Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 10 2

 அவர் ஏதும் பேசாமல் வெளியே போக கதவை சாத்தியவள் சுதாவிடம் இருந்த இன்னொரு  குழந்தையும் வாங்கிக் கொண்டாள்.

 சுதா இவள் என்ன செய்யப் போகிறாள் இரண்டு குழந்தையை வாங்கி  என்று பார்த்திருந்தவர்..



Advertisement

“நான் புதுசா பால் எடுத்துட்டு  வர்ரேன் குழந்தைகளுக்கு கூடுமா” என்று சுதா எழுந்து கொள்ள பார்க்க.

Advertisement

 “வேண்டாம் அத்தை” என்ற மொழி.

Advertisement

 செய்த காட்சியை பார்த்து  அப்படியே அதிர்ச்சியாகி நின்றார் சுதா..

Advertisement

 என்ன நடக்குது?  அவள் என்ன செய்கிறாள் என்று அவருக்கும்  ஒன்றும் புரியவில்லை..

 கதறிக் கொண்டிருந்த இரண்டு  பிள்ளைகளை   தன் மடிமீது வைத்தவள் தன் மேலே உள்ள உடையை   விலக்கி, பிள்ளைகள் இருவரையும் தன்  மார்போடு அணைத்து  வைத்து பால் புகட்ட..

 சுதாவிற்கு கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.

 என்ன செய்கிறாள்  இந்த பெண் இவளுக்கு எப்படி பால் வரும் என்று அவர் ஆச்சரியமாக பார்க்க..

 இரு பிள்ளைகளும்  மொழியிடம் பால் குடிப்பதை பார்த்தவருக்கு.

.

 இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக மொழியை பார்த்தார்,.

 அவளோ இரண்டு குழந்தைகளும் இரண்டு கைகளில் ஏந்திக்கொண்டு பசியாற்றிக் கொண்டிருந்தாள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது..

 கண்கள் இரண்டையும்  மூடிக்கொண்டிருந்தாள் மொழி, ..

 சில நேரத்தில் குழந்தைகள் பசியாற்றி விற்று அவள்  மார்பிலே தூங்கி விட.

 தூங்கிய குழந்தைகளை மெல்ல தன் மடி மீது வைத்தவள், உடையை சரி பண்ணி விட்டு, அப்படியே கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.

 சுதாவுக்கு மனம் ரணமாகி போனது என்ன காரியம் செய்திருக்கிறாள்  இந்த பெண்.

 இது சாத்தியமா என்று தோன்றியது..

 இருந்தாலும் கல்யாணம் ஆகாத பெண் இப்படி செய்வாளா என்று அவருக்கு கஷ்டமாக இருந்தது.

 மொழியின் தலை மீது  சுதா கை வைக்க.

 “அத்தே” என்றவள் அவரின்  இடுப்பை கட்டிக் கொண்டாள்.

 “என்னை மன்னிச்சிடுங்க அத்தை எனக்கு வேற வழி தெரியல குழந்தைகள் நைட்டெல்லாம்  பசிக்கு அழுவுறாங்க. பாட்டில்  பால் கொடுத்தாலும் சரியா குடிக்கல துப்பிக்கொண்டே இருந்தாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல நெட்டுல சர்ச் பண்ணி பார்த்தே,  சில டாக்டர் சொன்னாங்க தத்தெடுக்கிற பிள்ளைகளுக்கு நாம  தாய்ப்பால் கொடுக்கலாம் என்று அந்த ட்ரீட்மென்ட் பண்ணி கிட்டேன். நிறைய ஆர்மோன்ஸ் டேப்லட் சாப்டேன்,  ட்டிரிட்மென்டு எடுத்து , இப்போ பத்து நாளா தான்  பிள்ளைகளுக்கு  பால் கொடுக்குறேன்,.

என்னை மன்னிச்சிடுக்க அத்தை”, என்றாள்.

 “உனக்கு கஷ்டமா இல்லையாடா மொழி” என்று அவர் கேட்க.

 “ஹார்மோன்ஸ் டேப்லேட்  சாப்பிடுவது தான்  ரொம்ப கஷ்டமா இருந்தது  அத்தை,  இப்போது  எல்லா ட்ரிட்மென்டும்  முடிஞ்சது இப்போ  ஒன்னும் பிரச்சனை இல்ல,, எனக்கு பால் வர ஆரம்பித்து விட்டது,  இதை ரிஷி கிட்ட சொல்லிடாதீங்க அத்தை.. என்னை அவர் குழந்தைங்களுக்கு பால் கொடுக்க விட மாட்டார்,  வீட்ட விட்டு   அனுப்பிவிடுவார்”. என்று மொழி அழ…

 சுதாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இப்படி நடக்குமா? இப்படி யாராவது  இருப்பார்களா, இந்த பெண்  எவ்வளவு  பெரிய தியாகம் செய்திருக்கிறாளே தன் அக்காவின் பிள்ளைகளுக்காகவா இந்த பெண் இப்படி செய்கிறாள்”..

 உண்மையிலே  என் பேரப்பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் தான்,. உன்னை மாதிரி ஒரு சித்தி கிடைக்க என்றவர்.

