ராஜஸ்தானிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்தும் இரண்டு நாள்கள் பொற்செல்வன் அலுவலகம் செல்லவில்லை. தொழில் விசயமாக கோவை சென்றவன், பிற்பகலில் தொழிற்சாலைக்கு மட்டும் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தான்.
அடுத்த நாள் அலுவலகம் வர, வரவேற்பறையில் தாமோதரன் அமர்ந்திருந்தார். ஒருமணி நேரமாக காத்திருந்த தாமோதரன் அப்பொழுதுதான் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். பொற்செல்வன் உள்ளே சென்றதை கடைசி நேரத்தில்தான் பார்த்தார்.
“செல்வா வந்துட்டார், நான் பார்க்கனும்னு சொல்லுங்க” என்றார் வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம்.
பொற்செல்வனுக்கு தகவல் வர, இருக்கும் வேலையில் இவர் வேறா? என்று நினைத்தபோதும், இவரால் திருமணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் செல்வியால் தாங்கிக்கொள்ள முடியாதென்று “வர சொல்லுங்க” என்றான்.
Advertisement
உள்ளே வந்த தாமோதரன், “பத்து நாள் கழிச்சு வர சொல்லிட்டு நீங்க ஆஃபீஸ் வரல” என்றார்.
“இப்போவும் நிறைய வேலையிருக்கு. வந்த விசயத்தை சொல்லுங்க”
“உக்கார சொல்லமாட்டிங்களா?” என்றார் மரியாதையாக.
Advertisement
முதல்நாள் சந்திக்க வந்தபோதிருந்த திமிர் இன்று தாமோதரனிடம் காணாமல் போயிருக்க, “உக்காருங்க” என்றான்.
Advertisement
அமர்ந்த தாமோதரனிற்கு எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. அன்று பொற்செல்வனை காண வரும்போது அவனின் செல்வாக்கு தெரியாது. இன்று பொற்செல்வனின் பின்புலம், தொழில், வருமானம், குடும்பம் என்று அனைத்தையும் விசாரித்து வந்திருக்கிறார்.
மகளுக்கு எப்படி வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ அத்தனை சிறப்பையும் பெற்றிருந்தான் பொற்செல்வன். தன்னைப் பற்றி அனைத்தும் தெரிந்தும் அன்று கோபப்பட்டவனிடம் பணம், சொத்தை காண்பித்து வளைக்க முடியாது.
மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும். தற்போது முடியவில்லை என்றாலும் பிற்காலத்தில் மகளுக்கான சொத்தை கொடுக்க வேண்டும், தன் எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றால் பொற்செல்வன் ஆதரவு தேவை. இதுகுறித்து பேசத்தான் வந்தார். ஆனால் எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தபடி அமர்ந்திருக்க, “எனக்கு நிறைய வேலையிருக்கு, எதுக்காக வந்துருக்கிங்கனு சொல்லிட்டு கிளம்புறிங்களா?” என்றான்.
Advertisement
“உங்க மாமனார் நான், ஒன் ஹார் எனக்காக ஸ்பெண்ட் பண்ணமாட்டிங்களா?”
“செல்வியோட அப்பானுதான் பார்க்க சம்மதிச்சேன், என்னோட மாமனார்ன்ற முறையில பார்க்கனும்னா எனக்கு உங்களை பார்க்கனும்னு எந்த அவசியமும் கிடையாது. நீங்க போலாம்”
“என் பொண்ணுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், என் பொண்டாட்டியாலதான் நாங்க பிரிஞ்சிருக்கோம். என் பொண்ணும் நானும் என்னைக்கானாலும் ஒன்னா சேர்ந்திடுவோம்”
“சேருங்க, அதை எதுக்கு என்கிட்ட சொல்லிட்டிருக்கிங்க?”
“நாங்க ஒன்னா சேர்ந்ததுக்கப்புறம் நீங்க என்னை அவமானப்படுத்தினது என் பொண்ணுக்கு தெரிய வந்தா என்னாகும் தெரியுமா?”
“ஓ… என்னை மிரட்டத்தான் வந்திங்களா? பயந்துட்டேன், கிளம்புங்க” என்றான் அலட்சியமாக.
