Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 9

பகுதி 9

            மாலை அவன் வரும் நேரத்திற்காக அகல்யா காத்துக் கொண்டு இருக்க.. ஹரியும் தன்னவளைக் காண வேகமாக வீட்டிற்கு புறப்பட்டு இருந்தான். 

      இருவர் மனமும் தன் துணையைக் காண தவித்துக் கொண்டு இருந்தன. நேற்று அவன் தோழிகள் வாங்கிக் கொடுத்து இருந்த புடவைகளில் ஒன்றை எடுத்து உடுத்தி இருந்தாள். அவளால் முடிந்ததை சமைத்து அவன் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள். 

       அவன் வந்ததும்.. “என்னடா காலேஜ் எப்படி இருந்தது”.. என்று சாதாரணமாக பேச ஆரம்பிக்கணும்.. என்று நினைத்து வைத்து இருந்தாள். ஆனாலும் ஏதோ ஒரு நாணம் வந்து ஒட்டிக் கொள்ள.. 



Advertisement

       அவனும் வீடு வந்து சேர்ந்து இருந்தான். என்னென்னவோ பேச வேண்டும் என்று எண்ணி காத்திருந்தவளுக்கு.. இன்று அவன் முகம் பார்க்கவே அத்தனை வெட்கம்.

       ஆனால் அவனோ இன்று அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். காதலித்த நாட்களில் கண்ணியம் காத்த அவன் கண்கள் இன்று எங்கெங்கோ ஊர்ந்து செல்வது போல் தோன்றியது. அந்த துளைத்து எடுக்கும் பார்வையில் கிறக்கம் கொண்டவள்.. காபி போட்டு வரேன் என்று உள்ளே ஓடி விட்டாள்.

      மெல்லிய புன்னகை அவன் இதழ்களில்.. “அகல்.. நில்லுடி”.. என்ற அவன் குரல் அவளை எட்டவில்லை. 

Advertisement

      அவன் குளித்து வந்து இருக்க.. அவளும் அவன் கையில் காப்பியை நீட்டினாள். 

Advertisement

      “ நான் காஃபி கேட்கவே இல்லையே “.. என்றான் அவன் அவளையே பார்த்த படி..  

     “அப்புறம்.. வேற என்ன வேணும்”.. என்று அவள் ஏமாற்றத்துடன் பார்க்க..

     “நீ தான் வேணும்”.. என்றவன் அவள் கையில் வைத்து இருந்த காப்பியை மேசையில் வைத்து.. அவளை தன் இரு கைகளால் தூக்கி இருந்தான். 

Advertisement

            “ஹரி என்னடா பண்ற”.. என்று அவள் சிணுங்கினாலும் தன் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்துக் கொண்டாள். அவர்கள் மஞ்சத்தில் சென்று அவளை இறக்கி விட்டவன். 

     “அகல்.. இந்த புடவையில் தேவதை மாதிரி இருக்க டீ”.. என்று அவள் முகத்தை அவன் ஆசையுடன் வருட..

       அகல்யா வெட்கத்தில் சிவக்க.. அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன்.. “நாம அடுத்த கட்டத்துக்கு போகலாமா”.. என்று அவள் காது மடல்களில் அவன் இதழ்கள் உரச அனுமதி கேட்டு இருந்தான். 

       இத்தனை வருடங்களாக தன்னவனின் அன்புக்காக ஏங்கியவள் மறுக்கவா போகிறாள். “ம்”.. என்ற ஒரு சொல் தான்.. அதற்கு மேல் ஹரி காத்திராமல் அவள் இதழ்களுடன் தன் இதழ்களை பொருத்தி இருந்தான். முத்தங்களில் துவங்கிய யுத்தம் படிப்படியாக முன்னேறி அடுத்த கட்டம் சென்று இருந்தது.

       சற்று முன் அவன் வர்ணித்த புடவை பரிதாபமாக கீழே கிடந்தது. அந்த அறை முழுவதும் முத்த சத்தமும் முனகல் சத்தம் தான் . அழகாக அரங்கேறி முடிந்து இருந்தது அவர்கள் முதல் இரவு.

       ஹரி நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்த அகல்யா.. “ஹரி.. நாம லவ் பண்ணும் போது நீ என்னைச் சரியாகக் கூட பார்க்க மாட்ட. எனக்கு அப்போது சந்தேகம் கூட வந்திடும். “.. என்று அவள் சிறு கேலிப் புன்னகையுடன் சொல்ல.

     புரியாத ஹரியோ.. “என்ன சந்தேகம்”.. என்று கேட்க..

   “ ஆமா.. வேற என்ன.. உனக்கு எந்த பீலிங்ஸும் வரமாட்டேங்குதே. நீ அந்த விஷயத்தில் வீக்கோன்னு நினைச்சேன்”.

   “அடிங்.. “.. என்று அவன் கோபத்தில் எழுந்து அவள் மேல் சரிந்து கொண்டவன்.. “ஏண்டி ஒருத்தவன் நல்லவனா இருக்கிறது அவ்வளவு பெரிய தப்பா. உன்ன..”. என்று அவனும் அது தான் சாக்கு என்று மறுபடியும் அடுத்த ஆட்டத்தை துவக்கி இருந்தான். 