 அவளின் முகத்தைப் பார்க்க அவளோ சோர்ந்து  போயிருந்தாள், “நைட் சாப்பிட்டியா”  என்று கேட்க.

 “இல்லை” என்றாள்.

” இரு நான் சாப்பாடு  எடுத்துட்டு வரேன் சாப்பிட்டு தூங்கு” என்றவர் தூங்கிய  குழந்தைகளை இரண்டு பேரையும்  எடுத்து தொட்டிலில் படுக்க  போட்டவர்.

 கதவை திறந்து கொண்டு கிச்சன் செல்ல.

 “மா அவ எதுக்கு இங்க வந்து இருக்கா அவளை வெளியே போக சொல்லு” என்றான் ரிஷி..

 ” பேசாம  இரு  ரிஷி” என்றார் மகனை.

 “நான் எதுக்கு பேசாம இருக்கனும் அவ யாரு,, யாரு  அவ, என்  பிள்ளைகளை  எதற்கு அவள்  பார்த்துக்கொள்ள வேண்டும்..,  அவ என்ன பெரிய இவ மாதிரி ரூம்ல போய் உட்கார்ந்துட்டு இருக்கா போக சொல்லு  வெளிய அவளை” என்றான்.

 “அவ போக மாட்டா, நீ  சும்மா இரு ரிஷி” என்றார்.

  “மா அவளை

 போக சொல்லு” என்றான் மீண்டும்…

 “ரிஷி பிள்ளைகளை  அவள்  இல்லாமல் வளர்க்க முடியாது ரிஷி” என்றார்.

 “என் பிள்ளைகளை வளர்க்க  நான்  10  பேர் வேலைக்கு  போட்டு பார்ப்பேன் அவ இங்க இருக்கக்கூடாது,  நீ இப்பவே அவளை வீட்டை விட்டு துரத்து” என்றான்.

 “உன் பேச்சு எல்லாம் கேட்க முடியாது ரிஷி பிள்ளை வளக்குறது அவ்வளவு ஈஸி கிடையாது, நீ  எத்தனை ஆள் போட்டாலும் மொழி மாதிரி யாரும் பார்த்துக்க மாட்டாங்க” என்றார்..

 “ஓஓஓஓ… உங்களையும் அவ பேசி மயக்கிட்டாளா? சரியான  கைகாரி அவ”  என்று மொழியை அவன் கண்ட படி திட்ட.

 “ரிஷி மொழியை பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது நீ ” என்றவர் உணவை எடுத்துக்கொண்டு    போக.

“இது யாருக்கு சாப்பாடு அவளுக்கா”? என்றான்.

 “ஆமாம்” என்று சுதா சொல்ல.

 “உங்களுக்கு என்ன விட மொழி தான் முக்கியமா போச்சா” என்றான்.

 “டேய் எனக்கு நீ புள்ள டா, அவங்க எனக்கு பேர பிள்ளைங்க  டா.

 எல்லாரும்  எனக்கு வேணும் டா ஏன்டா என்னை இப்படி எல்லாரும் போட்டு படுத்துறீங்க”..

 என்று சுதா கண்ணை துடைத்துக் கொண்டே  மொழியின் அறைக்கு செல்ல..

 ரிஷி கோபத்தில் மாடி  ஏறி இருந்தான்..

 அவனது  மனது தீயாய் எறிந்தது மொழியை  இந்த வீட்டில் அவன் அனுமதிக்கவே முடியாது.

 அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதையும், அவன் மொழி என்று நினைத்து ஜோதியோட வாழ்ந்த வாழ்க்கையும்  ஞாபகம் வர அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

 என் அழகான வாழ்க்கை கெடுத்து விட்டாலே எவ்வளவு ஆசை கொண்டேன் அவள் மீது… அனைத்தும் வீணாக்கி விட்டாளே,  எப்படி என்னை விட்டுக் கொடுக்க அவளுக்கு மனம் வந்தது? எப்படி என்னை விட்டுக் கொடுத்தால் இவள்..

 இப்ப எதுக்கு இங்க வந்திருக்கிறாள்.

 இருடி  உன்னை ஓட ஓட விரட்டுறேன் என்றான்.

 அவள் மீது வைத்த பாசம் அத்தனையும் இப்பொழுது வெறுப்பாக மாறின..

 பாவம் மொழியில் தியாகத்தை புரிந்து கொள்ளவில்லை ரிஷி.

 அவனின் திருமண வாழ்க்கை வீணாகப் போனது, ஒரு பெண்ணை தாலி கட்டி வேதனைப்படுத்தி விட்டேனே என்று பெரும் வேதனையில் இருந்தான்  ரிஷி,,..

 சுதா மொழியோடு அந்த அறையில் இருந்தார்.

 விடியற்காலையிலே ஐயப்பன் குடும்பம்  ரிஷி வீட்டின் வாசலில் வந்து நின்றது.

 சுதா தான் அமைதியாக எடுத்துச் சொன்னார்  ஐயப்பன் குடும்பத்தாரிடம், “கொஞ்ச நாள் மொழி இங்கே  இருக்கட்டும் மொழியை பிறகு நானே கொண்டு வந்து விடுகிறேன்” என்று.

