Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 7

அத்தியாயம் 7

மறுநாள் விடியலில் ஸ்மிருதியே முதலில் எழுந்தாள், அயர்ந்து உறங்கி கொண்டிருந்த அஜய்யை கண்டு கொள்ளாமல் தன் காலை கடனை முடிக்க, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள், அவள் சென்ற நேரம் குழாயிலிருந்து தண்ணீர் வாராமல் போகவும் எரிச்சலுடன் வெளியே வந்தவள், அறையிலிருந்து வெளியேறி, தண்ணீர் வராத விஷயத்தை பற்றி தன் தந்தையிடம் கூற சென்றாள்,…



Advertisement

ஸ்மிருதி அறையை விட்டு வெளியேறிய அதே நேரம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, டீயை கொடுத்தபடி திரிந்து கொண்டிருந்தாள் ஹேமா, ஸ்மிருதியின் அறை கதவு திறந்திருப்பதை கண்ட ஹேமா, அஜய்க்கும், ஸ்மிருதிக்கும் டீயை கொடுத்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில், அறையினுள் வந்தவள், அங்கு கண்டது தரையில் படுத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் உடன்பிறந்த தமையனை தான்,…

தன் தமையனை பார்த்த ஹேமாவின் கண்களிலோ கண்ணீர் அருவியாய் வழிந்தோட, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டாள்,… தனிமையில் வந்து குலுங்கி அழுதாள்,.. ‘ஏன் அண்ணா இப்படியெல்லாம் நடக்குது, சின்ன வயசுல இருந்தே நீ தரையில் படுத்து பழக்கப்படவே இல்ல, அதுனாலயோ என்னமோ நீ ஒரு நைட் தரையில படுத்தால கூட உடம்பு வலி வந்துடும், ஒருதடவை நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து பிக்னிக் போன இடத்தில, எல்லாரும் தரையில தான் படுத்தோம், ஆனா அது உனக்கு ஒத்துக்காக உடம்பு வலியால ஒரு வாரத்துக்கும் மேல அவதிப்பட்ட,  அன்னையிலருந்து நீ தரையில படுப்பதையே நிறுத்திக்கிட்ட, ஆனா இப்போ, பெட் இருந்தும் நீ அதுல தூங்காம தரையில படுத்து தூங்குற, உனக்கு இருக்கற அந்தஸ்துக்கு நீ இப்படி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே அண்ணா’ என்றவாறு குலுங்கி அழுதாள்…

Advertisement

Advertisement

இங்கு உறக்கத்திலிருந்து விடுபட்ட அஜய்,  படுக்கையிலிருந்து எழுந்த நேரம், கழுத்தில் சுளீரென்று வலி ஏற்பட்டது,… கழுத்தை இடவல புறமாக அசைத்துக் கொண்டு எழுந்து நிற்கையில் முதுகு பகுதியிலும் வலி ஏற்பட்டது,…

நிற்க முடியாமல் அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தவன் பின் கழுத்தை கரத்தினால் அழுத்தி பிடித்தவாறு அமர்ந்திருந்தான், அந்த நேரத்தில் சரியாக அங்கு வந்து சேர்ந்தாள் ஸ்மிருதி,…

Advertisement

கட்டிலில் அமர்ந்திருந்த அஜய்யை கண்டதும், வழக்கம் போல் அவளுக்கு கோபம் எழ,… “யாரை கேட்டு என்னோட பெட்ல உட்கார்ந்தீங்க” என்றாள் உயர்ந்த குரலில்,… அவளின் கேள்விக்கு அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போனதில் மேலும் கோபமுற்றவள், “இந்த செகண்டே என் ரூமை விட்டு வெளியே போ” என கோபமாக கத்தினாள்,….

அவனோ.. “நான் போயிடுறேன், ப்ளீஸ் என்னை கொஞ்ச நேரம் மட்டும் டிஸ்டர்ப் பண்ணாதே” என பின் கழுத்தை பிடித்தவாறே, தலைகுனியலுடன் அமர்ந்திருந்தபடியே சொல்ல,.. அவளோ… “முடியாது,… நீ இப்போவே என் ரூமை விட்டு போகனும்,  கெட் அவுட் ஆஃப் மை ரூம்” என சிறிது கூட கோபத்தை தளர்த்தாமல் சொன்னாள்…..

பிரட்சனை வேண்டாம் என வலியை பொறுத்துக்கொண்டு, எழுந்தவன், நடக்க இயலாமல் சரிந்து கீழேயே விழுந்து விட, இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை, அவள் விழிகள் இரண்டும் அகல விரிய, விபரீதம் உணர்ந்து.. “அம்மா” என்று கத்தி தன் தாயை அழைக்க, அந்த நேரம்.. “இப்போ எதுக்காக சத்தம் போட்டு ஊரை கூப்பிடுற” மயங்கிவிட்டான் என நினைத்திருந்தவனிடமிருந்து குரல் வந்ததும், ஒரு நொடி மேலும் திகைத்து போனாள் ஸ்மிருதி,….

