சரியாக ரிஷி அந்த சூப்பர் மார்க்கெட் வாசலில் வண்டியை நிறுத்தி இருந்தான்..
சரவணன் ரிஷியை பார்த்து சிரிக்க. அவனை பார்த்து முறைத்திருந்தான் ரிஷி.
Advertisement
” குழந்தைகள் அழுவுறாங்க சீக்கிரம் வண்டியில் ஏறு” என்றான் ரிஷி மொழியை பார்த்து .
Advertisement
“ஐயோ” என்றவள், “மச்சான் நான் போயிட்டு வரேன்” என்று சரவணனிடம் சொல்லி விட்டு வேகமாக ரிஷியின் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மொழி.
Advertisement
சரவணனை முறைத்தபடியே பைக்கை வேகமாக ஓட்டினான் ரிஷி..
Advertisement
சரவணனுக்கு ரிஷியை பார்த்து சிரிப்பு வந்தது, மொழியை இவன் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டான் என்று தோன்றியது, ரிஷி கண்ணில் அவ்வளவு பொறாமையை கண்டான் சரவணன், எங்கே மொழி தன்னை விட்டு போயி விடுவாளோ என்ற தவிப்பது, அவன் முகத்தில் தெரிய, மொழி நல்லா இருந்தா போதும் என்றிருந்தான் மனதில்..
மொழி குழந்தைகள் அழுகுறாங்க என்று அவள் பதட்டமாக வர.
ரிஷியோ மொழியை மனதில் திட்டிய படியே பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான்..
எவ்வளவு தைரியம் இருந்தா, இவனோடு பேச வந்து இருப்பா நீ, என்றவன் பைக்கை வேகமாக ஓட்ட.
மொழிக்கு அவன் கோபம் தெரியவில்லை, குழந்தைகள் முளித்து விட்டார்கள் போல அதற்க்குத் தான் இவன் வேகமாக செல்கிறான் என்று மொழி அமைதியாக வர.
வீடு பக்கத்தில் வந்தவன் சடன் பிரேக் போட..
அவன் சடன் பிரேக் போட்டதும் மொழி தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழந்தாள்.
நல்ல வேலை அவன் பிரேக் போட்ட இடம், புல் தரையாக இருக்க மொழிக்கு ஒன்றும் அடிபட வில்லை இருந்தாலும் விழுந்ததும், பயந்தவள். மெதுவாக எழுந்து எங்கே இருக்கோம் என்று மொழி பார்க்க, வீட்டின் பக்கத்தில் தான் வந்திருந்தனர்…
மொழி ரிஷியின் முகத்தை கூட பார்க்க வில்லை.
அவன் கைகட்டி அவளை முறைத்த படியே நிற்க.
இவனுக்கு வேற வேலை இல்லை, என்னை தொல்லை பண்ணாம இவனுக்கு தூக்கம் வராது, என்றவள்,
பைக்கில் இருந்து விழுந்த வேகத்தில் கால் கொஞ்சம் வலிப்பது போல் தெரிய காலை உதரியவள், செல்லம்மா பாட்டி வீட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க.
“ஏய்” என்றான் மொழியை பார்த்து.
அவளோ அவனை கண்டு கொள்ளாமல் நடக்க.
“ஏய்” என்று அவளின் கையை பிடித்து இழுத்து இருந்தான் ரிஷி.
அவன் அவளை பிடித்திருந்த கையை எடுத்து விட, முயற்ச்சி பண்ணிக்கொண்டே, “பிள்ளைகள் என்னை தேடுவாங்க, அழுவாங்க நான் போறேன்” என்றவள்.
அவன் கை பிடியில் இருந்து விலக முயற்சி செய்து கொண்டே பேச.
“பிள்ளைகள் தூங்குறாங்க, நான் பொய் சொன்னேன்” என்றான் அவளை பார்த்து .
மொழிக்கு எதற்கு பொய் சொல்லி கூட்டிட்டு வந்தாரு இவரு, என்று தோன்ற, அதை கேட்டால் அதற்கும் திட்டுவான், இவனிடம் தள்ளி நிற்ப்பதே நல்லது என்றவள்.
“கையை விடுங்க” என்றாள்.
“விடமுடியாது டி” என்றான்…
“ரிஷி, விடுங்க கையை”?. என்றாள்..
“அது என்ன ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிடுற. நீதான் எனக்கு பேரு வச்சீயா? நீ முன்னாடி என்னை நந்துன்னு தானே கூப்பிடுவா, இப்ப என்னடி ரிஷி, ரிஷியின்னு கூப்பிடுற”?…. என்றான்.
நந்து என்று அவன் சொன்னதும் அவளுக்கு பழைய நினைவுகள் வர. பழைய நினைவுகளை மனதில் வைத்து பூட்டியவள்.
“என் நந்து செத்து போயி ரொம்ப வருசம் ஆச்சு. இப்போ என் முன்னாடி நிக்குறது, அருள் ஜோதி கணவர் ரிஷிநந்தன்” என்றாள்.
“அவனை கொன்னது நீதானே டி, நந்துவா இருந்த என்னை, ரிஷியா மாற்றியது நீ தானே”, என்றான்.
மொழி அமைதியாக இருக்க.
“எனக்கு பதில் சொல்லு” என்றான்,.
“என்ன பதில் சொல்லனும்”? என்றாள்.
“நீதான் பதில் சொல்லனும், என்னை மிருகமாக மாத்துனது நீ தானே? சொல்லுடி, பதில் சொல்லு” என்றான்,.
இவனிடம் பேசினால் வேதனை தான் மிஞ்சும் என்றவள், அவன் பிடித்திருந்த அவளின் கையை எடுத்து விட்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க போக…
அவளை இழுத்து தன் பிடியில் வைத்துக் கொண்டவன் “பதில் சொல்லிட்டு போடி” என்றான்.
“ரிஷி ப்ளீஸ் என்னை ரொம்ப ஹர்ட் பண்றீங்க,என்னால முடியல என்னை விட்டுடுங்க”.. என்றாள் மன்றாடும் குரலில்…
“நீதாண்டி என்னை கொல்லாமல் கொல்லுற.
என் கண்ணு முன்னாலே என் வீட்டிலிருந்து என்னை கொல்றியே இதுக்கு நான் என்ன செய்ய உன்னை” என்றான்.
“அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க செய்யறேன்” என்றாள்.
“எல்லாத்தையும் பண்ணிட்டு என்ன செய்யனுமுன்னு கேக்குறியா என்கிட்ட” என்றான்.
“ரிஷி ப்ளீஸ் என்னை விடுங்க குழந்தைகள் முழிச்சிருவாங்க, நான் போகனும்” என்றாள்.
அவனோ அவளை இன்னும்
நெருக்கமாக பிடித்து அணைத்த படியே அவளை தன் கைவளைவில் வைத்திருந்தான். அவனின் கையை மொழியின் இடுப்பை சுற்றி இருந்தது..
“ரிஷி விடுங்க” என்றாள்..
” என் பிள்ளைங்க மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிற.