Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 15

அத்தியாயம்: 15

ராஜா… வயது இருபத்தி ஏழு… கலையான முகம்… ஆனால் அந்த முகத்தைத்தான் தேடி பார்க்க வேண்டும். தாடியும் மீசையும் அவனின் முகத்தில் கண்களையும் மூக்கையும் தவிர வேறு எதனையும் வெளியே காட்டாது. நெற்றியைக் கூட விட்டு வைக்காது சுருண்டு வந்து விழும் அது. சாமியாராக மாதிரி இருக்க வேண்டியவன் என்று சொர்ணம் அடிக்கடி சொல்வார்.



Advertisement

ரவுடியாக ஊருக்குள் வலம் வந்தாலும் எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத அவனின் இதழ்கள் சிவப்பா கருப்பா எனச் சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு தாடி முடிகள் அதைப் புதைத்திருந்தன.

கூர் விழிகள் அவனின் கோபப் பார்வையை எதிரில் இருப்பவரின் மீது வீசி தன்னிடம் எச்சரிக்கையாக இருக்க சொல்லும். வாய் திறந்தால் வார்த்தைகள், நாக்கு எனும் தேள் கொடுக்கு கொட்டுவது போல் சுருக்கென குத்த தயாராக இருக்கும். மொத்தத்தில் யாராலும் அவனிடம் நின்று பேச முடியாது. பாரதியைத் தவிர.

Advertisement

Advertisement

“ராஜா… உன்னாண்ட பேசணும்.. ” என்றாள் பாரதி. அவனைப் பெயர் சொல்லி அழைக்கும் அனுமதியை அவளைத் தவிர வேறு யாருக்கும் கொடுத்தது இல்லை அவன். அண்ணே… தம்பி… மச்சான்… கண்ணா… தல… சின்னவனே… என்ற பெயர்களை மட்டுமே கேட்டவனுக்கு மங்கையின் அழைப்பு சிலிர்ப்பாக இருந்தது. அவனை நேருக்கு நேர் நின்று பெயர் சொல்லி அழைத்தது பாரதி மட்டுமே.

“உனக்கு என்ன வேலை பாக்க தெரியும். ” ராஜா கேட்டபோது பாரதி சிறு பெண்..

Advertisement

“எல்லா வேலையும் செய்வே ராஜா… தெரியலன்னா சொல்லி தா.. கத்துப்பேன்…” இது தான் இருவரின் முதல் சந்திப்பு. அது அவர்களின் வீட்டு வாசலில் நடைபெற்றது. சொர்ணம் தான் மகனிடம் பாரதியை அறிமுகப்படுத்தினார்.

வேகமாக பதில் சொன்னவளை வா என அழைக்காது கையை மட்டும் அசைக்க, எங்கேயென்ற கேள்வி எதுவும் கேட்காது பாரதி ராஜாவைப் பின் தொடர்ந்தாள். அவன் நின்ற இடம் தான் மெக்கானிக் செட்.

சிறுவயதில் ஜெயிலுக்கு சென்று வந்த அவன் மீது சிறு மரியாதை கலந்த பயம் அனைவருக்குமே உண்டு. ராஜா நியாயமானவன் என்ற பெயர் இருக்கும் அந்த ஏரியாவில். தவறு செய்தால் யோசிக்க கூட மாட்டான் போட்டு விடுவான் என்ற பயம். அதனால் அவன் உடன் நடந்து வந்த பெண்ணைக் கேலியோ கிண்டலோ செய்ய யாரும் முன் வரவில்லை.

இப்போதும் அவளுக்கு சொந்தமாக சென்னையில் சில இடங்களை வாங்கி, அதில் கார் மெக்கானிக் செட்டை வைக்க ஐடியா மட்டுமல்ல பண உதவியும் செய்தது அவன் தான்.