 மொழியோ அவர்களை பார்க்க வராமல் ரூம்பிலே இருக்க.

 தேவகி  தான் மகளிடம் சொல்லிவிட்டு வந்தார் “சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு” என்று..

 ரிஷி மேலிருந்து கீழே வந்து அனைத்தையும் பார்த்தபடியே  கீழே அமர்ந்திருந்தான்..

 ஐயப்பன் குடும்பத்தை பார்த்தவன் அமைதியாக இருக்க..

அவர்களும்   இவனை பார்த்தும், பார்க்காமல் சென்றுவிட்டனர்..

 ரிஷிக்கு மொழி  தன் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது பிடிக்கவே இல்லை..

 மறுநாளே குஜராத்துக்கு  கிளம்பி விட்டான்..

 ரிஷிக்கு  இன்னும் இரண்டு மாதங்கள் அங்கே வேலை இருக்க பின்பு சென்னை வரலாம் என்று கிளம்பிவிட்டான்.

 மொழிக்கு அப்பாடா என்று இருந்தது.

அவள் நன்றாக பிள்ளைகளை பார்த்துக்கொண்டாள்.

 ரிஷி சென்ற மறுநாளே  ஹாஸ்பெட்டலுக்கு அழைத்துச் சென்றனர் மொழியை.

 மொழி வேண்டாம் என்ற போதும் “இல்ல நீ வா  நான் டாக்டர்  கிட்ட பேச  வேண்டும்” என்று அவளை அழைத்து   ஹாஸ்பெட்டலுக்கு சென்றனர் சுதாவும், ராமமூர்த்தியும்.

ஆம், மொழி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சுதா கணவரிடம் சொல்ல.

ராமமூர்த்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,.

“இது எப்படி முடியும்”? என்று அவர் கேட்ட போது, மொழி தன்னிடம்  சொல்லியதை கணவரிடம் சொல்ல, அவருக்குமே இதை  நம்ம முடியவில்லை,..

மொழியின் தியாகத்தை புரிந்தவருக்கு அவளின் மேல்  மரியாதை, பாசமும் வந்திருந்தது.

 மொழி  ட்ரீட்மென்ட் எடுத்த ஹாஸ்பிடலுக்கு அவளை  அழைத்துச் சென்றனர்.

 டாக்டரிடம் சுதாவும், ராமமூர்த்தியும், மொழி குழந்தைகளுக்கு பால் கொடுப்பது எந்த பிரச்சினையும் இல்லையே அதனால் அவளுக்கும், குழந்தைகளுக்கும்  எந்த  பாதிப்பும் வர்ராது  தானே என்று கேட்க.

 டாக்டர் சொல்லிவிட்டார் எந்த பிரச்சனையும் இல்லை ப்ராப்பரா நாங்க எல்லா டெஸ்டும்  எடுத்து தான் மொழிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தோம்

என்று..

 சுதாவுக்கும்,  ராமமூர்த்திக்கும் இப்பொழுது தான் எல்லா  சந்தேகமும் தீர்ந்தது..

 மொழியை நன்றாக பார்த்துக் கொண்டனர் இருவரும்,  டேப்லட் உட்கொள்வதால்  அவ்வப்போது மொழிக்கு தலை சுத்தும்..

 சுதாவும், ராமமூர்த்தியும்  அவளை நன்றாக பார்த்துக் கொண்டனர் மொழி   பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதால்  நன்றாக  உண்டாள்.  அதனால் கொஞ்சம் எடை கூடி இருந்தாள்.

 அவளுக்கு இப்போது  இருக்கும் ஒரே கவலை பிள்ளைகளை  நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டாம், நன்றாக  சாப்பிட்டாள். இரு குழந்தைகளுக்கு  பால்   கொடுக்க வேண்டுமே, அதனால்  நான்வெஜ் நன்றாக சாப்பிட்டாள்.

 பிள்ளைகளும்  கொஞ்சம் எடை கூடி இருந்தனர்.

 சுதாவுக்கும்,  ராமமூர்த்திக்கும் அவ்வளவு சந்தோஷம் பேர பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்று..

 இதோ ஆறு மாதம் முடிந்த நிலையில்.

 கொஞ்சம் சகஜமாக இருந்தனர் அனைவரும்..

 மொழியை  திருநெல்வேலி வர சொல்லி ஐயப்பனும்,  தேவகியும் டெய்லி அவளிடம் போனில் பேச.

 “இன்னும் கொஞ்ச நாள் , இன்னும் கொஞ்ச நாள்” என்று தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றாள் மொழி.

 ரிஷி டெய்லி குழந்தைகளிடம்  போனில்  பேசுவான்,  சுதாவிடம்  தினமும் வீடியோ காலில் வந்து  குழந்தைகளை பார்ப்பான், இரண்டு பிள்ளைகளும் கையையும் காலை ஆட்டி  படுத்த படியே தந்தையை வீடியோ காலில் பார்ப்பார்க்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!