“ஆத்விக் சிரி, சாத்வீக் குட்டி சிரி” என்று இரண்டு பிள்ளைகளையும் சிரிக்க சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான் குகன்.
Advertisement
“மொழி நீயும் சிரி பிள்ளைகளோடு” என்று மூன்று பேரையும் சேர்த்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தான் குகன்.
பிங்க் வண்ண பட்டுப்புடவையை கட்டி.
தன் இரு பிள்ளைகளுக்கும் பட்டு வேஷ்டி சட்டை அணிவித்து தன் மடியில் அமர்த்தி வைத்துக் கொண்டிருந்தாள் மொழி.
பிள்ளைகள் குகன் போட்டோ எடுத்ததும் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு மொழியின் மடியில் அமர்ந்திருந்தனர்..
ரிஷியும் அங்கே தான் இருந்தான் தலையை தொங்க போட்டுக் கொண்டிருந்தான் நேற்று நடந்தது அவனுக்குமே பிடிக்கவில்லை..
அவளை முத்தமிடும் நோக்கத்தில் அவன் அதை செய்யவில்லை அவள் நீ யார், யாரென்று கேட்டதும் கோபம் வந்துவிட்டது அவனும் கோபத்தில் அப்படி செய்து விட்டான்..
பிள்ளைகள் சிரிக்கவும் மொழியும் சிரித்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
காலையில் எழுந்து குளித்து 6 மணிக்கு எல்லாம் குலதெய்வம் கோயில் வந்து விட்டனர்..
முதலில் ஏழு மணி பூஜையில் கலந்து கொண்டு. பின்பு ஒன்பது மணிக்கு மேல் மொட்டை அடித்து, காது குத்தி 10 மணி பூஜையில் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தனர்.
சுதா மகனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்..
அவருக்கு தெரிந்து விட்டது மகன் மொழியிடம் பெரிய வம்பு செய்திருக்கிறான் என்று..
நேற்று இரவு மொழி வரும் போது அனைவரும் செல்லம்மா பாட்டி வீட்டில் தான் இருந்தனர்.
குழந்தைகள் அழுததால் தேவகியும் சுதாவும் ஆளுக்கு ஒரு பிள்ளையை வைத்துக் சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தனர்..
மொழி வேகமாக வந்தவள் தேவகியிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு மாடி ஏறினாள்.
சுதா மொழியின் பின்னாடியே இன்னொரு குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே செல்ல.
சுதாவிடம் தன் முகத்தை காட்டாமல் குனிந்து படி இருந்தால் மொழி..
ஒரு குழந்தையை பசியாற்றிக் கொண்டிருந்தவளின் மடியில் இன்னொரு குழந்தையை வைத்துவிட்டு சுதா மொழியின் பக்கத்தில் அமர..
மொழியின் முகமே சரியில்லை அழுதது போல் இருந்தது.
அவள் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைக்கும் வரை அமைதியாக காத்திருந்தவர்.
“என்ன ஆச்சுடா” என்று சுதா மொழியிடம் கேட்க. அவரை கட்டிக்கொண்டு அழுதாள் மொழி.
“ஏன் அத்தை உங்க பையன் இப்படி என்னை டார்ச்சர் பண்ணுகிறார்? அவருக்கு நான் என்ன பண்ணேன், அவர் பிள்ளைகளை நல்லா தானே பாத்துக்குறேன். பின்பு ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துகிறார்” என்று அழுதவளை.
“என்ன? என்னாச்சு! என்னடா பண்ணினான் அவன் உன்னை சொல்லு நான் கேட்கிறேன் அவனை” என்று அவர் கேட்க.
“வேண்டாம் அத்தை ஒன்னும் கேட்க வேண்டாம் எல்லாம் என் தலை எழுத்து” என்றவள் மீண்டும் கேவி, கேவி அழுக,.
“அவன் என்ன பண்ணான்னு சொல்லு டா மா, அவன் ஏன் உன்னை அங்க கூப்பிட வந்தான், நீ சரவணன் கூட வர வேண்டியதுதானே ” என்று சுதா கேட்க.
“மொழி மொழி” என்று தேவகி வெளியில் இருந்து மகளை அழைக்க.
“அம்மா கூப்பிடுறாங்க அத்தை” என்றவள் வெளியே வந்தாள்.
“நம்ம வீட்டுக்கு வா டா போகலாம்” என்று தேவகி மகளை அழைக்க.
மொழியோ சுதாவை பார்த்தாள், ” நீ போடா பிள்ளைகள் காலையில் தான் முழிச்சிப்பாங்க நடுவுல முழிச்சா நான் பாத்துக்குறேன் நீ இப்போ அம்மா கூட போ” என்று அவர் சொல்ல.
பல மாதம் கழித்து தன் வீட்டுக்கு சென்றாள் மொழி.
அவள் வீட்டிலும் சில சொந்த பந்தங்கள் இருக்க..
தன் தாயோட அவர் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.
தேவகி மகளிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார் “சரவணனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தானேடா” என்று,..
“அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகட்டும் மா திதி கொடுத்துட்டு அப்புறமா நம்ம இந்த பேச்சை பேசலாம்” என்றவள் படுத்து தூங்கி விட. மறுநாள்
ரிஷியின் குலதெய்வம் கோயிலில் ஆட்கள் நிறைந்திருந்தனர்..
