Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 11

அத்தியாயம்: 11

 

அது மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிட்டல். அங்கு பல்வேறு நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை தரப்படும். தனியார் மருத்துவமனை அதில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரியதாக மிகப் பெரிதாக இருந்தது.

 



Advertisement

தன் அம்பாசிடரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தன் வேக நடையுடன் காரின் சாவியை விரலில் விட்டு சுழற்றியபடி நடந்து வந்தான் பார்த்திபன். தன் நண்பனைக் காண வந்துள்ளான்.

 

நேராக சிகிச்சைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்லாது, அங்கிருக்கும் அனைத்து பெண் நர்ஸ்கள், வரவேற்பாளர், சுத்தம் செய்யும் ஊழியர்கள் உட்பட அனைவரிடமும் கதை அளந்து கொண்டிருந்தான் பார்த்திபன்.

Advertisement

 

Advertisement

“இப்ப வலி இருக்கா?” எனக் கேட்டு சிறிய சுத்தியல் போன்ற ஒன்றை எடுத்து, கால் நீட்டி அமர வைக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் முழங்காலில் தட்டி கேட்டான் வின்சென்ட்.

 

“இல்லங்க டாக்டர்.” என்றார் அவர்.

Advertisement

 

“இப்ப?” எனக் கேட்ட படியே பல இடங்களில் தட்டி அவரைப் பரிசோதித்து அவரின் மருத்துவ ரிப்போர்ட்டில் எதையோ எழுதி முடித்தவன்,

 

“கால் வலிக்கிதுன்னு நடக்காம விட்டுடாதிங்க. அப்பப்ப எழுந்து சுவர பிடிச்சிட்டேனாலும் நடங்க. காலுக்கு தனியா சில exercise இருக்கு. பிசியோதெரபிஸ்ட் யாமினிய பாத்து கன்சிடர் பண்ணிட்டு போங்க.” என அவருக்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வழியனுப்பியவன் நேரத்தைப் பார்க்க, அது ஒன்பது என்றது.

 

அவனின் டியூட்டி நேரம் முடிவடைய உள்ளதால், அடுத்து எத்தனை பேர் இருக்கின்றனர் என நர்ஸிடம் கேட்க, அவள் இருவர் காத்திருப்பதாக சொல்லி ஒருவரை உள்ளே அனுப்பி வைத்தாள். ஆனால் உள்ளே வந்தது நோயாளி அல்ல பார்த்திபன்.

 

“ஹேய் டியூட்… வாட்ஸ் அப்…” என்றபடி வந்து வின்சென்ட்டின் நாற்காலியில் அமர்ந்தவன், சிகிச்சைக்கு வந்திருந்த பெண்ணிடம், ” என்ன ஆன்ட்டி கால் எப்படி இருக்கு?” என நலம் விசாரிக்க,

 

“ஏதோ இருக்கேன் தம்பி… முழங்கால் மட்டும் வலி போகவே மாட்டேங்கிது..” என வருந்த,

 

“அப்படிலாம் சோகமாகக் கூடாது. உடம்புன்னு இருந்தா அதுல கோளாறுன்னு ஒன்னு வரத்தான் செய்யும். அதை சரி செய்யத்தான் இவன் இருக்கானே… அவன் சரி பண்ணுவான்.” என்று அவரைப் பேசி பேசி சிரிக்க வைத்தவன், வீட்டிற்கு செல்ல அவரை ஆட்டோவில் ஏற்றி விட எழுந்தான்.

 

“பார்த்தி போதும். அவங்க பையன் கூட வந்திருக்காங்க… அவெ பாத்துப்பான்.” என்றான் வின்சென்ட்.

 

“ஆனாலும் நான் கூட இருந்து உதவுன மாதிரி இருக்காதே வின்…. ” என ஓடியவனை முறைத்துப் பார்த்தபடி கரம் பிடித்து தடுத்தவன், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு தன் வெள்ளை நிற கோர்ட்டைக் கழற்றி வைத்து விட்டு நடக்க, பார்த்திபனும் உடன் நடந்தான்.

 

“என்ன விசயமா வந்த பார்த்தி?”