“கடனா தர்றதா இருந்தா தான ராஜா… இல்லாங்காட்டி வொனா… கடசீ வர இங்கையே இருந்து சமாளிச்சிப்பேன்.” என ராஜா தரும் பணத்திற்கு நிபந்தனை விதித்ததோடு, வாங்கிய பணத்தை திருப்பி தந்தும் விட்டாள்.

இப்போது அப்பார்ட்மெண்ட்டில் வீடு ஒன்றை வாங்கியுள்ளாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளின் குடியிருப்புக்கு எதிரில் சிறிய லேப்டாப் சர்வீஸ் என்ற பெயரில் கடை ஒன்றை திறந்து வைத்துவிட்டு தினமும் அவளை காலை மாலை எனக் கண் பார்வையில் வைத்திருப்பவன் அவன். திடீரென செல்கிறேன் என்றால், அதான் வீட்டை வாங்காதே எனப் பல கதைகளைக் கூறினான்.

“பணம் பெருசில்ல… நான் தர்றேன் மணி… ஆனா உனக்கு இன்னும் பணம் வேணும். அத்தோட அப்பார்ட்மெண்ட்டா எதுக்கு வாங்க நினைக்கிற. பத்து வர்ஷம் ஆனாலும் பரவாயில்ல தனி வீட்டாவே வாங்கு. “

“இல்ல ராஜா. நான் இப்ப வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன். எங்கம்மாக்காக… அது பிறந்ததுல இருந்தே சொந்த வீட்டுல தான் இருந்தது. ஆனா கல்யாணம் பண்ணதும் அது வாடக வீட்டுக்கு மாறுச்சி. அந்தாளு விட்டுடுட்டு போனதும், தன்னோட சுகம் துக்கம்னு எல்லாத்தையும் துடைச்சிட்டு வைராக்கியமா எங்களுக்காக இருக்குற அதுக்கு, நான் செய்ற பெரிய மரியாதையே, அத அந்த வீட்டுல மகாராணி மாதிரி உக்கார வைக்கிறது தான். நாளுக்கு நாள் அதோட உடம்பு சரியில்லாம போகுது. அதுனால அந்த வீடு எனக்கு முக்கியம். கொஞ்ச நாளாவது அத அந்த வீட்டுல வச்சி பாக்கணும். தங்கச்சிக்கும் ஸ்கூல் பக்கம். எனக்கும் அது தான் வசதி.” என்றாள் பாரதி.

நகரின் முக்கிய ஏரியாவில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நான்காவது மாடியில் வீடு ஒன்று விலைக்கு வந்தது. இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் அள்ளிப் போட்டு வீட்டை வாங்கி விட்டாள். கடன் வாங்கி அதன் உட்கட்டமைப்புகளைச் சரி செய்யும் போது, அது தடுக்கப்பட்டது.

வீடு, போலி பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளது என்றும், உண்மையான சொந்தக்காரன் நான் என்றும், பிரச்சனை செய்தது நம் மாணிக்கத்தின் ஒன்றுவிட்ட தம்பியும் இப்போதைய குடும்ப எதிரியுமான குணசேகரன் தான்.

தான் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்பதை அப்போது தான் உணர்ந்தாள் பாரதி. ஆனால் அவளின் கனவுகளையும் மொத்த உழைப்பையும் அந்த வீடு உறிஞ்சிய நிலையில் எப்படி விட்டுக் கொடுப்பது.

வீட்டை உனக்கே விற்கிறோம். அதற்கு ஈடாக நீ ஒரு உதவி செய்ய வேண்டும் என்று மாறன் ராஜாவிடம் பேரம் பேசி பார்த்திபனின் டிசைன்களைத் திருடி வரச் சொன்னான்.

ராஜா யோசித்தான். திருட்டு அது அவனுக்குப் புதிது இல்லை தான். பார்த்திபனை அடித்து போட்டு விட்டு அபகரித்துவிட்டு வா என்றால் இன்னேரம் அதை முடித்திருப்பான். திருடியதே தெரியாதபடி யார் திருடினார்கள் என்று கண்டு பிடிக்காதபடி, பாரதி தான் திருட வேண்டும் என்று அவன் சொன்னது தான் ராஜாவிற்கு யோசனை.

“அவெ சொன்னத செஞ்சாலும் வீட்ட நமக்கு தருவான்னு என்ன உத்திரவாதம்?” என்றது பாரதி தான்.

“எந்த உத்திரவாதமும் கிடையாது. அவெ நம்மலயும் ஏமாத்திட்டு. போலிஸ்ல மாட்டி விட்டாலும் விடுவான்.” என்றான் ராஜா.

“நமக்கு நம்ம வீடு வேணும். அவெ சொன்ன மாதிரி படம் வரஞ்ச பேப்பரு. அப்பறம் ஒரு பைஃல். பெண்டிரைவ். அது மூனயும் எடுத்து குடுத்திட்டா அந்த வீடு நமக்குன்னா… அப்போ…. ” என இழுத்து,

“அப்ப அதுக்கு வேல்யூ பல கோடி இருக்கணும்… சரியா… ” என்றாள்.

“ம்…” எனக் கள்ளப் பார்வை பார்த்து கொண்டனர் இருவரும்.

ஃப்ளைட் டிக்கெட்டில் தொடங்கி ஏர்போர்ட்டில் அழுது நடித்த போலி குடும்பம் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து ‘நீ அவெ அசந்த நேரம் பாத்து ஆட்டைய போட்டா மட்டும் போதும்.’ எனப் புத்திசாலித்தனமாக மாறன் திட்டம் போட, பாரதி பார்த்திபனிடம் இருந்து எடுத்து விட்டாள். ஆனால் மாறனிடம் அதை ஒப்படைக்கவில்லை.

முதலில் திருடி கையில் வைத்துக் கொள்வோம். பின் அதை வைத்து வீட்டையும் மேற்கொண்டு பணமும் கேட்டால் எப்படி இருக்கும்? திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கும் அல்லவா! அதைத்தான் ராஜாவும் பாரதியும் சேர்ந்து செய்ய உள்ளனர். மாறனின் கைகளுக்கு அந்த ஃபைல் சென்றடையவில்லை. இப்போது வரை.

” சொல்லு மணி பணம் வந்திடுச்சா?” என ராஜா கேட்க,

“பக்காவா அக்கௌண்ட்ல ஏத்தி விட்டுடுட்டான்.. ” 

“ம்.. நேத்தே கால் பண்ணான்.. பைஃல குடுக்க சொல்லி. ” என்றவன் பாரதியை உற்று நோக்க,

“கண்டிப்பா குடுக்கணுமா ராஜா?” 

“அது உன் விருப்பம்.” என்றான் விட்டேத்தியாக.

” செந்தமா வீட்ட வாங்குனோமா… அதுல கால் நீட்டி உக்காந்தோமான்னு இருக்க நினைச்ச என்னை, இத்தன நாளா பொலம்ப விட்ட அவெங்கிட்ட அத்தன சுலோவா அத்த கொடுக்க எனக்கு மனசு இல்ல.”

“அப்ப வீட்ட மொறப்படி ரிஜிஸ்டர் பண்ணி எழுதி குடுத்ததுக்கு அப்றம் குடு..” என்றவன் நகர,

“ராஜா.. ” என்றாள் மீண்டும்.

“எங்கிட்டை வீட்ட வித்த அந்த ப்ரோக்கர பத்தி விசாரிக்க சொன்னேனே செஞ்சியா.” 

“ம்… ட்ராக் பண்ணிட்டு தா இருக்கேன்.. அவனும் RKG group வீரமாறனோட ஆளா இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு.”

“என்ன??” என அதிர்ந்து போனாள் பாரதி.

“சந்தேகம் தான்… உறுதியான…”

“அவெ சாவு எங்கைல.. என்னை மாதிரி எத்தன பேர ஏமாத்தி என்னென்னத்த புடுங்கினானோ. இவன சும்மா விடமாட்டேன்.” எனத் திட்டி தீர்த்தாள்.

“உறுதி ஆகட்டும் அப்றமா பாத்துக்கலாம்.. நான் பாத்துக்கிறேன்.. ” என்றவனுக்கு சரி எனத் தலையசைத்தவள் தன் தாயின் ஆன்மிக சுற்றுலா பற்றி பேசி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய,

“மணீ…” என்ற ராஜாவின் குரல் தடுத்தது.‌ அவள் திரும்பியதும்,

“அந்த பையன் பேரு என்ன சொன்ன…”

“யாரு?”

“அதா ஃப்ளைட்ல உங்கூட வந்தவெ.. “

“பார்த்திபன்… அப்படி தான் சொன்னான்.”

“அவன்ட்ட ஜாக்கிரதையா இரு. முடிஞ்ச மட்டும் அவெ கண்ணுல படதா. அப்படி பட்டா உடனே எனக்குச் சொல்லு..” என எச்சரித்துவிட்டு சென்றான்.

“அந்த பால் டப்பா அவ்ளோ ஆபத்தானதா? இருக்காது.” என தலையைச் சிலுப்பிக் கொண்டு சென்றாள் அவள்.

யார் பால் டப்பா எனப் பின்னால் தெரியும். 

உங்களுக்கு தாளிக்கும் வாசம் பிடிக்குமா? வானெலியில் இரும்பு சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் கடுகு, அது பொரித்து வந்த பின் உளுந்தம் பருப்பு சிறிது, எனக்கு அது தூக்கலாக இருந்தால் பிடிக்கும். அது பென்னிறமாக மாறும் நேரம் கருவேப்பிலை இலைகளைக் கிள்ளி போட்டு, அதைக் கெட்டியாக அரைத்து வைத்த தேங்காய் சட்னியின் மேல் ஊற்றும் போது ஒரு வாசம் வருமே… ஆஹா!! அது தனி வாசம்… சுவையைப் பற்றி கவலை படாது ருசிக்க தூண்டும் அது.

அந்த வாசத்தைப் பிடித்துக் கொண்டு தான் வந்தான் பார்த்திபன் சமையலறைக்குள், “ம்மா.. வாசம் சுண்டி இழுக்குது.. என்ன சமையல்.. ” என கேட்க,

” இட்லி கெட்டி சட்னி… புதினா சட்னி…” என மெனு வகைகளை அடுக்கினார் பத்மா.

“ஓகே தான்.. பட் பக்கத்துல ரெண்டு பூரி இருந்தா நல்லா இருக்கும்.” என்க, உடனே மாவைப் பிசைய தொடங்கி விட்டார் அவர். மகனுக்காக மட்டுமல்ல தன் பேரன் பேத்திகளுக்காகவும். மாமியாருக்கும் மாமனாருக்கும் ராகி தோசையை வார்த்து எடுத்தவர், கணவனுக்காக பொங்கல் செய்து வைத்திருந்தார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக சமைத்து உணவு மேசையில் அடுக்கி வைக்க,

முதல் ஆளாக கையில் தட்டுடன் அமர்ந்தது பார்த்திபன் தான். நேற்று நடந்த களேபரத்தில் இரவு உணவு உண்ணாது உறங்கி விட்டான். முக்கியமானதை தொலைத்துவிட்டான் என்று வீட்டார் திட்டியதால் கவலையில் உண்ணாது விட்டான் என்று நினைக்க வேண்டாம். தன் ஒத்த ரோசாவைக் கனவில் காணும் ஆவல் வர உறங்கி விட்டான். கனவில் அவளிடம் விசாரணைகள் நடத்தி, அவள் குற்றமற்றவள் என்றதொரு நற்தீர்ப்பை கனவிலேயே வழங்கி அவனுடனேயே வைத்துக் கொண்டான்.

அந்த இனிய சொப்பனத்தின் விளைவாக வேகமாக எழுந்து விட்டான். தன் காரை அதாவது அம்பாசிடரை எடுத்துக்கொண்டு நேராக சென்ற இடம் ஏர்போர்ட்டிற்கு. நேற்றைய பொழுதை இனிமையாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் மாற்றிய நங்கையை பற்றி விசாரிக்க சொல்லிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்து விட்டான்.

எண்ணெயின் சூட்டில் கறிவேப்பிலை நன்று அப்பளம் போல் பொரிந்து சுவையாக இருக்க, வேண்டாம் என்று தூக்கி வீசப் படும் கருவேப்பில்லையை மென்று சுவைத்தான் பார்த்திபன்.

அவன் உண்ணும் அழகைக் கண்டு பூரித்து போகவேண்டிய தந்தை, அவனை, யானை காலில் மிதி படும் புல்லை போல் மாற்றி விடும் மனநிலையில் முறைத்தபடி அமர்ந்திருந்தார்.

‘எங்கப்பாலாம் கருவேப்பிலைய தட்டுல ஒரமா ஒதுக்குனா தலைலயே கொட்டுவாரு. அந்த வகையில பார்த்திபன் க்ரேட் தான்.. ‘

‘உங்களுக்கு புரியுது. ஆனா இங்கருக்குறவங்களுக்கு புரிய மாட்டேங்கிதே. ‘ பார்த்திபனின் மைண்ட் வாய்ஸ்.

மாணிக்கத்திற்கு துணையாகவும் சுகுமாரனும் முறைத்துக் கொண்டிருந்தார். காரணம் அவரின் அருகில் குனிந்த தலை நிமிராமல் தட்டில் என்ன இருக்கிறது என்றே தெரியாது ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அவரின் மகள் நேத்ரா தான்.

நேத்ரா எப்பொழுதுமே ஃபோனும் கையுமாகத்தான் இருப்பாள். பள்ளி இறுதியில் இருக்கும் அவளுக்கு சமூக வளை தளங்கள் அனைத்திலும் கணக்கு உண்டு. எப்பொழுதும் அதில் நண்பர்களுடன் chat செய்து கொண்டே தான் இருப்பாள்.

போன வாரம் தான் பள்ளிக்கு ஃபோனை எடுத்து வந்து டீச்சரிடம் மாட்டி, டீச்சர் தலைமை ஆசிரியரிடம் சொல்லி, வீட்டில் இருந்து ஆள் கூட்டி வரச் சொன்னார்.

வந்தது பார்த்திபன். பேசி பேசியே டீச்சரை கரெட் செய்து பிரச்சனையை சால்வ் செய்ய, இந்த விசயம் சுகுமாரன் காதுகளுக்கு செல்ல ஃபோனை பிடுங்கி வைத்துக் கொண்டார்.

“அண்ணா… நிறையா படிக்க இருக்கு. ஆனா அப்பா ஃபோன பிடுங்கி வச்சிட்டாரு. இருபத்திநாலு மணி நேரமா ஃபோனயே நான் பாக்கலயா… கவலையா இருக்கு. ” எனக் கண்ணீர் விட, தங்கையின் கண்ணீர் பொறுக்காத பார்த்திபன் உடனே வெகுண்டு எழாது,

“இப்ப கேட்ட திட்டுவாரு.. உனக்கு அண்ணே ஊருக்கு போய்ட்டு வரும் போது வாங்கிட்டு வர்றேன்.. ” என்றவன் நேற்று பங்ஷன் முடிந்ததும் பார்த்திபன் ‘என் பாசமிகு தங்கை நீ.. உனக்கு இல்லாததா.. இதோ ஃபோன் கடையையே வாங்கி வருகிறேன்.’ எனச் சொல்லி வாங்கி வந்தது தான் இந்த ஐஃபோன்.

பில்லை மாணிக்கத்தின் பெயரில் எழுதி கடைக்கு அனுப்பியது வேறு விசயம். மொத்ததில் தங்கைக்கு அவள் கேட்டதை வாங்கி கொடுத்தாயிற்று. தங்கையின் துயர் நீக்கி வடிந்தோடிய கண்ணீரையும் துடைத்தாயிற்று என்ற நிம்மதியுடன் சுற்ற, நேத்ரா அந்த ஃபோனை சார்ஜ் போடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தூக்கிக் கொண்டு திரிகிறாள்.

இப்படி வாங்கி தந்தால் என்ன செய்வது? படிப்பில் மதிப்பெண்கள் என்பது சிவப்பு கோடுகள் விழவில்லை அவ்வளவே எனும் அளவுக்கு மோசமாகிக் கொண்டே வரும் நிலையில் இது வேறா? என அதை வாங்கி தந்த அண்ணன் மகனை முறைக்க, நேகாவும் முறைத்தாள். 

தன் கணவன் வேலையைப் பற்றியே சிந்திக்காது வீடே கதி என்று கிடக்க இவன் தான் காரணம் என. இப்படி மொத்த குடும்பமே பார்த்திபனை விழிகளால் விழுங்கிக் கொண்டிருக்க, பார்த்திபன் பூரியை விழுங்கிக் கொண்டிருந்தான்.

“மாப்ள எப்படி மாப்ள கூச்சமே இல்லாம சாப்பிடுற. நேத்து நீ பண்ண கூத்தால எம்பொண்டாட்டி ராத்திரின்னு கூட பாக்காம உன்ன வார்த்தையாலயே வதக்கி எடுத்திட்டா… தெரியுமா.” என்று சந்ரு சொல்ல, 

“வதக்குனா வதக்கட்டும் மாம்ஸ்… இவள மாதிரி ரொம்ப பொறுப்போட இருந்தா பேஷன்ட்டாத்தா ஆக வேண்டி இருக்கும். உன்ன மாதிரி அலுங்காம குலுங்காம வாழ்ந்து பழகிடணும்.. ஏன்னா நாம வீட்டோட மாப்ள… “

“எது வீட்டோட மாப்ளயா.. என்னய்யா சொல்ற… உனக்கு கல்யாணமா? “

“எஸ்…. பொண்ணு பாக்கப் போறதா பேச்சு வார்த்த நடந்தது.. “

“இது எப்ப? “

“நேத்து நைட்… சித்தப்பா, சித்தி, அப்பா, அத்தைன்னு குடும்பத்துல முக்கியமானவங்க அதுல கலந்துக்கிட்டாங்க.. “

“எது முக்கியமானவங்களா… அப்ப நான்.. “

“இப்ப எதுக்கு மாமா அத பத்தி பேசுற. எனக்கும் உன்ன மாதிரி, வேலைக்கி போய் என்னை கண்கலங்காம வச்சி பாத்துக்கிற ஒரு பொண்ணு வரப் போறா… எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு தெரியாம உனக்கு. அது நேத்து நான் பாத்த ஒத்த ரோசாவா இருந்தா எப்படி இருக்கும்னு தெரியுமா.

தட்டு நிறைய பலகாரம் சுட்டு வைச்சி என் பாம்பே மாமியார் இந்தாங்க மாப்ளன்னு வாய்ல குடுக்க,  பீடாவ மடிச்சி ஊட்டி விட கொறஞ்சது மூணு மச்சினிங்க பக்கத்திலயே இருக்கும். கை கால் அழுக்கு விட்டு சேவ செய்ய கொழுந்தியான்னு கூட்டம் கும்பலோட வாழ்ந்திடலாம்.” என வர்ணித்தார் கொண்டே அருகில் இருந்த சந்ருவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, மடியிலேயே அமர்ந்து விடுவேன் என்பது போல் நெருங்கி அமர்ந்து உணர்ச்சி பொங்க பொங்க பேச,

“முதல்ல தெரியல… உன்னோட விசித்திர வித்தியாசமான நடவடிக்கைய வச்சி பாக்கும் போது நீ ஒரு மார்க்கமாத்தா திரியுறன்னு இப்ப தெரியுது. கைய விடுறியா. ரொம்ப நேரமா எம்மக நான் இட்லிய குடுப்பேன்னு வாய திறந்து வச்சிக்கிட்டே இருக்கா. ” என கையை உறுவிக் கொள்ள, மீண்டும் சந்ருவின் கரத்தைப் பற்றி ரசளை செய்தான்.

இவர்களின் வேடிக்கை விளையாட்டை பார்த்து மாணிக்கம் வாயை திறந்தார், திட்டுவதற்கு. அடை மழை போல் விடாது அரைமணி நேரமாக அவர் ‘பொறுப்பில்லாதவன்… தறுதலை.. ‘ போன்ற வார்த்தைகளால் காட்டமாக கத்தினார்.

அவர் திட்டயதை யாராவது கேட்டிருந்தால் நாக்கை பிடுங்கி கொண்டு சாகலாம் என்று தோன்றியிருக்கும். ஆனால் பார்த்திபனுக்கு அப்படி தோன்றவில்லை.

‘முன்ன மாதிரி இல்ல அவரு.. ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷெ தெரியுமா அவரு.. வயசாகிடுச்சி… அதா வாய்ட்ட பேசுறாரு.. இல்லன்னா கையும் அவருக்கு ரொம்ப பிடிச்ச ப்ரவுன் கலர் லெதர் பெல்ட்டும் தான் பேசும்.. மனுஷெ வெட்டிய இடுப்புல நிக்கி வைக்கிற பெல்ட்ட எடுத்து சுத்தி சுத்தி என்னை ஓட விட்டு அடிக்கும் போது‍,

நான் ஆணையிட்டால்ன்னு எம்ஜியார் பாடுறது தான் நியாபகம் வரும். பாவம் இப்ப மூஞ்சில சுருக்கம் விழுந்து போச்சி. பெல்ட்டும் அறுந்து போச்சி. ஒரு புது பெல்ட் என்ன வில இருக்கும்? கடன வாங்கியாது அவருக்கு அத வாங்கி குடுக்கணும். பாவம் இடுப்புல வேட்டிக்கு பதிலா பேண்ட் மாட்டிட்டு சுத்துறாரு..’ எனப் பரிதாபமாக பார்த்தபடி அமர்ந்து தந்தையின் திட்டை காதில் வாங்கிக் கொண்டிருந்தான்…

“அங்க என்ன சன் மியூசிக்காயா ஓடுது… இத்தன ஆர்வமா பாத்திட்டு இருக்க… உன்னைய திட்டிட்டு இருக்காரு டா… கொஞ்சமாச்சும் மூஞ்சிய சோகமா வை. இல்லன்னா நிப்பாட்ட மாட்டாருடா. காது வலிக்கிது.. ” என சந்ரு காதை கடிக்க,

“வர வர எங்கப்பா நல்ல திட்டுறில்ல மாம்ஸ்… முன்னேற்றம் வந்திருக்கு.‌ என்னை திட்டுறதுல ஸ்பெஷலிட்ஸ் ஆகிட்டே போறாரு.. சூப்பர்ல.. ” எனப் புகழ்ந்து தள்ள, அது மாணிக்கத்தின் காதில் கேட்டு முழு பாட்ஷாவாக மாதிரி அண்டனியான பார்த்திபனை கொல்ல, வரலட்சுமி தான் வந்து சமாதானம் செய்தார் அண்ணனை..

ச்ச.. ஒத்த ஆம்பளப் பிள்ளைய பெத்திட்டு அவரு பாடுற பாட்ட பாக்குறப்ப நமக்கே கண்ணுல தண்ணி வந்திடும் போலயே.. பார்த்திபா நீ ரொம்ப மோசம்..

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!