Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லிப் பூக்களும் – 17.1

மாடியில் நின்றவாறு வாசலைப் பார்த்த ரஞ்சிதா, பண்ணையார் பரமசிவம் அங்கு கோபமாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு,

‘இந்த ஆள் எதுக்கு இந்த நேரத்தில் இங்க வந்திருக்கான்?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே யோசனையாய் நிற்க,

“அங்க என்னத்த வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? யாரு வந்திருக்கா? இந்த நேரத்துல?” ரத்தினம் கடுப்படிக்க,

“பண்ணை பரமசிவம் வந்து நின்னுட்டு இருக்காரு! கொஞ்சம் கோபமா இருக்கிற மாதிரி வேற இருக்கு!”



Advertisement

“அந்த ஆள் எதுக்கு இங்க வந்துருக்கான்? கோபமா வேற இருக்கான்ற!

அது சரி இவ யாரை தான் வம்பிழுக்காம இருந்திருக்கா?

இந்த ஆள் கிட்டயும் ஏதாச்சும் தகராறு போல!

Advertisement

 நீ போய் அந்த ஆளை பேசி சமாளிச்சுட்டு வா! மஞ்சு வீட்டில் இல்லை. வந்தா சொல்றோம்னு சொல்லிட்டு சீக்கிரம் வா”.

Advertisement

ரஞ்சிதா முகத்தில் இருக்கும் வியர்வையை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு பதட்டத்தை மறைத்துக் கொண்டு முடிந்த வரை  முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு கீழே இறங்கி செல்ல,

தன் அண்டர்வேர் பாக்கெட்டில் இருந்து அந்த தடை செய்யப்பட்ட போதை தரும்  பாக்கை  அதன் பாக்கெட்டில் இருந்து பிரித்து வாயில் போட்டுக் கொண்டான் ரத்தினம்.

அவன் கிழித்துப் போட்ட அந்த பாக்கு இருந்த கவர் அங்கிருந்த பெரிய பூந்தொட்டிக்கு கீழே போய் விழுந்து,  அடுத்து அடித்த லேசான காற்றில் அந்த தொட்டியின் அடிப்பாகத்தில் போய் சொருகிக் கொண்டது!

Advertisement

கீழே சென்ற ரஞ்சிதா, பரமசிவத்தைப் பார்த்து,

“உள்ளே வாங்க. ஏன் வெளியே நிக்கிறீங்க?”

“உள்ள வந்த உட்கார்ந்து காபி சாப்பிட்டு குசலம் விசாரிக்க ஒண்ணும் நான் இப்ப வரல!”

எங்க உன் தம்பி? எங்க அவன் பொண்டாட்டி? வர சொல்லு இங்க!’

“ஏன் என்ன ஆச்சு? ரகு ஊரில் இல்ல. மஞ்சு வெளியே போயிருக்கா. என்ன விசயம் சொல்லுங்க”.

“ஏன் உன் தம்பி பொண்டாட்டி வீடு அடங்கி இருக்க மாட்டாளாமா? அவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”

“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒண்ணும் புரியல!”

“உன் தம்பி பொண்டாட்டி, என் தங்கச்சி பொண்ணை அந்த அனாதைப் பய வடிவேல் கூட ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வந்திருக்கா!”

“ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வந்திருக்காளா? ஏன்? எதுக்கு?”

“காதோல் பண்ணினாங்களாம் காதோல்! அதுக்கு இவ தூது! இப்ப என் குடும்ப மானத்தை வாங்க, அவன் கூட எங்கியோ அனுப்பி வச்சுட்டு வந்திருக்கா!”

“இங்க பாருங்க. உங்க பொண்ணைப் பத்தியும் அந்த வடிவேல் பத்தியும் என்ன வேணா பேசிட்டுப் போங்க.

அவங்க என்ன வேணா பண்ணி இருக்கட்டும். இதில எங்க வீட்டுப் பொண்ணை ஏன் இழுக்குறீங்க?