      சாப்பாட்டை மறந்து தூக்கத்தை மறந்து அவர்கள் மன்மத லீலைகள் அழகாக தொடர்ந்தன. 

            “ஹரி.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் டா..”.. என்று அவன் அணைப்புக்குள் இருந்தவள் மெல்ல அர்ச்சனா சொன்னதைச் சொல்லத் துவங்கினாள். 

     “ம்ம்.. அதுக்கு என்ன செய்ய முடியும் டீ. நாம ஒவ்வொரு இடமா உங்க வீட்டு ஆளுங்களுக்கு பயந்து ஓட முடியுமா”.. என்று அவன் கேட்க.

     “ நான் ஓடச் சொல்லலை ஹரி.. இப்போதைக்கு பதுங்கி இருப்போம் என்று சொல்றேன். கோவை வேணாம் ஹரி. எங்க வீட்டு ஆளுங்க இங்க நம்மளை நிம்மதியா வாழ விட மாட்டாங்க. தூரமா போய் விடலாம்”. என்றாள். 

         “அப்புறம் என் படிப்பு”.. 

        “கடைசி செம் மட்டும் தான!. கரெஸ் ல பண்ணிக்கலாம். என் பிரண்ட்டோட அக்கா சென்னை பக்கத்தில் ஒரு பெரிய மருத்துவமனையில் தான் நர்சா வேலை பார்த்தா. இப்போ சிங்கப்பூர் ல வேலை பார்க்கிறாங்க. 

       அந்த மருத்துவமனை ஓனர் மகன் சிங்கப்பூரில் ஒரு மருத்துவமனை வைத்து இருக்கிறாராம். அதனால் இங்க நல்லா வேலை பார்த்தா, அதுவும் அவங்களுக்கு நம்மை பிடித்து இருந்தால் சிங்கப்பூர் அனுப்ப நிறைய வாய்ப்பு இருக்காம்.

      பிளீஸ் ஹரி.. நாம அங்க போகலாம்”.. என்றாள் கெஞ்சலாக.

     “சென்னை பக்கமா?. அங்க வந்து நான் என்ன பண்ண?”. என்று அவன் கேட்க

    “ நீயும் ஒரு வேலைக்கு போ. சாயங்காலம் உட்கார்ந்து படி”.. என்றாள். 

       “எனக்கு அந்த புது ஊர்ல என்ன வேலை கிடைக்கும் என்று தெரியலையே”.. என்றான் யோசனையாக.

       “முதல்ல எனக்கே இன்னும் கிடைக்கலை. அப்ளிக்கேஷன் போட்டு பார்ப்போம் ஹரி. கிடைச்சா நல்லது தான?”.. என்றாள்.

     “நீ சொன்னா சரிதான்”.. என்றவன் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான். தனக்காக வந்தவளை தன் உயிர் போல பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் ஆசைப் பட்டதை செய்ய வேண்டும். 

    அதனால் ஹரி அவள் ஆசைக்கு எந்த தடையும் சொல்ல வில்லை.     

    அகல்யா ஆசைப்பட்டது போலவே அந்த பிரபல மருத்துவமனையில் அவளுக்கு வேலை கிடைத்தது. அந்த அக்காவின் சிபாரிசும் ஒரு முக்கியமான காரணம் என்று தோன்றியது.  

      ஹரி அங்கு அருகில் வேலை தேடத் துவங்கி இருந்தான். அவனுக்கு பிடித்த வேலையாக கிடைக்கவே இல்லை. “அகல் எனக்கு ஒரு ஐடியா.. இந்த ஏரியால நல்ல டிபன் கடையே இல்லை. நான் ஏன் ஒரு டிபன் கடை தள்ளு வண்டியில் போடக் கூடாது. 

      இங்க நல்லா வியாபாரம் நடக்கும். நான் சேர்த்து வச்ச காசை வச்சு ஆரம்பிக்கலாம்”.. என்று அவன் உற்சாகமாக சொல்ல.

    அகல்யா எந்த சுவாரஸ்யமும் காட்டவில்லை. “ஹரி.. நீ நல்லா படிச்சு இருக்க. உன் திறமைக்கு பெரிய வேலையா கிடைக்கும் டா. அஞ்சுக்கும் பத்துக்கும் பார்க்கிற வேலை எல்லாம் வேண்டாம். கொஞ்சம் பொறுமையா இரு”.. என்று விட்டாள். 

        இப்படியே ஒரு மாசம் செல்ல.. ஹரி அதையே சொல்லிக் கொண்டு இருந்தான். அவள் மருத்துவமனையில் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டு இருந்த வார்ட் பாய் திடீர் என்று வேலையை விட்டு சென்று விட.. அவசரமாக வார்ட் பாய் தேவை என்று விளம்பரப் படுத்தினார்கள்.

       அகல்யாவுக்கு அதற்கு ஹரியை பரிந்துரைக்க இஷ்டம் இல்லை. ஆனால் அந்த வேலைக்கு அவனை சேர்ப்பதில் ஓர் முக்கியமான ஆதாயம் இருந்தது. ஹரி இங்கு நன்றாக வேலை பார்த்தால் நரசிம்ம மூர்த்தி மருத்துவர் அவனையும் அவளுடன் சேர்த்து சிங்கப்பூர் அனுப்ப நிறைய வாய்ப்பு இருக்கிறது.

     அது மட்டும் அல்லாமல் அந்த டிபன் கடையை விட வார்ட் பாய் எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

       ஹரிக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் தன்னவளின் ஆசைக்கு குறுக்கே நிற்க மனமில்லை. சிங்கப்பூர் சிங்கப்பூர் என்று கனவு காணும் பெண்ணுக்கு துணையாக நிற்க தன் ஆசைகளை புறம் தள்ளி விட்டான்.

       இப்படித் தான் ஹரியும் அகல்யாவும் அங்கு வேலைக்கு சேர்ந்தார்கள். அகல்யா நரசிம்மா மூர்த்தியிடம் நல்ல பேர் வாங்கினாளோ இல்லையோ.. ஹரி நல்ல பேர் வாங்கி இருந்தான். யார் கூப்பிட்டாலும் ஓடி ஓடி வேலை பார்த்து உதவும் அவனை நரசிம்ம மூர்த்திக்கு மிகவும் பிடித்துப் போனது. 

       கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மாதங்கள் சென்று இருந்தன. அகல்யாவை விட அவன் தான் அந்த மருத்துவமனையில் வெகுவாக பொருந்தி இருந்தான். அது தான் அகல்யாவுக்கு பிரச்சனையே. படிப்பில் அவனுக்கு ஆர்வம் சுத்தமாக குறைந்து போய் இருந்தது. இந்த வேலையே நல்லா தான் இருக்கு அகல்யா. 

        எதுக்கு வேற வேலைக்கு போகணும்? இங்கன்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேலைக்கு போகலாம். எல்லாரும் நல்லா பிரியமா பழகுறாங்க என்பான். 

     அகல்யாவுக்கு எங்காவது முட்டிக் கொண்டால் என்ன என்பது போல கோபம் வரும். நேத்து கூட பெரிய சண்டை. மதியம் அவன் லஞ்ச் அவளிடம் இருந்ததால் அவன் எங்கே என்று மருத்துவமனையில் தேடினாள். 

      எல்லா இடமும் தேடி விட்டு கிச்சன் பக்கம் வந்தால் அவன் கையில் கரண்டியுடன் அடுப்பில் அப்பளம் சுட்டுக் கொண்டு இருந்தான். “நீ எதுக்குடா இந்த வேலையை பார்த்திட்டு இருக்க”.. என்று அகல்யா சீற..

       “உள்ள வா அகல்யா. நம்ம மாரியம்மா மகள் ஸ்கூல் விட்டு வர நேரமாகுமாம். வழக்கமா அவங்க வீட்டுக்காரர் தான் கூப்பிடப் போவாராம். இன்னைக்கு அவரும் ஏதோ வெளியூர் போய் இருக்காராம். அதான் நீங்க போய் பிள்ளையைக் கூட்டி வாங்க. நான் சமையலை பார்த்துக்கிறேன் என்று அனுப்பி விட்டேன்.”. என்றான். 

       இப்படித் தான் எல்லோரும் அவரவர் வேலையை அவன் தலையில் கட்டி விடுவார்கள். அவளுக்கு ஆசை ஹரி டிப் டாப்பாக ஆபீஸ் சென்று வேலை பார்க்க வேண்டும்.. என்று. அவனோ சமையல் செய்வதிலும் எடுபடி வேலையிலும் திவிரம் காட்ட.. அவளுக்கு ஏண்டா இங்கு வேலைக்கு சேர்த்தோம் என்று ஆகி இருந்தது. 

       ஆனால் எத்தனை சண்டை வந்தாலும்.. அவள் எத்தனை திட்டினாலும் அவளை அவனே தேடி வந்து கொஞ்சி, கெஞ்சி கட்டி பிடித்து சமாதானப் படுத்தி விடுவான். அவளும் இன்று போல தான் அவன் மீது எத்தனை கோபம் இருந்தாலும் அவன் அணைப்பில் உருகி விடுவாள். 

            “சரியான ஏமாத்துக்காரன் டா. எப்படியாவது என்னை ஏமாத்திடுர”.. என்று தன்னவனை ரசித்த படி பழைய நினைவுகளில் இருந்து மீண்டவள் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். 

    தூக்கத்திலும் அவன் கரம் அவளைத் தன்னோடு இழுத்துக் கொள்ள. . சுகமாக தூங்கிப் போனாள்.   

     ஆனால் பாவம் இருவரும் அப்போது அறியவில்லை. இரு உடல் ஓர் உயிராக வாழ்பவர்கள் விரைவிலேயே பிரியப் போகிறார்கள் என்று..

 தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!