 

“என் நண்பன பாக்க காரணத்தோட தான் வரணுமா? என்ன!” என்றவனை நம்பாது பார்வை பார்த்தவன்,

 

“இந்த நேரத்துல வந்திருக்க… அதுவும் பத்து மொற கால் பண்ணிருக்க. எதுக்கு?” என்றான் தன் அலைபேசியை ஆராய்ந்தபடி.

 

“கால் பண்ணா! அத எடுத்து அட்டன் பண்ணிட்டு நீ இந்த கேள்விய கேட்டிருக்கணும். இப்ப கேக்குற? ”

 

“ம்ச்… எதுக்கு பார்த்தி கால் பண்ண? நான் டியூட்டில இருக்கும் போது அட்டன் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும் தான.”

 

“தெரியும்… ஆனா ஏன் எடுத்து பேசக் கூடாது? ரூல்ஸ்ஸா?”

 

“அது என்னோட தொழில் தர்மம். நான் வேலை செய்யும் போது ஃபோன் கால்ஸ் என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணும். ”

 

“உன்னோட இந்தக் கொள்கைய தயவு செய்து மாத்திக்க… ஏன்னா ஏதாவது அவசரம்னா உன்ன எப்படி நான் கான்டாக் பண்றதுக்கு கஷ்டமா இருக்கு. ”

 

“அப்படி என்ன எமர்ஜென்ஸி உனக்கு வந்திட போது.. ”

 

“அது ஒன்னுமில்ல.. என்னோட அப்பா… அதா திருவாளர் மாணிக்கம் என்கிற பாட்ஷா.. அவர் காரசாரமா உச்ச ஸ்வரத்துல நல்லாத்தா என்னைத் திட்டிட்டு இருந்தாரு. திடீர்னு நெஞ்ச பிடிச்சிட்டு சோபால சாஞ்சிட்டாரு. அதான் உனக்கு கால் பண்ணேன்.”

 

“வாட்…” என அதிர்ந்து போனான் அவன். ஏனெனில் வின்சென்ட்டுக்கு குடும்பம் என்று யாருமே கிடையாது. பார்த்திபனின் குடும்பம் தான் அவனின் குடும்பம்.

 

படிக்க வசதியின்றி தெருவோரக் கடைகளில் வேலை செய்தவனைப் பார்த்திபன் தான் அழைத்து வந்தான்.

 

“துளசிய படிக்க வைக்கிறேன்னு கேட்டேன். மாட்டேன்னு சொல்லிட்டிங்க. அப்ப இவனயாது நான் படிக்க வைக்கட்டா.. இவனும் துளசி வீட்டு பக்கத்துல தான் இருக்கான். அப்பாம்மா இறந்துட்டாங்களாம். ” எனப் பதினைந்து வயதில் வின்சென்ட்டை அழைத்து வந்தான் பார்த்திபன்.

 

முதல் சில ஆண்டுகள் வின்சென்ட்டின் பொறுப்பு பார்த்திபனிடம் தான் இருந்தது. அதாவது படிக்க நோட்டு புத்தங்கள், உடைகள் எனத் தன்னுடைய அனைத்தையும் வின்சென்ட்டுடன் பகிர்ந்து கொண்டான்.

 

அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணைப் பார்த்து மாணிக்கமே வியந்து போய் அவனை மருத்துவராக்கி அழகு பார்த்தார். வின்சென்ட்டைப் பொறுத்தவரை மாணிக்கம் தன்னைப் பெற்றெடுக்காத தந்தை.

 

‘ஓ… அதுனால தான் பார்த்திபன் பண்ற வாலுத்தனத்த பொறுத்திட்டு கூடவே இருக்கான் போல. இது தெரியாம நான் அவன உயிர் நண்பன்னு அறிமுகப்படுத்திட்டேன். ஸாரி. ஆனா வின்சென்ட்டுக்கு பார்த்திபன் தான் எல்லாம்.’

 

இன்று காலையில் தான் விழாவில் பார்த்தான் மாணிக்கத்தை. சந்தோஷமாக பம்பரம் போல் சுற்றி சுற்றி வேலை செய்த மனிதன். அவருக்கு திடீரென அட்டாக்கா? என்று பதற,

 

“என்னாச்சி பார்த்தி அப்பாக்கு? இப்ப எங்க இருக்காரு? ” என படபடப்புடன் கேட்டார்.