“ம்ப்ச்… பொலைட்டா பேசத்தான் நினைக்கிறேன், ஆனா எனக்கு இப்படித்தான் பேச வருது, தப்பா நினைக்காதிங்க”
“நானும் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசனும்னு நினைக்கிறேன், ஆனா நீங்க பேசுற ஸ்லாங்குக்கு எழுந்து வெளில போடானு சொல்ல தோணுது. அப்படி சொன்னா நீங்க என்னை தப்பா நினைக்காம இருப்பிங்களா?”
“ஊஃப்” என தலைமீது கை வைத்தவர், “என் பொண்ணு கல்யாணத்துல நான் இருக்கனும், ப்ளீஸ் பொற்செல்வன்” என்றார் கெஞ்சலாக.
“நீங்க சொல்றதை கேட்கனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது, அப்படி நினைப்பிருந்தா மாத்திக்கோங்க. எல்லா நேரமும் பொறுமையா பேசிட்டிருக்கமாட்டேன்” என்றான் கோபத்தோடு.
“கோபப்படாதிங்க, உங்ககிட்ட சண்டை போட வரல, பேசத்தான் வந்தேன்”
“செல்விக்கிட்ட முடியாத காரியத்தை என் மூலமா சாதிக்கலாம்னு நினைச்சா அது நடக்காது. வேற எதாவது பேசனும்னா சீக்கிரம் பேசிட்டு கிளம்புங்க”
“எந்த குறையும் இல்லாம ராணி மாதிரிதான் வச்சிருந்தேன், வெறும் பத்து பவுன் நகை போட்டுட்டு வந்தவளுக்கு நூறு பவுன் நகை எடுத்துக் கொடுத்தேன், வீட்டு வேலை செய்ய பத்து பேருக்கு மேல இருக்காங்க, இன்னும் எப்படி பார்த்துக்கனும்? திமிரெடுத்து போய் வெளில வந்தா நான் என்ன பண்ண முடியும்?” என்றார் உள்ளடக்கிய கோபத்தோடு.
கட்டின பொண்டாட்டியை பார்த்துக்கிட்டேனு சொல்லாம வச்சிருந்தேனு சொல்றார் என முறைத்துப் பார்த்திருந்தவனுக்கு இதிலேயே தாமோதரனின் குணம் புரிய, “திமிரெடுத்து வந்தவங்களை இப்போ மட்டும் எதுக்கு தேடுறிங்க?” என்றான்.
“என் பொண்டாட்டிக்கு என் அருமை தெரியலைன்றதுக்காக என் பொண்ணை அப்படியே விட முடியுமா?”
“யார் அருமை யாருக்கு தெரியலனு நேர்ல பார்த்தவங்களுக்கும், அனுபவிச்சவங்களுக்கும்தான் தெரியும், அதனால இந்த நியாயமெல்லாம் உங்க பையன்கிட்ட கேட்டுக்கோங்க, உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண நான் தயாரா இல்ல”
“சரி… எனக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டாம். நான் உங்க மாமனார், என் பொண்ணுக்காகவும், என் மருமகனுக்காகவும் நான் கொடுக்கிறதை வாங்கிக்கிட்டா போதும்” என்றார் கோரிக்கையாக.
“நீங்க கொடுத்துதான் வாழனும்னு எனக்கு அவசிமில்ல. உங்க பொண்ணுக்கு கொடுக்குறதா இருந்தா அதை உங்க பொண்ணுகிட்ட போய் பேசுங்க. செல்விக்கு என்ன வேணும், வேணாம்னு முடிவு பண்ற உரிமையை நான் எடுத்துக்கமாட்டேன்” என்றான்.
பொற்செல்வனை வளைக்க முடியாத இயலாமையோடு அமர்ந்திருந்தார் தாமோதரன்.
“வேற என்ன பேசனுமோ பேசிடுங்க, இன்னொரு முறை உங்களை பார்க்க சம்மதிக்கமாட்டேன்”
“அப்படிலாம் நீங்க சொல்லக்கூடாது, என் பொண்ணை கட்டிக்கிறிங்க, நம்ம உறவு என் உயிருள்ள வரை நீடிக்கனும்”
“உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேசக்கூடாதுனு பார்க்குறேன், என்னை பேச வச்சிடாதிங்க, உங்களுக்குத்தான் அசிங்கம்” என்றவன், “ராகுல்” என அழைக்க, ராகுல் வந்தான்.