“தயவு செய்து உன்னோட அண்ணனை கூட்டிட்டு வா, வேறு யாருக்கும் தெரிய வேண்டாம், ப்லீஸ்,” என அந்த நிலையிலும் அவனின் குரலின் கம்பீரம் மட்டும் குறையாமலேயே வந்தது….

நிலைமை புரிந்தவள், வேகமாக விஷ்ணுனை அழைப்பதற்காக, அறையிலிருந்து வெளியேறிய நேரம், சகுந்தலா ஸ்மிருதியை நோக்கி வந்து கொண்டிருந்தார்,… “என்னமா, ஏன் அப்படி சத்தமா கூப்பிட்ட” என  பதற்றத்துடன் வினவ,… நிகத்தை கடித்தபடி,… ‘யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொன்னாரே, அம்மா கிட்ட சொல்லலாமா வேண்டாமா’ என யோசித்தபடி நின்ற நேரம்,.. “உன்கிட்ட தான் ஸ்மிருதி கேட்கிறேன்,” என்ற தாயின் குரலில்,… “அ.. அது ஒன்னுமில்லமா, அண்ணா எங்கே” என்றாள்..

“வேலைக்கு போக நேரமாச்சுல, டிஃபன் சாப்பிட்டுட்டு இருக்கான், ஏன்மா” அவர் கேட்க, “அது.. அண்ணா வரும் போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்னு சொன்னாரு, அதான் நியாபக படுத்தலாம்னு” என்று சொன்ன தன் மகளின் தலையில் வலிக்காமல் கொட்டியவர், “இன்னும் நீ சின்ன பிள்ளையாவே இருக்க” என சிரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்,..

ஸ்மிருதியோ தாய் அகன்றதும் அதற்கு மேலும் நேரத்தை தாமதிக்காமல், வேகமாக தன் தமையன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றவள், உணவருந்தி கொண்டிருந்த விஷ்ணுவிடம் சென்று,… “அண்ணா… கொஞ்ச சீக்கிரம் என்கூட வா” என பதட்டத்துடன் சொல்ல,… “ஸ்மிருதி சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ஏன் இருக்க? சாப்பாட்டுல பாதிலேயே எழுவது எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா” என எரிச்சலுடன் சொன்னவன், எழாமல் சாப்பிட துவங்கினான்,…

“அண்ணா… சிட்சுவேஷன் தெரியாமல் நீ வேற” என்று தலையில் அடித்து கொண்டவள், விஷ்ணுவின் காதருகில் சென்று மெதுவாக  நடந்ததை பற்றி கூற, சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்ணுவோ கையை கூட கழுவாமல் வேகமாக அவள் அறையை நோக்கி தான் சென்றான்,..

அறையில் நுழைந்த விஷ்ணு அங்கு கண்டது தரையில் வீழ்ந்தபடி கிடந்த தன் ஆருயிர் நண்பனை தான்,… அஜய்யை அந்நிலமையில் பார்த்த விஷ்ணு, பதற்றத்துடன் அஜய்யினருகில் வந்தவன்,.. “அஜய்,.. அஜய், என்னாச்சு டா உனக்கு,” என்று வினவ,.. “எனக்கு ஒன்னுமில்ல விஷ்ணு, ஆனா வலி உயிர் போகுது டா,” என்றான் பற்களை கடித்துக் கொண்டு..

“என்னடா சொல்லுற, என்ன வலி, என்ன பண்ணுதுடா உனக்கு, கடவுளே,” என தன் நண்பனின் இந்நிலையை காணமுடியாமல் புலம்ப, அவனோ “புலம்புறதை நிறுத்துடா, முதல்ல என்னை தூக்கி விடு, அதோட ஏதாவது ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போடா, என்னால முடியல” என்றான் சோர்ந்து போன குரலில்..

அவனின் வலியை உணர்ந்தவன்,.. “சரி வாடா மெதுவா” என்று தன்னை தூக்கி விட்டவனிடம்,.. “நாம ஹாஸ்ப்பிடல் தான் போறோம்ன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் விஷ்ணு” என அஜய் சொல்ல.. “புரியுது டா” என்ற விஷ்ணு,.. இதையனைத்தயும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தங்கையை நோக்கியபடி… “அவன் சொன்னது புரிஞ்சதுல” என்று சொல்ல.. “நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் ஸ்மிருதி மெல்லிய குரலில்,…

அதன் பின் அஜய் மற்றும் விஷ்ணு இருவரும் வைத்தியசாலைக்கு சென்றனர், வைத்தியரிடம் அஜய்க்கு ஏற்பட்ட உடல்வலியை சொல்லி சிகிச்சை எடுத்துகொண்டு, வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தனர்,….