 

“நீ இவ்ளோ டென்ஷனாகி கவலைப்படுற மாதிரிலாம் ஹாட் அட்டாக் கிடையாது. சுகர் டக்குன்னு கொறஞ்சிடுச்சி. அதா நிக்க முடியாம மயங்கி விழுந்திட்டாரு. வேற ஒன்னுமில்ல… அவரு, ஓவர் அக்ட் பண்ணி பெர்பாமென்ஸ்ஸ கொஞ்சம் கெவியா குடுத்திட்டாரு. ராம் மாமா தான் வாய்ல குளுக்கோஸைப் போட்டு தண்ணி ஊத்தி, பக்கத்துல இருக்குற வேற நல்ல டாக்டர கூட்டிட்டு வந்து காட்டுனார். இப்ப சீரியஸ்ஸா எதுவும் இல்ல. நல்லாத்தா இருக்காரு. ரெண்டு இட்லி சாம்பார் வித் கெட்டி சட்னியோட சாப்பிட்டாரு.” என அலட்சியமாக சொல்ல,

 

‘அடப்பாவி அப்பாக்கு உடம்பு சரியில்ல. நீ என்னடான்னா ஒவ்வொரு நர்ஸ்கிட்டையும் கடல வறுத்திட்டு… இப்பயும் நேரடியா சொல்லாம சுத்தி வளச்சி பொறுமையா சொல்ற. ‘ என்பது போல் பார்த்த வின்சென்ட், உடனே சுகுமாருக்கு அழைத்தான், மாணிக்கத்தின் நலன் அறிய.

 

பார்த்திபன் ஏற்கனவே கூறியது போல் ராம் அவர்களின் குடும்ப மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துவிட்டான். உடல் நிலை என்னவென்று கேட்டவனுக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியால் நிம்மதி பிறந்தது. உடனே மாணிக்கத்தைக் காண நடந்தால், உடன் பார்த்திபன் இல்லை. ஆனால் குரல் மட்டும் கேட்டது. கூடவே ஒரு பெண்ணின் குரலும் தான்.

 

“இவ்ளோ திங்கஸ்ஸ நீ ஒருத்தியேவா தூக்கிட்டு போவ. குடு நான் ஹெல்ப் பண்றேன்.. ஏன் இவ்ளோ அவசரம். மெதுவா நடக்க வேண்டியது தான..” எனக் கையில் இருந்து பொருட்களைச் சிதறவிட்ட செவிலியருக்கு உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

 

“லேட்டாகிடுச்சி ஸார். டியூட்டிய முடிச்சிட்டு இப்ப ரிப்போர்ட் பண்ணிட்டு பஸ் ஸ்டாண்ட் போனாத்தான் உண்டு. இல்லாட்டி பஸ் கிடைக்காது.” என்றவளும் அவன் உதவ வருவான் என்று தானே கையில் இருந்தது தவறவிட்டாள்.

 

“இன்னேரத்துக்கு அப்றம் பஸ்ஸா! வேண்டாம் நான் உன்ன டிராப் பண்றேன். நீ உன்னோட டியூட்டிய முடிச்சிட்டு வா..” என அழைக்க, அவள் மறுக்காது உடனே வர தலை அசைத்தாள்.

 

“பார்த்தி… டயம் ஆச்சி…” என வின்சென்ட் அந்தப் பெண்ணை முறைத்தபடி சொல்ல,

 

” ஒரு நிமிடம் மச்சான்… சந்தியா டியூட்டி முடிச்சி வந்திடட்டும். நாம அவங்கள வீட்டுல டிராப் பண்ணிட்டு போகலாம். ” என்றான்.

 

‘டேய்… உன்னை.. ‘ எனப் பல்லை கடித்தவன்,

 

“உனக்கு டே டியூட்டியா..” என வின்சென்ட் சந்தியாவை பார்த்து கேட்க, அவள் எந்தப் பக்கம் தலை அசைக்க எனத் தெரியாது ஆம் என அசைத்தாள்.

 

“அப்றம் எதுக்கு நீ இவ்ளோ நேரம் இருந்த. இனி உன்னோட டியூட்டி முடிஞ்சதும் கிளம்பிடணும்.” என எச்சரிக்க, பார்த்திபன் சந்தியாவின் வாடிய முகம் பொறுக்காது வின்சென்ட்டை திட்ட வாயைத் திறக்க, அவனின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து வந்தான் வின்சென்ட்.

