சுதா சரவணனை பார்த்து “உங்களுக்கு மொழியை கல்யாணம் பண்ண சம்மதம் தானே பா”, என்று கேட்க..
Advertisement
“மொழிக்கு ஓகே னா, எனக்கும் கல்யாணத்துக்கு ஓகே தான் மா, உங்க பேரப்பிள்ளைகளை சேர்த்து கூட நான் பாத்துக்கிறேன்” என்று அவன் கூற..
Advertisement
சரவணின் இந்த பேச்சில் சந்தோஷப்பட்டவர், “மொழி எனக்கு பொண்ணு மாதிரி, அதனால நான் அவளுக்கு பொண்ணு மாதிரி சீர் செய்வேன், அதை நீங்க ஏத்துக்கணும்” என்று சுதா கூற.
Advertisement
“உங்க இஷ்டம் மா, உங்க பொண்ணுக்கு நீங்க என்ன வேணா செய்ங்க, நான் தடுக்க மாட்டேன்” என்றான் சரவணன்..
Advertisement
சுதாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, தேவகியிடம் இதை பத்தி பேச.
“எல்லாருக்கும் சம்மதம் தான் சம்மந்தி, மொழி தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லனும்”,. என்றார்.
“அதெல்லாம் ஓகே சொல்லுவா”, என்றவர்.
“மொழி, மொழி” என்று சுதா மொழியை அழைக்க.
“என்ன அத்தை” என்று வேகமாக வந்தாள் மொழி…
“உனக்கு சரவணனை கல்யாணம் பண்ண சம்மதம் தானே டா” என்று சுதா கேட்க.
அவளோ அமைதியாக இருந்தாள். “சொல்லுடா எனக்கு சரவணன் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு, உன்ன நல்லா பாத்துப்பாரு டா, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு மொழி” என்று கூற..
மாடியில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்கு, பிடிக்கலண்ணு சொல்லி தொல டி, என்று அவன் கூறிக்கொண்டிருக்க.
“நான் மச்சான் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் அத்தை” என்றாள்.
அனைவரும் “தராளமா பேசுமா, பேசி ஒரு முடிவுக்கு வாங்க”, என்று சொல்ல.
சரவணன் “இங்க வேண்டாம், நான் மொழியை என் கடைக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல.
இருவரையும் பெரியவர்கள் தனியே பைக்கில் அனுப்பி வைத்தனர்.
ரிஷிக்கு மொழி சரவணனோடு சொல்வது பிடிக்கவேயில்லை…
அவன் ரூம் சென்று அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்துக்கொண்டிருந்தான்..
அவன் மனதே அவனை திட்டி தீர்த்தது.
இரண்டு மாதம் முன்பு ரிஷியின் வீட்டுக்கு வந்திருந்தனர், மொழியின் பெற்றோர்,…
மொழி வாழ்க்கை பற்றி பேச. அவள் இப்படியே எத்தனை மாதம் தான் ரிஷியின் வீட்டில் இருப்பாள், அவளின் வாழ்க்கை, எதிர் காலம் என்னவாகுமோ என்று பயந்து.
சுதாவிடம் “என் பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்புங்க” என்று கேட்க வர.
சுதா ஐய்ப்பனிடமும், தேவகியிடமும் மன்றாடி கேட்டார், “என் மகன் ரிஷிக்கு மொழியை திருமணம் முடித்து தாருங்கள்” என்று…
அவர்கள் முதலில் சம்மதிக்க வில்லை.
பின்பு குழந்தைகளின் எதிர் காலம், இத்தனை மாதம் மொழி இங்கே இருப்பது, நாளைக்கு வெளியே தெரிந்தால் மொழியின் வாழ்க்கை என்னவாகுமோ, இதற்கு ரிஷியவே அவள் திருமணம் முடித்தால், என்ன? என்று தோன்ற..
ஐயப்பனும், தேவகியும் ரிஷியை தங்கள் மகளுக்கு திருமணம் முடிக்க சம்மதம் என்று சொல்ல..
மொழியிடம் உனக்கு ரிஷியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்று கேட்டார் சுதா.
“உங்க பையன் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாரா? அவர்கிட்ட முதல்ல கேளுங்க” என்றால் மொழி..
சுதா மகனிடம் போய் மொழியை கல்யாணம் செய்து கொள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று சொல்ல.