ரிஷிக்கு மனதில் ஆயிரம் கேள்விகள்? நான் ஏன் மொழியிடம் அப்படி நடந்து கொண்டேன் என்று மனது குழப்பமாக இருந்தது.
அவனுக்கு மொழியை விடவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவள் மீது கோபமாக இருக்கிறான் என்று இவ்வளவு நாள் நினைத்தவனுக்கு. நேற்று சரவணனோடு அவளை ஒன்றாக பார்த்தபோது தெரிந்து விட்டது. அவளை யாருக்கும் இனி விட்டுக் கொடுக்க முடியாது என்று..
நேற்று சுதா வந்து அவனை திட்டும் போது அனைத்தையும் சொல்லியிருந்தான்.
“எதுக்குடா மொழியை திட்டின.
அவ இல்லனா உன் பிள்ளைய வளர்க்க முடியுமா என்னால, சொல்லு.
நல்ல பிள்ளைடா அவ, அவளை திட்ட உனக்கு எப்படிடா மனசு வந்தது, பாவம்டா அவ, நீ என்ன பண்ணாலும் வெளியே சொல்ல மாட்டா இன்னைக்கு நீ ஏதோ பெருசா பண்ணி இருக்க அதான் அந்த பிள்ளை அழுகுற.அந்த பிள்ளை அழுகிற மாதிரி நீ என்னடா பண்ண சொல்லு” என்று மகனை திட்ட.
“அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க” என்றான் ஒரே வார்த்தையில்.
“ரெண்டு மாசம் முன்னாடி நான் உன்கிட்ட கேட்டேனா இல்லையா, மொழியை கல்யாணம் பண்ணிக்கோன்னு, அப்போ பெரிய இவன் மாதிரி பேசுனா இப்ப கல்யாணம் பண்ணி வையுங்கன்ற.
நீ நெனச்சு நெனச்சு பேசுவ அது வரைக்கும் மொழியை சும்மா வச்சுகிட்டு இருப்பாங்கள, அவளை பெத்தவங்க.
அவளுக்கும் சரவணனுக்கும் நல்ல பொருத்தம் உன்ன விட சரவணன் அவளை நல்லா பாத்துப்பான், போதும் அந்த பிள்ளை நம்ம வீட்டுல இருந்து கஷ்டப்பட்டது எல்லாம் போதும். நீ கல்யாணம் பண்ணி அந்த பிள்ளையை டார்ச்சர் பண்ணனும்னு நினைக்கிறியா, அது முடியாது அந்த பிள்ளை நல்லா இருக்கணும், நல்லா இருப்பா. நீ அவளை கல்யாணம் பண்ணி டார்ச்சர் பண்ண நினைக்கிறியா அது நடக்கவே நடக்காது நீ என்ன சொன்னாலும் சரி மொழிக்கும் சரவணனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றதும்.
“நீங்கெல்லாம் ஒரு அம்மாவா” என்றான் அவரைப் பார்த்து.
சொந்த பந்தம் அனைவரும் வந்திருந்தனர் மொட்டை அடிக்கும் விஷேசத்திற்க்கு.
குகன் மடியில் ஆத்விக்கையும், சாத்விக்கையும் உட்கார வைத்து மொட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..
பிள்ளைகள் மொட்டை அடிக்க மிகவும் அழுதிருந்தார்கள்.
ரிஷி, சுதா,மொழி, குகன் என்று அனைவரும் பிள்ளைகளை சமாளித்து எப்படியோ மொட்டை அடித்து முடித்திருந்தனர்.
அப்போது தான் உறவுக்காரர்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தனர்..
சரவணன் தன் குடும்பத்தோடு வந்து இருந்தான்.
சரவணன் அவங்க அப்பா வேலுச்சாமி, அம்மா ராதா, தங்கை கன்னிகா, என்று அனைவரும் வர.
பிள்ளைகளை சுதாவிடம் கொடுத்தவள், தன் தாய்மாமன் குடும்பத்தை வரவேற்க சென்றாள் மொழி.
“வாங்கத்தை, வா கன்னிகா, வாங்க மாமா, வாங்க மச்சான்” என்று அனைவரையும் அழைத்து காலை உணவு உண்ண அழைத்துச் சென்றாள் மொழி.
பின்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது பிள்ளைகளை குளிக்க வைத்து உடை மாற்றிவிட்டு அழைத்து வந்தாள் மொழி.
பிள்ளைகளுக்கு காது குத்தும் போது பிள்ளைகள் அதிகமாக அழுக.
சுதாவுக்கு பேரன்கள் அழுததும் கஷ்டமாக இருந்தது.. சிறிது நேரம் பிள்ளைகள் ஓய்வெடுக்கட்டும், பூஜைக்கு நேரம் இருக்கிறது என்று மொழியையும், பேரப்பிள்ளைகளையும் தனியே அழைத்து கொண்டு ஒரு ரூமுக்கு வந்தார்.
“கொஞ்ச நேரம் அவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணு மொழி” என்று ரூம்பில் உள்ளே வந்து கதவை சாத்த..
இவர்கள் பின்னோடு சரவணனின் தங்கை கன்னிகாவும் வந்திருந்தாள் அதை இவர்கள் கவனிக்கவில்லை.
சுதா வந்து கதவை சாத்தியதும் கன்னிகா ஏன் கதவை சாத்துறாங்க என்றவன் பின்வாசல் வழியே செல்லலாம் என்று பார்க்க அதுவும் பூட்டிருந்தது, ஜன்னல் வழியே அண்ணி என்று அழைக்க போக