 

“நீ பண்றது ரொம்ப தப்பு வின்சா. லிஃப்ட் தான குடுக்குறேன்னு சொன்னேன். அதுக்கு கூட விடாம இழுத்திட்டு வந்திட்ட. ச்ச… எங்கப்பா என்னை வேவு பாக்கணும்னே உன்ன வளத்து, எங்கூடவே சுத்த விட்டிருக்காரு.. ” என வசை பாடினாலும் அதுவும் உண்மை தான்.

 

பார்த்திபனுக்காக மாணிக்கம் அமைத்த பாடிகார்ட் தான் வின்சென்ட். பார்த்திபனை யாராவது பயன்படுத்திக் கொள்ள நினைத்து நெருங்கினாலும் வரைமுறை இன்றி அவனை யாரும் அணுகப் பார்த்தாலும் அது வின்சென்ட்டைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.

 

“பார்த்தி, நீ லிஃப்ட் குடுக்கலன்னாலும் அவளுக்கு குடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க. அங்க பாரு..” என்றவன் வேறொரு ஆடவனுடன் ஏறிச்செல்லும் சந்தியாவை காட்ட,

 

“ஆனாலும் நான் அவளுக்கு லிஃப்ட் குடுக்குறதா சொல்லிட்டேனே! சொன்னத செய்யலன்னு என்னோட reputation என்னாகுறது?” என்க,

 

தெரிந்தே ஏமாற விரும்பும் அவனை என்ன செய்து என்பது போல் பார்த்தபடி கார் பார்க்கிங்கில் நோக்கி நடந்தான் வின்சென்ட்.

 

பார்த்திபனின் குணம் என்னென்னு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்..

 

“உங்களுக்கு தான் சுகர் இருக்குல்ல. அப்ப டயத்துக்கு சாப்பிடணும்னு தெரியாதப்பா. ஏம்ப்பா சாப்பிடல?” என அக்கறையாக கடிந்து கொண்டான் வின்சென்ட்.

 

” என்ன சாப்பிட்டாலும், ஒட்டுற சத்து தான் உடம்புல ஒட்டும் வின்சா. வம்படியா ஒட்ட வைக்க முடியாது. எல்லாம் விதி… நாம பிறக்கும் போதே நம்மோட வாழ்க்க எப்படி இருக்கணும்னு அவெ எழுதி வச்சிருக்கான். அத யாராலயும் மாத்த முடியாது. நடக்குறது நடக்கட்டும். ” என விரக்தியுடன் சொல்ல,

 

அவரின் கவலைக்கு காரணம் பார்த்திபன் தான் என்பதை உணர்ந்தவன், அவரின் படுக்கைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவரின் கரத்தை தன் கரத்திற்குள் புதைத்தான்.

 

“ப்பா நீங்க கவலப்பட்டு வருத்தப்படுற அளவுக்கு பார்த்திபன் மோசம் கிடையாதுப்பா. அவனுக்கு கொஞ்சம் விளையாட்டு தனம் அதிகமாவே இருக்கு தான். அதுக்காக அவன உதவாக்கரைன்னு சொல்லி ஒதுக்கிட்ட முடியாது. ” என்று நண்பனுக்கு ஆதரவாக பேச,

 

“சும்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு பேசாத. எப்ப பாத்தாலும் அவெ பெரும பேசிட்டு. இன்னைக்கி அவெ பண்ணிருக்குற காரியம் என்னென்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்ட.” என்றாள் நேகா கோபமாக.

 

அப்படி என்ன செய்துவிட்டான் என்பது போல் புருவங்களை சுருக்க, ராம் வாயைத் திறந்தான்.

 

“மும்பைல ஒரு டைமெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி கூட ஒரு டீல் பேசிருந்தோம். அந்த கான்ட்ராக்ட் இவனால கெட்டுடுச்சி.. ” என்றான்.

 

“அது ரொம்ப முக்கியமானது. அதப் போய் சின்ன பையெங்கணக்கா தொலைச்சிட்டு வந்திருக்கான். irresponsible idiot.. ” நேகா.

 

“கான்ட்ராக்ட் தான மாமா… ரெக்கவர் பண்ணிடலாம்.” என்றான் வின்சென்ட்.

