கப் பார்க்கத்தான் புரியும்” என்றான் சிரிப்போடு.

பொற்செல்வனின் அருகே சென்று, “அப்படியா சொல்றிங்க?” என்றாள் செல்வியைப் பார்த்தவாறு.

ராஜலஷ்மியிடம் ஏதும் சொல்லக்கூடாது என்று செல்வி கண்களால் கட்டளையிட, “இப்போ ஏதும் சொல்லக்கூடாதுனு ஆர்டர் வந்துருக்கு, அதனால அரைமணி நேரம் கழிச்சு சொல்றேன்” என்றான்.

ராஜலஷ்மி செல்வியைப் பார்க்க, அவள் ப்ரித்திகாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

பின்னே இளவரசனிடம் பேசியிருந்து, தேவராஜிடம் வந்தமர்ந்தவன், “சின்ன அண்ணி எங்க?” என்றான்.

“டிரஸ் சேன்ஜ் பண்ண போயிருக்கா” என்றான்.

அரைமணி நேரத்தில் பொற்செல்வன் சொன்னதை செய்து முடித்ததாக சமையலர் சொல்ல, “நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று ராஜலஷ்மி சொல்ல, நவீனாவும் சொல்ல, இருவரையும் தடுத்து, “நானே கொடுக்குறேன்” என்றான் பொற்செல்வன்.

முன்பு பொற்செல்வனுக்கு பெண் பார்க்கும் போது, பெண் வீட்டார்தான் இங்கு வரவேண்டும், பெண்தான் இங்கே வாழ வருகிறாள். வாழப்போகும் வீட்டை பார்க்க வேண்டும், நானா அங்கு போய் வாழப்போகிறேன் என்று பொற்செல்வன் அன்னையிடம் வாதிட்டது நியாபகம் வர, மாப்பிள்ளை பார்க்கும் வைபவத்தை நிறைவேற்றுகிறான் என்று புரிந்தது.

“சரியான ஆளுடா நீ” என்று சிரித்தான் தேவராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!