சம்மந்தமே இல்லாம இப்ப எங்க வீட்டுல வந்து கத்திட்டு இருக்கீங்க?

இந்த கத்துற  வேலையெல்லாம் இங்க வேணாம்!

 முதல்ல இடத்த காலி பண்ணுங்க.

நல்ல வேளை தெருவுல இப்ப பார்த்து யாரும் இல்ல. எல்லாம் கோவிலுக்குப் போய் இருக்காங்க.

 போய்..உங்க பொண்ணை தேடுற வேலைய பாருங்க”. ரஞ்சிதா காட்டமாக சொல்ல, பதிலுக்கு அவரும் அவளை முறைத்தபடியே தான் பேசினார்.

“அதுக்கு தான இவள தேடி வந்திருக்கேன்.

நீ போய் அவ கிட்ட கேட்டு சொல்லு. எந்த ஊருக்கு ஏத்தி விட்டிருக்கான்னு.

நான் போய் அந்த பயலை அடிச்சுப் போட்டுட்டு, அந்த குட்டியை இழுத்துட்டு வந்துடறேன்.

கூப்பிடு உன் தம்பி பொண்டாட்டியை!”

“நான் தான் அவ வீட்டுல இல்லைன்னு சொல்றேன்.

அதுவுமில்லாம தேவையில்லாம எங்க பொண்ணை இதில இழுக்காதீங்கன்னும் சொல்றேன்”.

“இங்க பாரு நான் ஒண்ணும் தேவையில்லாம அவள இதில் இழுக்கல.

அவ அவங்க ரெண்டு பேத்தையும் ட்ரெயின் ஏத்தி விடறப்போ என் கணக்குப் பிள்ளை அவர் கண்ணால பார்த்துருக்கார்.

எந்த ஊருக்குன்னு தான் அவருக்கு சொல்ல தெரியல.

அதுவும் இல்லாம..

இந்தா.. இங்க பாரு. இது அந்த மஞ்சு கையெழுத்தா தான் இருக்கணும்.

 என் தங்கச்சிப் பொண்ணுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது. பேச மட்டும் தான் தெரியும்.

இவ  தான் எழுதிக் கொடுத்துருக்கா.

அவ அத பார்த்து எழுதி எழுதிப் பார்த்திருக்கா. அத்தனை பேப்பரில்!  எல்லாம் கிடக்கு வீட்டுல.

இத பார்ததாவாச்சும் நம்புறியா?”

ரஞ்சிதா முகத்தில் அந்த காகிதத்தை விட்டெறிந்தார்!

ரஞ்சிதா, அதைப் பிடித்து எடுத்துப் படித்துப் பார்த்தாள்.

“மாமா , வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்” என்று அந்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது!

கையெழுத்து மஞ்சுவுடையது தான்! அது தெரிந்த பின் ரஞ்சிதா குரலை தழைத்துக் கொண்டாள். ‘இந்த ஆளை இங்க இருந்து கிளப்பினா போதும்!’ என்றே நினைத்து,

“ச.. சரிங்க.. நான் மஞ்சு வந்ததும் சொல்லியனுப்புறேன்!”

“முதல்ல அதை செய்” என்று சொல்லி விட்டு கோபமாக பரமசிவம் அந்த இடத்தை விட்டு கிளம்ப,

வாசல் கேட்டை  சாத்தி உள் பக்கம் பூட்டி விட்டு மீண்டும் மாடிக்கு வந்தாள் ரஞ்சிதா.

இப்போது மஞ்சுவின் உடலை இறக்கி கீழே படுக்க வைத்திருந்தான் ரத்தினம்.

அவள் தலைமுடி அந்த கான்க்ரீட் கம்பியில் மாட்டியிருந்ததை வெட்டி எடுத்து இருந்தான்.