 

“உனக்கு புரியலன்னு நினைக்கிறேன். அந்த கம்பெனிகிட்ட நாம வைரத்த வாங்க டீல் பேசல. வியாபாரம் பண்ண டீல் பேசிருக்கோம். அதுவும் கோடிக்கணக்குல.”

 

“அக்கா எனக்கு புரியல.. புரியிற மாதிரி சொல்லுங்க. ” என்க, ராம் விளக்கி கூறினான்.

 

அதாவது மும்பையில் இருக்கும் ஒரு பிரபல தொழிலதிபருடன் பிஸ்னஸ் பேசியுள்ளனர். ஒரு நகை கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்த VMS ன் தனித்துவமான நகை வடிவமைப்பு பிடித்திருந்த காரணத்தால் அந்தத் தொழிலதிபர் தானாக இறங்கி வந்து இவர்களுடன் டீல் பேசி இருக்கிறார், புதிதாக இதுவரை யாரும் கண்டிடாத நகைகளை டிசைன் செய்து தரும்படி கேட்டு. அதற்கு ஈடாக வைரங்களைக் குறைந்த விலையில் அவர் சப்ளை செய்வது என்று பல கோடிகளுக்கு வியாபாரம் பேசப்பட்டுள்ளது.

 

இதில் முக்கியமானதே டிசைன் தான். அவர் அழுத்தம் திருத்தமாக திரும்ப திரும்ப கூறியது, இதுவரை யாரும் கண்டிராத தனித்துவமான வடிவமைப்பாக அது இருக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் அதை வரலட்சுமியே தன் கைப்பட வரைந்து, அவரிடம் நேரில் காட்டி ஒப்புதல் பெற்று பின் வைரங்களுக்கான டீல் பேசப்பட்டுள்ளது. பாதி பணம் செட்டில் செய்யப்பட்டுள்ளது.

 

மொத்தம் நான்கு செட் டிசைன்கள். நெற்றிச்சுட்டி தொடங்கி, கால் கொழுசு வரை ஒரு பெண்ணை நகையால் அலங்கரிக்க தேவையான அத்தனையையும் கேட்டிருந்தார் அந்த மனிதர். தன் மகளின் திருமணத்திற்காக. இதுவரை மூன்று செட் டிசைன்களை ஓகே என்றவரிடம் கடைசி செட் டிசைன்களைக் காட்டி வரத்தான் பார்த்திபன் பணிக்கப்பட்டான்.

 

இன்னும் ஒரு மாதத்தில் அவர் மனம் குளிரும் படியான டிசைன்களை அவரின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதை அடுத்த சில நாட்களில் மகளின் உடலில் அணியும் ஆபரணமாக மாற்றி இருக்க வேண்டும். இல்லையேல் அவரின் கோபத்திற்கு ஆளாக மட்டுமல்ல அவர்களிடம் இருக்கும் அத்தனையையும் விற்று பைசல் செய்ய வேண்டி வரும்.

 

இதை ராம் சொல்ல ‘இப்படி ஒரு சிக்கல்ல குடும்பத்தையே மாட்டி விட்டுடியே பார்த்திபா.’ என மனத்திற்குள் தன் நண்பனை திட்டிக் கொண்டு இருந்தான் வின்சென்ட்..

 

“ஆல்ரெடி டயமென்ட் ப்ரேஸ்லெட்… அன்டிக் நெக்லஸ்ன்னு அவர்கிட்ட காட்டுன டிசைன நகையா செஞ்சாச்சி. ரெண்டு மாசத்துல கல்யாணம். அதுக்குள்ள நாம தொலச்ச கடைசி செட்ட கண்டு பிடிக்கணும்.” என்றாள் நேகா.

 

“ஏன் கண்டுபிடிக்கணும்? அதா டூப்ளிகேட் காப்பி வச்சிருப்பிங்கள்ள. அப்றம் என்ன? நகையா செஞ்சிடலாம்ல.”