“பிஸ்னஸ் பத்தி பேசனும், கிளம்புறிங்களா?” என வெளியே செல்லும் திசை நோக்கி கையை காண்பித்தான்.
நம் எண்ணத்திற்கு பொற்செல்வன் ஒத்து வரமாட்டான் என்று புரிந்த போதும், மருமகனின் உறவாவது வேண்டுமே என்று எழுந்து வெளியேறும் நேரம், “நைட் கால் பண்றேன், அட்டன் பண்ணுங்க ப்ளீஸ்” என்று கிளம்பினார் தாமோதரன்.
சாம்பவிக்கு அழைத்து தாமோதரன் வந்து போனதை சொல்லி, “இப்போதைக்கு செல்விகிட்ட இதை சொல்ல வேண்டாம், இங்கே வந்த பின்னே நானே சொல்லிக்கிறேன். உங்க ஹஸ்பண்ட்க்கு அவர் இல்லாம பொண்ணு கல்யாணம் நடக்குறதை ஏத்துக்க முடியல ஆன்ட்டி, அங்க உங்களை பார்க்க வரவோ, இல்லைனா இளவரசன்கிட்ட பேசவோ வாய்ப்பிருக்கு.
செல்வி அவங்கப்பாவை பார்த்தா பேனிக் ஆகிடுவா. இதுக்காகத்தான் உங்களை ராஜஸ்தான் வர சொன்னேன், கேர்ஃபுலா ஹேண்டில் பண்ணுங்க, முடிஞ்சவரை சீக்கிரம் இங்க வந்திடுங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என் பொண்ணு நியாபகம் எப்பவுமே இருக்கும், உங்கம்மாவாலதான் என் பொண்ணை பிரிஞ்சிருக்கேன்”
“என் அம்மா இல்லாமத்தான் செல்வி வந்தாளா?”
“உன் அம்மாவை நானா வேண்டாம்னு சொன்னேன்?”
“என்னை டென்ஷன் பண்ணாதிங்கப்பா”
“நீங்க எல்லாரும் சேர்ந்துதான்டா என்னை டென்ஷன் பண்றிங்க, யாருக்காக இவ்வளோ சொத்து சேர்த்துறேன்? நான் இல்லாம என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறிங்க, நான் சொல்ற மாதிரி கேட்டுக்கிட்டா நல்லபடியா கல்யாணம் முடியும். இல்லைனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது”
“ஓ… சவால் விடுறிங்களா?”
“ஆமாம்டா, சவால்தான் விடறேன்”
“சவால் விடுங்க, கல்யாணத்தை கூட நிறுத்தப்பாருங்க, ஆனா அதுக்கப்புறம் செல்வி உயிரோட இருக்கமாட்டா”
“இளவரசா” என பதறினார் தாமோதரன்.
“உங்களை மிரட்டுறதுக்காக சொல்றேனு நினைச்சிடாதிங்கப்பா, உண்மையை சொல்றேன். பொற்செல்வன் விசயத்துல செல்வி பயங்கர சென்ஸிட்டிவ். உங்களால அவங்க கல்யாணம் நின்னுடுச்சுனா இந்த ஜென்மத்துல செல்விக்கு கல்யாணம் நடக்காது.
செல்வி மனசுல அம்மாக்கு நீங்க துரோகம் பண்ணிட்டிங்கன்ற கோபம் மட்டும்தான் இருக்குனு நினைக்கிறேன். செல்வியோட கல்யாணத்துல விளையாண்டு பெத்த பொண்ணுக்கும் துரோகம் பண்ண நினைக்காதிங்க” என்று இளவரசன் சொன்னதும் வேதனையோடு இணைப்பை துண்டித்தார் தாமோதரன்.
இரவு எட்டு மணிபோல் இளவரசன் வந்தான். அன்னையின் தவித்த முகம் கண்டு, “என்னம்மா? என்ன டென்ஷன்?” என்றான்.
தந்தை இன்று தன்னிடம் பேசியதை யோசித்து, “நானும் இன்னும் பத்து நாளைக்கு பிஸி, உங்களுக்கும் செல்விக்கும் விருப்பம்னா பொள்ளாச்சிக்கு போங்கம்மா, நான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி லீவ் போட்டுட்டு வந்துடறேன்” என்றான்.