“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கடா” என்ற விஷ்ணு, அஜய்யை ஸ்மிருதியின் அறையிலுள்ள படுக்கையில் படுக்க சொல்லிவிட்டு, கோபமாக தன் தங்கையை தான் தேடி சென்றான்,… ஸ்மிருதி அப்பொழுது தான் தனது காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தாள்,…. பாதி சாப்பாட்டிலேயே ஸ்மிருதியின் கரத்தை பற்றியவாறு தரதரவென்று தனியாக இழுத்து வந்தவன்,… “உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா ஸ்மிருதி,  உன்னால தான் அஜய் அப்படி ஒரு நிலமையில கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான்” என்று எரிந்து விழ,.. அவளோ ஒன்றும் புரியாமல்… “என்ன சொல்றீங்கண்ணா, நான் என்ன பண்ணேன்” என்று விழித்தாள்,…

“சரி நான் கேட்கிறதுக்கு முதல்ல பதில் சொல்லு,” என்ற விஷ்ணு,.. “உனக்கு என்ன உன்னோட மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா, உன்னோட புருஷனை தரையில படுக்க வைச்சுட்டு, நீ பெட்ல படுத்திருக்க,” என சீறியவன்,.. “உனக்கு ஒன்னு தெரியுமா, என் நண்பன் அஜய் சாதாரண பணக்காரன் கிடையாது, கோடீக்கணக்கு சொத்துக்கு சொந்தமானவன், விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் அவனும் ஒருவன், தன் கிட்ட அத்தனை அந்தஸ்த்து இருக்குன்னு அவன் வெளிப்படையா யார்கிட்டயும் காமிச்சிக்க மாட்டான்,  எல்லார் கிட்டயும் ஃப்ரண்டலியாக தான் பழகுவான், இயல்பா தான் இருப்பான், பட் சின்ன வயசுல இருந்து தரையில் படுக்காம பெட்ல படுத்தே பழக்கபடுத்திக்கிட்டான், ஒரு நைட் கீழே படுத்தா கூட அவனுக்கு உடம்பு வலி வந்துடும், இதுக்கு முன்னாடி ஒரு தடவை கூட இதுபோல பிராப்ளமாகி ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான், இப்போ மறுபடியும் உன்னால அந்த வலியை அனுபசிக்கிட்டு இருக்கான்” என்று கோபமாக நிறுத்தினான் விஷ்ணு,…

விஷ்ணு பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த  ஸ்மிருதி, முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல்,.. “அவ்வளவு தானா அண்ணா, இப்போ நான் போய் சாப்பிடட்டுமா” என்று கேட்க, அவனுக்கோ எரியுற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் மேலும் எரிந்தது ஸ்மிருதியின் இந்த வார்த்தைகள்,..

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், ஆனா நீ ச்சே, உன்கிட்ட பேசுரதே வேஸ்ட்” கோபமாக மொழிந்தவன், வேகமாக அவ்விடத்தை விட்டு  போய்விட,… ஸ்மிருதி இதை எதையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் வேலையை பார்க்க துவங்கினாள்,…

இரண்டு மணி நேர உறக்கத்திற்கு பிறகு எழுந்தான் அஜய், இப்போது  வலி நன்றாகவே குறைந்திருபதை உணர்ந்தவனுக்கு ஆச்சரியம் மட்டுமே, இதற்கு முன்பு இதே பிரட்சசையால் அவதியுற்றபோது மிகப்பெரிய மருத்துவமனையில் பல முறை ஏறி இறங்கிய போது கூட, இன்று போல் ஒரே நாளில் குணமாகவே இல்ல, ஆனால் இன்றோ சின்ன கிளினிக்கிற்கு தான் சென்று எளிய வைத்தியரிடம் பிரட்சனையை சொன்னதும், ஒரு இன்ஜக்சன் மட்டும் தான் உடம்பில் செலுத்தினார், அவர் கொடுத்த மாத்திரைகளை கூட இன்னும் எடுத்து கொள்ளவில்லை, ஒரே ஒரு இன்ஜக்சனில் வலி மொத்தமும் குறைந்து விட்டதே என்ற ஆச்சரியத்துடனே குளித்து தயாராகினான்….