 

“முட்டாளா நீ… உன்னோட ஃப்ரெண்டு கூட சேந்து சேந்து புத்தி மழுங்கி போச்சா? அந்த சஞ்சய் ராவ் திரும்ப திரும்ப சொன்னது ஒரே விசயம் தான். எம்பொண்ணு போடப்போற டிசைன் இதுவர யாரும் பாத்திருக்காத ஒன்னா இருக்கணும்னு. வேற யார் கிட்டயும் இந்த மாதிரி டிசைன் இருக்க கூடாதுன்னு பேட்டன் ரைட்ஸ் வரைக்கும் கேட்டிருக்காரு. இப்ப அது தொலஞ்சி போச்சி. மாட்ட கூடாதவங்க கைக்கு அது போச்சின்னா என்ன ஆகும்னு தெரியுமா. ” நேகா தான்.

 

“நல்லதாவே நினைப்போம்க்கா.. அது மாறன் கைக்குப் போயிருக்காது.” என்றபோது அவனுக்கும் உறுத்தியது, காலையில் அவன் வந்து சென்றது.

 

“அவெந்தா பார்த்திபன ஏமாத்தி அடிச்சிட்டு போயிருக்கணும். இல்லன்னா அவ்ளோ தைரியமா நம்ம வீட்டு வாசல மிதிச்சிருக்க மாட்டான். பார்த்திபன் கூட ஃப்ளைட்ல ஒரு பொண்ணு வந்ததா சொன்னான். அது யாரு என்னென்னு விசாரிக்கணும். எனக்கு அந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்கு.” என்று ராம் சொல்ல,

 

“கண்டிப்பா அவளாத்தா இருக்கணும். ஏன்னா இவனோட வீக்னஸ் மாறனுக்கு நல்லாவே தெரியும், பொண்ணுன்னா உடனே உருகி ஓடிருவான்னு. விவரம் இல்லாத இடியட்.” என முணுமுணுத்தாள்.

 

“தேவையில்லாம பார்த்திபன் திட்டாத நேகா. அவெங்கிட்ட என்ன விசயமா அனுப்புறோம்னு தெளிவா சொல்லாம விட்டது நம்ம தப்பு. சொல்லிருந்தேன்னா அவெ கவனமா இருந்திருப்பான். ” என வரலெட்சுமி அண்ணன் மகனுக்கு ஆதரவாக பேச, அவரை முறைத்தாள் நேகா.

 

“நீ அவனுக்காக இப்படி பேசி பேசித்தான் பொறுப்பே இல்லாம வளந்த மரம் மாதிரி நிக்கிறான். மரம் கூட பலதுக்கு உதவுது. ஆனா நான் பெத்தது எதுக்கு உதவாது.” என மாணிக்கம் நொந்து கொண்டார்.

 

“அண்ணா நீங்க எதுக்கு டென்ஷன் ஆகுறிங்க? நம்மால புதுசா கிரியேட்டிவ்வா டிசைன்ஸ்ஸ உருவாக்க முடியும்.”

 

“எப்படி பண்ணுவிங்க அத்த. அந்தாளு கிட்ட காட்டி அப்ரூ வாங்கியாச்சி. இப்ப வேற ஒன்ன நீட்டுனா பழசு என்னாச்சின்னு கேப்பான். அத்தோட அவரு பாத்து ஓகே சொன்ன டிசைன் நகையா மாறி வெளிய வந்தா… நம்ம புட்டு உடைஞ்சிடும். இப்ப நாம இருக்குற நிலைமை கொஞ்சம் ரிஸ்க்கு தான்..”

 

“பிரச்சனை அந்தாளு பண்ணும் போது பேசிக்கலாம். இப்ப நம்ம கிட்ட டயம் கம்மியா இருக்கு. இருக்குற நேரத்துக்குள்ள அவரு கேட்ட நகைய அவர் கைக்கு ஒப்படைக்கணும். இல்லன்னா என்ன வேண்ணாலும் பண்ணுவான்.”

 

“கரெட்டு ராம்… நாம மீதி டிசைன்கள ரெடி பண்ண பாப்போம். அப்றம் மெல்ல டிசைன் காணப் போனது பத்தி சொல்லி பேசி பாப்போம். அப்ப நடக்குறத அப்ப பாக்கலாம். இப்ப அண்ணெ ரெஸ்ட் எடுக்கட்டும். வாங்க போலாம்.” என பெட்ரூமில் நடந்த மீட்டிங்க கலைத்துவிட்டு சென்றார் வரலட்சுமி.