“சீக்கிரம் வா. பாடியை  என்ன பண்றதுன்னு நான் யோசிச்சுட்டேன்”.

“என்னங்க பாடி..அது இதுன்றீங்க.

கம்பில அவ்வளவு பலமாவா விழுந்தா?

மண்டையில காயம் ஆகியிருக்கும்.

அதெல்லாம் பொழைச்சுப்பா.  எனக்கு நம்பிக்கை இருக்கு.

நீங்க காரை எடுங்க.

அவளா வீடியோ எடுக்கும் போது தவறி விழுந்துட்டான்னு சொல்லி அட்மிட் பண்ணிடுவோம். பிழைக்க வைக்க வாய்ப்பு இருக்குங்க”

‘ஏய்.  ஏய்.. லூசாடி நீ?

நல்லா பாரு. நாடித்துடிப்பு சுத்தமா நின்னுடுச்சு.  தெரியாமவா நான் சொல்றேன்”.

“ என்ன சொல்றீங்க நீங்க? நிஜமா செத்தே போயிட்டாளா? அய்யோ  அய்யோ மஞ்சு.. நானே என் கையால உன்னைக் கொன்னுட்டேனா?”

 ரஞ்சிதா தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்க,   சட்டென அவள் வாயைப் பொத்தினான் ரத்தினம்!

“ஏய்..ஏய்.. கத்தி ஊரைக் கூட்டிடாதே!

நம்ம நல்ல நேரம். இன்னிக்குன்னு பார்த்து தெரு ஜனங்க யாரும் ஊரில் இல்லை.

கிரிவலம்  போறேன்னு வெளியூர் போய்ட்டாங்க.

இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளிய காணோம்.

வீட்டு முன்னாடி ரூம் எடுக்க அஸ்திவாரம் போட குழி வெட்டி இருக்கு இல்ல.

அதில பாடியைப் போட்டு புதைச்சுடுவோம்.

 யாரும் கேட்டா..

யாரும் என்ன..?

அந்த நந்தினி தான் கேக்கும். இல்லன்னா அந்த அன்னம் கேக்கும்.

அப்படி யாரும் கேட்டா, இப்போதைக்கு வீடு கட்ற பிளானை ஒத்தி வச்சுருக்கோம்.

மீனு பாப்பா விளையாடுற இடம். பாதுகாப்புக்காக குழியை மூடிட்டோம்னு சொல்லிடலாம்.

நீ ஒரு கை பிடி. தூக்கு” என்றவன், ஒரு கணம் நிறுத்தி,

“அவ கழுத்துல காதுல இருக்கிற நகையை கழட்டு”.

“அய்யோ வேண்டாம்ங்க!”.

“ரொம்ப்ப நல்லவ தான் நீ!

 பவுன் மேல ஆசை இல்லாத மாதிரி பேசாத!  உனக்கு வேண்டாம்னா போ. எனக்கு வேணும்”. என்று சொல்லி மஞ்சு கழுத்தில் இருந்த தாலிக்கொடி, கையில் இருந்த வளையல்களைக் கழுற்றி ரஞ்சிதா கையில் தந்தான்.

“பத்திரமா வச்சுரு, நான் கேக்குறப்போ என்கிட்ட தா”. என்றவனால் மஞ்சு விரலில் இருந்த மோதிரத்தையும் காதில் இருந்த கம்மலையும் கழற்ற முடியவில்லை.

“சரி. போகட்டும். அப்புறமா தோண்டி கூட எடுத்துக்கலாம்” என்று சொல்லி ரஞ்சிதாவின் உதவியோடு மஞ்சுவின் உடலை அந்த குழியில்  தள்ளி  மண் வெட்டிக் கொண்டு மண்ணைப் போட்டு மூடினான்.

நன்றாக புதைத்து விட்டு  உள்ளே வந்தான்.

பின் எங்கோ வெளியில் சென்றவன்,  சிறிது நேரத்தில் எல்லாம் திரும்பி வந்தான்.