அஜய் தயாராகி முடித்திருந்த நேரம்,.. “அண்ணா” என்றவாறு அறையினுள் வந்தாள் ஹேமா, “என்ன அண்ணா, சாப்பிட வரவே இல்லைன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்து பார்த்தேன், நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நானும் போயிட்டேன், என்னாச்சு அண்ணா உடம்புக்கு ஒன்னுமில்லைல” அக்கறையாக கேட்ட  தங்கையிடம், “எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன் வர்ஷு, புது இடம் இல்லையா, நைட் தூக்கம் வரல, அதான் விடிந்தது கூட தெரியாம தூங்கிட்டேன்” என்றான் அஜய்,…

“சரிங்கண்ணா, வாங்க சாப்பிடலாம்” என ஹேமா அழைக்க, மறுக்காமல் அவளுடன் நடந்தான் அஜய்,.. உணவு மேஜையில் தன் தமையனுக்கு காலை உணவை எடுத்து வைக்க, அவனும் அதனை சாப்பிட துவங்கினான்,…

“அம்ரிஷ் எங்கே ஸ்கூல் போயிட்டானா” என சாப்பாட்டிற்கு இடையில் தன் மருமகனை பற்றி விசாரிக்க, “ஆமாங்கண்ணா, வழக்கமா அடம் பிடிக்காம ஸ்கூலுக்கு போறவன், இன்னைக்கு மாமா கூட தான் இருக்க போறேன்னு சொல்லி ஒரே நச்சரிப்பு, அவனை கிளப்புறதுக்குள்ளேயே போதும் போதும்னு ஆகிடுச்சு” என்றாள் ஹேமா,….

“அவன் என்ன பெரிய டாக்டர் படிப்பா படிச்சிக்கிட்டு இருக்கான், இன்னும் ஒன்னாம் வகுப்புக்கு கூட போகல, இன்னைக்கு ஒரு நாள் மாமா கூட இருக்கட்டும்னு ஸ்கூலுக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்லமா” என கேட்டபடி வந்த கனகவள்ளி பாட்டியும் அவர்களோடு அமர்ந்து கொண்டார்,…

“உங்களுக்கே தெரியும்ல பாட்டி, ஒரு நாள் லீவு போட்டா கூட  அடுத்தடுத்த நாட்களும் ஏதாவது பொய் சாக்கு சொல்லி லீவ் எடுத்துடுவான்” என்றாள் தன் மகனை பற்றி நன்கு அறிந்தவளாய்

“என்னமோமா, இந்த காலத்துல குழந்தை நடக்க பழகுனதுமே பள்ளில கொண்டு போய் சேர்த்திடுறீங்க, பாவம் அந்த பிஞ்சி குழந்தைங்க, விளையாடுற வயசுல அங்க போய் அடைஞ்சி கிடக்குதுங்க,” என்று புலம்பினார் பாட்டி..

“நல்லா சொல்லுங்க பாட்டி, நான் கூட சொன்னேன் நெக்ஸ்ட் இயர் அம்ரிஷை ஸ்கூல் சேர்க்கலாம்னு, பட் இவ தான் கேட்க மாட்டேனுட்டா” என்றான் அஜய்யும் பாட்டியுடன் சேர்ந்தவாறு,…

“போதும் அண்ணா, என்னை மாட்டி விட்டது,” என புன்னகைத்தவள், அஜய்க்கு இன்னும் இரண்டு இட்லியை எடுத்து தட்டில் வைத்தாள்,…. “நான் ஏற்கனவே மூன்று இட்லி சாப்பிட்டேன் வர்ஷு, இன்னும் இரண்டு வச்சா என்னால எப்படி சாப்பிட முடியும், அண்ணன் மேல பாசம் இருக்கிறது ஓகே தான், அதுக்காக இப்படியெல்லாம் பண்ணா அண்ணன் பாவம் இல்லயா” என் அஜய் முகத்தை பாவமாக வைத்தபடி சொல்ல,… “முன்ன இருந்ததுக்கு நீங்க ரொம்ப இழச்சிட்டீங்க அண்ணா, நீங்க இங்கிருக்கிற வரைக்கும் நான் கொடுக்கிறதை மறுக்காம சாப்பிட்டு தான் ஆகணும்” என அன்பு கட்டளை இட்டாள் ஹேமா…

“ஆமாம்பா, உன்னோட தங்கச்சி சொல்றது உண்மை தான், முன்ன இருந்ததுக்கு நீ ரொம்ப இழச்சிட்ட, ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் உன்னை பார்த்தேன், இந்த கொஞ்ச நாள் இடைவெளியில் எப்படி இந்தளவுக்கு துரும்பா இழச்சி போன, அந்த ஸ்மிருதி உனக்கு சமச்சி போடுறாளா இலலையா” என பாட்டி கேட்க, தன் பெயர் இடம்பெருகிறதே என்று ஸ்மிருதிக்கு எப்படி தெரிந்ததோ தெரியவில்லை அவ்விடம்

சரியாக வந்து சேர்ந்திருந்தாள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!