“உன்னை தனியா விட்டுட்டு போக கஷ்டமா இருக்கு இளவரசு”
“ம்மா, நீங்க இங்க இருந்தாலும் பத்து நாளைக்கும் மேல நான் லேட் நைட்தான் வருவேன், சில நாள் வீட்டுக்கு வர முடியாத சிட்டிவேஷன் கூட வரும், என்னைப் பத்தி கவலைப்படாதிங்க.
அதோட, செல்வி கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நாம இரண்டு பேரும்தானே இருக்கப்போறோம், ஜாலியா போய்ட்டு வாங்க, அங்க போன பின்னாடியாவது உங்க பொண்ணு முகத்துல கல்யாண கலை வருதானு பார்க்கிறேன்” என்றான்.
“அதை இங்க இருந்துட்டு எப்படி பார்ப்ப? நீயும் வா” என்றாள். பொள்ளாச்சிக்கு போகப்போகிறோம் என்றதும் செல்வியின் முகம் ஜொலித்தது.
“அப்போ நீ அங்க போக தயாராகிட்ட” என கிண்டல் செய்ய, வெக்கம் வந்தபோதும் “எனக்காக ஒன்னும் இல்ல, அம்மாக்காகத்தான். இங்கனா அம்மா எல்லாத்தையும் தனியா பார்க்கனும். நீயும் டியூட்டிக்கு போய்டுவ, அங்கன்னா அமிர்தா ஆன்ட்டி, நவீனாக்காலாம் அம்மாக்கு ஹெல்ப்பா இருப்பாங்க” என்றாள்.
“ஈ…” என தானும் பழிப்பு காட்டி இவ்விசயத்தை பொற்செல்வனிடம் பகிர தனதறைக்கு சென்றாள் செல்வி.
தொழிற்சாலையில் முக்கியமான மீட்டிங்கில் இருந்த பொற்செல்வன் “பிஸியா இருக்கேன் செல்வி, அப்புறம் பேசுறேன்” என்றதும் செல்வி இணைப்பை துண்டித்தவன், மீட்டிங் முடிந்ததும் செல்விக்கு அழைக்க, “என்ன பேசனு மறந்து போச்சு” என்று இணைப்பை துண்டித்தாள்.
மீண்டும் அழைத்தவன், “எனக்கு பேச நிறைய இருக்கு” என்றான்.
“இப்போ நான் பிஸியா இருக்கேன்”
“சரி வேலை முடிஞ்சதுக்கப்புறம் கூப்பிடு”
இணைப்பை துண்டிக்காமல் செல்வி அமைதியாக இருக்க, “எழுபது பேரோட மீட்டிங்ல இருந்தேன், அதான் பேச முடியல” என்றான் சமாதானமாக.
“கட்டிக்கப்போறவன்கிட்ட ஆசைப்பட்ட நேரம் பேச முடியலைனா பின்ன கோபம் வராதா? கோபப்படு, திட்டு. உனக்கு மட்டும்தான் இந்த உரிமை கொடுக்க முடியும். எழுபது பேருக்கு மேல உக்கார்ந்திருக்கும்போது உன்கிட்ட ப்ரீயா பேசவும் முடியாது. அவங்க என்னை புரிஞ்சுக்கவும் மாட்டாங்க.
ஆனா நீ.. என் செல்வி. இங்க என் ஒர்க் டென்ஷன் என்னனு உனக்கு நல்லா தெரியும். என்னை புரிஞ்சிப்ப. இப்போ நான் தனியா இருக்கேன், என்ன வேண்டும்னாலும் பேசலாம்” என்றான்.
கோபம் முற்றிலும் போய்விட, “நானும் அம்மாவும் அங்க வரோம். கல்யாணம் வரைக்கும் அங்கதான்” என்றாள்.
அறிந்ததுதான் என்றாலும் “ஹேய்… சூப்பர். எப்போ கிளம்புறிங்க?” என்றான் உற்சாகமாக.
“தெரியல”
“இங்க வந்தா எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?”
“கண்டிப்பா பண்ணுவேன், ஆஃபீஸ்ல முன்னாடி பார்த்த வேலையை நான்தான் பார்ப்பேன்”