 

அனைவரும் சென்ற நிலையில் வின்சென்ட் மட்டும் செல்லாது, “எல்லாம் சரியாகிடும் ப்பா.. Don’t worry about that…” என ஆறுதலாக பேசினான்.

 

“என்னோட கவல சஞ்சய் கிடையாது வின்சா. என்னோட குடும்பம் தான் என்னோட கவலயே. ஏற்கனவே துரோகத்தால் ஒருக்க விழுந்து எழ நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்ல. அதுல இருந்து மீண்டு வரவே இத்தன வர்ஷம் ஆச்சி. இப்ப மறுபடியும் அதே மாதிரியான சூழ்நிலை. தாங்கி பிடிக்க ஆள் இல்ல..”

 

“நேகாக்கா இருக்காங்களே ப்பா… ”

 

“ம் இருக்கா… அப்பப்ப ராம் கூட மல்லுக்கி நின்னுட்டு. அவளுக்கு மனுஷங்க கிட்ட எப்படி நேக்கா பேசுறதுன்னு தெரியாது. அத்தோட சட்டுன்னு உணர்ச்சி வசப்பட்டுடுவா.

 

ஒரு தொழில் செய்யணும்னா அதுக்கு பொறும, யுக்தி, புத்திசாலிதனம்னு நிறைய வேணும். அதுல பாதி இருந்தாலும் சரி தான். நேகா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா… எனக்கு அப்றம் யாராது பொறுப்பு எடுத்து தான் ஆகணும். யாரு அதுன்னு தான் தெரியல. ” என்றார் கவலையாக.

 

மாணிக்கத்திற்கு அது தான் கவலையாக இருந்தது. ஏனெனில் அவரின் தொழில் வாரிசாக பார்த்திபன் இருக்க போவது இல்லை. ராம், அவன் முன்பே கூறிவிட்டான், ‘பொறுப்பை ஏற்க இயலாது. ஆனால் பொறுப்பில் இருப்பவருக்கு உதவுவேன்.’ என்று.

 

தன் தொழில் வாரிசாக நம்பிக்கையான ஒருவரை தேடும் நிலையில் இருக்கிறார் மாணிக்கம். அவருக்கு மாத்திரைகளை அள்ளி கொடுத்துவிட்டு வெளியே வந்தான் வின்சென்ட்.

 

“என்னடா ஃபேஷன்ட் ஓகே வா. நாளைக்கி இருப்பாரா மாட்டாரா?” என்றபடி பார்த்திபன் வர, கோபம் கோபமாக வந்தது வின்சென்ட்டிற்கு.

 

“ஏன்டா இப்படி பண்ண? உன்ன நம்பி ஒன்னு செய்ய சொன்னா இப்படித்தா அசால்ட்டா இருப்பியா. ” எனக் காட்டமாக கேட்டான்.

 

“வின்சா இது என்னோட தவறு இல்ல.. அவங்க தான் என்னை மதிக்காம எதுவும் சொல்லாம போன்னு சொன்னாங்க. நான் போனேன்… வந்திட்டேன்… அவ்ளோ தான். ” என்க, இப்பொழுது வின்செண்ட்டுக்கு பீபி ஏறியது.

 

“யாரு அந்த பொண்ணு?”

 

“எனக்கு தெரியாது.”

 

“தெரியாத பொண்ணு கூடவா அவ்ளோ நேரம் கதை பேசுன?”

 

“நீங்க எல்லாம் சந்தேகப்படுற மாதிரில்லாம் அந்த பொண்ணு கிடையாது. இருந்தாலும் அவளத் தேடி கண்டு பிடிக்கிறேன். அந்த பொண்ணு ஏமாத்தலன்னு உங்களுக்கு நிரூபிக்கவாவது அவள கண்டு பிடிக்கிறேன்.. பிடிக்கிறேன்.. ” எனச் சபதமிட்டு சென்றவனுக்கு தெரியாது ஒத்த ரோச நேக்காக ஆட்டைய போட்டது…

 

பாவம்..

 

சரி விடுங்க… நம்ம ஹீரோயின் மணி பாரதிய பத்தி பாத்திட்டு வருவோம்… அவள பத்திதான் நமக்கு ஒரு டீட்டெய்லும் தெரியாது… இனி அவள பாக்கலாம்…

 

தென்றல் வீசும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!