எங்கிருந்தோ ஒரு இற்றுப் போன நிலையில் இருந்த பழைய ட்ராக்டர் ஒன்றை  கொண்டு வந்து மஞ்சுவை புதைத்த இடத்தின் மேல் நிறுத்தி விட்டான்.

அந்த ட்ராக்டரை சுற்றி, ஜல்லிக் கற்களை மூட்டையாக கட்டி சுற்றிலும் வைத்து விட்டான்.

மாடிக்கு வந்து தண்ணீர் விட்டு முடிந்த வரை அந்த இடத்தை சுத்தம் செய்தான். மஞ்சள் லில்லிப் பூக்கள் இருந்த தொட்டிகள் சிலவற்றை நகர்த்தி விட்டு கழுவினான்.

அப்படி நகர்த்தும் போது அவன் கிழித்துப் போட்ட பாக்குப் பொட்டலம் நன்கு வாகாக தொட்டியின் அடியில் சொருகிக் கொண்டு விட்டது. அதன் அருகிலேயே இன்னொரு தொட்டியையும் நகர்த்தி வைத்து விட்டு அதை சுற்றிலும் தண்ணீர் அடித்து கழுவினான்.

ரஞ்சிதாவால் ஒன்றும் பேச முடியாமல்  அவன் செய்வதை எல்லாம் மவுனமாக  அழுதவாறு வேடிக்கை தான் பார்க்க மட்டுமே முடிந்தது.

எல்லாம் முடித்து விட்டு கீழே பாதி படிகள் இறங்கியவன்,

“அய்யோ.. இத எப்படி மறந்தேன்”. என்றவாறு வேகமாக மீண்டும் படியேறினான்.

“அவ.. சண்டைப் போடும் போது என்ன சொன்னா? எல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்குன்னு சொன்னா இல்ல? அப்ப அவ எங்கியாச்சும் கேமரா இல்ல போனை வச்சு வீடியோ எடுத்துருக்க போறா? அப்ப அதுல நீ அவள கொலைப் பண்ணினதும் ரெக்கார்ட் ஆகியிருக்குமே “ என்று சொல்ல, ரஞ்சிதாவுக்கு பயத்தில் மூச்சடைத்தது!

“என்ன.. என்ன சொல்றீங்க?” என்று கேட்டவாறு அவளும் பின்னே ஓடினாள்.

“மஞ்சுகிட்ட கேமிரா எல்லாம் இல்ல.  போன்ல தான் வீடியோ எடுப்பா.

இதோ.. இப்படி இந்த  ஜன்னல்ல எங்கியாச்சும் வச்சு தான்”  என்று சொல்லியபடி தேடிய ரஞ்சிதாவின் கண்களில் நடந்த அத்தனையையும் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த போன் பட்டு விட்டது!

“இதோ இருக்கு” என்று போனை எடுத்தவள், அதை திறந்து அதில் பதிவாகி இருக்கும் வீடியோவைப் பார்க்க எண்ணி கையில் எடுத்தாள்.

ரத்தினமோ வேகமாக வந்து அவள் கையில் இருந்து அதைப் பிடுங்கி மிக  வேகமாக அதை தரையில் தேங்காய் உடைப்பது போல உடைத்தான்.

“இப்ப வீடியோ பார்த்துட்டு இருக்க தான் நேரமா?

முதல்ல அதை அழிச்சுடணும்!’ என்று சொல்லி அவன் போனை உடைக்க, அது சில்லு சில்லாக உடைந்தது!

உடைந்த போனின் பாகங்களை பொறுக்கி எடுத்துக் கொண்டான் ரத்தினம்.

நடந்து முடிந்த எதற்கும் இப்போது சாட்சிகள் ஏதுமில்லை!

அந்த மவுன நிலவையும் மஞ்சள் லில்லிப் பூக்களையும் தவிர!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!