Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 20.1

அத்தியாயம் 20

‘வேண்டாம்’ என்று கத்தினாலும் செல்வனின் அணைப்பில் அடங்கி இருந்தாள் செல்வி. சாம்பவியின் குரல் கேட்டதும் விலக்கிவிட நினைத்தான். இந்த நேரத்தில் விலக்கிவிட்டால் வேதனைகொள்வாள் என்றே கதவை சாற்றினான்.

செல்வன் அணைப்பிலிருந்து விலகும் எண்ணமில்லாமல் நின்றிருந்தாள். ஜெயப்ரதாவோடான நிச்சயம் செல்வியை இந்தளவிற்கு பாதிக்கும் என்று நினைக்கவில்லை பொற்செல்வன்.



Advertisement

செல்வி எந்தளவிற்கு தன்னை நேசிக்கிறாளோ அதே அளவிற்கு வெறுக்கவும் செய்திருக்கிறாள். தன்னால் வேதனையும் அடைந்திருக்கிறாள். தன் மீது இத்தனை வருத்தம் இருந்தபோதும் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதே பெரிய விசயம்.

 நான் இவள் மீது வைத்திருக்கும் காதலை விட இவள் தன் மீது வைத்திருக்கும் காதல் நிச்சயம் மகத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, பெருமையோடு செல்வி முதுகை தட்டிக்கொடுத்து தேற்றிக்கொண்டிருந்தான்.

அரைமணி நேரத்திற்கு மேலாகிட, “செல்வி, ஆன்ட்டி என்னவோனு நினைப்பாங்க” என தன்னிலிருந்து விலக்க முயற்சிக்க, “எனக்கு தூக்கம் வருது” என முணகியபடி பொற்செல்வன் மீதே உறங்கிப்போனாள்.

Advertisement

“ஹேய் செல்வி” என மெத்தையில் படுக்க வைத்து முகத்தை பார்க்க, உண்மையில் உறங்கியிருந்தாள். உறங்குகிறாள் என்று சாதாரணமாக நினைக்க தோன்றவில்லை.

Advertisement

தூக்கம் வருது என்று சொன்ன நொடியே எப்படி இப்படி ஆழ்ந்த உறக்கத்திற்கு போக முடியும்? என்ற யோசனையோடு அவளின் கன்னத்தை பிடித்து ஆட்ட, சிறு அசைவுமின்றி உறங்கிக்கொண்டிருந்தாள்.

பொற்செல்வன் வெளியே வந்ததும் சாம்பவியும் இளவரசனும் வந்தனர்.

“செல்வி தூங்கிட்டிருக்கா” என்றதும் “கொஞ்சம் முன்னதானே கத்தினா?” என்றார் சாம்பவி.

Advertisement

“கத்திட்டு கொஞ்ச நேரத்துல தூங்கிட்டா. என் மனசுக்கு எதோ ரொம்ப தப்பா படுது” என்றான்.

சாம்பவி முகம் பதட்டத்திற்குள்ளாக, “ரொம்ப பயப்பட வேண்டாம். ஆனா அலட்சியமும் செய்யக்கூடாது. டாக்டர்கிட்ட போகனும்” என்றான்.

“ஸைக்யாட்ரிக்ஸ்கிட்டயா?” என இளவரசன் கேட்க, “ஆமாம்” என்றான் பொற்செல்வன்.

“அந்தளவுக்கு பயப்பட வேண்டாம், இன்னைக்கு நீங்க வரிங்கனதும் நேத்து தூங்காம இருந்திருப்பா, அதனால இப்போ தூங்கியிருப்பா” என்றான் இளவரசன்.

“அப்படியிருந்தா பிரச்சனையில்ல, ஆனா செக் பண்ணனும்” என்றான் மீண்டும்.

பொற்செல்வன் சொன்னபோதும் அந்தளவிற்கு ஏதும் இருக்காதென்றுதான் இளவரசனிற்கு தோன்றியது. அதனால் அவனுக்கு பதட்டமில்லை. செல்வன் யோசிக்காமல் ஏதும் சொல்லமாட்டான் என்று சாம்பவிக்குத்தான் பயம் வந்தது.

“செக்கியுரிட்டியையும், கடை ஓனரையும் பார்க்கனும் ஆன்ட்டி, செல்வி தூங்கட்டும், நான் பார்த்துட்டு வரேன்” என்றான்.

இளவரசன் கார் சாவியை கொடுக்க, “இல்ல வேண்டாம்” என்று வெளியேறியவன், செல்வி எழுந்தால் தன்னை கேட்பாள் என்று வெளியே செல்லவில்லை. மாடிக்கு சென்றிருந்தான்.

செக்கியுரிட்டிக்கு அழைத்து பேசி முடித்து, கடை ஓனரிடமும் பேசினான். “ராஜஸ்தான்லதான் இருக்கேன், ஆனா வர டைம் இல்ல, இந்த வாரத்துக்குள்ள வேற ஆள் அனுப்பி வைக்கிறேன், அவங்ககிட்ட பணத்தை கொடுத்துடுங்க” என்றான்.

அடுத்து குடும்ப மருத்துவருக்கு அழைத்தான். அழைப்பை ஏற்காத மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து அழைத்தார். செல்வியின் இன்றைய நடத்தையை மட்டும் சொன்னான்.

“ஒரு விசயத்தை வச்சு நார்மலா அப்நார்மலானு சொல்ல முடியாது. நேர்ல பார்த்தாதான் சொல்ல முடியும்” என்றார் மருத்துவர்.

“இன்னைக்கு அவளோட ஆட்டிட்டியூட் பார்த்ததால மட்டும் வந்த டௌட் இல்லைங்க டாக்டர்” என்று செல்வி தந்தையின் பின்புலம் சொல்லி, தற்போது பிரிந்திருப்பதையும் சொல்லி, “நான் என் அம்மா போல இருக்கமாட்டேனு என்கிட்ட சொல்றா. அதை சொல்லும்போது அவளோட பாவனையும், இப்போ தூங்கினதையும் நினைச்சாதான் பயமா இருக்கு” என்றான்.

“நேர்ல அழைச்சிட்டு வாங்க, செக் பண்ணிட்டு தேவைப்பட்டா ஸைக்யாட்ரிஸ்ட்கிட்ட கன்ஸல்ட் பண்ணலாம்” என்றார்.

செல்வியிடமிருந்து அழைப்பு வரவே, “ஓகே டாக்டர், நேர்ல அழைச்சிட்டு வரேன்” என்று இணைப்பை துண்டித்து, கீழே வந்தான்.

“பேசிட்டிருக்கும்போதே எப்படி தூக்கம் வரும்? நீ தூங்கிட்டு அவர் போய்ட்டார்னு கோபப்படுற?” என சாம்பவி அதட்ட, செல்வியின் முகம் மலர்ந்தது.

கண்ணீரை துடைத்தவள், “நீங்க போய்ட்டிங்கனு அம்மா சொன்னாங்க” என்றாள்.

“வாங்க தம்பி, போன வேலை முடிஞ்சதுங்களா?” என்று தண்ணீர் கொடுத்தார்.

செல்வியின் கண்ணீரைப் பார்த்ததும் கோபம் வர, ஒரு சொம்பு நீரையும் குடித்து நிதானத்திற்கு வந்தான்.

“என்ன இப்படி வேர்த்திருக்கு? சர்ட்டே நனைஞ்சிருக்கு? கார்ல போகலையா? நடந்து போனிங்களா?” என்றாள் செல்வி.

“நீ எதுக்கு அழுத?”

“என்கிட்ட சொல்லாம போய்ட்டிங்கனு கோபமாகிடுச்சு”

“அதுக்கு அழுவியா? சின்னபொண்ணா நீ?” என்றான் கோபமாக.

செல்வனின் வருகையால் செல்வியின் முகம் மட்டுமல்ல, அகமும் மலர்ந்திருக்கவே, “பின்ன கிழவியா?” என்றாள் சலுகையாக.

“போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா”

‘நீங்க பார்க்கத்தான ஸேரி கட்டிட்டிருக்கேன், அப்போலயிருந்து இதையே சொல்றிங்க’ என நினைத்தபடி உள்ளே சென்றாள்.

“இளவரசன் எங்க ஆன்ட்டி?”

“அர்ஜன்ட் கால் வரவும் கிளம்பிட்டான் தம்பி, உங்ககிட்ட சொல்ல சொன்னான்”

“வேலையிருக்கா ஆன்ட்டி?”

“சமையல்தான் செய்திட்டிருந்தேன், எதாவது பேசனுங்களா?”

“ஆமாம் ஆன்ட்டி, கல்யாணம் வரைக்கும் நீங்க பொள்ளாச்சியில தங்கினா பரவால்லைனு தோணுது. நானும் செல்வியை ரொம்ப மிஸ் பண்ணுறேன், மேரேஜ் பர்சேஸ் பண்ண நீங்க பக்கத்துல இருந்தா அம்மாவும் சந்தோசப்படுவாங்க” என்றான்.

“சரிங்க தம்பி, நான் இளவரசன்கிட்ட பேசுறேன்” என்றார்.

செல்வி உடைமாற்றி கதவை திறக்கவும், “செல்விகிட்ட பேசிட்டிருங்க, கால்மணி நேரத்துல சமையல் ஆகிடும்” என்று கிச்சன் சென்றார்.

பொற்செல்வன் உள்ளே வர, “நீங்க கிளம்பிட்டிங்கனு டென்ஷன் ஆகிடுச்சு” என்றாள் மீண்டும்.

“திரும்ப வருவேனு ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்”

“வெளில முறைச்சிங்க, திட்டுனிங்க, இப்போ கோபமில்லாம பேசுறிங்க?”

“நீ அழுதா எனக்கு கோபம் வருது, இனி அழக்கூடாது” என்றான் தன்மையாக.

“நான் அழற மாதிரி நீங்க நடந்துக்காதிங்க”

செல்வியின் தலைமீது கை வைத்து லேசாய் ஆட்டிவிட்டு “சரி” என்றான்.

“ஏசி போட்டு விடவா? ரொம்ப வேர்த்திருக்கு” என்று ஏசியை ஆன் செய்து அறையை சாற்றினாள்.

“என்கிட்ட வா” என்று செல்வியை தனதருகே அமர்த்திகொண்டு அவளின் கையை தன்னுள் பிணைத்தவன், “அன்னைக்கு ப்ரப்போஸ் பண்ணுவேனும் நினைக்கல, கிஸ் பண்ணுவேனும் நினைக்கல. சடர்னா தோணுச்சு, பண்ணிட்டேன். உன்கிட்ட எனக்கில்லாத உரிமையானு நினைச்சிட்டேன் போல.

உனக்கு கோபம் வந்த பின்னாடிதான் என்ன செய்துருக்கேனு புரிஞ்சது. கோபம் மட்டும்னா நான் பண்ணினதுக்கு உன் கோபம் சரிதானு நினைச்சிருப்பேன், தாங்கியும் இருப்பேன்.

அடுத்த நாள்லயிருந்து வேலைக்கு வரல. நீ அவாய்ட் பண்றதை என்னால தாங்க முடியல. உன்னை வற்புறுத்தி திரும்ப கஷ்டப்பட வைக்கவும் மனசில்ல. அதேநேரம் உன்னை மறக்கவும் முடியல.

கல்யாணம் செய்துட்டா எனக்கு உன்மேல அப்படிப்பட்ட எண்ணம் குறையும்னு நினைச்சிதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அது உன்னை இந்தளவுக்கு பாதிக்கும்னு நினைக்கல செல்வி. ரியலி வெரி சாரிடீ” என்றான்

செல்விக்கு அழுகை வர, “என் விருப்பத்தைப் பத்தி மட்டுமே யோசிச்சிருக்கேனு நினைக்காத செல்வி, உனக்கு என்னை பிடிக்கல, இந்த விசயத்துல வற்புறுத்துறது ரொம்ப தப்பு, மனசுக்கு பிடிச்ச பொண்ணை கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைச்சுதான் ஜெயப்ரதா” எனும்போதே

“இனி இதைப்பத்தி பேசாதிங்க, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றாள்.

“என்மேல கோபம் இருந்தா எதாவது செய்து அதை போக்கிடு செல்வி, இப்படி ஸ்ட்ரெஸ் ஆகிக்காத”

“எனக்கு டென்ஷன் இல்ல, நீங்கதான் எதோ நினைப்புல இருக்கிங்க”

“எதோ நினைப்புலயா?”

“ஆமாம், அழகா இருக்கேனு சொல்றிங்க, ஆனா ரசிக்க முடியலனும் சொல்றிங்க, கார்ல வச்சு எதோ ட்ரை பண்ணுனிங்க, ஆனா நீங்களே நிறுத்திட்டிங்க. ஸோ… நீங்கதான் எதுலயிருந்தோ வெளில வரமுடியாம என்னை அவாய்ட் பண்றிங்க”

“அவாய்ட் பண்றேனா? உனக்கு அப்படி தெரியுதா?”

ஆமாம் என்பதாய் இவள் தலையசைக்க, “எனக்கு நீ எப்படி சம்மதம் சொன்னேனு நியாபகம் இருக்கா?” என்றான்.

இவள் தவிப்பாக பார்க்க, “என்னால வேற சாய்ஸை யோசிக்கக்கூட முடியல, உங்களையே ஃபேஸ் பண்ணிக்கிறேன்னு சொன்ன” என்றான்.

“நான் அப்படி சொன்னது உங்களுக்கு பிடிக்கலனா, இப்போ ப்ராப்பரா ப்ரப்போஸ் பண்றேன்”

“நான் கஷ்டபடுவேன்றதுக்காக எத்தனை யோசிக்கிற. என்மேலான உன் அக்கறை சொல்லாததா ஒரு ப்ரப்போஸல் சொல்லிடும்? ப்ரப்போஸ் ப்ராப்பரா பண்றது இல்ல, உணர்வுப்பூர்வமா சொல்றது.

ப்ரப்போஸ் பண்ணினாத்தான் உன்னை எனக்கு பிடிக்கும்னு இல்ல. என்மேல கோபப்பட்டாலும் இந்த செந்தமிழ்செல்வியை எனக்கு பிடிக்கும்” என்றான்.

செல்வி அமைதியாக இருக்க, அவளிடம் இன்னும் நெருங்கி அமர்ந்து இடையை வளைத்தவன், “நம்ம ஃப்ரண்ட்ஸிப்பை மறக்க முடியாம என்னை ஏத்துக்கிட்ட, உன்னோட லைஃப் பார்ட்னரா வர அளவுக்கு என்னை உனக்கு பிடிக்கலையோனு கவலையா இருக்குடீ” என்றான்.

“நான் கோபப்பட்டாலும் எப்படி உங்களுக்கு என்னை பிடிக்குமோ… அதோபோல நீங்க என்னை கஷ்டப்படுத்தினாலும் உங்களை எனக்கு பிடிக்கும். ஏன்னா… உங்களால மட்டும்தான் என்னை சந்தோசப்படுத்தவும் முடியும். எனக்கே ராஜஸ்தான் வந்த பின்னாடிதான் தெரிஞ்சது.

உங்களைத் தவிர வேற யாரையும் லைஃப் பார்ட்னரா யோசிக்க கூட முடியலை. இதுக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்சா உங்க கவலை தேவையில்லாததுனு புரியும்” என்றாள்.

இவளை கஷ்டப்படுத்துவேனு எப்படி நினைக்கிறா? என்று கோபம் வந்தபோதும், செல்வி மன அழுத்தத்தோடு இருக்கிறாள். இதற்கு மேல் இவ்விசயத்தை பற்றி வாதம் செய்ய வேண்டாம் என்று “அப்படியா?” என்று தனது சர்ட்டின் முதல் இரண்டு பட்டனை அவிழ்த்துவிட்டு செல்வியை அணைத்தபடி மெத்தையில் சரிந்தான்.

அமர்ந்தபடியும் நின்றபடியும் அணைத்த போதெல்லாம் வராத வெக்கம், மொத்தமாக செல்வன் மேல் படர்ந்திருக்கும்போது வர, சிவந்துபோனவள் இருவருக்கும் இடையே தனது கரங்களை நுழைக்க முயற்சித்தாள்.

சிரித்தபடி நெற்றி, கன்னம் என முத்தமிட்டு இதழை நெருங்க, செல்வியின் படபடப்பு அதிகமானது. இதழை விடுத்து அவளின் கண்களில் முத்தமிட்டவன், “இப்படி சிவந்தா ஆன்ட்டி என்னை தப்பா நினைப்பாங்க செல்வி” என்று அணைப்பை கூட்டினான்.

செல்வனின் ஒரு கை செல்வி இடையை அழுத்தமாய் பற்றியிருக்க, மற்றொரு கை இருவருக்கும் இடையில் உள்ள அவளின் கரங்களை விலக்கி விட, மொத்தமாய் செல்வன் மேல் படர்ந்திருந்தவள் திண்டாடிப்போனாள்.

“நான்… நான்… ரொம்ப வெய்ட்டா இருப்பேன், உக்கார்ந்து பேசலாம்” என்றாள்.

“ம்… சுகமான சுமைனா என்னனு இன்னைக்குத்தான் புரியுது” என கண்ணிமைத்து, இதற்கு மேல் செல்வியை சோதித்தால் நாம் சோதனைக்குள்ளாவோம் என்று எழுந்தமர்ந்தவன், “போய் முகம் கழுவிட்டு வா” என்றான்.

செல்வி குளியலறைக்குள் செல்ல, ஏசியை அ ணைத்து கதவை திறந்து விட்டான். செல்வி வர, அவளின் முகத்தை துடைத்துவிட்டபடி “என்மேல எதாவது கோபம்னா எனக்குத்தான் போன் பண்ணனும், அதை விட்டுட்டு ஆன்ட்டிக்கிட்ட சண்டை போடுறது, அழறதுனு பண்ணக்கூடாது” என்றான் தன்மையாக.

சரி என்பதாக தலையசைத்தவள், “பட்டன் போட்டுக்காமலே கதவை திறந்திருக்கிங்க” என கடிய, “போட்டுவிடு” என்று நெருங்கி நின்றான்.

செல்வனின் நெஞ்சிலுள்ள ரோமங்களைப் பார்த்தவளுக்கு எதோ போல் ஆகிட, “நானா கழட்டினேன்? நீங்களே போட்டுக்கோங்க” என்றாள் சன்னக்குரலில்.

“அப்போ நான் கழட்டுறது எதையும் நீ போட்டுக்கமாட்ட? அப்படித்தான?” என்க, மொத்தமாய் சிவந்துபோனாள்.

சிரித்தபடி தனது உடையை சரி செய்து, “வா” என்று வெளியே வந்தான். மதிய உணவு உண்ட பின்னே “அப்பா காத்திட்டிருப்பார், கிளம்பறேன் ஆன்ட்டி, இளவரசன்கிட்ட சொல்லிடுங்க” என்றவன், “ரெஸ்ட் எடு, நாளைக்கு கால் பண்றேன்” என செல்வியிடம் சொல்லி கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!