“யாரு நானா? நான் மொழிக்கு மாப்பிள்ளையா, அவ தகுதி என்ன என் தகுதி என்ன? ரோடுல போற பிச்சைக்காரிய கூட நான் கல்யாணம் பண்ணினாலும் கல்யாணம் பண்ணுவேன் ஆனா இந்த மொழியை மட்டும் நான் கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன்” என்று அவன் பேச.
“டேய் யோசிச்சு சொல்லுடா மொழி நல்ல பொண்ணுடா, உன் குழந்தையை பாத்துக்குவா” என்று சுதா எவ்வளவோ ரிஷியிடம் எடுத்து சொல்ல.
அவனோ “நீங்க தலைகீழாக நின்னாலும் நான் மொழியை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட..
ரிஷி பேசியது அங்கு இருந்த மொழிக்கும், மொழியின் பெற்றோரின் காதில் விழுந்தது..
இதற்கு மேல் என் மகளை இங்கே விடமாட்டேன் என்ற ஐயப்பன் மகளை கூப்பிட்டு உடனே கிளம்ப.
சுதா தான் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தார்..
இன்னும் கொஞ்ச நாள் கழித்து மொழியை நானே உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்..
பிள்ளைகளை நானே வளர்த்துகிறேன் என்று..
மொழியிடம் தேவகி “என்ன சொல்ல போற இனிமேலும் இங்க இருக்க போறியா, உன்னால குகணும் கல்யாணம் முடிக்காமல் இருக்கான்” . என்று தேவகி அழ..
தாய் அழுததும் மனமிறங்கியவள் “சரி மாப்பிள்ளை பாருங்க” என்று சொல்லிவிட்டாள்.
ஐயப்பனுக்கும், தேவகிக்கும் அவ்வளவு சந்தோஷம் தெரிந்த சொந்த பந்தங்கள் அனைவரிடமும் மொழிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல.
அவர் அண்ணன் மகனே நானே மொழியை கட்டிக் கொள்கிறேன் என்று சொல்ல..
ஐயப்பனுக்கு மிகவும் சந்தோஷம் சரவணன் மிக நல்லவன் மொழியை பற்றி தெரிந்தவன். அவன் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று பேசி கல்யாணத்துக்கு முடிவு பண்ணி இருக்க.
சுதாவும், தேவகியும் மொழி சரவணன் கல்யாணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
தேவகி “அருள்ஜோதி இறந்து ஒரு வருசம் ஆகா போகுது,..
ஒரு வருஷம் முடிந்த உடனே ராமேஸ்வரம் போயி திதி கொடுத்துவிட்டு அப்புறமாக மொழிக்கும், சரவணனுக்கும் கல்யாணம் பண்ணலாம்” என்று பேச.
“சூப்பர் மச்சான் மெயின் பஜார்ல கடை இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு” என்றாள்.
“சொல்லு மொழி என்னை கல்யாணம் பண்ணிக்க, உனக்கு இஷ்டமா”? என்று சரவணன் கேட்க..
“சாரி மச்சான் என்னை மன்னிச்சிடுங்க நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவிலயே இல்லை”. என்றாள்..
“ஏன்டா என்ன ஆச்சு, அக்கா பசங்கள பாக்கணும்னு நினைக்கிறியா, பரவால்ல நாம கல்யாணம் முடிஞ்சாலும் குழந்தைகளை பார்த்துக்கலாம் கவலை படாதா,” என்றான் சரவணன்..
“உங்க நல்ல மனசு யாருக்கு வரும் மச்சான். உங்கள பத்தி எனக்கு தெரியாதா,, ஆனா எனக்கு கல்யாணத்து மேல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.என் அக்கா பிள்ளைகளை வளர்க்கணும் அதுதான் எனக்கு இப்ப முதல்ல” என்றவளிடம்..
“உண்மைய சொல்லு அது மட்டும் தான் காரணமா மொழி”? என்றான்.
இல்லையென்று அவள் தலையாட்ட.
“சரிடா உன் இஷ்டம் உன் இஷ்டப்படியே இரு, உன் விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது நான் மெதுவா ஐயப்பன் மாமா கிட்ட சொல்றேன்” என்றான்..
“சரி மச்சான் டைம் ஆகுது பிள்ளைங்க முளிச்சுப்பாங்க” என்று மொழி வேகமாக கிளம்ப..
“இருடா கூல்ட்ரிங்ஸ் வர சொல்லி இருக்கேன் குடிச்சிட்டு போ ” என்று சொல்ல..